துருவங்கள் – அத்தியாயம் 11 – பதினாறும் பெற்று

பதினாறும் பெற்று

அன்று திங்கட்கிழமை, மதியம் உணவு இடைவேளையில் சுரேஷ், தீப்தி, மதன், கார்த்திகா நல்வரும் ஒன்று கூடினர். ‘நேத்தி கயலும் குருவும் வீட்டுக்கு வந்திருந்தாங்க, அம்மாவ பாத்து இன்விடேஷன் கொடுத்தாங்க’ சுரேஷ் ஆரம்பிக்க ‘உங்க வீட்டுக்குமா, எங்க வீட்டுக்கும் போய் அம்மாவ பாத்து இன்விடேஷன் கொடுத்திருக்காங்க, அம்மா போன் பண்ணி சொன்னாங்க’ தீப்தி கூற ‘வர சண்டே மேரேஜ், நீ போறியா இல்ல நாங்க போகட்டுமான்னு எங்க வீட்லயும் கேட்டாங்க’ மதன் கூற ‘போன்ல சொன்ன மாதிரி மெட்ராஸ் வந்து மூனு பேர் வீட்லயும் நேர்ல பாத்து கொடுத்துட்டு தான் போயிருக்கா, எங்க வீட்டுக்கும் நேர்ல போய் கொடுத்திருக்கா, அப்ப யார் யார் கல்யாணத்துக்கு வரப்போரீங்க?’ கார்த்திகா கேட்க ‘அம்மா நோ சான்ஸ், சோ எங்க வீட்ல நான், அநேகமா, தீப்தி வீட்லயும் தீப்தியாத்தான் இருக்கனும், நானும் அவளும் ஒன்னா வந்துடுவோம், இல்ல தீப்தி’ சுரேஷ் தீப்தியை பார்த்து பரிதாபத்துடன் கேட்க ‘வழியாத, உன் கூடத்தான் வறேன்’ தீப்தி செல்லமான கோபத்துடன் கூற ‘அப்ப உங்க வீட்ல?’ கார்த்திகா மதனைப் பார்த்து கேட்க ‘வேற யாரு, நான்தான், உங்க வீட்ல?’ மதன் கார்த்திகாவை பார்த்து கேட்க ‘வெள்ளிக்கிழமை நைட்டே சென்னைல இருந்து கிளம்பறேன், சத்தியமங்கலம் போயிட்டு அங்கிருந்து அப்பா அம்மா பிக்கப் பண்ணிட்டு நேராக கோபி வறேன்’ கார்த்திகா கூற ‘மச்சி நீயும் எங்க கூடவே வாடா, சாட்டர்டே மார்னிங் நாலு மனிக்கு கொலம்பறோம், டுவல்வ்கெல்லாம் கோபிச்செட்டிபாலயம் ரீச் ஆயிடுவோமாம், கூகுள் சொல்லுச்சு’ சுரேஷ் கூற ‘எதுக்கு டிஸ்டர்பன்ஸ், என்ஜாய் யுவர் ஜர்னி’ மதன் கூற ‘போடாங், நீயாவது குரூப்பா ட்ராவல் பன்றதாவது, நீ ஒரு இத்துப்போன ஜென்மம்டா, சாமியாரே’ சுரேஷ் மதனை திட்டி கொண்டிருக்க ‘டைம் ஆச்சுடா, கேபினுக்கு போகலாம் வா, ஸி யூ அகெய்ன் கார்த்திகா, பாக்கலாம் தீப்தி’ என்று சொல்லிவிட்டு மதன் சுரேஷை இழுத்துக் கொண்டு சென்றான்.

சனிக்கிழமை காலை நான்கு மணி, சுரேஷ் அவனது வீட்டிலிருந்து பிஎம்டபிள்யூ எக்ஸ் த்ரீ எடுத்துக்கொண்டு தீப்தியின் ரூமிற்கு வந்தடைந்தான். ‘உள்ள வாடா, பியூ மினிட்ஸ்’ தீப்தி கூற ‘மேக்கப்பெல்லாம் அங்க போய் பாத்துக்க, இப்பவே ஏன்டி லேட் பண்ற’ சுரேஷ் காரில் இருந்தவாறே கூறினான். சிறிது நேரம் கழித்து தீப்தி தன் லக்கேஜை காரின் பின்புறம் வைத்தாள். ‘சீக்கிரம் உள்ள ஏறு’ சுரேஷ் கூற ‘இருடா, ஒருத்தர் வரணும்’ தீப்தி சொல்லிக்கொண்டிருக்கும்போதே கார்த்திகா தன் லக்கேஜுடன் வந்து கொண்டிருந்தாள் ‘நேத்தி நைட் ஊருக்கு போகலையா?’ சுரேஷ் ஆர்வத்துடன் கேட்க ‘ஆப்பிஸ்ல ப்ரொடக்‌ஷன் டிப்லாய்மெண்ட், ரொம்ப லேட் ஆயிடுச்சு, ப்ரைடேன்றதனால ரீப்ளேஸ்மெண்ட் கூட யாரும் இல்லை அதான் போக முடியல, உங்க கூட வரலாம்ல, தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே, உங்க கேர்ள் ப்ரண்ட் கூட போறீங்க, அதான் கேட்கவே கொஞ்சம் கூச்சமா இருக்கு’ கார்த்திகா தயக்கத்துடன் கேட்க ‘என்னங்க நீங்களும் அந்த சாமியார் மாதிரி கேட்குரீங்க, எனக்கு கார்ல பத்து பேராச்சும் இல்லைன்னா டிராவல் பண்ணவே பிடிக்காது, அந்த நாய்தான் வரல, நீங்களாச்சும் வரீங்களே, கெட் இன்’ சுரேஷ் கூற தீப்தியும் கார்த்திகாவும் காரில் அமர்ந்தனர். ‘வெயிட், எங்க இருக்கான்னு தெரியல, நைட்டே கொலம்பிட்டு இருப்பான், எதுக்கும் ஒரு முற கால் பண்ணி பாப்போம்’ சுரேஷ் மதனை கைபேசியில் அழைத்தான்.

‘எங்கடா இருக்க’ சுரேஷ் கேட்க ‘தூங்குறவன எழுப்பி கேட்குற கேல்வியாடா இது, ரூம்லதான்’ மதன் மறுமுனையில் இருந்து பதில் அளிக்க ‘பைவ் மினிட்ஸ் ரெடியா இரு, நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்’ சுரேஷ் கூற ‘டேய் வென்று, நீங்க போங்க, நான் எதுக்கு தேவையில்லாம, ஆல்ரெடி டிக்கெட் புக் பண்ணிட்டேன் டா, எட்டு மணிக்கு வண்டலூர்ல பிக்கப்’ மதன் கூற ‘அதை கிழிச்சு போட்டு ரெடியா இரு’ சொல்லிவிட்டு சுரேஷ் கைப்பேசி தொடர்பினை துண்டித்தான். சுரேஷ் தன் காரை அவனும் மதனும் தங்கியிருந்த ரூமிற்கு ஓட்டினான். சுரேஷ் காரில் கார்த்திகாவை காருக்கு பின்புறம் இருக்கும் பொருட்கள் வைக்கும் இடத்தில் அவன் சொல்லும்வரை ஒளிந்திருக்க செய்தான். கார் ருமை வந்தடைந்தது. மதன் தன் டிராவல் பேகுடன் ருமை பூட்டிவிட்டு கார் அருகில் வந்தான். ‘மச்சி எப்படா பிஎம்டபிள்யூ வாங்குன, சொல்லவேல்ல’ மதன் சுரேஷின் காரை வியப்புடன் பார்க்க ‘ரொம்ப முக்கியம் ஏற்றா உள்ள’ சுரேஷ் திட்ட மதன் காரின் பின் சீட்டில் உட்கார்ந்தான். கார் சோழிங்கநல்லூரில் இருந்து புறப்பட்டு கேலம்பாக்கம் வழியாக வண்டலூர் சென்றுகொண்டிருந்தது. காரில் தீப்தியும் சுரேஷும் இருந்தனர். கார்த்திகா காரின் பின்புறத்தில் மறைந்திருந்தாள். ‘எம்மா தீப்தி அவந்தான் லூசுத்தனமா என்ன கூப்புட்ரான்னா, நீ சும்மா இருக்கிறதா? கப்புல்ஸ் போகும்போது இன்னொருத்தர் இடைஞ்சலா இருக்க கூடாதும்மா’ மதன் தீப்தியை பார்த்து கூற ‘அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும் மூடிட்டு வா’ சுரேஷ் மதனை கடித்துக்கொள்ள மதன் சுரேஷின் காதோரமாக ‘என்னடா மயிரு தெரியும், நீங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிட்டு வருவீங்க, அத பாத்து நான் காண்டாகருத்துக்கா, நான் பாட்டுக்கு சிவனேன்னு ஒழுங்கா பஸ்ல போயிருப்பேன், இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல என்ன மரியாதையா வண்டலூர்ல எறக்கி விட்டுடு’ மதன் சுரேஷின் காதில் சொன்னது தீப்திக்கும் கார்த்திகாவுக்கும் கேட்டது. கார்த்திகா மறைந்துகொண்டு மவுனமாக சிரித்துக்கொண்டிருந்தாள். ‘அண்ணா, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா ரொமான்ஸ் விட சண்டை தான் அதிகமா வரும்’ தீப்தி கூற மதன் பின் இருக்கையில் ஒரு வழியாக அமர்ந்தான்.

‘கார்த்திகா கால் பண்ணாங்களா? ஊருக்கு போயிட்டாங்களாமா?’ சுரேஷ் மதனிடம் கொக்கி போட. ‘அவங்க எதுக்கு எனக்கு கால் பண்ண போறாங்க, நான் என்ன அவங்களோட பாய்ப்ரண்டா?’ மதன் கூற ‘அடங்கப்பா, அப்ப கயல் அம்மாவோட ஆளுங்க கார்த்திகா ரூமுக்கு போனப்ப நீ எதுக்கு பதறிப்போய் அங்க ஓடுன, எதுக்கு அருவா எல்லாம் எடுத்த?’ சுரேஷ் கேட்க ‘சுத்தி வலச்சு எங்க வறேன்னு தெரியுது, மூடு, நீங்க ரெண்டு பேரும் என்ன வென்னாலும் நெனச்சிக்கோங்க, நானும் கார்த்திகாவும், வி ஆர் குட் பிரண்ட்ஸ், ஓகே, மேபி, ஷி இஸ் ஒன் ஆப் மை பெஸ்ட் பிரண்ட், உங்கள மாதிரி’ மதன் சமாளிக்க ‘கமான் அன்னா, டோன்ட் பீ அப்ரைட், யூ ஹவ் டு ஓபன் அட் ஒன் பாயின்ட்’ தீப்தி கூற ‘நீ வேற, எனக்கு எங்க வீட்ல பொண்ணு பாத்துட்டு இருக்காங்க, அந்த பெண்ணுக்கு அவங்க வீட்ல மாப்ள பாத்துட்டு இருக்காங்க, ஏதோ ரீசனால ரெண்டு பேருக்கும் கல்யாணம் தள்ளிப் போகுது, சோ நாங்க ரெண்டு பேரும் ஆல்ரெடி இன் தட் அரேன்ஜ் மேரேஜ் சோன், என்னதான் எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வேவ்லென்த் இருந்தாளும் இட்ஸ் டூ லேட், தேவ இல்லாம ஒரு பொண்ணோட வாழ்கையில விலையாடக்கூடாதும்மா’ மதன் சொல்லிக்கொண்டிருக்கையில் சுரேஷ் குருக்கிட்டு ‘இப்டியே பேசிக்கிட்டு இரு, எவன்னா வந்து கொத்திட்டு போகப்போரான், உன் ஏஜ் தான்டா நானும் ஏன் நான் லவ் பன்னலையா?’ சுரேஷ் கேட்க ‘உங்க கதை வேறு’ மதன் கூற ‘என்னடா உங்க கத எங்க கத, எல்லாத்துக்கும் பேரு லவ் தான்டா, அத சொன்னா தான்டா அடுத்த ஸ்டேஜுக்கு போக முடியும், அதெல்லாம் விட்ரா, மனசாட்சி தொட்டு சொல்லு அந்த பொண்ண கட்டிக்க உனக்கு விருப்பம் இல்லைன்னு?’ சுரேஷ் கேட்க மதன் சிறிது நேரம் பேசவில்லை பிறகு ‘மகாலஷ்மிடா, அவங்க எந்த வீட்டுக்குப் போனாலும் அந்த வீட்டை நல்லா பாத்துப்பாங்க, எங்க வீட்டுக்கு வந்தா நான் கொடுத்து வெச்சவன்’ மதன் சொன்னவுடன் சுரேஷ் காரை சட்டென்று நிருத்தினான். சுரேஷும் தீப்தியும் ஒருசேர பின்புறம் பார்க்க பின் சீட்டில் மதன் இவர்களை பார்க்க மதனுக்கு பின்புறம் கார்த்திகா மதனை பார்த்துக்கொண்டிருந்தாள். சுரேஷும் தீப்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு மதனையும் அவன் பின்னால் இருக்கும் கார்த்திகாவையும் பார்த்தனர். பின்னால் கார்த்திகா இருப்பதை கவனிக்காத மதன் சுரேஷை பார்த்து ‘என்னடா?’ மதன் கேட்க சுரேஷ் சுதாரித்துக் கொண்டு ‘உணர்ச்சிவசப்படாத தீப்தி, இதுக்கு முன்னாடி எப்படி இருந்தியோ அப்படியே இரு, கேட்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு, அவசரப்படாத’ என்று சுரேஷ் தீப்தியை சொல்வதுபோல் கார்த்திகாவுக்கு கட்டளையிட்டு மறுபடியும் மறைந்திருக்க சொன்னான். ‘டேய் நாதார்ஸ், அதான் ஆச பட்ரல்ல, போய் நேரா அவங்க கிட்ட சொல்லலாம்ல?’ சுரேஷ் கேட்க ‘லூசு மாதிரி பேசாதடா, அந்த பொண்ணோட மைன்ட்ல என்ன இருக்குன்னு யாருக்குடா தெரியும், அதுவரைக்கும் மூடிட்டு நான் என் வேலைய பாக்குறேன், நீங்க உங்க வேலைய பாருங்க’ சுரேஷ் தெளிவுடன் கூறினான். ‘உன்ன திருத்தவே முடியாதுடா, வண்டி நிருத்துனது நல்லதா போச்சு, வா, டீ குடிக்கலாம்’ சொல்லிவிட்டு சுரேஷ் காரை விட்டு இறங்கி டீ கடைக்கு அருகில் சென்று கொண்டிருந்தான். ‘கெலம்பி ஆப்பனவர் கூட ஆகல’ மதனும் காரை விட்டு கீழே இறங்கி டீ கடைக்கு அருகில் செல்ல சுரேஷ் ‘மாப்ள நீ போயிட்டே இரு பர்ஸ் வண்டியிலேயே மறந்துட்டேன்’ மதனிடம் சொல்லிவிட்டு மருபடியும் காரின் அருகில் வந்தான். பின்னால் ஒலிந்திருந்த கார்த்திகாவிடம் ‘சாரி கார்த்திகா, உங்கள கஷ்டப் படுத்திட்டேன், டோர் ஓப்பன் பண்ணாதீங்க, அப்படியே வந்து பேக் சீட் லெப்ட் சைடு உட்காருங்க, அவன் உங்கள பாத்தா என்ன ரியாக்‌ஷன் வருதுன்னு பார்போம், பைதவே, மச்சான் உங்கள பத்தி என்ன நெனச்சிட்டு இருக்கான்னு சொல்லிட்டான், இட் இஸ் அப் டு யூ நவ், ஐ ஹோப் யூ வில் டேக் குட் டிசிஷன்’ என்று கார்த்திகாவிடம் சொல்ல கார்த்திகா புன்னகைத்தாள். ‘உங்களுக்கு டீ?’ சுரேஷ் கார்த்திகாவை பார்த்து கேட்க ‘இட்ஸ் ஓகே, எக்ஸ்ட்ரா டீ வாங்கினா கண்டுபிடிச்சுருவாரு, யூ கேரி ஆன்’ கார்த்திகா கூறினாள். ‘நீ ஏன் இன்னும் உள்ள இருக்க, எறங்கி வா’ சுரேஷ் தீப்தியை காரை விட்டு இறங்கி வர சொன்னான். தீப்தி, சுரேஷ், மதன் மூவரும் தேநீர் அருந்திவிட்டு காரில் அமர வந்தனர். தீப்தியும் சுரேஷும் முன் இருக்கைகளில் அமர்ந்தனர். காரின் இடது புற பின் இருக்கையில் கார்த்திகா அமர்ந்திருந்தாள்.

காரின் வலதுபுற கதவை திறந்த மதனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ‘வாட்?’ மதன் கார்த்திகாவை பார்த்ததும் மறுபடியும் கதவை மூடிவிட்டு, ‘என்னடா, உள்ள வாடா?’ சுரேஷ் கார் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த படி கேட்க ‘மச்சி, சின்னப்புள்ளத்தனமா இருந்தாலும் பரவாயில்லை, நான் உன்கிட்ட இப்ப ட்ரீம்லயா பேசிட்டு இருக்கேன்?’ மதன் கேட்க ‘உளராதடா, மூடிட்டு உள்ள வா, போகலாம்’ என்று சுரேஷ் சொல்ல ‘உள்ள கார்த்திகா உட்கார்ந்து இருக்காங்க’ மதன் சொல்லிக்கொண்டே காரில் அமர்ந்து கார்த்திகாவை பார்த்தபடி இருந்தான். கார்த்திகாவும் சிலை போல் அமர்ந்திருந்தாள். ‘ஏன்டா ஏதேதோ பேசுர?’ சுரேஷ் சொல்ல ‘மச்சி ஒரு வேல, நாம இன்செப்ஷன்ல இருக்குரோமோ, உன்கிட்ட பம்பரம் இருக்கு?’ மதன் சொன்னவுடன் கார்த்திகாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை, சிரித்துவிட்டாள், இதை பார்த்து தீப்தியும் சுரேஷும் சிரித்தனர். ‘எல்லாம் நீ போட்ட ப்ளானா?’ மதன் சுரேஷை கேட்க ‘இன்னும் கொஞ்ச நேரம் ஓட்டி இருக்கலாம், தப்பிச்சுட்டான்’ சுரேஷ் கூற ‘அவர் என்ன பர்ஸ்ட் டைம் பாத்தவுடனே என்ன நடக்குதுன்னு அவருக்கு தெரிஞ்சிடுச்சி, ஹி ஜஸ்ட் பிளேடு அலாங், பம்பரம்னு சொன்னவுடனே என்னால கண்ட்ரோல் பண்ண முடியல’ கார்த்திகா கூற ‘நேத்தி நீங்க ஊருக்கு போகலையா? எங்க இருந்தீங்க இவ்வளவு நேரம்?’ மதன் கேட்க ‘ப்ரொடக்‌ஷன் டிப்லாய்மெண்ட், லேட்டாயிடுச்சு, போகமுடியல, உங்க பின்னாடித்தான் மறஞ்சிருந்தேன்’ கார்த்திகா கூற ‘அப்ப நான் பேசுனதெல்லாம்’ மதன் சற்று தயக்கத்துடன் கேட்க ‘ஹன்றட் பர்சன்ட் கரெக்ட், எங்க அப்பா அம்மா சொல்றவன தான் கல்யாணம் பண்ணிக்குவேன், ஆஸ் யூ செட், வி ஆர் இன் தட் அரேன்ஜ் மேரேஜ் சோன்’ கார்த்திகா தெளிவாக சொன்னாள். ‘அப்ப ரெண்டு பேரும் ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க, வீட்ல சொல்றவங்கலத்தான் கல்யாணம் செஞ்சிப்பீங்க?’ சுரேஷ் கார்த்திகாவும் மதனையும் பார்த்து கேட்க இருவரும் ஆமாம் என்று தலை ஆட்டினர். சுரேஷ் இருவரையும் பார்த்துவிட்டு ‘நாசமாப் போங்க, வாழ்த்துக்கள்’ என்று சொல்லிவிட்டு காரை நகர்த்தினான்.

‘ஆனா மதன் என்ன மகாலஷ்மி அப்படி இப்படின்னு சொன்னதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான், உங்க அளவுக்கு நான் வொர்த் இல்ல மிஸ்டர் மதன், நீங்கல்லாம் வேற லெவல், உங்க வருங்கால வைப் கொடுத்து வெச்சவங்க, ப்ரண்ஸ்காக உயிரையே கொடுக்குறவரு, வைப்னா கேட்கனுமா, கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பாரு’ கார்த்திகா மதனை கிண்டலடிக்க ‘அம்மா தாயே, போதும் இதோட நிறுத்திக்குவோம்’ மதன் கார்த்திகாவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். ‘என்னைக்காவது என்ன பத்தி நல்லவிதமா சொல்லி இருக்கியாடி, கார்த்திகாவை பாத்து கத்துக்கொடி’ சுரேஷ் தீப்தியை பார்த்து கூற ‘என்னைக்காவது என்ன மகாலஷ்மின்னு சொல்லி இருக்கியாடா, மதன் அண்ணாவ பாத்து கத்துக்கொடா’ என்று தீப்தி பதிலடி கொடுத்தாள். கார் மேல்மருவத்தூர் தாண்டி சென்றுகொண்டிருக்க தீப்திக்கு தூக்கம் வந்தது. ‘டேய் நான் பின்னாடி போறேன்டா, தூக்கம் வருது’ தீப்தி சுரேஷிடம் கூற ‘டீ குடிச்சு கூட வாடி தூக்கம் வருது? உன்ன கட்டிக்கிட்டு நான் தாண்டி விடிய காலையில எழுந்து மொரவாசல் செய்யனும் போல இருக்கு’ சுரேஷ் கூற ‘அப்படியே பெட் காப்பி கூட போட்டு கொடுக்கணும், வண்டி நிருத்துடா. நான் இறங்கி பின்னாடி போறேன், அண்ணாவ முன்னாடி வரச்சொல்லு’ என்று பாதி தூக்கத்தில் தீப்தி சொன்னாள். அதன்படி மதனும் தீப்தியும் இடம் மாறினர். பின்னால் போன திப்தி நன்றாக அசந்து தூங்கி விட்டாள். அவள் தூங்குவதை பார்த்து கார்த்திகாவும் தூங்கிவிட்டாள். நேரம் காலை 9 மணி, கார் தற்போது சேலம் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. ‘பசிக்குதுடா, பிரேக் எடுப்போமா?’ சுரேஷ் மதனை பார்த்து கேட்க ‘இன்னும் எவ்வளவு தூரம், ஒன் ஆர்குள்ளன்னா ஸ்ரேட்டா போயிடலாம்’ மதன் கூற ‘கூகுள் மேப்ஸ் சொல்றபடி பார்த்தா அனதர் ஒன் அண்ட் ஆப் ஆர், எனக்கு தாங்காது நீ வேணும்னா விரதம் இருந்துக்கோ’ சுரேஷ் சொல்லிட்டு அடுத்து வந்த ஒரு ரெஸ்டாரண்டில் காரை நிறுத்தினான்.

‘எங்கடா இருக்கோம்’ தீப்தி கார் நின்றவுடன் எழுந்துகொண்டாள். ‘சேலம் பைபாஸ், பேஸ் வாஷ் பண்ணிட்டு வா, சாப்பிடலாம், கார்த்திகாவையும் எழுப்பி கூட்டிட்டு வா, நாங்க உள்ள போறோம்’ சுரேஷ் தீப்தியிடம் சொல்லிவிட்டு மதனுடன் ரெஸ்டாரண்ட் உள்ளே சென்றான். தீப்தியும் கார்த்திகாவும் முகத்தை கழுவிக் கொண்டு சுரேஷும் மதனும் அமர்ந்திருந்த டேபிலில் வந்து அமர்ந்தனர். ‘என்னடா சொல்லியிருக்க’ தீப்தி கேட்க ‘எங்க ரெண்டு பேருக்கும் ஐஞ்சு ஐஞ்சு இட்லி, உங்களுக்கு வேனுன்றத ஆடர் பண்ணிக்கோங்க’ சுரேஷ் கூற ‘எனக்கும் மூணு இட்லி’ என்று கார்த்திகா கூற ‘அப்ப எனக்கு ரெண்டு ஆனியன் ஊத்தப்பம்’ என்று தீப்தி கூறினாள். எல்லோரும் சாப்பிட்டு விட்டு காருக்கு வந்தனர். ‘மச்சி இன்னும் கொஞ்ச தூரம்தான், நீ ஓட்றா, டயர்டா இருக்கு’ சுரேஷ் மதனிடம் வண்டி சாவியை கொடுத்தான். ‘டேய், நான், இந்த மாதிரி வண்டி ஓட்டி பழக்கம் இல்லடா, எக்பென்சிவ் வண்டி, ஏதாவது’ மதன் தயங்க ‘மூடிட்டு ஒட்றா, என்ன ஆனாலும் நான் பாத்துக்கறேன்’ சுரேஷ் தெம்பை கொடுத்தான். சுரேஷும் தீப்தியும் பின் இருக்கையில் அமர கார்த்திகா முன் இருக்கையில் இடதுபுறம் அமர மதன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான். காரை இயக்கிய மதன் சற்று கடினமாக ஆக்ஸிலரேட்டரை அழுத்த காரின் முன்பக்கம் சற்று எழும்பி நின்றது. உள்ளே இருந்த மற்ற மூவருக்கும் வாரிப்போட்டது. அதை சற்றும் பொருட்படுத்தாமல் மதன் ‘ஓவ், ஓவ், என் சொல்லகுட்டியில்ல, முரண்டு பிடிக்காம ஒழுங்கா போகணும் சரியா’ என்று காருடன் பேசிக்கொண்டிருந்தான். ‘டேய் என்னடா பண்ற, ஒரு செகண்ட் வாரி போட்டுச்சு, நான் வேணும்னா தீப்திய ஓட்ட சொல்லட்டுமா?’ சுரேஷ் பதட்டத்துடன் கேட்க ‘இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பிடிக்கிறேன், அதான் மொரண்டு பிடிக்குது’ மதன் கூறினான். முதல் நகர்வில் கார் கட்டுப்பாடுகளின் தன்மை என்னவென்று மதன் புரிந்துகொண்டான். அடுத்த நகர்வில் கார் மதனின் எண்ணத்திற்கேற்ப அழகாக நகர்ந்தது. ‘இப்ப என்னடா சொல்ற’ மதன் சுரேஷை பார்த்து கேட்க ‘ஒத்துக்குறேன், நீ டிராக்டர் ஓட்டுறவன்னு’ சுரேஷ் கிண்டலடித்தான். ‘வண்டி செம்மையா இருக்கு, பாட்டு பாடுமா’ மதன் கேட்க ‘ப்ளூடூத் வழியா பாட்ட கொடுத்து பாட சொன்னா பாடும்’ சுரேஷ் கூற மதன் தன் மொபைலை காரின் சவுண்ட் சிஸ்டத்தில் இணைத்தான். அதுவரை மதன் ஹர்மன் கார்டன் என்ற பெயரை கேள்விப்பட்டதில்லை ஆனால் பாம்பே படத்தில் வரும் அந்த அரபிக் கடலோரம் பாடலை ப்ளே செய்தவுடன் முதலில் வந்த பாஸ் இசை ஹர்மன் கார்டன் என்றால் என்ன என்று புரியவைத்தது. காரில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. ‘டேம், ஐம் அவுட் ஆப் திஸ் வேர்ல்ட்’ மதன் பாடலை ரசித்தபடி காரை ஓட்டினான். ‘பாஸ் பூஸ்டட்?’ கார்த்திகா மதனை பார்த்து கேட்க ‘ஏஸ்’ என்று மதன் சொல்லி முடிக்க அந்த அரபிக் கடலோரம் என்ற பாடலின் வரிகள் தொடங்கியது. காரில் இருந்த நாள்வரும் அந்த பாடல் வரிகளை கூடவே சேர்ந்து பாட ஆரம்பித்தனர். சுரேஷ் பின் இருக்கையில் அமர்ந்தவாறு தன் ஆள்காட்டி விரலை டேஷ்போர்டின் அருகில் வைத்து வட்டமாக சுற்ற காரின் ஆடியோ சிஸ்டம் அவன் விரல் அசைவை சென்சார் மூலம் உணர்ந்து தானாக சத்தத்தை அதிகரித்தது. ‘எவன்னா கத்தபோராண்டா, வால்யும் கம்மி பண்ணிக்கலாம்டா’ மதன் கூற ‘இந்த பாட்டெல்லாம் வால்யும் கம்மியா வச்சு கேட்க கூடாதுடா, தெய்வ குத்தம் ஆயிடும்’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் பாடலை பாடியபடி இருந்தான். பாடல் முடிவடையும் தருவாயில் ‘அடுத்து என்னோட சாங்’ என்று தீப்தி முன்பதிவு செய்தாள். பாடல் முடிந்ததும் தீப்தி தன் மோபைலை கனெக்ட் செய்து ஸ்வதேஸ் படத்தில் வரும் யூன் ஹி சலா சல் ராஹி பாடலை இசைக்க செய்ய சில நொடிகளில் மதன் என்ன பாடல் என்பதை உணர்ந்து ‘சிஸ்டர், பர்பெக்ட், தேங்க்ஸ் பார் தி சாங்’ என்று சொன்னவரே காரின் வேகத்தை கூட்டினான். பாடலில் ரும்தும்தானன கோரஸ் வந்தவுடன் சுரேஷும் மதனுடன் சேர்ந்து பாட ஆறம்பித்தான். இருவரும் அந்த பாடலில் வரும் இரு நடிகர்களைப் போல் பாடிக்கொண்டு வந்தனர். ‘வாச் ஆவுட், திஸ் இஸ் ஒன் ஆப் த பெஸ்ட் ரிப், ஏஆர்ஆர் இஸ் கிரேசி ஹியர்’ என்று மதன் பாடலின் நான்காவது நிமிடத்தில் வரும் இசையை குறிப்பிட்டான். அந்த இசை ஆரம்பிக்க அனைவரும் கேட்டு மகிழ்ந்தனர். பாடல் முடிய ‘இப்ப என்னோட டர்ன்’ என்று கார்த்திகா தன் மொபைலை காருடன் இணைத்து மே மாதம் படத்தில் வரும் மார்கழிப் பூவே பாடலை இசைக்க செய்தாள். பாடல் ஆரம்பித்ததும் வந்த பாஸ் இசை காரில் இருந்த சப்ஊப்பர்களை உலுக்கியது. ‘காட் டேமிட், வேர லெவல்’ சுரேஷ் ரசித்து கூற ‘பாஸ் பூஸ்டட்?’ மதன் கார்த்திகாவை பார்த்து கேட்க ‘அப்கோர்ஸ் எஸ்’ என்று கார்த்திகா சொல்ல மார்கழிப்பூவே என்ற பாடலின் வரிகள் ஆரம்பித்தன. கார்த்திகாவும் தீப்தியும் ஒன்றாக பாட ஆரம்பித்தனர். ‘என்னடி இப்படி பாட்ற, ஐ கான்ட் பிலீவ்’ என்று சுரேஷ் தீப்தியை பார்த்து கூற ‘நீ கூடத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செம்மையா பாடுன’ என்று தீப்தி சொல்ல ‘கூட இருக்குறவன் கிட்ட இருந்து தொத்திக்கிச்சு’ சுரேஷ் கூற ‘எனக்கும் அப்படித்தான்’ என்று தீப்தி கூறிவிட்டு தொடர்ந்து கார்த்திகாவுடன் சேர்ந்து பாடினாள். பாடல் முடியும் தருவாயில் ‘இந்த முறை என்னோட சாய்ஸ், யாராவது கனெக்ட் பண்ணீங்க, கொன்றுவேன், இந்த பாட்ட நீங்க ரெண்டு பேரும் பாடக்கூடாது, நானும் தீப்தியும்தான் பாடுவோம்’ என்று சுரேஷ் மதனையும் கார்த்திகாவையும் செல்லமாக மிரட்டினான். ஓடிக்கொண்டிருக்கும் பாடல் முடிந்தவுடன் சுரேஷ் தன் மொபைலை காருடன் இணைத்து மான் கராத்தே படத்தில் வரும் உன் விழிகளில் பாடலை இசைக்க செய்துவிட்டு பாடலில் வரும் கதாநாயகன் போல் தீப்தியை பார்த்து உருக ஆரம்பித்தான். கார்த்திகா சுரேஷ் செய்யும் சேட்டையையும் தீப்தி அதற்கு காட்டும் வெட்கத்தையும் கண்டு ரசித்துக்கொண்டிருந்தாள். கார்த்திகா பின்னால் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த மதன் காரை மெதுவாக ஓட்டிக்கொண்டே பின்னால் சுரேஷும் தீப்தியும் செய்யும் ரொமான்ஸை ரசிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு முறையும் நீ தினம் சிரிச்சா போதுமே வரிகள் வரும்போது சுரேஷ் தன் இரு கைகளை விரித்து தீப்தியை பார்த்து பாடியபோது தீப்தி வெட்கத்துடன் புன்னகைத்தது இருவருக்கும் இடையில் இருந்த காதலை கார்த்திகாவிற்கும் மதனுக்கும் அழகாய் எடுத்துக்காட்டியது. கார்த்திகா பின்னால் நடப்பதை பார்த்துக் கொண்டே அடிக்கடி மதனை ஓரக்கண்ணால் பார்த்து வெட்கத்துடன் சிரிக்க மதனும் கார்த்திகாவை பார்த்தபடி அவள் புன்னகையை ரசித்தான். ஒரு வழியாக பாடல் முடிவுக்கு வந்தது. ‘நான் அப்பவே சொல்லல, நம்மலமாதிரி சிங்கிள்ஸ்ஸ வெறுப்பேத்துவாங்கன்னு’ மதன் கார்த்திகாவை பார்த்து சொல்ல ‘யார் நீங்க, ரெண்டு பேரும், சிங்கிள்ஸ்?’ சுரேஷ் கார்த்திகாவையும் மதனையும் பார்த்து கேட்க ஆமாம் என்று இருவரும் ஒருசேர அப்பாவித்தனமாக தலையாட்டினர். அதற்கு சுரேஷ் ‘நாங்க பன்னதவிட, நீங்க பண்றது தான்டா ஓவரா இருந்துச்சு, அதெப்புற்றா கண்ணாலேயே பேசிக்கரீங்க?’ என்று சொன்னவுடன் கார்த்திகாவும் மதனும் முகத்தை காரின் முன்புறம் திருப்பிக்கொண்டனர். மதன் வேறு எதுவும் பேசாமல் காரை நகர்த்தினான். காரில் ஒருவருக்கொருவர் மாறிக்கொண்டே பாடல்களை தங்கள் மொபைலில் இருந்து இசைத்தவாறு கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள கயலின் வீட்டிற்கு வந்தடைந்தனர்.

மதன் கயல் வீட்டின் முன் காரை நிறுத்தினான். கார்த்திகா முதலில் இறங்கி கயல் வீட்டை நோக்கி நடந்தாள். கார்த்திகா வருவதை பார்த்ததும் கயல் ஓடிவந்தாள். ‘இப்பதான் வழி தெரிஞ்சுதா’ கயல் கார்த்திகாவை கேட்க ‘நான் கரெக்டா மதியம் தான் வருவேன்னு சொன்னேன், வந்துட்டேன், என்ன, அப்பா அம்மா கூட வறேன்னு சொன்னேன், இப்போ’ கார்த்திகா கார் இருக்கும் இடத்தை பார்க்க ‘இப்போ?’ கயல் கார்த்திகாவை கேட்டவாரே காரை பார்க்க மதன் காரிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான். மதனை பார்த்துவிட்டு கயல் கார்த்திகாவை பார்க்க ‘பெஸ்ட் ப்ரண்ட்ஸோட வந்திருக்கேன்’ சிரித்துக்கொண்டே கார்த்திகா சமாளித்தாள். ‘யோவ் மொக்க, இப்பத்தான் வர்ரதா?’ குரு மதனை பார்த்ததும் அவன் அருகே வந்து கேட்க ‘ஒரே நைட்ல யோவ் வரைக்கும் வந்துட்டீங்களா?’ கயல் குருவை பார்த்து கேட்க ‘பின்ன, அன்னிக்கு நைட் இவர்தான் எங்களுக்கு ஊருகா’ குரு கயலிடம் கூறிவிட்டு ‘எங்க நம்ம பாட்னர்’ குரு சுரேஷைப் பற்றி மதனிடம் கேட்க ‘பின்னாடி இருக்கான்’ மதன் குருவிடம் சொல்ல குரு காரின் அருகில் சென்று பின் கதவை திறந்தார். ‘யோவ் முதலாளி, இறங்கி வாய்யா’ குரு சுரேஷை அழைத்தான். சுரேஷும் தீப்தியும் காரை விட்டு இறங்கினர். ‘மில்ரி, இவங்க ரெண்டு பேர் கூட சேராத, மில்ரி வீட்டுக்காரம்மா உங்களுக்கு தான் சொல்றேன் அவங்க கூட சேராதீங்க’ சுரேஷ் மதன் மற்றும் கார்த்திகாவை பற்றி குருவிடமும் கயலிடமும் கூற ‘என்ன பண்ணாங்க?’ குரு கேட்க ‘பண்றதெல்லாம் பண்ணிட்டு கடைசியில நாங்க சிங்கள்ஸ்தான்றாங்கயா, இத்தன வருஷமா நானும் தீப்தியும் லவ் பண்றோம், எங்களையே ஓவர்டேக் பண்ண பாக்குறாங்க’ சுரேஷ் குருவிடம் முறையிட்டான். ‘ஆமாமா, ஒரே ஏஆர்ஆர் சாங்ஸ் தான், அதுவும் மேல் வாய்ஸ் வரும்போது அண்ணா அக்காவை பாக்குறதும், ஃபீமேல் வாய்ஸ் வரும்போது அக்கா அன்னாவ பாக்குறதும், ரொமான்ஸ் வெர லெவல்’ தீப்தி தன் பங்கிற்கு கயலிடம் போட்டுக்கொடுக்க ‘அடிப்பாவி, பாட்ட போட்டுட்டு நீங்கதானடி பின்னாடி ரியாக்‌ஷன் பண்ணிட்டு வந்தீங்க, அவ ஏற்கனவே ஓட்றதுக்கு ரீசன் தேடிக்கிட்டிருக்கா, நல்லா எடுத்துக்கொடுக்குறம்மா, தேங்ஸ்’ கார்த்திகா திப்தியிடம் கூறினாள். ‘நீங்க கண்டிப்பா செஞ்சிருப்பீங்கடி’ கயல் பேசிக்கொண்டிருக்கும்போதே கயலின் அம்மா, குருவின் அப்பா மற்றும் முக்கிய சொந்தங்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர்.

‘அந்த தம்பிதான் வீச்சருவாள பிடிச்சது’ கயலின் அம்மா மதனை தன் அண்ணனான குருவின் அப்பாவிற்கு அடையாளம் காட்டினார். குருவின் அப்பா மதனை நோக்கி கம்பீரமாக நடந்து வந்தார். குரு அப்பாவிற்கு பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த கயல் அம்மாவின் சீனியர் அடியாள் ‘நீங்க பார்த்து இருக்கனுமே, ரெண்டே அடிதான், ஊல வாயனுக்கு காதுல மூக்குல வாயில பிச்சிக்கிட்டு வருது, பாத்தா ஊல வாயன்கிட்ட இருந்த அருவா இந்த தம்பி கிட்ட இருக்கு, வீசுன வேகத்துக்கு ஒன்னு போச்சுன்னே நெனச்சேன். தம்பி கண்ட்ரோலாத்தான் இருந்துச்சு’ என்று மதனுக்கு சர்டிபிகேட் கொடுத்தார். ‘பாத்தா அப்படி தெரியலையே’ குரு அப்பா அந்த அடியாளிடம் சொல்லிக்கொண்டே மதனுக்கு அருகில் வர, ‘அப்டி நெனச்சுத்தான் அந்த ஊல வாயன் ஏமாந்தான், தம்பி பயங்கர பாஸ்ட்டு’ அந்த அடியாள் மறுபடியும் மதனை பற்றி கூறினார். மதனுக்கு எதிரில் வந்து நின்ற குருவின் அப்பா மதனை ஒரு முறை ஏற இறங்க பார்த்தார். ‘வருஷக்கணக்கா நான் போராடிப்பாத்தும் என் தங்கச்சியை என்னால ஒத்துக்க வைக்க முடியல, நீ எப்படி தம்பி ஒத்துக்க வெச்ச?’ குரு அன்று கேட்ட அதே கேள்வியை குருவின் அப்பாவும் கேட்க ‘உங்க தங்கச்சி தான் அதுக்கு பதில் சொல்லனும்’ என்று மதன் கூற ‘அப்ப விட்டிருந்தா நிறையபேர் மேல போயிப்பாங்க, என்னையே தம்பி முடித்திருந்தாலும் முடிச்சிருக்கும், அவசரப்பட்டு நான் பன்ன முட்டாள்தனத்தை தம்பி தான் அந்த ஊல பயல அடிச்சி புரியவச்சது, அதுமட்டும் இல்லாம, குரு உள்ள வந்தவுடனே கயல் அவன கட்டிபுடிச்சி அழுதா பாருங்க, என் புருஷன் லீவுக்கு ஊருக்கு வந்தவுடன் நான் கட்டி புடிச்சு அழுவுற மாதிரி இருந்துச்சு, நம்ம சாமிய நெனச்சுக்கிட்டு வாயில என்ன வார்த்த வருதோ வரட்டும்னு விட்டேன், அது நல்ல வார்த்தையா வந்தது’ கயலின் அம்மா விலக்கி சொன்னார். கயலின் அம்மாவை பார்த்ததும் மதன் வனங்கினான். ‘என்னைய்யா கல்யாணத்துக்கு வர, தாடி எடுக்க மாட்டியா?’ என்று கயலின் அம்மா கேட்க ‘அது வேண்டுதல் தாடி, அவருக்கு கல்யாணம் நிச்சயம் ஆச்சுன்னா எடுத்துடுவாராம்’ கார்த்திகா கிண்டலாக மதனைப்பற்றி கயல் அம்மாவிடம் கூற ‘அப்படியெல்லாம் ஒன்னும் இல்லங்க, சும்மா இருக்கட்டுமேன்னு விட்டுட்டேன்’ மதன் சமாளித்தான். ‘ஏன்டி கார்த்தி இப்பத்தான் வர்றதா’ கயல் அம்மா கார்த்திகாவை கேட்க ‘ஆப்பிஸ்ல வேல முடியலம்மா, அதான்’ என்று கார்த்திகா சமாளித்தாள். ‘இவதான உங்க ரூமுக்கு புதுசா வந்தவ, பேரு கூட ஏதோ சொன்னாளே, மறந்து போச்சு, என்ன உன் பேரு?’ கயல் அம்மாவின் பார்வை தீப்தி பக்கம் திரும்பியது. ‘தீப்தி’ என்று தீப்தி தன் பெயரை சொல்ல ‘நீ போன் போட்ட பைய எங்க?’ கயல் அம்மா கேட்க தீப்தி சுரேஷை காண்பித்தாள். ‘வணக்கம்மா’ சுரேஷ் கயல் அம்மாவை பார்த்ததும் வனங்கினான். ‘கயல் உங்க கதைய சொன்னா, சீக்கிரம் கல்யாண பத்திரிக்கை அனுப்புங்க’ கயல் அம்மா சுரேஷை கேட்டுக்கொள்ள சுரேஷும் சரி என்பது போல் தலை ஆட்டினான். ‘ஏண்டி கார்த்தி கல்யாணத்துக்கு வர்றீங்க சேல கட்டி வர்ரதில்ல, எடுத்து வந்திருக்கியா? நீயும் தான்டி தீப்தி, சேல இருக்கா?’ கயல் அம்மா கார்த்திகாவிடமும் தீப்தியிடமும் கேட்க ‘கல்யாணம் ஆன பொண்ணுங்க தான கட்டிக்கணும்னு கொண்டு வரல’ என்று கார்த்திகா கூற ‘எனக்கு சாரி கட்டிக்க தெரியாது ஆண்டி’ என்று தீபதி கூற ‘என்ன பொண்ணுங்களோ இந்த காலத்து பொண்ணுங்க’ என்று கயல் அம்மா சொல்லிக்கொண்டே ‘டேய் இங்க வா’ என்று ஒருவரை அழைத்தார். ‘முக்கியமான விருந்தாளிங்க, நம்ம ஜவுளி கடைக்கு கூட்டிட்டு போய் இந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் நல்ல பட்டுப்புடவை, பிளவுஸ் எல்லாம் அப்பவே அளவு எடுத்து தச்சி கொடுத்திடனும், அப்புறம் அந்த பசங்க ரெண்டு பேருக்கும் நல்ல பட்டு வேட்டி சட்ட, நல்லா இருக்கனும், கூட்டிட்டு போ, அப்படியே அவங்களுக்கு நம்ம ஓட்டல்ல ரும் கொடுத்துடு’ என்று கட்டளையிட்டார். ‘அடியே கார்த்தி, போயிட்டு ப்ரஷ்ஷாயிட்டு ஆறு மணிக்கெல்லாம் இங்க வந்துருங்க, ஆறு ஏல்ற நிச்சயதார்த்தம், அது முடிஞ்சு நேரா மண்டபத்துல ரிஷப்ஷன், காலைல நம்ம கோயில்ல கல்யாணம், சரியா?’ என்று கயல் அம்மா கேட்க ‘சரிம்மா’ என்று கார்த்திகா கூறினாள். காரித்காவும் தீப்தியும் கயல் அம்மாவிடம் விடை பெற்று கயல், குரு, மதன் மற்றும் சுரேஷ் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர். ‘பட்டுப்புடவ கட்டிக்கனுமாம்டா’ தீப்தி சுரேஷிடம் கூற ‘அதுலயாவது அழகா இருக்கியான்னு பாப்போம்’ என்று சுரேஷ் கிண்டலடிக்க ‘அப்ப நான் அழகா இல்லையா?’ தீப்தி பத்ரகாளியாக மாருவதை உணர்ந்த சுரேஷ் அந்த இடத்தை விட்டு நகர்ந்து கொண்டே ‘இல்லடி, சும்மா, ஜோக், அங்கேயே இரு, கிட்ட வராத, எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்’ என்று சொன்னபடியே ஓட்டம் பிடிக்க தீப்தியும் அவனை துரத்திக்கொண்டே சென்றாள்.

நால்வரும் கயல் குடும்பத்திற்கு சொந்தமான பிரம்மாண்டமான ஜவுளி கடைக்கு வந்தனர். ‘அப்ப நீங்க சேரி எடுத்துட்டு இருங்க, நாங்க மேல போயிட்டு வேஷ்டி ஷர்ட் எடுத்துட்டு வந்துடறோம்’ என்று மதன் கூற ‘ஓகே’ என்று கார்த்திகா ஒப்புக்கொண்டாள். காரித்காவும் தீப்தியும் பட்டுப்புடவை இருக்கும் இடத்திற்கு சென்றனர். மதனும் சுரேஷும் மாடியில் இருந்த வேட்டி சட்டை இருக்கும் இடத்திற்கு சென்றனர். குறுகிய காலத்தில் மதனும் சுரேஷும் அழகான பட்டு வேட்டி சட்டையுடன் கீழே வந்துவிட்டனர். ஆனால் கார்த்திகாவும் தீப்தியும் எடுத்து முடித்த பாடில்லை. ‘இன்னுமா எடுக்கறீங்க, எப்படியும் இன்னைக்கு மட்டும் தான் இந்த சாரிய கட்டபோரிங்க, மத்த நேரம்லாம் ஷெல்ப்ல தூங்க போகுது, இதுக்கு இவ்வளவு நேரமா’ மதன் கூற ‘டிபிக்கல் மென்ஸ் மைன்ட்’ கார்த்திகா மதனை பார்த்து முறைத்துக் கொண்டே கூற ‘அப்ப நீங்க வெயிட் பண்ண வைக்கிறதுக்கு பேரு என்னவாம்?’ மதன் எதிர் கேள்வி கேட்க ‘சண்ட போடுட்க்காதிங்கடா, சட்டு புட்டுன்னு போய் ஒன்னு செலக்ட் பண்ணுங்க, நான் போய் தீப்திக்கு ஒன்னு செலக்ட் பண்ணி கொடுக்கிறேன்’ என்று சுரேஷ் கூறிவிட்டு தீப்தியிடம் சென்றான். ‘கஷ்டப்பட்றேன்ல, சஜஷன் கொடுக்கலாம்ல’ கார்த்திகா மதனை பார்த்து கூற ‘இதுவேரையா, எனக்கு தெரிஞ்சது ரெண்டு கலர் தான், அந்த கலர்ல பட்டுபுடவைங்க வர்ரதில்லைன்னு நினைக்கிறேன்’ மதன் தயக்கத்துடன் உதவ ஆரம்பித்தான். கார்த்திகா பார்த்து பார்த்து எடுத்து வைத்திருந்த கோல்ட் கலர் பட்டுப்புடவையை மதனிடம் காட்டினாள். ‘அக்‌ஷுவலி, பட்டுப்புடவைங்கள்ளையே கோல்டு கலர் புடவைங்கத்தான் பொஸ்டுன்னு செல்லுவாங்க, ஆனா, இன்னைக்கு அது உங்களுக்கு வேணாம், ரொம்ப பிடிச்சிருந்தா எடுத்து வச்சுக்கோங்க, பட் போட்டுகிட்டு ரிஷப்ஷன் போகாதீங்க’ மதன் தன் கருத்தை கூறினான். ‘ஏன், இத போட்டுட்டு போனா என்ன, பெஸ்டுன்னு நீங்களே சொல்றீங்க?’ கார்த்திகா கேட்க ‘என்னங்க இது கூட தெரியாம இருக்கீங்க, எப்பவுமே ஒரு கல்யானத்துல கல்யாண பொண்ண ஒவர்டேக் பன்னக்கூடாது, அவங்கள விட கொஞ்சம் கம்மியா தான் கல்யாண பொண்ணோட ப்ரண்ட்ஸ் இருக்கனுமாம், இத போட்டிங்கன்னா உங்களுக்கும் கயலுக்கும் சண்ட வந்துரும் பாத்துக்கோங்க’ மதன் விவரமாகக் கூறினான். ‘இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்’ கார்த்திகா கேட்க ‘எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா. அவதான் இதெல்லாம் சொல்லுவா’ மதன் தன் தங்கையை பற்றி கூற ‘உங்க வீட்ல யார பாக்குறனோ இல்லையோ, உங்க தங்கச்சிய பாத்தே ஆகனும்’ கார்த்திகா கூறிவிட்டு ‘இவ்ளோ நேரம் பாத்து பாத்து எடுத்தேன், வேனான்டிங்க, மருபடியும் தேடனுமா’ கார்த்திகா சகித்துக்கொண்டாள். அப்போது ‘அண்ணே அசூர் ப்ளூல எடுத்து போடுங்க’ மதன் கடைகாரரிடம் சொல்ல அவரும் எடுத்து வைத்தார். ‘இந்தாங்க’ என்று மதன் அழகிய வேலைப்பாடுடன் இருந்த ஒரு அசூர் ப்ளூ கலர் பட்டுப் புடவையை எடுத்துக் கொடுத்தான். கார்த்திகாவிற்கு அந்த பட்டுப்புடவை மிகவும் பிடித்திருந்தது ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இதற்கிடையில் சுரேஷும் தீப்தியும் வந்தனர். ‘போலாமா’ கார்த்திகா மற்ற மூவரையும் பார்த்து கேட்க ‘அந்த கோல்டையும் எடுத்துக்கோங்க, ஆசப்பட்டு எடுத்தீங்க’ மதன் கூற ‘நீங்க வேற, இதுவே எவ்வளவு ஆகுமோ, என்கிட்ட பட்ஜெட் இல்ல’ கார்த்திகா கூற ‘பரவால்ல, என்னால தான வேர ஒன்ன செலக்ட் பண்ணீங்க, அதையும் எடுத்துக்கோங்க, உங்களுக்கு பிடிச்சதுக்கு நான் ஸ்பான்சர் பண்றேன்’ மதன் கூற ‘அதெல்லாம் ஒன்னும் வேணாம், கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கொடுங்க போதும்’ கார்த்திகா மதனை பார்த்து கூறிவிட சுரேஷ் தீப்தி இருவரும் கார்த்திகாவையும் மதனையும் பார்த்து முறைக்க ஆரம்பித்தனர். சுதாரித்துக்கொண்ட கார்த்திகா மதனை பார்த்து ‘ஐ மீன், உங்க கல்யாணத்துக்கு அப்புறம், உங்க பொண்டாட்டிக்கு வாங்கி கொடுக்கன்னு சொன்னேன்’ என்று சற்று விவரமாக சொன்னாள். ஆனாலும் சுரேஷும் தீப்தியும் இருவரையும் பார்த்து முறைப்பதை நிறுத்தவில்லை’ அதான் டீட்டெயில்லா எக்ஸ்ப்ளெயின் பண்ணிட்டாங்கல்ல, அப்புறம் என்ன மொறப்பு? இன்னும் ப்ளவுஸ் எல்லாம் தெக்கனுமாம் வா போகலாம்’ மதன் சுரேஷை இழுக்க ‘டேய், டேய், எங்கள மாதிரி ஒப்பனா கமிட் ஆனவங்க சாபம் உங்கள மாதிரி சிங்கள்சுன்னு சொல்லிட்டு சில்மிஷம் பண்றவங்கள சும்மா விடாதுடா’ சுரேஷ் சொல்லிக்கொண்டே அடுத்த இடத்திற்கு சென்றான். கார்த்திகாவிற்கும் தீப்திக்கும் ஒரு லேடி டெய்லர் வந்து அளவெடுத்து அவர்கள் புடவைக்கு மேட்சிங்கா பிளவுஸ் தைத்து கொடுத்தார். ஒருவழியாக கேஷியர் இடம் நால்வரும் வந்தனர். ‘அண்ணா எல்லாம் ஒரே பில்லா போடுங்க’ என்று சுரேஷ் கூற ‘ஆமாம், ஒண்ணா போடுங்க பட் இந்தாங்க, இந்த கார்டை ஸ்வைப் பண்ணுங்க’ என்று மதன் தன் டெபிட் கார்டை நீட்டினான். ‘அதெல்லாம் இல்ல எல்லாம் தனித்தனியா போடுங்க’ கார்த்திகா கூற ‘இருங்க, இருங்க’ கேஷியர் குறுக்கிட்டு ‘முதலாளி அம்மா வீட்டு விசேஷத்துக்கு வந்த விருந்தாளிங்க கிட்ட போய் யாராவது வியாபாரம் பன்னுவாங்களா, நான் உங்க கிட்ட காசு வாங்கினேன்னு கேல்விப்பட்டாங்கன்னா என்ன வேலையில இருந்து தூங்கிடுவாங்க, நீங்க போயிட்டு வாங்க’ என்று கூறி கேஷியர் அனுப்பி வைத்தார்.

வெளியில் வந்தவர்கள் நேராக அவர்கள் தங்கப்போகும் ஹோட்டலுக்கு சென்றனர். அங்கே இரண்டு ரூம்கள் இவர்களுக்காக தயாராக இருந்தது. ‘அப்போ நீயும் கார்த்திகாவும் அந்த ரூம் எடுத்துக்கோங்க, நானும் தீப்தியும் இந்த ரூம் எடுத்துக்கறோம், ஈவினிங் பாப்போம் பாய்’ சுரேஷ் சொல்லிக்கொண்டே தீப்தியை ஒரு ரூமுக்குள் இழுக்க ‘என்னடா பண்ற?’ மதன் சுரேஷை பார்த்து கேட்க ‘ஓ, இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகல இல்ல, தீப்தி பேசாம இப்பவே ஒரு கோயிலா பாத்து கல்யாணம் பண்ணிக்கலாமா, இந்த பிரச்சனையே இருக்காது பாரு’ சுரேஷ் கிண்டலாக கூற ‘கால்ல என்ன இருக்குன்னு பாரு’ என்று தீப்தி தன் கால்களை காட்ட ‘புது செருப்பு தீப்தி, எப்ப வாங்குன, ஒரு முறை கூட இதுல நான் ஆடி வாங்கலையே, வா உள்ள போய் அடி வாங்குனா எப்படி இருக்குன்னு பாக்கலாம்’ சுரேஷ் சொல்லிக்கொண்டே தீப்தியின் தோள்மீது கை போட்டவாறு அவள் ரூமிற்குள் நுழைய முயல ‘விட்டா பேசிடே இருப்பான் நீங்க உள்ள போங்க’ மதன் தீப்தியிடமும் கார்த்திகாவிடமும் கூறிவிட்டு சுரேஷை பிடித்துக்கொண்டான். ஒருவழியாக கார்த்திகாவும் தீப்தியும் அவர்கள் ரூமிற்கு சென்றனர். ‘ஏன்டா ஒரு லவ்வர் அவனோட ஆள் கூட ஒன்னா ஒரே ரூம்ல இருந்தா உங்களுக்கு பொறுக்காதே’ சுரேஷ் அவனுக்கும் மதனுக்கும் ஒதுக்கிய ரூமிற்குள் நுழைந்தவாறு கேட்டான். ‘உங்க அம்மா கிட்ட செருப்படி வாங்குறதுக்கா, இங்கயே தூங்கிட்டு இரு, நான் வெளிய போய் ஷேவ் பண்ணிட்டு வறேன்’ மதன் கூற சுரேஷ் உடனே எதையோ தேட ஆரம்பித்தான். ‘என்னடா தேட்ர’ மதன் கேட்க ‘இங்க, மதன், மதன்னு ஒரு மானஸ்தன் இருந்தான், அவனுக்கு நிச்சயதார்த்தம் ஆனா தான் தாடி எடுப்பேன்னு செல்லிட்டு திரிஞ்சான், அவனத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்’ சுரேஷ் கிண்டலடிக்க ‘அவன் செத்துட்டான். மூடிட்டு பட்றா’ என்று சொல்லிவிட்டு மதன் சலூன் கடைக்கு சென்றான்.

சுரேஷ் வந்த அசதியில் நன்றாக தூங்கிவிட்டான். நல்ல தூக்கத்தில் இருக்கும் போது சுரேஷின் போன் அடித்தது, மறுமுனையில் மதன், எடுத்து பேசினான். ‘நாதாரி எத்தன கால் பண்றது, டோர் உள்பக்கம் லாக் ஆயிருக்கு, வந்து தொரடா’ மதன் மறுமுனையில் கத்த சுரேஷ் அரை தூக்கத்தில் எழுந்து வந்து கதவை திரந்தான். திரந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ‘ப்ப்ப்பா, என்னடா இப்படி இருக்க? டோட்டலா மாரிட்ட’ சுரேஷ் மதனை பார்த்து கூற ‘ஷேவ் பண்ணது குத்தமாடா?’ மதன் கேட்க ‘இந்த மூஞ்சையாடா மறச்சு வெச்சிருந்த, நல்ல ஐட்டு, பிரவுன் கலரு, கொஞ்சம் முருக்குனா மாதிரி மீச, நீளமான சைட் பர்ன்ஸ், மசில் ஏத்துன பாடி, இத வெச்சு எத்தன பேர கவர் பண்ணியிருக்கலாம் தெரியுமா, தாடி வெச்சு மறச்சிக்கிட்டியேடா, போடா சாமியாரே’ சுரேஷ் வருத்தப்பட ‘டேய் ஓவரா பில்டப் பன்னாதடா’ மதன் கூற ‘டேய் சத்தியமா, சொம டிஃப்ரன்ஸ் தெரியுது, செம்ம ஹன்சம்மாயிட்ட, கார்த்திகா பாத்தாங்க, பாத்தவுடனே கல்யாணம் பண்ணிப்பாங்க’ சுரேஷ் கலாய்க்க ‘போதுன்டா ஓட்னது, போய் ரெடியாகு, கெளம்பலாம், பக்கத்துல அப்பவே கிளம்பிட்டாங்க போல, ரூம் கிளீன் பண்றவங்க உள்ள இருந்தாங்க, கார்த்திகா தீப்தி யாரும் இல்ல’ என்று மதன் கூற ‘அப்படியா, எப்ப போனாங்க, எப்படி போனாங்க, இரு போன் பண்றேன்’ சுரேஷ் சொல்லிவிட்டு தீப்திக்கு போன் போட்டான். ‘எங்கடி இருக்க’ சுரேஷ் தீப்தியை கேட்க ‘டேய் கயல் வண்டி அனுப்பி இருந்தாங்க, அவங்க ரூம்ல வந்து ரெடியாக சொன்னாங்க, இப்ப எல்லாரும் கயல் வீட்லதான் இருக்கோம், நீங்க சீக்கிரம் ரெடியாகி வாங்க’ என்று சொல்லிவிட்டு தீப்தி போனை கட் பண்ணிவிட்டாள். ‘அடிப்பாவி, நல்லா வேட்டி சேலையுமா மாப்ள பொண்ணு மாதிரி ஒரு என்றி கொடுக்கலாம்னு பாத்தா’ சுரேஷ் புலம்பியவாறே பாத்ரூமுக்குள் நுழைந்தான். சிறிது நேரத்தில் மதனும் சுரேஷும் வாங்கிய பட்டு வேட்டி பட்டு சட்டை போட்டுக்கொண்டு காரில் கயல் வீட்டை வந்தடைந்தனர்.

கார் வந்ததை வெளியில் தன் நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்த குரு பார்த்தார். ‘யோவ் மொக்க, நீயா?’ குரு மதனை பார்த்து கேட்க ‘சாதாரண ஷேவ் தாம்பா’ மதன் கூற ‘செம்மையா இருக்கு, வா ஊர்காரபயலுங்கல்லாம் உன்ன பாக்கனுமாம், நீ அருவா எடுத்தத கேல்விப்பட்டிருக்கானுக்க’ என்று கூறி குரு மதனை குருவின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். ‘மதன் சாருக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்களா?’ குருவின் நண்பர் ஒருவர் கேட்க ‘பொண்ணு பாத்துட்டான், கூடிய சீக்கிரம் பண்ணிப்பான்’ என்று சுரேஷ் மதனை வாரிவிட ‘அதெல்லாம் இல்லைங்க, வீட்ல பாத்துட்டு இருக்காங்க’ என்று மதன் சமாளித்தான் ‘நீங்க சொல்றத பாத்தா லவ் பண்றார் போல?’ என்று அந்த நண்பர் கூற ‘பன்றார், ஆனா இல்ல’ இப்போது குரு சுரேஷுடன் சேர்ந்து மதனை கலாய்க்க ‘அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க’ மதன் கூறினான். அப்போது சுரேஷுக்கு தீப்தியிடமிருந்து கைபேசி அழைப்பு வந்தது ‘சொல்ரீ’ சுரேஷ் கேட்க ‘எங்க இருக்க’ தீப்தி மறுமுனையில் கேட்க ‘வந்துட்டோம் வீட்டுக்கு வெளியில குரு கூட இருக்கோம்’ சுரேஷ் சொல்ல ‘அங்கயே இரு வறேன்’ என்று சொல்லி தீப்தி கட் செய்தாள். சிறிது நேரத்தில் தீப்தி பச்சை நிற பட்டு புடவையில் அழகான தேவதை போன்று வெளியில் வர சுரேஷ் அவளை பார்த்தவுடன் அவள் அழகில் மயங்கி அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ‘செல்லக்குட்டி, செம்மையா இருக்கு, யார் கட்டிவிட்டது?’ சுரேஷ் கேட்க ‘கார்த்திகா அக்காதான், நீயும் வேட்டி சர்ட்ல செம்மையா இருக்கடா’ தீப்தி சுரேஷின் அழகை பார்த்து பாராட்டினாள். ‘பங்ஷன் ஸ்டார்ட் ஆக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?’ சுரேஷ் கேட்க ‘தெரியலடா, மூத்தவர் ஒருத்தர் வந்துக்கிட்டு இருக்காறாம், அவர் வந்தாதான் நிச்சயதார்த்தம் ஸ்டார்ட் பண்ணுவாங்களாம். ஆமா நீ மட்டும் இருக்க, மதன் அண்ணா எங்க’ தீப்தி சுரேஷிடம் மதனை பற்றி கேட்க ‘அந்த கூட்டதுத்க்குள்ள இருக்கான்’ என்று தீப்தியிடம் சொல்லிவிட்டு ‘டேய் நல்லவனே?’ என்று மதனை கூப்பிட்டான். மதன் அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வர மதனை பார்த்த தீப்தி அசந்து போனாள். ‘அண்ணா, நீங்களா?’ தீப்தி ஆச்சர்யத்துடன் கேட்க ‘உன் பங்குக்கு நீயும் ஏதாவது சொல்லு’ மதன் கூற ‘சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள். ‘அதெப்புற்றா ரெண்டு பேரும் அரக்கிருக்காவே இருக்கீங்க’ மதன் சுரேஷை பார்த்து கேட்க ‘கரெக்டா நான் செய்யனும்னு நெனச்சத செய்ரா’ என்று சுரேஷ் சிரித்துக்கொண்டே கூறினான். ‘இப்ப எதுக்கு வெளிய வந்தா, உள்ள ஓட்ரா’ மதன் சுரேஷ் பார்த்து கேட்க ‘எடுத்து கொடுத்த புடவை எப்படி இருக்குன்னு காட்டிட்டு போராடா, மாமா பட்டு வேட்டி சட்டையில் எப்படி இருக்கேன்னு பாத்துட்டு போராடா, அதெல்லாம் உனக்கு புரியாது, எக்ஸ்பீரியன்ஸ் வேனுடா, எங்கள மாதிரி டீப்பா லவ் பண்றவங்களுக்கு தான் புரியும்’ சுரேஷ் மதனுக்கு பாடம் எடுத்தான். ‘தூ, மூடிட்டு வா, உள்ள ஸ்டார்ட் பண்ணிட்டாங்களாம்’ மதன் சுரேஷை செல்லமாக திட்டிவிட்டு உள்ளே கூட்டி சென்றான். வெளியில் நின்றிருந்த இளைஞர்கள் அனைவரும் வீட்டின் உள்ளே வந்தனர்.

கயலின் வீடு மிக பிரமாண்டமாக இருந்தது. ஹாலின் மேற்கு திசையில் கிழக்கு பார்த்தவாறு அரை வட்ட வடிவத்தில் பூஜை அறை வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் பெரிய கதவுகள் சுவற்றின் உள்ளேயே நகரும் விதத்தில் அமைத்திருந்தனர். அறையில் பலவிதமான தெய்வ சிற்பங்களுக்கு நடுவில் இடது புறம் சிவலிங்கமும் வலதுபுறம் பெருமாள் சிலையும் இருந்தது. மணமகன் குருவை பூஜை அறையின் இடதுபுற கதவிற்கு பக்கத்தில் முதலாவதாக முன் வரிசையில் அமர வைத்தனர். அதே வரிசையில் மணமகனுக்கு பக்கத்தில் மனமகனின் குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் அமர்ந்தனர். மணமகனுக்கு பின் வரிசையில் இரண்டாவதாக மதனும் மூன்றாவதாக சுரேஷும் அமர்ந்தனர். ஹாலிற்கு நடுவில் நிச்சயதாம்பூலத்திற்கு வைக்கும் வரிசை தட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன. அவைகளுக்கு இடப்புறம் குருவின் அப்பா அமர்ந்திருந்தார், வலப்புறம் கயலின் அம்மா அமர்ந்திருந்தார். குருவின் அப்பாவிற்கு பக்கத்தில் அமர்ந்திருந்த புரோகிதர் மணமகளை அழைத்து வரச்சொன்னார். அப்பொழுது தங்க நிற பட்டுடுத்தி பல்வேறு வகையான நகைகளை அனிந்துகொண்டு மணமகளுக்கே உரிய அந்த நாணத்துடன் கயல் வந்தாள். அவளின் வலது கையை தீப்தியும் இடது கையை கார்த்திகாவும் பிடித்து அழைத்து வந்தனர். மூன்று தோழிகளும் வெவ்வேறு நிறங்களில் அழகிய பட்டுப்புடவைகளை அணிந்து கொண்டு வர அங்கிருந்தவர்கள் அனைவரும் கயல் கூட வரும் இரு தோழிகள் யார் என்று விசாரிக்க தொடங்கியிருந்தனர். சுரேஷ் முதன் முதலாக தன் கையால் எடுத்துக் கொடுத்த பச்சை நிற பட்டு புடவையில் தீப்தியின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அதுவரை கார்த்திகாவை மாடர்ன் ட்ரெஸ்ஸில் மட்டுமே பார்த்த மதனுக்கு அவன் எடுத்துக் கொடுத்த அந்த நீல நிற பட்டு புடவையில் இவ்வலவு அழகாக இருப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. மணமகளை கூட்டி வந்து பூஜை அறையின் வலப்புறம் முதல் வரிசையில் முதலாவதாக மணமகனுக்கு நேர் எதிரில் அமர வைத்தார்கள். மனமகளுக்கு பக்கத்தில் முதல் வரிசையில் கயல் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அமர்ந்தனர். மனமகளுக்கு பின் வரிசையில் இரண்டாவதாக கார்த்திகாவும் மூன்றாவதாக தீப்தியும் அமர்ந்தனர்.

எல்லோரும் அமர்ந்திருந்தாலும் பெரியவர் இன்னும் வரவில்லை. ‘சிரமத்திற்கு மன்னிக்கவும், பெரியய்யா வரதுக்கு லேட் ஆகுது, அவர் வந்த பிறகுதான் ஆரம்பிக்க முடியும், அதுவரைக்கும் எல்லாரையும் உட்கார வெச்சுடலாமேன்னுதான் உட்கார வைத்தோம். அவர் வந்தவுடன் ஸ்டார்ட் பண்ணிடலாம்’ என்று குரு அப்பா சொல்லிக்கொண்டிருக்க ‘இந்த நிச்சயதார்த்தத்தையும் கல்யாணத்தையும் தனித்தனியே நடத்தியிருக்கலாம், ஆனா குரு ஆர்மில இருக்கான், லீவு முடிஞ்சிருச்சு, கொஞ்ச நாளைக்குத்தான் கூடுதலா லீவு கொடுத்திருக்காங்க, அதான் நிச்சயதார்தத்தையும் கல்யாணத்தையும் ஒன்னா பண்றோம்’ என்று கயலின் அம்மா சபைக்கு தெரிவித்தார். ‘பெரியவர் வர நாழியாகும்னா, அதுவரைக்கும் யாராவது பாடலாமே, ஹரியும் சிவனும் ஒன்னா வழிபடறேள், யாராவது அவாள நெனச்சு பாடலாமே, கல்யானப்பொண்னே, நீ பாடுவியா?’ எற்று ப்ரோகிதர் கயலை பாடச் சொல்ல ‘எனக்கு பாட வராது, இதோ இங்க ஒருத்தி இருக்கா பாருங்க, ஆபீஸ்ல ப்ரைஸ் எல்லாம் வாங்கியிருக்கா’ என்று கார்த்திகாவை கோர்த்துவிட ‘எனக்கு சாமி பாட்டெல்லாம் தெரியாது’ என்று கார்த்திகா பயந்து கூறினாள். அப்போது எதிர்புறம் இருந்த சுரேஷ் ‘பாட்ரி, என் ராசாத்தி’ என்று ஜென்டில்மேன் படத்தில் செந்தில் சொல்வதுபோல் கூற ‘நீ மூட்ரி’ என்று மதன் சுரேஷின் வாயை பொத்தி அவன் வாயை அழுத்திக்கொண்டான். ஜென்டில்மேன் படத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் இருவரும் அதேபோல் செய்ததை பார்த்து சிரித்தனர். ‘கார்த்தி எங்களுக்காக’ என்று குரு கேட்டுக்கொண்டான். ‘அப்ப தீப்தியும் கூட பாடனும் அவதான் டெய்லி இந்த பாட்ட கேட்பா, அப்புறம் இது சாமி பாட்டு தான், ஆனா, சினிமால வந்த சாமி பாட்டு, ஓகேவா?’ என்று கார்த்திகா எல்லோரிடமும் கேட்க ‘பரவால்ல பாடும்மா’ என்று குருவின் அப்பா சம்மதித்தார். ‘இதுல மியூசிக் இருக்கு, நான் சொல்லும்போது ப்ளே பன்னனும்’ என்று கார்த்திகா கூற ‘இங்க கொடுங்கக்கா’ என்று காயலின் செந்தக்கார தம்பிகளில் ஒருவன் கார்த்திகாவின் மொபைலை வாங்கி கயல் வீட்டில் இருந்த போஸ் லைப்ஸ்டைல் 650 ஹோம் என்டெர்டென்மன்ட் சிஸ்டத்தில் இணைத்தான். நிச்சயதார்த்தத்தை வீடியோ எடுக்க வந்த கேமராமேனும் கேமராவை ஆன் செய்தார். கயல் வீட்டில் நடப்பது ரிஷப்ஷன் நடக்கபோகும் கல்யாண மண்டபத்தில் லைவ் டெலிகாஸ்ட் ஆனது. அந்த மண்டபத்தில் ஏற்கனவே அமர்ந்திருந்த கார்த்திகாவின் அப்பாவும் அம்மாவும் வீடியோவில் கார்த்திகா பாட போவதை பார்த்து புன்னகைத்தனர்.

கார்த்திகாவிற்கும் தீப்திக்கும் முன்பு முன் வரிசையில் இருந்த கயலின் குடும்ப உறவினர்கள் இருவரையும் முன் வரிசைக்கு வர சொல்லி எழுந்தனர். கார்த்திகாவும் தீப்தியும் எழுந்து நேராக பூஜை அறையில் இருந்த தெய்வங்களை வழிபட்டுவிட்டு கயலுக்கு அடுத்தபடியாக வந்து அமர்ந்தனர். கார்த்திகா அந்த தம்பியிடம் இசையை தொடங்குமாறு சைகை காண்பிக்க அக்னியாதவாசி படத்தில் வரும் ஸ்வாகதம் கிருஷ்ணா என்ற பாடலின் இசை கயலின் வீட்டை நிரப்பியது. மதுராபுரி சதனா என்று கார்த்திகாவும் தீப்தியும் பாட கூடவே வந்த இசை அந்த இடத்தில் இருந்த அனைவருக்கும் ஒரு பிரம்மாண்ட உணர்வை ஏற்படுத்தியது. முஷ்டிகாசூர சானுறமல்ல மல்லவிசாரத மதுசூதனா என்று கார்த்திகா பாடிக்கொண்டே எதிரில் முதல் வரிசைக்கு பின் அமர்ந்திருந்த மதனை முதன் முறையாக பார்க்க மதன் ஏற்கனவே தன்னை ரசித்துக் கொண்டு இருப்பதை கவனித்து புன்னகையுடன் பாடினாள். தீப்தி ஏற்கனவே மதன் தன் தாடியை எடுத்துவிட்டதால் தோற்றம் மாறியிருப்பதை கூறியிருந்தாள். மதனின் புதிய தோற்றத்தை காண ஆவலுடன் இருந்த கார்த்திகாவிற்கு மதனின் அழகிய முகமும் அவன் முறுக்கு மீசையும் மிகவும் பிடித்தது. மதனும் கார்த்திகாவும் கண்களால் பேச தொடங்கிவிட்டதை தீப்தி பார்த்துவிட்டு பாடிக்கொண்டே கண் அசைவின் மூலம் எதிரில் இருந்த சுரேஷுக்கு தெரியப்படுத்தினாள். மதனும் கார்த்திகாவும் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த சுரேஷ் மதனின் கண்களை மூடி தலையை பிடித்து தன் பக்கம் அமுக்கினான். இதை பார்த்து எதிரில் இருந்த மூன்று தோழிகளும் புன்னகைத்தனர். கயல் சிரிப்பதை கண்ட குரு பின்னால் என்ன நடக்கிறது என்று திரும்பிப் பார்க்க சுரேஷ் மதனின் கண்களை மூடி பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து புன்னகைத்தான். கார்த்திகாவும் தீப்தியும் வீர முனிஜன விஹார மதன சுகுமார தேய்த்ய சம்ஹார தேவா என்று பாடிவிட்டு மதுர மதுர ரதி சாஹச சாஹச விரஜயுவதேஜன மானச பூஜித என்று கண்களை மூடி பாட இவர்கள் குறள்களின் ஒலியும் இசையும் இணைந்து கேட்பதற்கு மிக அருமையாக இருந்தது. அங்கிருந்த இசை பிரியர்கள் எல்லோரும் தலையாட்டி கேட்டு மகிழ்ந்தனர். தகதரி குகுதன கிட தக தீம் என்று கார்த்திகாவும் தீப்தியும் பாடும்போது வந்து சேரும் கிட்டார் இசையை கேட்டவுடன் அங்கிருந்த இளைஞர்களும் இளம்பொண்களும் மிகவும் ரசிக்க ஆரம்பித்தனர். கடைசியாக கிருஷ்னா என்று பாடி கார்த்திகாவும் தீப்தியும் பாடலை முடித்துவைக்க அங்கு இருந்தவர்கள் எல்லோரும் இருவரையும் கைதட்டி பாராட்டினர். கார்த்திகாவிற்கும் தீப்திக்கும் பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் பலபேர் இருவருக்கும் கைகொடுத்து பாராட்டு தெரிவித்தனர். கயலின் அம்மா எழுந்து வந்து கார்த்திகாவையும் தீப்தியையும் கட்டிபிடித்து பாராட்டிவிட்டு சென்று அமர்ந்தார்.

‘பெரியவர் இன்னும் வரல, கொழந்தைங்க எம்பெருமான பத்தி பாடிட்டேள், இன்னொரு பாட்டு சிவபெருமானை புகழ்ந்து பாடலாமே’ என்று புரோகிதர் கூற ‘ஏன் பொண்ணுங்க மட்டும்தான் பாடணுமா, பசங்களும் நல்லா பாடுவாங்க, அவங்களையும் பாட சொல்லுங்க எங்க அளவுக்கு பாட்ராங்களான்னு பாப்போம்’ என்று கயல் குருவிடம் ஆண்களை உசுப்பேத்துவது போல் கூற ‘பாட தெரியாதுன்னு நெனப்பா, நாங்கல்லாம் கலத்துல எறங்குனா வேற மாதிரி, என்ன நண்பா சொல்ற?’ என்று குரு மதனை பார்த்து சொல்ல ‘யோவ், இப்படி கோத்து விட்ட’ மதன் குருவை பார்த்து சொல்லிவிட்டு ‘எனக்கு சாமிபாட்டேல்லாம் தெரியாதுங்க’ என்று சபைக்கு சொல்லிக்கொண்டிருக்கும்போதே ‘பொய்சொற்றாங்க, இவன் தீவிர சிவ பக்தன்’ என்று சுரேஷ் மாட்டிவிட்டான். ‘ஆம்பளைங்க பாடுனா தப்பில்லப்பா, அதுவும் சிவனைப் பத்தி பாட கொடுத்து வச்சிருக்கணும்’ என்று சிவனை நேசிக்கும் கயலின் அம்மா கேட்டுக்கொள்ள ‘சினிமா பாட்டு தான், அது ஒருத்தரா பாடுனா நல்லா இருக்காது, இவனும் அந்த பாட்ட நல்லா பாடுவான்’ என்று மதன் சுரேஷை கோர்த்துவிட ‘நான் என்னடா உனக்கு பாவம் பண்ணேன், எந்த பாட்டுடா?’ என்று குழம்பிய வாரே சுரேஷ் ஒத்துக்கொண்டான். ‘இதுல மியூசிக் இருக்கு’ என்று கயலின் சொந்தக்கார தம்பியிடம் மதன் தன் மொபைலை கொடுத்துவிட்டு பூஜை அறைக்கு சென்றான். சுரேஷும் அவனை பின் தொடர்ந்து பூஜை அறைக்கு சென்று வழிபட்டான்.

குருவின் குடும்ப உறவினர்கள் இருவர் முன் வரிசையில் இருந்து பின் வரிசைக்கு சென்று மதனும் சுரேஷும் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தனர். மதனும் சுரேஷும் குருவிற்கு அடுத்தபடியாக வந்து அமர்ந்தனர். அந்த இடத்தில் இருந்த அனைவரும் என்ன பாடல் என்ற ஆர்வத்தில் இருந்தனர். மதன் இசையை தொடங்குமாறு சைகை காண்பிக்க ஒரு நாள் கூத்து படத்தில் வரும் எப்போ வருவாரோ பாடலின் முதலில் வரும் புல்லாங்குழலும் வீணையும் கயலின் ஹோம் சிஸ்டத்தில் மிக துல்லியமாக ஒலித்து அங்கிருந்தவர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அடுத்து வந்த பாஸ் பீட்ஸ் ஒவ்வொன்றும் அந்த இடத்தை அதிரவைத்தது. இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் மிகவும் பிடித்துப் போனது. எப்போ வருவாரோ என்ற பல்லவியை மதன் தனியாக பாட அவன் குரலை கேட்டு கார்த்திகாவால் எதிரில் பாடிக்கொண்டிருக்கும் மதனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. பல்லவியை இரண்டாவது முறை பாடும் போது சுரேஷின் குரலும் இணைந்துகொள்ள அற்புதமாக இருந்தது. அப்பர் முதல் மூவரும் என்று இருவரும் முதல் சரணத்தை கண்களை மூடி சிவனை நினைத்து பாடியது அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படவைத்தது. நற் பருவம் வந்து நாதனை தேடும் என்று இருவரும் இரண்டாவது சரணத்தை பாடும் போது இருவரின் குரலும் இசையும் தெய்வீகமாக இருந்தது. பாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் போற்றிப் பணிந்திடும் ஈசன் மேலே என்று மதன் தனியாக பாடியபோது ஒரு சிவபக்தன் உண்மையிலேயே சிவனை நினைத்து பாடுவது போல் இருந்தது. அடுத்து வந்த வார்தைகளில் சுரேஷின் குரல் வந்து சேர்ந்து காதல் கொண்டேன் வெளிப்படக் காணேனே என்று இருவரும் உருகிப் பாடியது அங்கிருந்தவர்கள் இவர்கள் இருவரும் சிவபக்தர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரச் செய்தது. கடைசி பல்லவியை பாடும்போது தான் மதன் கார்த்திகாவை பார்த்தான். அவளோ கண்களை மூடிக்கொண்டு பாடலில் மூழ்கியிருந்தாள். மதன் கார்த்திகாவை பார்ப்பதை பார்த்த கயல் கார்த்திகாவை தன் கை மூட்டால் தெட கார்த்திகா எதிரில் இருந்த மதனை பார்த்தாள். மதன் பாடிக்கொண்டே எப்படி இருந்தது என்று கண்களால் புருவத்தை உயர்த்தி கேட்க மெய்மறந்தேன் என்று கார்த்திகா தன் கண்களை மூடி தலையை அசைத்து மதனுக்கு உணர்த்தினாள். இவர்கள் இருவரும் கண்களால் போசுவதை பார்த்த கயலும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தனர். பாடல் முடிந்தவுடன் குருவும், பின்னால் அமர்ந்திருந்த இளைஞர்களும், மதனையும் சுரேஷையும் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடினர். இருவரும் கீழே வந்த பின் அவர்களுக்கு பல இளம் பெண்கள் எதிரில் இருந்து எழுந்து வந்து கை கொடுத்து பாராட்டு தெரிவித்தனர். அப்போது வெளியில் இருந்து ஒரு பெரியவர் குருவின் அப்பாவையும் கயலின் அம்மாவையும் கடந்து மதனையும் சுரேஷையும் நோக்கி வந்தார். குருவின் அப்பாவும் கயலின் அம்மாவும் அந்த பெரியவரை சரியாக பார்க்கவில்லை. பெரியவர் மதன் மற்றும் சுரேஷை நெருங்குகையில் குரு அவரை அடையாளம் கண்டு ‘அய்யா எப்ப வந்தீங்க’ என்று கேட்க அருகில் இருந்த கயலும் ‘அய்யா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க’ என்று சொல்லி குருவும் கயலும் உடனே அந்த பெரியவரின் கால்களில் விழுந்து வணக்கினர். ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும்’ என்று அந்த பெரியவர் ஆசிர்வதித்தார். குருவின் அப்பாவும் கயலின் அம்மாவும் பெரியவரை பார்த்தவுடன் அவரிடம் ஓடி வந்தனர். ‘அய்யா மன்னிச்சிடுங்க, நீங்க வந்தத கவனிக்கல’ என்று குருவின் அப்பா அந்த பெரியவரிடம் சொன்னார். ‘அதனால என்னப்பா, இந்த சின்ன பிள்ளைங்க நல்லா பாட்ராங்கப்பா’ என்று பெரியவர் கார்த்திகா, மதன், சுரேஷ் மற்றும் தீப்தியை பார்த்து கூறினார். நால்வரையும் குரு பெரியவருக்கு அறிமுகம் செய்து வைத்தான். ‘அய்யா நீங்க எப்ப வந்தீங்க?’ என்று கயல் அம்மா கேட்க ‘இந்த இரண்டு பெண் பிள்ளைகள் பாட ஆரம்பிச்சப்பவே வந்துட்டேம்மா, எம்பெருமான நினைச்சு ரொம்ப நல்லா பாடினாங்க, பாடி முடிச்சதும் உள்ளே வர தோனல, என்ன பத்தி பாடுற வரைக்கும் உள்ள வரக்கூடாதுன்னு சிவபெருமான் சொல்றாமாதிரி இருந்ததும்மா, சிவன வணங்க மறந்துட்டாங்களேன்ற எண்ணம் புரோகிதருக்கும் வந்திருக்கும், அதனாலத்தான் அவர் சிவபொருமான பத்தியும் பாட சொன்னார், இந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் சிவபெருமான பத்தி அற்புதமா பாடினாங்க, இப்ப இருக்குற பிள்ளைங்ககிட்ட பக்தியே இல்லைன்னு நினைச்சிருந்தேன், ஆனா, எங்களுக்கும் கடவுள் பக்தி இருக்குன்னு நிரூபிச்சிட்டீங்க’ என்று அந்த பெரியவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ‘எங்களையும் ஆசிர்வாதம் பண்ணுங்க’ என்று சொல்லி சுரேஷும் தீப்தியும் அந்த பெரியவர் காலில் விழுந்தனர். இருவரையும் ‘நீங்களும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும்’ என்று பெரியவர் ஆசிர்வாதம் செய்தார். அருகில் இருந்த மதனுக்கும் கார்த்திகாவிற்கும் காலில் விழுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தார்கள், ஏனெனில் காலில் விழுந்தால் எப்படியும் பதினாறும் பெற்று என்று வாழ்த்தி விடுவார், அதனால் தயங்கினர். அப்போது ‘டேய் விழுடா’ என்று சுரேஷ் கூற ‘அக்கா நீங்களும் விழுங்க’ என்று தீப்தி கூற கார்த்திகாவும் மதனும் பெரியவர் காலில் விழுந்தனர் ‘ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் சூழ்ந்து, வாழையடி வாழையான, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும்’ என்று மனதார ஆசீர்வாதம் செய்தார். அங்கிருந்த எல்லோரும் பெரியவர் வந்ததை அறிந்து எழுந்து நின்று கொண்டிருந்தனர். லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டிருந்த கல்யாண மண்டபத்தில் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் எழுந்து நின்றிருந்தனர். பெரியவர் வந்திருப்பது ஊர் முழுக்க பரவியது. எல்லோரும் அவரை பார்க்க கயலின் வீட்டிற்கு படையெடுத்தனர்.

ஒருவழியாக பெரியவர் வந்து இருக்கையில் அமர நிச்சயதாம்பூலம் இனிதே நடந்தேறியது. மறுநாள் காலை ஆறு மணியிலிருந்து ஏழு முப்பது மணிக்குள் குடும்பத்தின் குலதெய்வ கோவிலில் திருமணம் நடைபெறும் என்று அறிவித்தனர். அங்கிருந்த எல்லோரும் ரிஷப்ஷன் நடைபெறும் கல்யாண மண்டபத்திற்கு செல்ல தயாராயினர். அப்போதுதான் கயல், குரு, கார்த்திகா, மதன், சுரேஷ் மற்றும் தீப்தி ஒன்றாக பேச இடம் கிடைத்தது. ‘கயல், ஐயா யாரு?’ என்று மதன் கயலிடம் கேட்க ‘சிம்பிளா சொன்னா, ஐயா படத்துல வர அப்பா சரத்குமார் மாதிரி, வேள்பாரி பரம்பரை, எங்க முன்னோர் அவரோட முன்னோர் தயவால இந்த ஊர்ல பஞ்சம் பொழச்சவங்க. அவங்க குடும்பத்துக்கு மரியாதை செய்யாம எங்க வீட்ல எந்த நல்ல விஷயமும் நடக்காது. ஐயாவ அவ்வளவு சுலபமா பாக்க முடியாது. குரு அப்பாவுக்கும் ஐயாவுக்கும் நல்ல தொடர்பு இருக்கு, அதான் கூப்பிட்டவுடன் வந்துட்டாரு. ஊர் பெரியவங்க எல்லாம் ஐயா வந்திருக்கார்னா மெறலுவாங்க, பாத்திங்கள்ள, ஐயா நிக்கும்போது ஒருத்தர் கூட உட்காரல, அவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்குவது அவ்வளவு சுலபமில்லை, அதன் அவர பாத்தவுடனே கால்ல விழுந்துட்டேன், ஆனா ஒருத்தி அவர் யாருன்னு தெரியாம அவர்கிட்ட முழு ஆசீர்வாதம் வாங்கிட்டா, கொடுத்து வச்சவடி நீ, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ, பதினாறு பெக்கனும்ல’ கயல் கார்த்திகாவை பார்க்க ‘பதினாறுன்னா, பதினாறு குழந்தைங்க இல்ல டீ’ கார்த்திகா கூற ‘தெரியும் டீ, உனக்கு தெரியுமான்னு பாத்தேன்’ கயல் கூற ‘அப்ப பதினாறு குழந்தைங்க இல்லையா?’ என்று தீப்தி கேட்க ‘இங்க ஒவ்வோருத்தியும் ஒரு குழந்தைக்கே முக்குறாலுங்க, உனக்கு பதினாறு வேனுமா, சுரேஷ் பாத்துக்கோங்க’ என்று கயல் சுரேஷையும் தீப்தியையும் பார்த்து கூற ‘பதினாறு வேணுமா செல்லம், நாம டென்த் படிக்கும் போது சொல்லிருக்கலாம்ல’ என்று சுரேஷ் கிண்டலடிக்க தீப்தி சுரேஷின் தலையின் பின்புறம் ஒரு தட்டு தட்டினாள். ‘பெரியவர் நாளை வர இருப்பாரா’ என்று மதன் கேட்க ‘அவர் அப்பவே கிளம்பிட்டாரு, ஊருக்கு வந்தா அவர பாக்க காத்துக்கிட்டு இருக்கிறவங்க நிறைய’ என்று கயல் கூறினாள். ‘பைதவே, இட்ஸ் லைக் ஏ ட்ரீம், என் கனவுல கூட நான் என் கல்யாணம் இப்படி ஆரம்பிக்கும்னு நெனச்சதில்ல, ஏங்கயோ ஓடிப்போய் தான் கல்யானம் பண்ணிக்கபோரோம்னு இருந்தோம், தேங்ஸ் பார் எவ்ரிதிங்’ என்று கயல் கார்த்திகா மற்றும் தீப்தியின் கைகளை பிடித்துக் கொண்டு கண்கலங்கி கூறினாள். ‘ச்சீ, எமோஷன் ஆகாத, மேக்கப்பொல்லாம் போயிடும்’ என்று கார்த்திகா கயலை சமாதானப்படுத்தினாள். ‘சரிடி, நாங்க மண்டபத்துக்கு கெளம்புறோம், சீக்கிரம் வந்துடுங்க’ என்று கூறிவிட்டு கயலும் குருவும் அங்கிருந்து சென்றனர். ‘சரிடா, நாமலும் மண்டபத்துக்கு கெளம்பலாமா?’ சுரேஷ் மதனை கேட்க ‘நீங்க முன்னாடி போங்க, பின்னாடியே வறோம்’ என்று மதன் சுரேஷையும் தீப்தியையும் முதலில் போக சொன்னான். ‘ரொமான்ஸா, நாங்களும் பண்ணுவோம், உங்களைவிட சீனியர்டா நாங்க, வா தீப்தி நாம கார்ல போய் ரொமான்ஸ் பண்ணலாம்’ சுரேஷ் தீப்தியை கூட்டிக்கொண்டு காரை நோக்கி சென்றான். ஒரு வழியாக மதனும் கார்த்திகாவும் மனம் விட்டு பேச வாய்ப்பு கிடைத்தது.

‘என்ன மிஸ்டர் மிசோஜனிஸ்ட், டோட்டலா மாறிட்டீங்க, உங்களுக்கு செம டிமாண்ட், பின்னாடி இருந்த பொண்ணுங்க உங்கள பத்தி தான் பேசிட்டிருந்தாங்க, ரோம்ப ஹன்சமா இருக்கீங்களாம்’ கார்த்திகா கிண்டலடிக்க ‘நீங்களுமா’ மதன் கார்த்திகாவை பார்த்து கூறினான். ‘ஆமா, நானும் தீப்தியும் பாடும்போது சுரேஷ் எதுக்கு உங்க கண்ணை மூடினார்?’ கார்த்திகா கேட்க ‘உங்க அழகுல மயங்கி போயிருந்தேன்ல, கண்ணை மூடிட்டா உங்கல பாக்கமுடியாதுல்ல, அதான்’ என்று மதன் கூற ‘அப்ப என்னையேத்தான் பாத்துட்டு இருந்தீங்களா?’ கயல் கேட்க ‘பாக்காம எப்படி இருக்க முடியும், நான் எடுத்துக் கொடுத்தாச்சே’ மதன் கூற ‘அப்போ சாரியத்தான் பாத்தீங்க, என்ன இல்ல?’ கார்த்திகா கேட்க ‘இப்ப நான் என்ன சொன்னா சந்தோஷப்படுவீங்க’ மதன் கேட்க ‘என்ன சாரில பாத்தவுடனே என்ன தோணுச்சுன்னு சொல்லுங்க’ கார்த்திகா கேட்க ‘ஒரு தேவதை நீலக்கலர் பட்டுப்புடவை கட்டிக்கிட்டு நடந்து வரா மாதிரி இருந்துச்சு’ என்று மதன் கூற ‘பொய்தான’ கார்த்திகா சிரித்துக் கொண்டே கேட்க ‘கண்டுபுடிச்சிட்டீங்க’ மதன் சொன்னவுடன் கார்த்திகா வெட்கத்துடன் மதனின் தேளில் செல்லமாக குத்தினாள். ‘நோ, சீரியஸ்லி, நீங்க மூனுபேரும் வேர வேர கலர்ல பட்டுப்புடவை கட்டிக்கிட்டு நடந்து வந்தது, இட் வாஸ் லவ்லி’ மதன் தன் தோள்களை தேய்தவரே கூறினான். ‘தேங்ஸ்’ கார்த்திகா கூற ‘எதுக்கு’ என்று மதன் கேட்க ‘நான் முதல்ல எடுத்த கோல்ட் கலர் பட்டுப்புடவை வேணாம்னு சொன்னதுக்கு, கயல் அதே கோல்ட் கலர் தான் ச்சூஸ் பண்ணி இருந்தா’ கார்த்திகா கூற ‘ஐ டோல்ட் யூ ரைட், எங்க ஊர்ல ஜவுளிக்கடையில் வேலை செய்றவங்க சொல்லுவாங்க, கல்யாண புடவை எடுக்க வர பேம்லி கிட்ட எடுத்தவுடனே கோல்ட் கலர் பட்டுப்புடவைங்கல காட்ட மாட்டாங்களாம், எல்லா கலரையும் காட்டிட்டு, எதுலயுமே சேர்டிஸ்பை ஆகலைன்னா, பிங்க் காட்டுவாங்களாம், அதுல பார்டி டூ பிப்டி பர்சன்ட் செலக்ட் பண்ணிடுவாங்களாம், பட் ரொம்ப ரிச்சான ட்ரெடிஷனல் போம்லியெல்லாம், கோல்ட் கலர் வெரைட்டிங்கல பாத்தாத்தான் இம்ப்ரஸ் ஆவாங்களாம்’ மதன் விவரமாக சொன்னான். ‘பட்டுப்புடவைங்கல பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க’ கார்த்திகா கூற ‘காஞ்சிபுரத்துல பொறந்துட்டு இதுகூட தெரியலன்னா எப்படி’ என்று மதன் கூறினான். இருவரும் சிறிது நேரம் பேசவில்லை. கார்த்திகா மதனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த மதன் ‘வாட்ஸ் ராங்’ என்று கேட்க ‘நத்திங், ஜஸ்ட், உங்களோட அழகுல மயங்கி கிட்டு இருக்கேன், உங்களோட மீசை, க்ளீன் ஷேவ் பன்ன ச்சின், அப்படியே கடிச்சி சாப்பிடனும் போல இருக்கு’ கார்த்திகா சிரித்தபடி கூற ‘சாப்பிடுங்க, உங்களுக்குத்தானே’ மதன் வெட்கத்துடன் சொல்லிவிட்டு முகத்தை சற்று கீழே இறக்கி கார்த்திகாவின் கண்களையே பார்க்க கார்த்திகாவும் முகத்தை சற்று மேலே நோக்கி மதனின் கண்களை பார்த்தவாறு இருந்தாள். இருவரும் தங்களை அறியாமல் நெருங்கி வந்தனர். அருகில் வந்த மதனை பார்த்துக்கொண்டிருந்த கார்த்திகாவிற்கு அப்படியே கட்டிப்பிடித்து அவன் கன்னத்தை கடித்து விட வேண்டும் என்று தோன்றியது. இருவரின் இதயத்துடிப்பும் பல மடங்கு அதிகரித்திருந்தது. ‘கடிக்காம விடமாட்டீங்க போல’ மதன் கார்த்திகாவின் கண்களை பார்த்தவாரே கூற ‘ஆமாம் இப்பவே வேணும்’ கார்த்திகா மதனை பார்த்தவாரே கூற ‘ஆர்மோன்ஸ் ஆர் கிரேசி யு நோ’ மதன் புன்னகைத்தபடி கூற ‘எல்லாம் உங்களால தான், யாரையும் இப்படி நான் சொன்னதில்ல தெரியுமா, ஸ்டாப் கேஸிங் மீ லைக் தட், ஐம் கோயிங் வைல்ட் இன்சைட்’ கார்த்திகா மதனின் கண்களை பார்த்தபடி கூற ‘தட் லிப்ஸ் ஆர் ஆஸ்கிங் மீ டூ ஈட் தம்’ மதனும் கார்த்திகாவை வைத்த கண் வாங்காமல் பார்த்த படி கூற ‘வேனுமா?’ கார்த்திகா கேட்க ‘ப்ரண்ஸ்ன்ற லிமிட் தாண்டி ஏகத்துக்கும் போயிட்டு இருக்கோம், எக்குத்தப்பா ஏதாவது நடக்குறதுக்குள்ள வாங்க மண்டபத்துக்கு போயிடலாம்’ மதன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு கார்த்திகாவை கூட்டிக்கொண்டு காரை நோக்கி சென்றான்.

‘எவ்ளோ நேரம்டா?’ சுரேஷ் கார்த்திகாவும் மதனும் வருவதை பார்த்து மதனிடம் கேட்க ‘அதான் வந்துட்டோம்ல, போலான்டா’ மதனும் கார்த்திகாவும் உள்ளே ஏறி உட்கார்ந்தனர். கார் கயல் வீட்டிலிருந்து கல்யாண மண்டபத்திற்கு புறப்பட்டது. ‘கிப்ட் வாங்கலடா’ மதன் கூற ‘ஆமாம்ல, சரி நேரா ஒரு எலக்ட்ரானிக் ஷோரூம் போலாம், கைக்கு அடக்கமா வாங்கிட்டு போகலாம். நாலு பேருக்கும் சேத்து காஸ்ட்லியா ஒரே ஒரு கிப்ட் தான், தனித்தனியாக வாங்க கூடாது ஓகேவா?’ சுரேஷ் கூற மற்றவர்கள் சரி என்று ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒரு கிப்ட் வாங்கி பேக் செய்து கொண்டு மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஏற்கனவே ரிஷப்ஷன் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தது. ‘ஆல்ரெடி ஆரம்பிச்சு போய்கிட்டு இருக்கு, வா நேரா போய் கொடுத்துட்டு வந்துடலாம்’ என்று சுரேஷ் சொல்லிக்கொண்டே கிப்டுடன் மணமக்களை பரிசு கொடுத்து வாழ்த்த வந்தவர்கள் வரிசையில் போய் நின்றான். சுரேஷ் பின்னால் தீப்தியும், கார்த்திகாவும் நிற்க அவள் பின் மதன் நின்றான். கல்யாணத்திற்கு வந்திருந்தவர்கள் இந்த நால்வரையும் பார்த்ததும் அவர்கள் பாடியதை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர். இவர்கள் அருகில் இருந்தவர்கள் இவர்களுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ஒருவழியாக நாள்வரும் மேடை ஏற கீழே அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்ட ஆரம்பித்துவிட்டனர். கயலும் குருவும் இவர்கள் வருவதை பார்த்தவுடன் அருகில் சென்று வரவேற்றனர். சுரேஷ் தன்னிடம் இருந்த பெரிய கிப்ட் பாக்சை அன்பு பரிசாக கயலிடமும் குருவிடமும் ஒருசேர கொடுத்தான். மற்ற மூவரும் அந்த கிப்ட் பாக்சை தொட்டபடி இருக்க மணமக்கள் அதை வாங்கியவாறு இருக்க எதிரில் இருந்த போட்டோகிராப்பர் அழகாய் அந்த காட்சியை படம் பிடித்தார். ‘மனப்பாடம் பண்ணி வைத்திருந்தது மறந்து போச்சே, ஆ, நியாபகம் வந்துருச்சு,ஆவ் ஏ ஹாப்பி அண்ட் ப்ராஸ்பரஸ் மேரிட் லைப்’ சுரேஷ் கயலையும் குருவையும் பார்த்து கூறி விட்டு சற்று தள்ளி நின்றான். ‘யோவ் மில்ரி, நெக்ஸ்ட் இயர் கொல்லாம் ஒரு சிங்கக்குட்டி ரிலீஸ் ஆகனும், பாத்துக்கோ’ என்று குருவின் காதோரமாக மதன் சொல்லிவிட்டு ‘கங்கிராட்ஸ் சிஸ்டர், மில்ரிய ஒழுங்கா பாத்துக்கோங்க’ என்று மதன் கயலிடம் செல்லி நகர்ந்தான். கார்த்திகாவை பார்த்ததும் கயல் அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள். ‘நீ இல்லாம ரூம்ல போர் அடிக்க போகுது டீ, ஐ மிஸ் யூ டீ’ கார்த்திகா கயலிடம் கூறிவிட்டு ‘வாழ்த்துக்கள் அண்ணா, கயல் ரொம்ப சாதுவான பொண்ணு, பத்திரமா பாத்துக்கோங்க’ என்று கார்த்திகா குருவிடம் சொல்ல ‘இவலா’ என்று சொல்லிக்கொண்டே குரு புன்னகைத்தான். கயல் தீப்தி அருகில் வந்ததும் கட்டியனைக்க ‘ஐம் கோயிங் டு மிஸ் யூ அக்கா, ஹாப்பி மேரிட் லைப்’ என்று தீப்தி கூற ‘தீப்தி, நீயும் நானும் ஒரு பெட் வச்சுக்கலாம், யாரு அதிகமா குழந்தைங்க பொத்துக்குறதுன்னு பாப்போமா’ என்று கயல் கிண்டலாக தீப்தியிடம் கேட்க ‘சும்மாருங்க கா’ என்று தீப்தி வெட்கப்பட்டாள். ‘ஹாப்பி மேரிட் லைப் அண்ணா’ என்று தீப்தி குருவிற்கு கைகொடுத்து நகர்ந்தாள். நால்வரும் மன மக்களுடன் இணைந்து நிற்க போட்டோகிராப்பர் நண்பர்கள் ஆறு பேரும் ஒன்றாக நின்றதை அழகாக படமெடுத்தார். நாள்வரும் மணமக்களிடம் விடைபெற்று மேடையிலிருந்து கீழே இறங்கி வந்தனர்.

‘அப்பா எப்ப வந்தீங்க?’ கீழே இறங்கிய கார்த்திகா தன் பெற்றோரை பார்த்தவுடன் அவர்களிடம் ஓடிச் சென்றாள். ‘அப்பவே வந்துட்டோம்மா, பஸ் ஸ்டேன்ட் ல இருந்து நேரா மண்டபத்துக்கு வந்துட்டோம்’ கார்த்திகாவின் அப்பா கார்த்திகாவிடம் கூறினார். மதன், சுரேஷ் மற்றும் தீப்தி மூவரும் கார்த்திகாவின் பொற்றோரிடம் வந்தனர். ‘அம்மா இவதான் தீப்தி’ கார்த்திகா தீப்தியை தன் அம்மாவிற்கு அறிமுகம் செய்தாள். ‘ரூமுக்கு புதுசா வந்த பொண்ணு இவதானே, எப்படிம்மா இருக்க?’ கார்த்திகாவின் அம்மா விசாரிக்க ‘நல்லா இருக்கேன் ஆண்டி’ தீப்தி பதில் அளித்தாள். ‘அப்பா இவர் சுரேஷ்’ கார்த்திகா சுரேஷை தன் அப்பாவுக்கு அறிமுகப்படுத்த ‘ஹலோ சார்’ என்று சுரேஷ் மரியாதையுடன் கார்த்திகாவின் தந்தையிடம் பேசினான். கார்த்திகா மதனை பார்த்தவாரே ‘மதன்’ கார்த்திகா மதனை ஒரு தயக்கத்துடன் அறிமுகப்படுத்த ‘தெரியும்மா, ஆஃபீஸ்ல நீ ப்ரைஸ் வாங்கின வீடியோல உனக்கு முன்னாடி பாடினாரே அவர்தானே? அந்த வீடியோல தாடி வெச்சிருந்தார், இப்ப ஆளே மாறி இருக்கார், கொஞ்ச நேரம் முன்னாடி கூட ரொம்ப அழகா பாடினார்’ கார்த்திகா அப்பா மதனை பார்க்க ‘ஹலோ சார்’ என்று மதனும் மரியாதையுடன் கார்த்திகாவின் தந்தையிடம் கூறினான். ‘உங்களுக்கு இவர் இன்னைக்கு பாடினது எப்படி தெரியும்’ கார்த்திகா கேட்க ‘கயல் வீட்ல இருந்து மண்டபத்துக்கு லைவ் ரிலே பண்ணாங்கம்மா’ கார்த்திகாவின் தந்தை விளக்கமாக கூறினார். ‘ஏம்பா நிக்கறீங்க, உட்காருங்க’ கார்த்திகா அப்பா எல்லோரையும் உட்காரச் சொன்னார். கார்த்திகா தன் பெற்றோர்களுடன் ஒரு வரிசையில் அமர அதன் பின் வரிசையில் தீப்தி, சுரேஷ் மற்றும் மதன் அமர்ந்தனர். ‘நீங்கதான கார்த்திகாவுக்கு ஏதோ கத்துக்கொடுக்குறீங்க’ பின்னால் திரும்பி பார்த்தபடி தனக்கு பின் இருந்த மதனிடம் கார்த்திகாவின் தந்தை கேட்க ‘அதுக்கு பேர் லினக்ஸ் சார்’ மதன் கூற ‘நான் கூட கேள்விப்பட்டிருக்கேன், எங்க ஸ்கூல்ல கொடுக்குற ப்ரீ லேப்டாப் ஆன் பன்னவுடன் விண்டோஸ்க்கு கீழ பாஸ் அப்படின்னு வரும், எங்க கம்ப்யூட்டர் சார் கிட்ட அதப்பத்தி கேட்கும்போது அவர் அது ஒரு லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம்னு சொன்னாரு, ஆனா அத இதுவரைக்கும் யாரும் யூஸ் பண்ணி நான் பார்க்கல, எல்லாரும் விண்டோஸ் தான் செலக்ட் பண்ணுவாங்க, ஏன் எங்க கம்ப்யூட்டர் சாரே லினக்ஸ யூஸ் பண்ணதில்ல’ கார்த்திகாவின் அப்பா கூற ‘லினக்ஸ பத்தி சொல்லிக் கொடுக்க வேண்டிய வாத்தியாருக்கே அத பத்தி தெரியல, விண்டோஸ் தான் யூஸ் பன்றாருன்னு சொல்ரீங்க, இதுல எங்க இருந்து அவர் பசங்களுக்கு கத்துக்கொடுக்க போறது’ மதன் தன் ஆழ் மனதின் குமுரல்களை சற்று வெளிப்படுத்தினான் ‘நீ கேட்குறதெல்லாம் சரிதான்தம்பி, ஆனா நீ என்னத்தான் வெளியில இருந்து காது கிழிய கத்துனாலும் உள்ள இருக்குற எந்த வாத்தியாரும் புதுசா எதையும் கத்துக்க போரதில்ல, பசங்களுக்கு புதுசா எதையும் கத்துக்கொடுக்க போரதில்ல, பசங்களும் புரிஞ்சி எதையும் படிக்கபோரதில்ல’ கார்த்திகாவின் அப்பா கூற மதன் கோபத்துடன் ஏதோ கேட்க வந்து வேண்டாம் எதற்கு என்று விட்டுவிட்டு மவுனம் அடைந்தான். ‘ஆனா என் பொண்ணு மாறிட்டா தம்பி, முன்னல்லாம் வீட்டுக்கு வந்தா லேப்டாப்பே தொடமாட்டா, இப்ப என்னடான்னா எப்பவும் அதையே வெச்சிக்கிட்டு கருப்பும் வெள்ளையுமா இருக்குற மானிட்டர பார்த்து டைப் பண்ணிக்கிட்டு இருக்கா, அனேகமா உங்க கிட்ட அவ லினக்ஸ் கத்துக்க ஆரம்பிச்சதுல இருந்து தான் இப்படி இருக்கான்னு நினைக்கிறேன்’ கார்த்திகா அப்பா கூற மதன் கார்த்திகாவை பார்த்து புன்னகைத்தான். ‘என்ன மாறி என்ன புண்ணியம் தம்பி, ஒரு நல்ல வரன் அமைய மாட்டேங்குது, நானும் எவ்வளவோ தேடிட்டேன், அவளுக்கு செவ்வாய் தோஷம் தம்பி’ கார்த்திகாவின் அப்பா போட்டு உடைக்க ‘அப்பா, என்னோட பிரண்ட்ஸ் பா’ கார்த்திகா மதனை பார்த்தவாறு தன் தந்தையை அமைதியாக இருக்க சொன்னாள். ‘நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க சார், எல்லாம் நல்லதுக்கு தான், கூடிய சீக்கிரம் உங்க பொண்ணுக்கு புடிச்ச ஒரு ஆணழகன் உங்களுக்கு மாப்பிள்ளையா வருவார்’ என்று சுரேஷ் கார்த்திகாவின் தந்தையிடம் கூற அருகில் அமர்ந்திருந்த தீப்தி சிரிப்பை அடக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டு உள்ளுக்குள் சிரித்தாள். மதன் மற்றும் சுரேஷ் இருவரும் இப்போதுதான் கார்த்திகாவிற்கு ஏன் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போகிறது என்ற கேள்விக்கான விடையை அறிந்தனர். அப்போது இவர்களிடம் வந்த குருவின் தந்தை ‘என்னப்பா இன்னும் இங்க இருக்கீங்க, சாப்பாடு காலியாக போகுது சீக்கிரம் போங்க’ என்று சொல்லிவிட்டு சென்றார். எல்லோரும் எழுந்து சாப்பிட சென்றனர்.

சாப்பிட்டுவிட்டு கார்த்திகாவின் பெற்றோர், கார்த்திகா, தீப்தி, சுரேஷ் மற்றும் மதன் வந்து மன மேடைக்கு அருகில் ஆங்காங்கே வட்டவட்டமாக விருந்தினர் உட்கார்ந்து பேசி விட்டு சென்றிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். மதன் கார்த்திகாவின் அப்பாவுக்கு நேர் எதிராக அமர்ந்திருந்தான். மதனுக்கு வலதுபுறம் சுரேஷும், சுரேஷுக்கு வலதுபுறம் தீப்தியும், தீப்திக்கு வலதுபுறம் கார்த்திகாவின் அப்பாவும், கார்த்திகாவின் அப்பாவுக்கு வலதுபுறம் கார்த்திகாவும், கார்த்திகாவுக்கு வலதுபுறம் கார்த்திகாவின் அம்மாவும், அம்மாவின் வலதுபுரம் மதனும் அமர்ந்திருந்தார்கள். ‘அப்புறம் தம்பி, லினக்ஸ் பற்றி சொன்னவுடனே வேதனப்பட்டீங்க, அப்படி என்ன இருக்கு அதுல, என் பொண்ணு காட்டுற ஆர்வத்த பாத்தா எனக்கும் அத பத்தி தெரிஞ்சுக்கணும் போல இருக்கு’ கார்த்திகா அப்பா கேட்க ‘ஏன் சார், ஏன், உங்களுக்கு விடியர வரைக்கும் முழிச்சிக்கிட்டு இருக்கனும்னு ஏதாவது வேண்டுதலா, அவன் ஆரம்பிச்சான்னா ஃபைட் அகெய்ன்ஸ்ட் கேப்பிட்டலிசம், லிபரி சாப்ட்வேர், ஜிஎன்யூ, அப்படின்னு ஆரம்பிச்சிடுவான், கேட்க ரொம்ப நல்லாத்தான் இருக்கும் ஆனா விடிஞ்சிடும்’ சுரேஷ் கார்த்திகாவின் அப்பாவை எச்சரித்தான். ‘அப்ப கம்யூனிஸ்டா, ஃபைட் அகைன்ஸ்ட் கேப்பிட்டலிசம்னு சொல்ரீங்க’ கார்த்திகா அப்பா கூற ‘அது ஃபைட் அகெய்ன்ஸ்ட் கேப்பிட்டலிசம் இல்ல சார், அது ஃபைட் அகென்ஸ்ட் ப்ரப்ரெய்டிசம்’ மதன் கூற ‘ரெண்டும் ஒன்னு தாண்டா’ சுரேஷ் கூற ‘இல்லடா, சோசியலிசமும் கம்யூனிசமும் எப்படியோ அப்படித்தான் ப்ரப்ரைட்டிசமும் கேப்பிட்டலிசமும், என்னோட மூலதனத்தில் கிடைக்கிற எல்லா லாபமும் எனக்குத்தான் சொந்தம்னு சொல்றது கேப்பிட்டலிசம், ஆனா அதுக்கும் ஒரு படி மேல போய் என்னோட கண்டுபிடிப்ப மூலதனமா யார் பயன்படுத்தினாலும் அவங்கலுக்கு கிடைக்கும் லாபத்தில் பங்கு கேட்குறதுதான் ப்ரப்ரைட்டிசம்’ மதன் கூறினான். ‘அப்ப சோசியலிசமும் கம்யூனிசமும் வேற வேற வா?’ கார்த்திகா கேட்க ‘அடிப்படையில ரெண்டுமே எல்லோருக்கும் எல்லாம் பொது அப்படின்னு சொல்ற பொதுவுடைமை கோட்பாடுகள் தான், உழைப்புக்கேற்ற ஊதியம்னு சொல்றது சோசியலிசம், தேவைக்கேற்ற ஊதியம்னு சொல்றது கம்யூனிசம்’ மதன் கார்த்திகாவுக்கு விலக்கினான். ‘பரவால்ல இந்த காலத்து பசங்க நிரைய தெரிஞ்சி வெச்சிருக்கீங்க, ப்ரப்ரைட்டிசம்ர வார்த்தைய இப்பத்தான் தெரிஞ்சிக்கறேன், அத எதிர்குற உங்க இயக்கத்துக்கு பேர் என்ன?’ கார்த்திகா அப்பா மதனை பார்த்து கேட்க ‘ப்ரீ சாப்ட்வேர் மூமன்ட், தமிழ்ல சொல்லணும்னா கட்டற்ற மென்பொருள் இயக்கம்’ மதன் கூற ‘சுருக்கமா, சொன்னா முதலாளித்துவத்தை எதிர்குறவங்க’ சுரேஷ் கிண்டலடிக்க ‘நாங்க ஒன்னும் நியாயமான முதலாளித்துவத்துக்கு எதிரான வாங்க இல்லடா’ மதன் கூற ‘அதென்னப்பா நியாயமான முதலாளித்துவம்’ என்று சுரேஷ் கேட்க ‘தன்னோட சொத்த அடமானம் வெச்சு நாலு பேருக்கு வேலை கொடுத்து அதுல ரெண்டு பேர் சங்க கொடிய பிடிச்சிக்கிட்டு சொன்ன வேலை செய்யாம வெட்டியா திரிஞ்சாலும் அவனோட வீட்லயும் அடுப்பெரிய வெச்சு, வேல செய்யும் போது அடிபட்ட தொழிலாளிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் அவன் குணம் அடையும் வரைக்கும் அவனுக்கு செலவு செஞ்சி, மறுபடியும் அவனுக்கு வேலை கொடுத்து, நேர்மையா கடினமா உழைக்கிறவன பாராட்டி, ஊக்குவித்து, அவனுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்து, வர லாபத்துல தனக்கு கீழ வேலை செய்யுற தொழிலாளிங்களோட குடும்பத்த முன்னேத்தி தன் குடும்பத்தையும் பாத்துக்குறாம்பாருங்க, அவந்தாண்டா நேர்மையான முதலாளி, அதுதான் நியாயமான முதலாளித்துவம்’ மதன் கூற ‘என்னடா எல்கேஒய் மாதிரி பேச ஆரம்பிச்சிட்ட’ சுரேஷ் ஆச்சர்யத்துடன் கேட்க ‘இல்லடா, டிஎக்ஸ் மாதிரி பேசுறேன்’ மதன் கூற ‘எல்கேஓய், டிஎக்ஸ், இவங்கல்லாம் யாரு?’ கார்த்திகா கேட்க ‘வறுமையினால ஒருத்தன ஒருத்தன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு நாட்டை இன்னைக்கு உலகத்தில் செக்கன்ட் சூப்பர் பவரா மத்தினவரு டெங் ஸியோவ்பிங், இவரு தன் நாட்ட வருமையில இருந்து எப்படி காப்பாத்துறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தப்ப, நாட்ட முன்னேத்தனும்னா முதலாளிங்க கூட அனுசரிச்சு போரது தப்பில்ல, அதுக்கு என் நாடே உதாரணம்னு காட்டினவரு லீ குவான் யூ’ மதன் கூறினான். ‘வாங்க மாப்ள சார், போட்டோவுக்கு போஸ் கொடுக்காம எங்க இந்த பக்கம்’ இவர்களிடம் அசதியாக வந்த குருவை சுரேஷ் வரவேற்றான். ‘அட போப்பா, எவ்லோ நேரம் போஸ் கொடுக்கிறது, என்ன ஏதோ சுவாரஸ்யமா பேசிக்கிட்டு இருந்தீங்க போல’ என்று குரு சுரேஷிடம் கேட்க ‘அதுவா, ஒரு கம்யூனிஸ்ட், ஒரு கேப்பிட்டலிஸ்ட், ஒரு சோசியலிஸ்ட், மூனு பேரும் வெட்டியா அரசியல் பேசிக்கிட்டு இருக்கோம்’ சுரேஷ் குருவிடம் கூற ‘அப்ப நான் வறேன்’ என்று குரு அங்கிருந்து புறப்பட ‘உன் பங்குக்கு நீயும் ஏதாவது அரசியல் பேசுறது’ என்று சுரேஷ் கிண்டலாக கேட்டு போகும் குருவின் கையை பிடித்துக் கொல்ல ‘போயா யோவ், நாங்க அரசியல் பேசி இருந்தா இந்த நாடு எப்பவோ உருப்புட்டு இருக்கும்யா, நாங்க பொத்திக்கிட்டு பார்டர பாத்துக்குறதுனாலத்தான் உங்களால தைரியமா அரசியல் பேச முடியுது, என்ஜாய் டெமாக்ரசி வைல் இட் லாஸ்ட்’ குரு கூறிவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்க சென்றான். ‘பொசுக்குன்னு ஒரே டைலாக்ல மிலிட்டரி ரூல்னா என்னன்னு சொல்லிட்டு போயிட்டானே, இவன் சொல்றத பாத்தா கூடிய சீக்கிரம் இந்தியாவில் மிலிட்ரி கூப் நடக்குமோ’ சுரேஷ் பயந்த வாரே கூற அங்கிருந்த எல்லோரும் புன்னகைத்தனர். அப்போது கார்த்திகா அம்மாவிற்கு கைபேசி அழைப்பு வந்தது. அழைப்பை பேசிவிட்டு ‘அண்ணி போன் பண்ண ஆரம்பிச்சுட்டா, இன்னும் புறப்படலையான்னு கேட்குறா, நேரம் ஆச்சு, கெலம்பலாம்’ கார்த்திகா அம்மா கார்த்திகாவின் அப்பாவை பார்த்து கூற எல்லோரும் எழுந்தனர்.

‘உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்’ கார்த்திகாவின் அப்பா மதனையும் சுரேஷையும் பார்த்து கூற ‘எங்களுக்கும் உங்க கூட பேசினது சுவாரஸ்யமா இருந்துச்சு சார்’ என்று சுரேஷ் கார்த்திகாவின் அப்பாவிடம் கூறினான். ‘அப்ப நீங்க ஓட்டலுக்கு போங்க, நாளைக்கு பாப்போம்’ கார்த்திகா சுரேஷ், தீப்தி மற்றும் மதனை பார்த்து கூற ‘நீங்க எங்க தங்க போறீங்க’ சுரேஷ் கார்த்திகாவையும் அவள் பெற்றோரையும் பார்த்து கேட்க ‘பக்கத்துல தான் சொந்தக்காரங்க வீடு, அவங்ககிட்ட வரோம்னு சொல்லியிருக்கோம்’ கார்த்திகாவின் அப்பா கூற ‘தீப்தி நீயும் எங்க கூட வந்து தங்கிக்கம்மா’ கார்த்திகாவின் அம்மா தீப்தியை பார்த்து கூற ‘பரவால்ல ஆண்டி, நான் ஒட்டல்லையே தங்கிக்கிறேன், மதன் அண்ணாவும் சுரேஷும் பக்கத்து ரூம்ல இருப்பாங்க’ தீப்தி கார்த்திகா அம்மாவின் பயத்தை போக்கினாள். ‘சரி வாங்க அப்படியே உங்கள ட்ராப் பண்ணிட்டு ஓட்டலுக்கு போறோம்’ என்று சுரேஷ் கூற ‘நீங்க போங்கப்பா, பக்கம்தான், நாங்க ஆட்டோல போறோம்’ கார்த்திகாவின் அப்பா கூற ‘பரவால்ல சார் வாங்க’ என்று சொல்லி அவர்களை காரிடம் அழைத்து கொண்டு வந்துவிட்டான். அப்போதுதான் தன் காரில் ஐந்து பேர்தான் வசதியாக உட்கார முடியும் ஆறாவதாக பின்புறம் இருக்கும் பொருட்கள் வைக்கும் இடத்தில் அமர்ந்து வரவேண்டும் என்பது மூளைக்கு எட்டியது. ‘சார் நீங்க முன் சீட்ல உட்காருங்க, நான் பின்னாடி உட்காந்து வறேன்’ என்று மதன் கூற ‘அதெல்லாம் வேணாம், நீ ஒட்டு, நான் பின்னாடி உட்காந்து வறேன்’ என்று சுரேஷ் கூற ‘தம்பிகளா இருங்க, எனக்கு அப்பப்ப கால்களை மடக்கி நீட்ட வேண்டி இருக்கும், பின்னாடி நான் நிம்மதியா என் வசதிக்கு உட்கார்ந்துட்டு வறேன், நீங்க ரெண்டு பேரும் போய் முன்னாடி ஏறுங்க’ என்று கார்த்திகாவின் தந்தை காரின் பின்புறம் சென்று ஏறி அமர்ந்து கொண்டார். கார்த்திகா அம்மா, கார்த்திகா மற்றும் தீப்தி மூவரும் காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டனர். மதன் முன் சீட்டில் உட்கார சுரேஷ் காரை ஓட்டினான். சொந்தக்காரர் வீட்டில் கார்த்திகாவையும் கார்த்திகாவின் பெற்றோர்களையும் இறக்கி விட்டனர். ‘அப்போ நாங்க வறோம் கார்த்திகா’ என்று சொல்லிவிட்டு சுரேஷ் காரை நகர்த்தினான். கார் சிறிது தூரம் செல்வதற்குள் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தீப்திக்கு கைபேசி அழைப்பு வந்தது. பேசிவிட்டு தீப்தி காரை வந்த வழியே திருப்ப சொன்னாள். ‘ஏதுக்குடி மருபடியும் ரிவர்ஸ் எடுக்க சொல்ற’ என்று சுரேஷ் கேட்க ‘அது, ஒருத்தருக்கு ஒருத்தர பார்க்காம இருக்க முடியலையாம், பிரிய மனசே வரலையாம், அதான் இறக்கி விட்ட இடத்திலேயே வந்து மறுபடியும் ஏத்திக்கிட்டு போக சொல்றங்க’ என்று தீப்தி பின்னால் இருந்த மதனை பார்த்து புன்னகைத்தவாறே சுரேஷிடம் கூறினாள். ‘இதெல்லாம் கொஞ்சம் ஓவர் டா டேய்’ சுரேஷ் மதனை கிண்டலடிக்க ‘நானாடா வரச்சொன்னேன்’ என்று மதன் சுரேஷை கேட்க ‘நீ டெலிபதியில் பேசி வரச்சொன்னாலும் சொல்லியிருப்படா’ கிண்டல் செய்த வாரே சுரேஷ் கார்த்திகாவை இறக்கிவிட்ட சொந்தக்காரர் வீட்டில் காரை மறுபடியும் கொண்டு வந்து நிறுத்தினான். சிறிது நேரத்திற்குள் கார்த்திகா உள்ளிருந்து அவசர அவசரமாக வந்து காரில் ஏறிக் கொண்டாள். கார் ஓட்டலை நோக்கி புறப்பட்டது. ‘என்னக்கா வந்துட்டீங்க’ தீப்தி கேட்க ‘அதுவா, தீப்தி தனியா இருப்பா, நானும் அவளுக்கு துணையா ஓட்டல்ல போய் தங்கிக்கவான்னு அம்மாகிட்ட கேட்டேன், ப்ரண்சுங்களோட இருக்கணும்னு முடிவு பண்ணிட்ட, அரட்டை அடிச்சிட்டு இருக்காம நேரத்துக்கு தூங்குங்க அப்பத்தான் காலையில எழுந்திருக்க முடியும், அப்பா சொல்லி அனுப்பிவிட்டார்’ கார்த்திகா நடந்ததை விலக்கினாள். ‘என் மேல அவ்வளவு அக்கரையாக்கா?’ என்று தீப்தி கிண்டலாக கார்த்திகாவை பார்த்து கேட்க ‘சும்மா இருடி’ என்று கார்த்திகா பின்னால் பார்த்தவாரு இருந்த தீப்தியின் முகத்தை தன் கையால் பிடித்து முன்னால் பார்க்கும்படி செய்தாள். நால்வரும் ஓட்டலை வந்தடைந்தனர்.

‘செமையா தூக்கம் வருது, காலைல ஆறு மணி டவுட்டு தான்’ சுரேஷ் கூறிக்கொண்டே மதனும் சுரேஷும் தங்கப்போகும் ரூம் கதவை திறக்க ‘காலையில மரியாதையா சீக்கிரம் எழுந்துக்கோ, இல்ல வந்து மூஞ்சில தண்ணி ஊத்திடுவேன், குட் நைட்’ என்று சொன்னவாரே தீப்தி தானும் கார்த்திகாவும் தங்கப்போகும் ரூம் கதவை திறந்தாள். சுரேஷும் தீப்தியும் கதவை திறந்தவுடன் நேராக போய் படுத்து விட்டனர். ‘எனிவே, மார்னிங் பாக்கலாம், குட் நைட்’ மதனும் கதவின் அருகில் நின்று கார்த்திகாவை பார்த்து சொல்ல ‘இதுக்கு நான் அங்கேயே தூங்கியிருப்பேன், குட் நைட்’ என்று கோபமாக கூறிவிட்டு கார்த்திகா கதவை மூடினாள். மதனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை எப்படி சமாதானம் சொல்வது என்று குழப்பத்தில் தவித்தான். அறையில் சுரேஷ் நன்றாக தூங்கிவிட்டான் ஆனால் மதனுக்கு தூக்கம் வந்த பாடில்லை, பட்டு வேட்டி சட்டையை கழட்டி விட்டு கருமை நிறத்தில் நீ லென்த் ஷார்ட்சும் வெண்மை நிறத்தில் வி நெக் டீ சர்ட்டும் போட்டுக்கொண்டான். தெலைக்காட்சியை பார்த்தாலும் சுவாரஸ்யமாக அதில் எதுவும் வரவில்லை. அப்போது அறை நுழைவு க்கு நேர் எதிரே ஒரு திரை இருப்பதை மதன் கவனித்தான். அந்த திரையை விலக்கி அழகான பால்கனி இருப்பதை பார்த்தான். அதில் பூங்கொடிகள் படர்ந்து அழகாய் தொங்கிக்கொண்டிருந்தன. மதன் உடனே கண்ணாடி கதவை திறந்து பால்கனிக்கு சென்றான். பால்கனிக்கு வந்த மதன் தன் வலது புறம் திரும்பிப்பார்கையில் கார்த்திகாவும் தீப்தியும் தங்கியிருக்கும் பக்கத்து அறைக்கும் இவன் அறையை போலவே பால்கனி இருப்பதை கண்டான். அதுவும் இவன் பால்கனியில் இருந்து பக்கத்து பால்கனிக்கு சிறு இடைவெளி மட்டுமே இருந்தது. மதனுக்கு கார்த்திகா உள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்க்க ஆவலாக இருந்தது. தாவி குதித்து பக்கத்து பால்கனிக்கு போக முடிவெடுத்து கம்பிகளில் கால்களையும் வைத்தான், ஆனால் அவன் மனசாட்சி ‘டேய், வயசுக்கு வந்த பொண்ணுங்க, அவங்க ரூமுக்கு இப்டி போறது உனக்கே கொஞ்சம் காவாலி தனமா இல்ல?’ என்று கேட்டு அசிங்கப்படுத்தியது. மதன் தான் செய்வது தவறு என்று தெரிந்து தாவிச்செல்லும் என்னத்தை மாற்றிக்கொண்டான். ஆனால் அவன் மனமோ பக்கத்து அறையில் கார்த்திகா என்ன செய்கிறாள் என்ற நினைப்பிலேயே இருந்தது. பக்கத்து பால்கனியின் கண்ணாடி கதவுகளின் வழியே வெளிச்சம் வந்து கொண்டிருப்பதை வைத்து மதன் கார்த்திகா இன்னும் தூங்கவில்லை என்று யூகித்தான், ஆனால் அவளிடம் எப்படி பால்கனி தாண்டிப்போய் பேசுவது என்ற தயக்கத்தில் தவித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று யாரோ பக்கத்து பால்கனியின் கண்ணாடி கதவுகளை திறக்கும் சத்தம் கேட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் மதன் அவன் பால்கனியில் படர்ந்திருக்கும் கொடிகளின் உள்ளே அமர்ந்து கொண்டு தன்னை மறைத்துக் கொண்டான். அப்போது வெளிரிய சாம்பல் நிறத்தில் நைட் பேண்ட் மற்றும் அதே நிறத்தில் ஷார்ட் ஸ்லீவ் டீ ஷர்ட் அணிந்து கொண்டு கார்த்திகா தன் அறையின் பால்கனிக்கு வந்தாள். அவளும் வந்தவுடன் பக்கத்து அறையின் பால்கனி கண்ணாடி கதவுகள் திறந்திருப்பதை பார்த்தாள். கதவின் வழியாக சுரேஷ் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள், ஆனால் மதன் அவள் கண்களுக்கு தென்படவில்லை. மின் விளக்குகள் அனைக்கப்படவில்லை, அதனால் மதன் இன்னும் தூங்கவில்லை என்று யூகித்தாள். கூப்பிடலாமா என்று கார்த்திகா பக்கத்து பால்கனிக்கு மிக அருகில் வந்து நிற்க அவள் மனசாட்சி ‘அடியேய், நீ இவ்வளவு தூரம் அவனுக்காக ஓட்டலுக்கு வந்தும், குட் நைட்னு சொன்னான்ல, மறந்துட்டியா?’ என்று கேட்டது. கூப்பிடும் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். சிறிது நேரம் மதனின் அறையையே பார்த்தவாறு இருந்தாள். மதன் கீழே ஒளிந்து கொண்டு கார்த்திகா தன்னை தேடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். மதனை பார்க்க முடியாமல் தவித்த கார்த்திகா வேறு வழியில்லை என்று தன் அறையின் கண்ணாடி கதவுகள் அருகில் செல்ல ‘யாரையோ தேடிக்கிட்டு இருக்கீங்க போல?’ என்று ஒரு குரல் ஒலித்தது. கார்த்திகா வெட்கத்தில் புன்னகைத்தவாறே திரும்பி பார்க்க மதன் அவளை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான். ‘இல்லையே, நான் சும்மா காத்து வாங்கிக் கிட்டு இருக்கேன், நீங்க எங்க இந்த பக்கம், தூங்கல?’ என்று கார்த்திகா கேட்க ‘அதுவா, என்னோட பெஸ்ட் பிரண்ட் ஒருத்தர் எனக்காக அவங்க பேரண்ஸ விட்டுட்டு இங்க வந்திருக்காங்க, அவங்க கூட சரியா பேச முடியல அதான் இப்ப பேசலாமான்னு கேட்டுட்டு போக வந்தேன்’ என்று மதன் கூற ‘உங்க பெஸ்ட் பிரண்டுக்கு தூரமா நின்னு பேசினா பிடிக்காது, கயல் வீட்ல ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிட்டே பேசினீங்கள்ல, அதுமாதிரி பேசனுமாம்’ கார்த்திகா கூற மதன் சற்றும் தாமதிக்காமல் தன் பால்கனியில் இருந்து கார்த்திகாவின் பால்கனிக்கு தாவினான். இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தனர். ‘எப்டியோ என் அப்பாவ இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க’ கார்த்திகா கூற ‘நீங்க வேற, உங்க அப்பாகிட்ட சண்ட போடாம இருந்ததுக்கு சந்தோஷப்பட்டுக் கிட்டு இருக்கேன்’ மதன் கூற ‘ஏன் எங்க அப்பா என்ன செய்தார்?’ என்று கார்த்திகா கேட்க ‘அவரு நீங்க என்னதான் கத்தினாலும் ஸ்கூல் டீச்சர்ஸ் புதுசா எதையும் கத்துக்க மாட்டாங்கன்னு சொன்னாரே, ஒரு எச்எம்மா இருந்துக்கொண்டு இப்படி சொல்றாருன்னு ரொம்ப வருத்தமாவும் கோபமாகவும் இருந்தது, ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு யோசிச்சு பாத்தா அதுதான் ரியாலிட்டின்னு புரிஞ்சது’ மதன் கார்த்திகாவின் தந்தையை பாராட்டினான். ‘எனக்கென்னமோ அவருக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு நினைக்கிறேன், அவருக்கு பொதுவாவே கம்யூனிசம் மேல ஒரு ஈடுபாடு உண்டு, வீட்ல பெரிய ஜோசப் ஸ்டாலின் போட்டோ மாட்டி வெச்சிருக்கார்’ கார்த்திகா கூறினாள். ‘எனக்கு தெரிஞ்சு கம்யூனிஸ்டுகளே ஸ்டாலின ரோல் மாடலா எடுத்துக்குறது இல்ல, உங்க அப்பாவுக்கு எப்படி ஸ்டாலின பிடிச்சது?’ மதன் கேட்க ‘வீட்டுக்கு வர டீச்சர்ஸ் எங்க வீட்ல இருக்குற பெரிய ஸ்டாலின் போட்டோ பாத்து இந்த கேள்விய எங்க அப்பா கிட்ட நிறைய முறை கேட்டு இருக்காங்க, அதுக்கு எங்க அப்பா, ஸ்டாலின ஒரு டிக்டேட்டரா பாத்தா ஹிட்லரை விட இவர்தான் மோசமான டிக்டேட்டர், ஆனா இவர் மட்டும் இல்லாம இருந்திருந்தா ஜெர்மனி எப்படி பிரான்ஸ ஈஸியா ஜெயிச்சதோ அதேமாதிரி ரஷ்யாவையும் ஜெயிச்சிருக்கும் அப்படின்னு சொல்லுவாரு’ கார்த்திகா பதில் கூறினாள். ‘இன்ட்ரஸ்டிங், ஆமா, உங்க அம்மா ரொம்ப அமைதி போல? உங்க அம்மாவ பாத்ததும் எனக்கு எங்க எய்ட் சயின்ஸ் டீச்சர் தான் நியாபகத்துக்கு வந்தாங்க, ஸ்டூடன்ஸ் எல்லோருக்கும் அவங்கல ரொம்ப புடிக்கும், ஆனா அவங்களத்தான் பசங்க நிறைய ஏமாத்துவாங்க’ மதன் தன் நினைவுகளை அசை போட்டான். ‘எனக்கும் எங்க அம்மாவ பாத்தா ரொம்ப ஆச்சரியமா இருக்கும், ஸ்கூல்ல பசங்கல சமாலிக்குறதுன்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா, ஆனாலும் எங்க அம்மா ஒரு வார்த்த கூட நெகட்டிவ்வாக சொல்ல மாட்டாங்க, என்கிட்டயும் சரி, அவங்க கிட்ட படிக்கிற பசங்க கிட்டவும் சரி, ஷி இஸ் தி ஐடியல் விமன் ஆப் எய்ட்ஸ் அன்ட் நைன்டிஸ்’ கார்த்திகா தன் அம்மாவை பற்றி பெருமிதம் கொண்டாள். ‘உன் கிட்ட பழக ஆரம்பிச்சப்போ ஒரு விஷயம் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு, எப்படி இந்த பொண்னு கொஞ்சம் கூட ஹெட் வெயிட் இல்லாம இருக்குன்னு, இப்பத்தான் தெரியுது அதுக்கு உங்க அம்மாதான் காரணம்னு’ மதன் கார்த்திகாவை பார்த்து கூறினான். ‘நான் ஒன்னும் என் அம்மா மாதிரி சாப்ட் இல்ல’ கார்த்திகா கோபப்படுவது போல் பாவனை காட்டியபடி கூறினாள். ‘அமைதியா இருக்கிறவங்க எல்லாம் சாப்ட் கேரக்டர்னு யார் சொன்னது, அவங்களுக்குள்ள வேர ஒரு மிருகம் இருக்கும்’ மதன் கூற ‘உங்களுக்கு எப்படி தெரியும்?’ கார்த்திகா கேட்க ‘நானும் இன்ட்ரோவர்ட் தான்’ மதன் சிரித்தபடி கூற ‘நம்பிட்டேன்’ கார்த்திகா சிரித்துக்கொண்டே மதனின் கண்களை பார்க்க ஆரம்பித்தாள். ‘ஸ்டாப், நாட் அகெய்ன்’ மதனும் கார்த்திகாவின் கண்களை பார்த்துக் கொண்டே கூறினான். ‘நீங்க மட்டும் கயல் வீட்ல என்ன அப்படி பாத்தீங்க?’ கார்த்திகா மதனின் கண்களை பார்த்துக் கொண்டே கேட்க ‘புடவையில ரொம்ப அழகா இருந்தீங்க பாத்துக்கிட்டே இருக்கணும்னு தோனுச்சு’ மதன் கூற ‘அப்ப புடவை தான் அழகா இருந்துச்சு நான் அழகா இல்ல?’ கார்த்திகா கேட்க ‘மறுபடியும்மா, சரி, இப்ப நான் என்ன சொன்னா சந்தோஷப்படுவீங்க’ மதன் கேட்க ‘கயல் வீட்ல ஏன் என்னோட லிப்ஸ் வேணும்னு கேட்டீங்க?’ கார்த்திகா கேட்க ‘நீங்க என்னோட ச்சின் வேணும்னு கேட்டீங்களா, அதான் உங்க பேஸ்ல எது அழகா இருக்குன்னு பாத்தேன், எல்லாமே அழகா தான் இருந்தது, ஆனா உங்க லிப்ஸ் ரொம்ப அழகா தெரிஞ்சது, அதான் சொன்னேன்’ மதன் கூற ‘அப்ப பேஸ் மட்டும் தான் பாத்தீங்க?’ கார்த்திகா மீண்டும் மதன் கண்களை பார்த்தவாரு கேட்க ‘ஒரு பேச்சிலர்ட்ட கேட்குற கேல்வியாங்க இது?’ மதனும் கார்த்திகாவின் கண்களை பார்த்தபடி கேட்க ‘பேச்சிலர்ஸ் அடல்ட் கண்டன்ட் பக்கமே போறதில்ல பாருங்க, உண்மைய சொல்லுங்க, என் பேஸ் மட்டும் தான் அழகா இருக்கா?’ கார்த்திகா மதனை விடாமல் பார்த்துக் கொண்டே கேட்க ‘நைட் டிரஸ்ல, கொஞ்சம் மொதப்பா, பப்ளியா, க்யூட்டா இருக்கீங்க’ மதன் கூற ‘முகத்த மட்டும் தான் பாத்து பேசிக்கிட்டிருந்தா மாதிரி இருந்தது, ஃபுல் பாடி ஸ்கேன் பண்ணியாச்சா?’ கார்த்திகா கேட்க ‘நீங்க வந்ததுல இருந்து அத்தான பண்ணிட்டிருக்கேன்’ மதன் கூற ‘ச்சீ, இந்த நெர்ட் பசங்கல மட்டும் நம்பவே கூடாது, ஒன்னுமே தெரியாத மாதிரி இருந்துட்டு எல்லா வேலையும் பண்றது’ கார்த்திகா கோபப்படுவது போல் நடித்தாள். ‘உள்ள இருக்குறத சொன்னாலும் தப்பு, சொல்லலைன்னாலும் தப்பு, யூ கேர்ல்ஸ் ஆர் சோ காம்ப்ளக்ஸ்’ மதன் கூற ‘ஆமாம், நாங்க காம்ப்ளக்ஸ், நீங்க ரொம்ப சிம்பிள், வேணாம், வாய கிலராதீங்க’ கார்த்திகா மதனை எச்சரித்தாள். ‘அதெப்படிங்க கோபப்படும் போது கூட அழகா இருக்கீங்க’ மதன் கார்த்திகாவை சமாதானப்படுத்த முயற்ச்சித்தான். ‘போதும், ஆல்ரெடி குளிருது’ கார்த்திகா கூற ‘ஆமாங்க எனக்கும் லைட்டா குளிருது’ மதன் சொல்லிக்கொண்டே கார்த்திகாவை நெருங்கி வர ‘வேணாம், கிட்ட வராதீங்க, வி ஆர் ஸ்டில் ப்ரண்ட்ஸ், பார்டர் கிராஸ் பண்ணக்கூடாது’ என்று சொல்லிக்கொண்டே கார்த்திகாவும் மதனை நெருங்கி வர ‘நீங்க மட்டும் கிட்ட வரீங்க?’ மதன் கார்த்திகாவை பார்த்தபடி கேட்க ‘அதுவா, நீங்க கண்ட்ரோலா இருக்கீங்கலா இல்லையான்னு செக் பன்றேன்’ கார்த்திகா மதனுக்கு மிகவும் நெருக்கத்தில் வந்து கூற ‘ரொம்ப கஷ்டப்பட்டு கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே போனோம்னா கண்டிப்பா பார்டர் கிராஸ் பண்ணிடுவேன், ரொமான்ஸ் பண்றத இன்னொரு நாளைக்கு கண்டினியூ பண்ணலாமா?’ மதன் சிறிது பயத்துடன் கேட்க கார்த்திகா மதனை விட்டு சற்று விலகினாள் ‘கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டு இருக்கோமோ’ கார்த்திகா மதனை பார்த்தபடி கேட்க ‘விட்டிருந்தா என் விர்ஜினிட்டிய வேட்டையாடி இருப்பீங்க’ மதன் பயத்துடன் கூற கார்த்திகா சிரித்துவிட்டாள். கார்த்திகா சிரிப்பதை பார்த்து மதனும் புன்னகைத்தான். ‘இட்ஸ் ஆல்ரெடி மிட்நைட் த்ரீ தர்டி, உங்களுக்கு தூக்கம் வரலையா?’ மதன் கேட்க ‘லைட்டா வருது, உங்களுக்கு?’ கார்த்திகா மதனை கேட்க ‘எனக்கும்தான், ஆறு மணிக்கு வேற எழனும், தூங்க போலாமா’ மதன் கேட்க ‘ஆமாம், கொஞ்ச நேரமாச்சும் தூங்கனும், இல்லைன்னா அப்பா நான் தூங்கலைன்னு கன்டுபிடிச்சுடுவாரு’ கார்த்திகா கூற ‘உங்களுக்கு உங்க அப்பா பயம், எனக்கு சுரேஷ் பயம், நாம இவ்வளவு நேரம் பேசியது சுரேஷுக்கும் தீப்திக்கும் தெரிஞ்சது, செத்தோம், ரெண்டு பேரும் நம்மல கலாய்சே கொண்றுவாங்க’ மதன் கூற ‘இந்த தீப்தி வேற கயல் கிட்ட செல்லிட்டான்னா அவ டெய்லி போன் போட்டு கலாய்ப்பா, தீப்தியும் சுரேஷும் நல்லா தூங்கி கிட்டு இருக்காங்க, அவங்கல டிஸ்டர்ப் பண்ணாம போய் படுத்துக்கலாம், ஓக்கேவா’ கார்த்திகா கூற ‘ஒக்கே, அப்ப நான் என் ரூமுக்கு போறேன்’ என்று சொல்லிவிட்டு மதன் தன் பால்கனிக்கு மெதுவாக சிறு சத்தம் கூட வராமல் தாவினான். மதனும் கார்த்திகாவும் கண்ணாடிக் கதவுகள் முன் நின்றனர். உள்ளே செல்வதற்கு முன் மதன் கார்த்திகாவை பார்த்து ‘குட் நைட்’ என்று மெதுவாக கூறினான். கார்த்திகாவும் மதனை பார்த்து ‘ஸ்வீட் ட்ரீம்ஸ்’ என்று கூறினாள். இருவரும் ரூம் உள்ளே சென்று மிகவும் மெதுவாக பால்கனி கண்ணாடி கதவுகளை மூடி விளக்குகளை அனைத்துவிட்டு படுத்துக்கொண்டனர்.

‘மச்சி எழுந்துட்றா, ஆல்ரெடி சிக்ஸ் பிப்டீன், தீப்தியும் கார்த்திகாவும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க’ சுரேஷ் மதனை எழுப்பி கொண்டிருந்தான். ‘சிக்ஸ் பிப்டீனா, நாம கோயிலுக்கு போறதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சிடும், இங்கயே இருக்கலாம்’ மதன் அரை தூக்கத்தில் இருந்தான். ‘எத்தன மணிக்கு தூங்குனான்னு தெரியல, நீ வரலைன்னா நான் மட்டும் போறேன் டா’ சுரேஷ் தன்னை தயார்படுத்திக் கொண்டே கூறினான். ‘பாடு தூங்க விடமாட்டியாடா’ என்று மதன் புலம்பியவாறே பாத்ரூமுக்குள் சென்றான். சிறிது நேரத்தில் மதனும் நீல நிற டீ ஷர்ட் மற்றும் கருமை நிர ஜீன்ஸ் போட்டுக்கொண்டு அவசர அவசரமாக தயாரானான். சுரேஷும் நேவி ப்ளூ ஜீன்ஸ் மற்றும் வெண்மை நிறத்தில் கருமை நிர ஸ்ரிப்ஸ் கொண்ட செக்ட் சர்டில் தயாராகி இருந்தான். இருவரும் ஹோட்டல் ரூம் கதவுகளை மூடி விட்டு விரைவாக சுரேஷின் கார் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினர். அங்கே தீப்தியும் சுரேஷைப்போல் வென்மை நிறத்தில் கருமை நிற ஸ்ரிப்ஸ் கொண்ட செக்ட் கவுனிலும் கார்த்திகா அரஞ்ச் நிர ஷார்ட் குர்தி மற்றும் கருமை நிற ஜீன்ஸ் போட்டுக்கொண்டு நின்றிருந்தனர். ‘டேய், பேசி வெச்சி ப்ளாக் அண்ட் வைட்ல இருக்கீங்களா?’ மதன் சுரேஷை பார்த்து கேட்க ‘நீங்க மட்டும் என்ன, பேசி வச்சுக்கிட்டு தான பிளாக் ஜீன்ஸ்ல இருக்கீங்க’ சுரேஷும் மதனிடம் எதிர் கேள்வி கேட்டான். ‘எவ்ளோ நேரம் வெயிட் பண்றது கல்யாணம் முடிஞ்சிட போகுது’ கார்த்திகா சுரேஷிடம் கேட்க ‘இவன் கிட்ட கேளுங்க, நாய் எத்தன மணிக்கு தூங்குனான்னு தெரியல, பேக்ல இருந்து லேப்டாப் கூட வெளிய எடுக்காம அவ்வலவு நேரம் என்ன பண்ணிட்டிருந்தான்னும் தெரியல’ சுரேஷ் சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்து நகர்த்தினான். சுரேஷ் சொன்னவுடன் முன்னே உட்கார்ந்திருந்த மதன் ரியர் வியூ மிரரில் பின்னால் இருந்த கார்த்திகாவை பார்க்க கார்த்திகா ரியர் வியூ மிரரில் மதனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். ஒருவழியாக தாலி கட்டுவதற்குள் நால்வரும் கோவிலுக்குள் வந்து சேர்ந்தனர். அங்கு கார்த்திகாவின் பெற்றோர் நின்றுகொண்டிருக்க அவர்களிடம் கார்த்திகா தன் வந்துவிட்டதை கை அசைத்து உணர்த்தினாள். அவர்களும் நால்வரையும் பார்த்து புன்னகைத்தனர். சன்னிதியின் அருகில் நின்றிருந்த குருவும் நால்வரும் வந்ததை கண்டு புன்னகைத்தான், பக்கத்தில் நின்றிருந்த கயல் கார்த்திகாவை பார்த்து எத்தனை மணிக்கு வருவது என்பதைப்போல் கைகளால் சைகை காட்டினாள். கார்த்திகா அதற்கு மன்னிப்பு கேட்பது போல் தன் காதுகளை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவது போல் பாவனை காட்டினாள். ஒருவழியாக புரோகிதர் பூஜை முடித்து தாலியை வந்திருந்த எல்லோரிடமும் எடுத்துச் செல்லும்படி உத்தரவிட்டார். எல்லோரும் தாலியை தொட்டு கொடுத்தபின் கெட்டிமேளம் முழங்க குரு கயலின் கழுத்தில் முதல் முடிச்சு போட மற்ற இரண்டு முடிச்சுகளை குருவின் அக்காமார்களும் அண்ணியார்களும் சேர்ந்து நின்று போட்டனர். தலை குனிந்திருந்த கயலின் கண்களில் கண்ணீர் மிதந்தது, அதை உணர்ந்த குரு தன் கையில் இருந்த வெள்ளை நிர கைக்குட்டையை யாரும் கவனிக்காத போது கயலின் கையில் சொருகினான். கயலும் தலை குனிந்த வாரே சட்டென தன் கண்களை துடைத்துக் கொண்டு புன்னகைத்தபடி தலை நிமிர்ந்தாள். திருமணம் முடிந்ததும் நேராக புது தம்பதியினரை பழனிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். தம்பதிகளின் அருகில் நால்வரும் வந்தனர். ‘தாலி கட்டும்போது தான் வருவியா?’ கயல் கார்த்திகாவை பார்த்து கோபப்பட ‘நான்தான் சாரி சொல்லிட்டேன்ல’ என்றாள் கார்த்திகா. ‘நைட்டெல்லாம் தூக்கமே இல்ல, கல்யாணம் முடிஞ்சதும் கொஞ்சம் தூங்கலாம்னு பாத்தா இந்த பெருசுங்க வேர பழனிக்கு போகலாம்னு பிளான் பண்ணுதுங்க, அங்க போயிட்டு எப்ப திரும்ப வந்து’ கயல் புலம்ப ஆரம்பித்தாள். ‘இன்னைக்கு ஒரு நாள்தான, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டி’ கார்த்திகா சமாதானப் படுத்தினாள்.

புதுமண தம்பதிகள் தங்கள் சொந்தங்களுடன் பழனிக்கு கிளம்பினர். கார்த்திகா, மதன், சுரேஷ் மற்றும் தீப்தி நின்றுகொண்டிருந்த இடத்திற்கு கார்த்திகாவின் பெற்றோர் வந்தனர். ‘நைட் தூங்கல, இல்ல?’ கார்த்திகாவின் அப்பா வந்தவுடன் கார்த்திகாவை பார்த்து கேட்டார். ‘அது வந்து பா, தீப்தி கூட பேசிகிட்டு இருந்தேன், டைம் போனதே தெரியல’ கார்த்திகா தீப்தியை பார்த்துக்கொண்டே தன் தந்தையிடம் கூறினாள். ‘அங்கிள், அக்கா தூங்கலைன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?’ தீப்தி கார்த்திகா அப்பாவிடம் கேட்க ‘வந்ததில இருந்து அவ உன் மேல கைய வெச்சிக்கிட்டு கொட்டாவி விட்டுக்கிட்டு இருக்கா, சரியா தூங்காதவங்கத்தான் அப்படி பன்னுவாங்க, என் ஸ்டூடன்ஸ் எத்தனை பேர் பாத்திருப்பேன்’ கார்த்திகா அப்பா விவரித்தார். ‘அப்போ எங்க நாலு பேருல வேற யார்லாம் தூங்கலன்னு சொல்லுங்க பாப்போம்?’ தீப்தி கார்த்திகா அப்பாவை கேட்க ‘நீங்க வந்ததுல இருந்து நான் என் பொண்ண மட்டும்தாம்மா கவனிச்சுக்கிட்டு இருந்தேன், மத்தவங்கல கவனிக்கலையே’ கார்த்திகா அப்பா கூற ‘சும்மாதான் கேட்டேன் அங்கிள், நானும் அக்கா கூட நைட்டெல்லாம் பேசிக்கிட்டு இருந்தேனா, அதனால நீங்க சொன்ன சிம்டம்ஸ் எனக்கும் பொருந்துச்சான்னு டெஸ்ட் பண்ணிக்க கேட்டேன்’ தீப்தி கார்த்திகாவை பார்த்தவாரு சிரித்துக்கொண்டே கூறினாள். ‘சரி வாங்க சாப்பிட போகலாம்’ கார்த்திகா அப்பா நால்வளையும் கூப்பிட ‘நீங்க முன்னாடி போய்கிட்டே இருங்க சார், ஒரு சின்ன பஞ்சாயத்து, முடிச்சிட்டு வந்துட்றோம்’ சுரேஷ் மதனை பார்த்தவாரு கார்த்திகா அப்பாவிடம் கூறினான். கார்த்திகாவின் பெற்றோர் சாப்பிட சென்றனர்.

‘மாட்னிங்கலா ரெண்டு பேரும், எனக்கு அப்பவே டவுட்டு, இவன் லேப்டாப் வெலிய எடுக்கல, வழக்கமா இவந்தான் என்ன திட்டி எழுப்புவான், நைட் தூங்காம அப்படி என்ன பண்ணிக்கிட்டு இருந்தான்னு அப்பவே தோனுச்சு, வர அவசரத்துல விட்டுட்டேன், இப்பத்தான் தெரியுது ரெண்டு பேரும் நைட் டியூட்டி பாத்திருக்கீங்க ன்னு’ சுரேஷ் மதனையும் கார்த்திகாவையும் பார்த்து கூற ‘அந்த சீன் இல்ல, தூக்கம் வராம சும்மா பால்கனி பக்கம் போனேன், கார்த்திகாவும் அவங்க ரூம் பால்கனியில நின்னுட்டு இருந்தாங்க, பேசிக்கிட்டு இருந்ததுல டைம் போனதே தெரியல, தூங்க லேட் ஆயிடுச்சு, அவ்வளவுதான்’ மதன் சமாளித்தான். ‘அதான் ரீசன் சொல்லிட்டோம்ல, பஞ்சாயத்த முடிச்சிக்குவேம் அடுத்து என்ன பிளான்?’ கார்த்திகா சமாலித்தவாரே கேட்க ‘பூகம்பமே வெடிச்சாலும் ரெண்டு பேரும் ஒன்னுமே நடக்காத மாதிரி சமாளிக்கரீங்கடா, நல்லாயிருங்க, அடுத்து என்ன, நேரா சென்னைதான்’ சுரேஷ் கூற ‘கார்த்திகா அக்கா அவங்க வீட்டுக்கு போயிட்டு வருவாங்க போல’ தீப்தி கார்த்திகாவை பார்த்து கூற ‘வரும்போது வீட்டு வந்துட்டு இங்க வர மாதிரி பிளான், அது சொதப்பிடுச்சு, இப்ப நேரா நான் சென்னை போறேன்னு சொன்னா அப்படியே போயிடு வீட்டுப்பக்கம் வந்துராதன்பாங்க’ கார்த்திகா கூறினாள். ‘முதல்ல போய் சாப்பிடலாம் பசிக்குது’ மதன் கூற நால்வரும் சாப்பிட பந்திக்கு சென்றனர்.

சாப்பிட்டு முடித்துவிட்டு நால்வரும் மற்றும் கார்த்திகாவின் பெற்றோரும் சுரேஷ் கார் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தனர். ‘என் பொண்ணு சென்னைல எப்படி இருக்காளோன்னு டெய்லி யோசிப்போம், அதுவும் கயல் ரூமை விட்டு போரான்னு தெரிஞ்சதும் இவ எங்க போய் தங்கப்போராளோன்னு இருந்துச்சு, ஆனா இப்ப என் பொண்ணையும் பாத்துக்க ப்ரண்ஸுங்க மூனு பேர் இருக்கீங்கன்னு நிம்மதியா இருக்கு, கார்த்திகாவ நல்லா பாத்துக்கோ தீப்தி’ கார்த்திகாவின் அம்மா தீப்தியை பார்த்து கூறினார். ‘அய்யோ ஆண்டி, அக்காதான் என்ன பாத்துக்குறாங்க, அது மட்டும் இல்லாம அக்காவோட பிரெண்டுக்கு ஒன்னுன்னா ஓடிவந்தவங்க அக்காவுக்கு ஒண்ணுன்னா சும்மா விடுவாங்களா, நீங்க கவலைப்படாதீங்க’ தீப்தி ஆறுதலாக கயல் அம்மாவிடம் பேசினாள். ‘ஏம்பா சுரேஷ், சண்டே மார்னிங், இப்பத்தான் எட்டு பத்து ஆகுது, இப்பவே மெட்ராஸ் போய் என்ன பண்ண போறீங்க, வாங்க எங்க வீட்டுக்கு போகலாம்’ கார்த்திகாவின் அப்பா மூவரையும் தன் வீட்டிற்கு அழைத்தார். ‘இருக்கட்டும் சார், இன்னொரு நாள் நிதானமா வறோம், கொஞ்சம் வொர்க் இருக்கு’ மதன் பதிலளிக்க ‘எப்படியும் லேப்டாப்ல தான வொர்க் பண்ண போறீங்க, அத எங்க வீட்ல வந்து பண்ணுங்க, டேட்டா கார்டு எல்லாம் நான் எடுத்துட்டு வந்திருக்கேன்’ கார்த்திகா மதனை முறைத்தவாறு கூற ‘அது வந்து’ மதன் ஆரம்பிப்பதற்குள் ‘அதெல்லாம் இருக்கட்டும் தம்பி, உங்க மூனு பேருக்கும் இன்னைக்கு நைட் எங்க வீட்ல தான் விருந்து’ கார்த்திகா அப்பா கூற ‘நைட் ஸ்டேயா, நாளைக்கு ஆபீஸ் போகணும் சார்’ மதன் கூற ‘காலைல நாலு மணிக்கு கிளம்பினா மதியம் ஒன் ஆகுறதுக்குள்ள நேரா ஆபீஸ் போயிடலாம்’ கார்த்திகா பிடிவாதமாக மதனை பார்த்து கூறினாள். மதன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ‘ஒகே, நீங்க போய் கார்ல உட்காருங்க, குரு ப்ரண்ஸ்சும் கயல் ப்ரன்ஸ்சும் அங்க நின்னுகிட்டு இருக்காங்க, அவங்க கிட்ட போய் நாங்க கிளம்புறோம்னு சொல்லிட்டு வந்துடறோம்’ என்று சுரேஷ் கார்த்திகாவின் பெற்றோர்களை காரில் அமர சொன்னான். அவர்களூம் காரில் அமர்ந்தனர். அப்பொழுதும் கார்த்திகா மதனை முறைத்தவாரே இருந்தாள். ‘இன்னும் லவ்வர்ஸ்னு கூட டிக்லர் செஞ்சிக்கல, அதுக்குள்ள ஸ்டார்ட் ஆயிடுச்சா, வெல்கம் டு த கிளப் மச்சி’ சுரேஷ் மதனை பார்த்து சொல்லும்போது யாரோ தலையில் தட்டியது போல் இருந்தது. பின்னால் தீப்தி, ‘பெரிய அப்பாவிங்க கிளப், வெல்கம் பன்றாரு, போங்க, போய் சொல்லிட்டு கெளம்பலாம்’ தீப்தி சுரேஷை மிரட்டிவிட்டு கார்த்திகாவிடம் சென்றாள். ‘நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் லவ் பண்றவனுங்க எல்லாம் அப்பாவிங்க தாண்டி’ சுரேஷ் சொல்லிக்கொண்டே மதனின் தோளில் கை போட்டுக்கொண்டு குருவின் நண்பர்களிடம் மதனை அழைத்துக் கொண்டு சென்றான்.

குரு மற்றும் கயலின் நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நால்வரும் காருக்கு வந்தனர். அங்கு கார்த்திகாவின் அப்பா காரின் பின்புறம் பொருட்கள் வைக்கும் இடத்தில் நன்றாக கால்களை நீட்டியவாறு இருந்தார். கார்த்திகாவின் அம்மா காரின் பின் இருக்கையில் இடது புறம் அமர்ந்திருந்தார். தீப்தி பின் இருக்கையில் நடுவில் வந்து அமர்ந்தாள். கார்த்திகா பின் இருக்கையில் வலது புறம் வந்து அமர்ந்தாள். மதன் காரின் முன் இருக்கையில் இடது புறம் அமர சுரேஷ் காரை ஓட்ட தொடங்கினான். ‘ரூட் தெரியுமா, இல்ல சொல்லட்டுமா தம்பி’ என்று கார்த்திகாவின் அப்பா சுரேஷை பார்த்து கேட்க ‘கூகிள் மேப்ஸ் இருக்கு சார், கரெக்டா ஒன் அண்ட் ஆப் ஆர்ஸ்ல போயிடலாம்’ சுரேஷ் சொல்லிக்கொண்டே காரை ஓட்டினான்.

தொடரும்..

நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]

%d bloggers like this: