நீங்கள் சமீபத்தில் JPEG படங்களை மேலும் திறம்பட சுருக்குவதற்கான குறியாக்கியை (encoder) கூகிள் கட்டற்ற திறந்த மூலமாக வெளியிட்டதைப் பற்றிய செய்தியைப் படித்திருக்கக் கூடும். அதை உங்கள் இணையதளத்துக்கு பயன்படுத்தினால் சேமிப்பிடம் மற்றும் பட்டையகலத்துக்காகும் (bandwidth) செலவைக் குறைக்கலாம். பயனர்களும் பக்கங்களை விரைவில் பார்க்க இயலும். ஆனால் பயன்படுத்துவது எப்படி? பிரச்சினைகள் ஏதாவது வருமா?
உமேஷ் குமார் எழுதிய இந்தக் கட்டுரையில் உபுண்டு-வில் நிறுவுவது எப்படி என்று விவரமாக செய்படிகள் தருகிறார்.
மூன்று பிரச்சினைகளை விவரிக்கிறார்:
-
ஒளிபுகு பின்னணி (transparent background) உள்ள படங்கள் அளவில் சுருங்குவதற்குப் பதிலாக பெரிதாகிவிடுகின்றன!
-
குறியாக்கம் செய்ய நீண்ட நேரம் எடுக்கிறது.
-
பெரிய அளவுள்ள (4MB) படத்தை குறியாக்கம் செய்து முடிக்கவே இயலவில்லை.
ஆனால் குறியாக்கம் செய்யப்பட்ட படங்கள் பெருமளவில் சுருங்கினாலும் பார்வைக்கு எதுவும் குறைபாடு தெரிவதில்லை.