ராஸ் (ROS) தொகுப்பில் கணினிப் பார்வைக்கு ஓபன்சிவி (OpenCV)
ராஸ் (Robot Operating System – ROS) என்பது எந்திரன்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் கட்டற்ற திறந்தமூல இயங்குதளத் தொகுப்பு. இது ஆராய்ச்சி மற்றும் சோதனைகளுக்கு மட்டுமல்லாமல் வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் எந்திரன்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முதன்மை கணினிப் பார்வை மென்பொருளாக கட்டற்ற திறந்தமூல ஓபன்சிவியைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆகவே ராஸ் நிரலகத் தொகுப்பில் ஓபன்சிவியும் சேர்த்தே அனுப்பப்படுகிறது.
ராஸ் வடிவப் (ROS format) படங்களை ஓபன்சிவி வடிவப் (OpenCV format) படங்களாக மாற்றல்
ராஸ் வடிவமைப்புப் படங்களை ஓபன்சிவி வடிவத்திற்கு மாற்ற முடியும். இதேபோல அதற்கு எதிர்மாறாகவும் மாற்ற முடியும். சிவி பாலம் (CvBridge) என்பது ராஸ் நிரலகமாகும், இது ராஸ் மற்றும் ஓபன்சிவிக்கு இடையில் மேற்கண்ட வேலையைச் செய்ய ஒரு இடைமுகத்தை வழங்குகிறது.
ஆன்ட்ராய்டு திறன் பேசி செயலி
மேற்கண்ட வேலைகளை ஆன்ட்ராய்டு திறன் பேசி செயலியில் ஜாவா நிரல் எழுதியும் செய்யலாம்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: திறன்மிகு படக்கருவிகள் (Smart cameras)
தொழில்துறைக்கான திறன்மிகு படக்கருவிகள் (Industrial smart cameras). பொருத்துதல் (mounting) மற்றும் நேரமைத்தல் (aligning) எளிது. எந்திரன்களில் பொருத்தத் தோதாக கையடக்க அளவு (Compact unit for mounting on robots).