எளிய தமிழில் Computer Vision 17. காணொளியை செயல்படுத்தல் (Video processing)

காணொளித் தாரையை (streaming video) செயல்படுத்துவது என்பது தொடர்ச்சியான செயல்முறை அல்ல. நாம் காணொளியைக் கையாளும்போது சட்டகங்களை (frames) தனித்தனியாகத்தான் செயல்படுத்துகிறோம். ஏனெனில் ஒவ்வொரு சட்டகமும் ஒரு படம் தானே.

உற்பத்தியில் கணினிப் பார்வை

உற்பத்தியில் கணினிப் பார்வை

சட்டகம் கவர்வி (Frame grabber)

சட்டகம் கவர்விகள் ஓடும் காணொளியில் நம் பகுப்பாய்வுக்குத் தேவையான சட்டகங்களைப் பிரித்தெடுத்து அனுப்பும் வேலையைச் செய்பவை.

முன் காலத்தில் கணினியில் விரிவாக்க அட்டைகள் (expansion cards) சேர்த்து சட்டகம் கவர்வி வேலைக்குப் பயன்படுத்துவோம். இப்பொழுது சட்டகம் கவர்வி உள்ள படக் கருவிகளே வருகின்றன. முன்னர் சட்டகம் கவர்விகள் ஒரு சட்டகத்தை சேமிக்கும் அளவுக்கு நினைவகம் மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது வருபவை பல சட்டங்கங்ளை சேமிக்க முடியும்.

நூறு சட்டகங்களுக்கு ஒன்றைப் பிடித்தல்

நம்முடைய வினைச்சரத்தைப் (algorithm) பொருத்து நாம் வினாடிக்கு ஒரு சட்டகம் அல்லது நூறு சட்டகங்களுக்கு ஒன்று என்று கவரவேண்டிவரலாம். இதற்கு முதலில் நம்முடைய நிரலில் வினாடிக்கு எத்தனை சட்டகங்கள் (frames per second) என்று எண்ண வேண்டும்.

நிகழ்நேரத்தில் பொருட்களை அடையாளம் கண்டுபிடித்தல் (Real-time object detection)

நம்முடைய தொழிற்சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் செலுத்துப் பட்டையில் (conveyor belt)  படம்பிடித்து அதைப் பகுப்பாய்வு செய்து அதற்குத் தகுந்த மாதிரி செயல்படுத்த வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். இம்மாதிரி படம் பிடித்தல், பகுப்பாய்வு செய்தல், மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றை உடனடியாக, அதாவது நிகழ் நேரத்தில் செய்ய வேண்டும். இம்மாதிரி நிகழ்நேர வேலைகளையும் ஓபன்சிவியில் செய்யமுடியும்.

நன்றி

  1. INDUSTRY 4.0 AND MACHINE VISION

இத்தொடரில் அடுத்த கட்டுரை: எந்திரனுக்குப் பார்வை மென்பொருளாக ஓபன்சிவி

ராஸ் (ROS) தொகுப்பில் கணினிப் பார்வைக்கு ஓபன்சிவி (OpenCV). ராஸ் வடிவப் (ROS format) படங்களை ஓபன்சிவி வடிவப் (OpenCV format) படங்களாக மாற்றல். ஆன்ட்ராய்டு திறன் பேசி செயலி.

ashokramach@gmail.com

%d bloggers like this: