DeviceHive எனும் அளவிடக்கூடிய திறமூல M2M மேம்பாட்டு தளம் ஒரு அறிமுகம்

பொதுமக்கள் அனைவரும் தற்போது எந்தவொரு பணியையும் செய்வதற்காக எளிய வழிகளைத் தேடுகின்றனர் மேலும் அவை எளிதாக செயல்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர் அந்த எதிர்பார்ப்பிற்கு ஏதுவாக புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக பெரும்பாலான பணிகள் இயந்திரங்களின் வாயிலாக தானியங்கியாக செயல்படுமாறு மேம்படுத்தபட்டுவருகின்றன அதிலும் தொழிலகங்களில் அவ்வாறு இயந்திரங்கள் தானியங்கியாக செயல்படுவதற்கு M2M எனும் தொழில்நுட்பமானது அத்தியாவசிய தேவையாக சமீபத்தில் மேம்பட்டு வந்துள்ளது. இந்த M2M தொழில்நுட்பமானது பல்வேறு வடிவங்களில் தரவுகளுடன் இணையத்தை அடிக்கடி தொடர்புகொள்ள அனுமதிக்கின்றது மிகமுக்கியமாக சாதனங்களுக்கிடையே அல்லது இயந்திரங்களுக்கிடையே தரவுகளின் பரிமாற்றத்திற்கு தேவையான தகவல் தொடர்பின்மூலம் இந்த M2M தொழில்நுட்பமானது அவைகளை இணைக்கின்றது

, .இந்த M2M தொழில்நுட்பமானது முதலில் உற்பத்திதுறைகளிலும் பின்னர் இதர தொழில் துறைகளிலும் செயல்படுத்தப்பட்டது, தொழிலகங்களில்SCADA , தொலைநிலை கண்காணிப்பு போன்ற பிற தொழில்நுட்பங்களின் தரவுகளை தொலைநிலையாக நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் இந்த M2M தொழில்நுட்பமானதுபேருதவியாக இருந்துவருகின்றது . இந்த M2Mதொழில்நுட்பத்தின் மூலம் ரோபோ அல்லது இயந்திரம் போன்றவைகளைக் கட்டுப்படுத்தமுடியும். மிககுறைந்தஅளவிலான மனித தலையீட்டோடு, நீர் சுத்திகரிப்பு அல்லது பாலங்களைகண்காணித்தல் போன்ற முக்கியமான பொது உள்கட்டமைப்பினை மிகவும் திறம்பட கண்காணிக்க இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திகொள்ள முடியும்.

இயந்திரங்களுக்கிடையேயான தகவல் தொடர்பு அமைப்பினை செயல்படச் செய்வது என்பது படிப்படியான செயல்முறையாகும். இந்த செயல்பாட்டில்: சென்சார்கள் (செயல்பாட்டு சூழலில் இருந்து தரவைப் பெற்று அதை கம்பியில்லாமல் கடத்துகின்றன), பியர்டுபியர் வயர்லெஸ் நெட்வொர்க்குகள் ,இணையத்தின் வாயிலாக இணைந்துள்ள கணினிகள் ஆகிய மூன்று முக்கியஉள்ளடக்கங்கள் உள்ளன.பொதுவாக M2M தொழில்நுட்பத்தில் செயல்படுபவைகளாக 1.பின்புலசேவைகளுக்கிடையே தகவல்தொடர்புகள்: 2.IoT எனும் பொருட்களுக்கான இணையத்தில்இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் தகவல்தொடர்புகள்.3. CLI எனும் வாடிக்கையளர்களின் தகவல்தொடர்புகள்: ஆகியவற்றை குறிப்பிடலாம்
பின்வருபவை M2M தொழில்நுட்பத்தின் கட்டமைப்பிற்கு சிறந்தஎடுத்துகாட்டுகளாகும்.
1.M2M
சாதனங்கள்:sensors ,ZigBee அல்லது Bluetooth, LoWPAN ஆகியவை இந்த வகையை சேர்ந்ததாகும்

2.M2M பகுதி வலைபின்னல் அமைவு (சாதன டொமைன்):ஒரு தனிப்பகுதி வலைபின்னலானது இதனடிப்படையில் செயல்படுவதாகும்

3. M2M நுழைவாயில்:

4.M2Mவலைபின்னல்அமைவு: XDSL, LTE, WiMAX , WLAN ஆகியவை இந்தவகைகளாகும்.
5.M2M
பயன்பாடுகள்: IoT அடிப்படையிலான திறனுடைய வீடுகள், ஹெல்த், எம்ஹெல்த், டெலிமெடிசின்,மருத்துவசாதனங்களுக்கானஇணையம், விற்பனை இயந்திரங்கள், திறனுடைய வாகணங்களின் நிறுத்துமிடஅமைப்புகள், மனிததலையீடின்றி சுயமாக செயல்படும் விற்பணை கடைகள், கம்பியில்லா கட்டண வசூல் அமைப்புகள், தொழிற்சாலைகளில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அமைப்புகள், , தொழில்துறை கண்காணிப்பு, முதலியன இந்த வகையை சேர்ந்தவைகளாகும்

ற்போது பல்வேறு வகைகளில்திறமூல M2M மேம்பாட்டு தளங்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளன அவைகளுள் DeviceHive எனும் திறமூல M2M தொழில்நுட்ப மேம்பாட்டு தளத்தை பற்றி மட்டும் இப்போது காண்போம்

DeviceHive ஆனது அனைத்து சேவைகளைத் தொடர்புகொள்வதற்கும் நிருவகிப்பதற்கும் திறனுடைய சாதனங்களுக்கான சக்திவாய்ந்த கருவிகளை வழங்குகிறது. கைபேசி மேம்படுத்துநர்களையும் பயனாளர்களையும் பாதிக்கின்ற மேககணினி, கைபேசி, உட்பொதியப்பட்டசெயலிகள் ஆகிய மூன்று முக்கியமான தொழில்நுட்பங்களை இது ஒருங்கிணைக்கின்றது – . இம்மூன்றும் இணைந்து தொலைதூரசெயலி, தொலைதூர கட்டப்பாடு, கண்காணிப்பும் தானியங்கியும், திறனுள்ளசெயல்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியை மேம்படுத்த இது ஒரு தகவல் தொடர்பு அடுக்குகளையும், கட்டுப்பாட்டு மென்பொருளையும் , பலதள நூலகங்களையும் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. எந்தவொரு பொருட்களுக்கான இணையத்தினையும் உருவாக்க அல்லது தனிப்பயனாக்க இந்த டிவைஸ்ஹைவ்ஆனது ஒரு வலுவான அடித்தளத்தையும் கட்டுமான ஆதரவையும் வழங்குகின்றது. இதனுடைய M2Mதொழில்நுட்பமானது, உட்பொதியப்பட்ட மேம்படுத்துதல், மேககணினி இயங்குதளங்கள், பேரளவு தரவுகளுக்கும் வாடிக்கையாளர் பயன்பாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றது. மாறுபட்ட நெறிமுறைகளில் சாதன மேலாண்மை ஏபிஐகளுடன் அளவிடக்கூடிய, வன்பொருள் , மேககணினி மீச்சிறு சேவை அடிப்படையிலான தளமாகவும் இது பயன்படுகின்றது, இது இறுதி பயனாளர்களை சாதன இணைப்பை அமைக்கவும் கண்காணிக்கவும் தரவு பகுப்பாய்வுகளை செய்யவும் அனுமதிக்கிறது.

இதன் வசதி வாய்ப்புகள் பின்வருமாறு

1.வரிசைப்படுத்தல்: இந்த டிவைஸ்ஹைவ் ஆனது எண்ணற்ற வரிசைப்படுத்தல் விருப்பங்களை எளிதாக்குகிறது மேலும் எந்தவொரு தொடக்கநிறுவனமாகஇருந்தாலும் அல்லது வளர்ந்த பெரிய நிறுவனமாக இருந்தாலும் அவைகளுக்கு ஏற்றதாக இதுவிளங்கு கின்றது. , தனியார் ,பொது அல்லது கலப்பின மேககணிகளின் மேம்படுத்துதல்களை எளிதாக்க டோக்கர் ஒருங்கிணைத்தல் குபெர்னெட்டுகள் வரிசைப்படுத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

2.அளவிடுதல்: இந்த டிவைஸ்ஹைவ் ஆனது ஒரு கொள்கலன் சேவை சார்ந்த கட்டிடக்கலை அணுகுமுறை போன்ற சிறந்த மென்பொருள் வடிவமைப்பு நடைமுறைகளை உள்ளடக்கியது, இது குபெர்னெட்டுகளால் நிர்வகிக்கப்பட்டு திட்டமிடப்பட்டு செயல்படுகின்றது, இது ஒருசிலநொடிகளில் அளவிடுதலையும்அதன்தன்மையையும் கொண்டு வருகின்றது

3.இணைப்பு: இது REST API, WebSockets அல்லது MQTT வழியாக எந்தவொரு சாதனத்துடனும் ஆன இணைப்பை ஆதரிக்கின்றது. இது Android iOS ஆகிய இரண்டு கணினிமொழிகளை மட்டுமல்லாமல் பல்வேறு கணினிமொழிகளில் எழுதப்பட்ட நூலகங்களை ஆதரிக்கின்றது இது ESP8266 போன்ற உட்பொதியப்பட்ட சாதனங்களை கூட ஆதரிக்கின்றது.

4.தடையற்ற ஒருங்கிணைப்பு: தனிப்பயனாக்கப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் குறியீட்டை பயனாளர்கள் இயக்க அனுமதிப்பதன் மூலம் கூகிள், சிரி, அலெக்சா போன்ற குரல் உதவி சேவைகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்பை இது ஆதரிக்கின்றது.
5.
திறனுடைய பகுப்பாய்வு: இது நிகழ்நேர செயல்முறைகளுக்கு மீள் தேடல், அப்பாச்சி ஸ்பார்க், கசாண்ட்ரா மற்றும் காஃப்கா ஆகியவற்றைப் பயன்படுத்தி திறனுடைய பகுப்பாய்வுகளை ஆதரிக்கினறது. இது இயந்திர கற்றல் ஆதரவையும் எளிதாக்குகின்றது.
6.
திறமூலபயன்பாடு: இது கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டிற்காக அப்பாச்சி 2.0 உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படடுள்ளது, மேலும் இதனை செயல்படுத்தி பயன்பெறும இறுதி பயனாளர்கள் இந்தடிவைஸ்ஹைவ் பயன்படுத்திடும்போது எழும் எந்தவொரு சிக்கல்களையும் டேட்டாஆர்ட்டின் ஐஓடி நிபுணர்களிடம் எளிதாக கோரி தீர்வுசெய்து கொள்ளமுடியும்

7.ஒழுங்குமுறைகள்: டிவைஸ்ஹைவ் ஆனது REST, WebSocket API , MQTT ஆகிய ஒழுங்குமுறைகளை ஆதரிக்கின்றது. இது தவிர, அனைத்து RESTful சேவைகளுக்கும், இது நிறுவல் மற்றும் பிற திறன்களை சோதிக்க Swagger API கருவியை வழங்குகின்றது.
8.
வாடிக்கையாளர் / சாதன நூலகங்கள்: இந்த டிவைஸ்ஹைவ் ஆனது ஏராளமான சாதன நூலகங்களை ஆதரிக்கின்றது நெட் வரைச்சட்டம், .நெட் மீச்சிறுவரைச்சட்டம், சி ++, பைதான் , சி (மீச்சிறுகட்டப்பாட்டாளர்கள்) ஆகியவற்றுடன் ஒத்தியங்குகின்றது.

9.வாடிக்கையாளர் நூலகங்கள்: இவற்றில் நெட் வரைச்சட்டம், iOS , இணைய / ஜாவாஸ்கிரிப்ட் ஆகியவைஇதில் அடங்கும்.
10.
சாதனங்களின் ஆதரவு: இது வாடிக்கையாளர் நூலகம் வழியாக பைதான், நோட்.ஜெஸ் அல்லது ஜாவா அடிப்படையிலான லினக்ஸ் போர்டுகளுடன் எந்தவொரு சாதனத்தையும் ஆதரிக்கிறது. வெப்பநிலையை அளவிடுவதற்கான DS18B20, LM75A / LM75B / LM75C, DHT11 , DHT22 ஆகிய சென்சார்கள் அழுத்தத்தினை அளவிடுவதற்கான BMP180, BMP280, ஆகிய சென்சார்கள் போன்ற அனைத்து வகையான சென்சார்களையும் கையாள எளிய API உடன்கூடிய ESP8266 எனும் சிப்பை இது ஆதரிக்கின்றது. இந்த டிவைஸ்ஹைவ் என்பது மீச்சிறுசேவையாளர் அடிப்படையிலான அமைப்பாகும், மேலும் விவரங்களுக்குdevicehive.com எனும் இணையதளமுகவரிக்குசென்றுபயன்படுத்தி கொள்க

%d bloggers like this: