இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும், இது மேகக்கணி யில் நம்முடைய கோப்புகளுக்கு பல்வேறு-தளத்தையும், வெளிப்படையான வாடிக்கையாளர் பக்க குறியாக்கத்தையும் வழங்குகிறது. இது எந்தவொரு மேகக்கணி சேமிப்பக சேவையுடனும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதுமுற்றிலும் வெளிப்படையானது, எனவே நாம் வழக்கமான அனைத்து கோப்புகளுடன் பணிபுரியலாம். மேலும் . வெவ்வேறு கணக்குகள், முக்கியமாக மேலாண்மை, மேகக்கணி அணுகல் வசதிகள் அல்லது cipher உள்ளமைவுகள் ஆகியவையில்லாமல் செயல்படுத்தவும் பயன்படுத்தவும் இது எளிதானது.
இதனுடைய முக்கிய வசதி வாய்ப்புகள் இது Dropbox, Google Drive, OneDrive, ownCloud, Nextcloud , ஆகியவை வளாக கோப்பகத்துடன் ஒத்திசைவாக செயல்படும் திறன்மிக்கது வேறு எந்த மேககணினி சேமிப்பு சேவையுடனும் ஒத்திசைவாக செயல்படுகிறது, பின்புற வாயில் கதவுகள் எதுவும் இல்லை, நம்பிக்கையை விட கட்டுப்பாடு சிறந்தது, இதனை அறிந்துகொள்வதற்காகவென வாடிக்கையாளர் ஒருவர் தனியாக கணக்கு எதுவும் இதில் துவங்கத் தேவையில்லை, இதிலிருந்து எந்தவொரு தரவும் பகிரப்படவில்லை.இதனுடைய நேரடி இணைய சேவை, முற்றிலும் வெளிப்படையானது இதுமெய்நிகர் இயக்ககத்தில் USB flash drive போல செயல்படக்கூடியது, கோப்புகளின் பெயர்கள் 256 பிட் திறவுகோள் நீளத்துடன் AES குறியாக்கத்தின் பாதுகாப்புடன், குறியாக்கம் செய்யப்படுகின்றன, கோப்புறை அமைப்பு தெளிவற்றதாகிறது, Dropbox இல் பல்வேறு பூட்டுகளைப் பயன்படுத்திகொள்வதற்கேற்ப , ஒவ்வொன்றும் தனிப்பட்ட கடவுச்சொற்களைக் கொண்டுள்ளன, இதில்நம்முடைய தரவுகளின் பாதுகாப்பிற்காக உத்திரவாதம் அளிக்கப்படுகின்றது!
மேககணினிக்கான ஒரு பூட்டுபோன்று செயல்படுகின்றது
இதனுடன், நம்முடைய தரவுகளின் திறவுகோள் நம்முடைய கைகளில் உள்ளது. இது நமம்முடைய தரவுகளை விரைவாகவும் எளிதாகவும் குறியாக்கம்செய்கிறது. நமக்கு பிடித்த மேகக்கணி சேவையில் பாதுகாக்கப்படுவதற்காக அவற்றைப் பதிவேற்றம் செய்திடலாம்.
தரவுகளின் பாதுகாப்பை நம்முடைய கைகளில் வைத்துகொள்க
இது தற்காப்புக்கான எளிய இரும(digital ) கருவியாகும். நம்முடைய மேகக்கணியின் தரவுகளை நாமே சுதந்திரமாக பாதுகாக்க இது நம்மை அனுமதிக்கிறது. பெரும்பாலான மேககணினி வழங்குநர்கள் தரவுகளின் பரிமாற்றத்தின் போது மட்டுமே தரவுகளை குறியாக்கம் செய்கிறார்கள் அல்லது அவர்கள் மறைகுறியாக்க திறவுகோளை தங்களிடமே வைத்திருக்கிறார்கள். இந்த திறவுகோள்களை வேறுயாராவது திருடலாம், நகலெடுக்கலாம் அல்லது தவறாகப் பயன்படுத்தலாம். , ஆனால் அதற்கு மறுதலையாக இதில் நம்முடைய தரவுகளின் திறவுகோள் நம்மிடம் மட்டுமே உள்ளது. நம்முடைய எல்லா சாதனங்களிலிருந்தும் நம்முடைய கோப்புகளை அணுக இது( Cryptomator) நம்மை அனுமதிக்கிறது. நம்முடைய தரவுகளுக்கும் மேககணினிக்கும் இடையில் பயன்படுத்த எளிதானது ஒருங்கிணைந்து செயல்படுகின்றது.
Cryptomator தரவுகளைஎவ்வாறு பாதுகாக்கிறது?
இதனுடைய தொழில்நுட்பம் சமீபத்திய தரங்களை பூர்த்தி செய்கிறது . கோப்புகள் , கோப்புகளின் பெயர்களை AES குறியாக்கத்துடனும் 256 பிட் திறவுகோள் நீளத்துடனும் குறியாக்கம் செய்கிறது. இதனுடன் துவங்க, நம்முடைய மேககணினிக்குள் ஒரு கோப்புறைக்கு மட்டும் கடவுச்சொல்லை ஒதுக்கினால்போதும் – அதை இது ஒரு பெட்டகமாக பாதுகாக்கின்றது -. அவ்வளவு தான். சிக்கலான திறவுகோள் உருவாக்கம் எதுவும்இதில் இல்லை, பதிவு எதுவும் செய்யத்தேவையில்லை, உள்ளமைவு எதுவும் இல்லை! பெட்டகத்தை அணுக, கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிட்டால் போதுமானதாகும். யூ.எஸ்.பி போலவே, நம்முடைய தரவுகளை நகர்த்தக்கூடிய மெய்நிகரான மறைகுறியாக்கப்பட்ட இயக்ககம் ஒன்று நமக்கு வழங்கப்படும். இந்த இயக்ககத்தில் எதையாவது சேமிக்கும் நாம் ஒவ்வொரு முறையும், Cryptomator ஆனது தரவுகளை தானாகவே குறியாக்கம் செய்கிறது. இதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் அதிநவீனமானது மேககணினியில் உள்ள நம்முடைய கோப்புறையை யாராவது பார்த்தால், அவர்கள் நம்முடைய தரவுகளைப் பற்றி எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.
Cryptomator ஏன் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது?
இதில் பின்புற வாயில்கள் ,கதவுகள் எதுவும் இதில் இல்லை, காலாவதி தேதி இல்லை இதனை(Cryptomator) கண்மூடித்தனமாக நம்ப வேண்டியதில்லை, ஏனெனில் இது திறமூல மென்பொருள். ஒரு பயனாளராக நம்மைப் பொறுத்தவரை, எல்லோரும் குறிமுறைவரிகளைப் பார்க்க முடியும் என்பதாகும்.
சுதந்திரமான பாதுகாப்பு தணிக்கைகளுக்கு மேலதிகமாக, மென்பொருள் தொடர்ச்சியாகவும் பகிரங்கமாகவும் தானியங்கி முறையில் பரிசோதிக்கப்படுகிறது மேலும் அளவிடக்கூடிய குறிமுறைவரிகளின் தரம் , பரிசோதனை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது தொழில் சராசரியை விட மிக அதிகமாகும்.
மேகக்கணி சேவையை பொருத்தமான DPA வுடன் பயன்படுத்தும் போது, GDPR-இணக்கமான தரவுகளை மேகக்கணிக்கு ஒரு முழுமையான குழுவுடன் ஒத்திசைவாக செயற்படுத்திடலாம்.
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு GPLv3 எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது இதனை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும் cryptomator.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க