இணையத்தில் உலாவரும்போது குறுக்கிடும்விளம்பரங்களை தவிர்ப்பதெவ்வாறு?

 

Pi-hole எனும் கட்டற்ற பயன்பாடு நாம் இணைய உலாவரும் எந்தவொரு சாதனத்திலும் 100,000 இற்கும் அதிகமான விளம்பரங்களை அதன் சேவையாளர் பகுதியிலிருந்து வராமல் தடுக்கின்றது. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக Raspberry Pi + SD அட்டை ,USB மின்கம்பி ,Ethernet கம்பி ஆகியவை மட்டும் போதுமானவையாகும். சமீபத்திய Raspberry Pi நம்மிடம் இல்லை பழைய பதிப்புதான் உள்ளது என்றாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் 512MB RAM உடைய Raspberry Pi என்பதை மட்டும் உறுதிபடுத்தி கொள்க. Raspbian Stretch Lite image கோப்பினை ராஸ்பெர்ரி தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய SD அட்டையில் எழுதிடுக. அதனை தொடர்ந்து இதனை நம்முடைய Raspberry Pi உடன் இதனை இணைத்து keyboard, monitor, Ethernet கம்பி ஆகியவற்றை இணைத்து இறுதியாக USB மின்கம்பியை இணைத்திடுக .

தொடர்ந்து Raspberry Piயை செயல்படசெய்திடுக. உடன் தோன்றிடும் திரையில்

curl -sSL install.pi-hole.net | bash

என்ற கட்டளைவரியை உள்ளீடு செய்து கொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக. உடன் இந்த கட்டளைவரியானது Pi-hole எனும் கட்டற்றபயன்பாட்டினை pi-hole.net/ எனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்திடும் இதனை தொடர்ந்து நம்முடைய Raspberry Pi ஆனது விளம்பரங்களை தடுப்பதற்கு தயாராகிவிடும் இதனை பயன்படுத்தி கொள்வதற்கு முன் இதனுடைய IP முகவரியும் router’s IP முகவரியும் தெரிந்து கொள்ளவேண்டும் அதற்காக LAN அமைப்பின் கீழுள்ள DHCP/DNS அமைப்பை சரிபார்த்திடுக தொடர்ந்து நம்முடைய primary DNS சேவையாளரை Pi-hole இன் IP முகவரியாக அமைத்திடுக அதனைதொடர்ந்து DHCP IP ஒதுக்கீட்டில் நம்முடைய Piஇனை சேர்த்திடுக இதன்பின்னர் Raspberry Pi இன் இயக்கத்தை நிறுத்தம் செய்து நம்முடைய கணினியின் அல்லது சாதனத்தின் இயக்கத்தை துவக்கி இணைய உலா செய்திடுக தற்போது நம்முடைய இணையஉலாவில் எந்தவொரு விளம்பரமும் குறுக்கிடாமல் நிம்மதியாக உலாவர முடியும்.

%d bloggers like this: