துருவங்கள் – அத்தியாயம் 10 – குலசாமி

குலசாமி

‘எங்கடா இருக்க ரூம்லயா?’ தீப்தி சுரேஷை போனில் கேட்க ‘இல்லடி வீட்டுக்கு வந்திருக்கேன்’ சுரேஷ் கூற ‘கோயிங் டு பி பிக் ப்ராப்ளம் இன் மை ரூம், கயல் அக்காவோட அம்மாகிட்ட கயல் அக்காவோட மாமா பையன் மறுபடியும் போய் பொண்ணு கேட்டிருக்கார், கொடுக்கலைன்னா மெட்ராஸ்ல இருக்கிற உங்க பொண்ண கூட்டிட்டு போய் தாலி கட்டி அப்படியே ஸ்ரீநகர் கூட்டிட்டு போயிடுவேன்னு சொல்லி இருக்கார். அவங்க அம்மா உன்னால முடிஞ்சத பாத்துக்கோன்னு சொல்லி இருக்காங்க, இந்த விஷயம் கயல் அக்காவோட மாமா பையன் கயல் அக்கா கிட்ட இன்னைக்கு காலையில போன் பண்ணி சொன்னார். அக்காவ நைட் ரெடியா இருக்க சொன்னார், அவர் மெட்ராஸ் வந்ததும் ரெண்டு பேரும் இன்னைக்கு நைட் ஸ்ரீநகர் போறாங்க, இது எப்படியோ அவங்க அம்மாவுக்கு தெரிஞ்சு அவங்க ஆல்ரெடி மெட்ராஸ் வந்துட்டாங்களாம், இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க கயல் அம்மா வந்துடுவாங்க போல இருக்கு, இங்க பிரச்சனை ஆகும் போல இருக்கு, நீ இங்க சீக்கிரம் வாடா’ தீப்தி சுரேஷுக்கு சொல்ல ‘நான் அங்க வரதுக்கு எப்படியும் டைம் ஆகும்டி, கயல உடனே எங்க ரூமுக்கு போக சொல்லு, நான் மதனுக்கு போன் பண்ணி கயல கூட்டிட்டு சென்ட்ரலுக்கு வரசொல்றேன், கயல அப்படியே அவங்க மாமா பையன காண்டாக்ட் பண்ணி சென்ட்ரலுக்கு வர சொல்லு, நானும் டைரக்டா சென்ட்ரல் வந்துட்றேன்’ என்று சுரேஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ‘ஷிட், அவங்க அம்மா அடியாளுக்களோட வீட்டுக்கு வந்துட்டாங்கடா’ தீப்தி சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டாள். சுரேஷுக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை உடனே மதனிடம் இந்த விஷயத்தை சொல்லி தீப்தியின் நம்பரை கொடுத்து தீப்தியிடம் அவர்கள் ரூம் இருக்கும் இடத்தை கேட்டு உடனே அங்கு போக சொன்னான்.

மதனும் தீப்தியை காண்டேக்ட் செய்ய பல முறை முயற்சித்தான், ஆனால் தீப்தி கட் செய்து கொண்டே இருந்தாள், இறுதியாக ஒரு முறை ட்ரை செய்து விட்டு எடுக்கவில்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விடலாம் என்ற முடிவில் மதன் ட்ரை செய்ய தீப்தி எடுத்துவிட்டாள் ‘தீப்தி நான் மதன்’ மதன் சொல்வதற்குள் தீப்தி அவள் ரூம் இருக்கும் அட்ரஸ்ஸை சொல்லிவிட்டு போனை கட் செய்தாள். மதன் கொஞ்சமும் தாமதிக்காமல் அவர்கள் ரூம் இருக்கும் இடத்திற்கு சென்றான். மதன் கேட்டை திறந்து உள்ளே செல்ல காயலின் அம்மா கயலின் கைகளை பிடித்து இழுத்தபடி கயலை கூட்டிக்கொண்டு வெளியில் வந்தார். கயல் அம்மாவுடன் பத்து அடியாட்கள் இருந்தனர்.

‘என்னங்க இப்படி இழுத்துட்டு வரீங்க, பர்ஸ்ட் கைய விடுங்க’ என்று மதன் கயலின் அம்மாவிடம் கூறினான். அப்போது அங்கிருந்த ஒரு அடியாள் ‘யார்ரா நீ, தூறமாப்போ தேவயில்லாம உசுர விட்றப்போற’ என்று மதனை பார்த்து சொல்லிவிட்டு ‘சார் பாக்குறதுக்கு சோடா புட்டி போட்டுக்கிட்டு டீசண்டா இருக்காரு, ஒதுங்கி போயிருவாரு’ என்று இன்னொரு அடியாளை பார்த்தவாரு கூறிவிட்டு அந்த அடியாள் மதனுக்கு முன்பாக நின்று கொண்டான். ‘சார், நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா’ மதன் சொல்லி முடிப்பதற்குள் மதனின் கழுத்தில் வீச்சருவாவை அந்த அடியாள் வைத்தான். அடுத்த நொடி அந்த அடியாளின் காதிலும் மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அந்த அடியாள் பாதி சுயநினைவுடன் நிற்க முடியாமல் மதனுக்கு முன் மண்டியிட்டு இருந்தான், அவன் கையில் இருந்த வீச்சருவாள் இப்போது அவன் கழுத்தில் இருந்தது. ‘சோடாபுட்டி போட்டிருக்குறவனுக்கு சண்ட சொய்ய தொரியாது, வீச்சு புடிக்க தெரியாதுன்னு, எந்த நாய்டா சொன்னது’ என்று மதன் பாதி சுயநினைவுடன் இருக்கும் அந்த அடியாளிடம் கழுத்தில் அறுவாவை வைத்தவாறு கூறினான். இதை பார்த்த அனைவருக்கும் வாரிப்போட்டது. கீழே விழுந்து கொண்டிருந்த அந்த அடியாளின் சட்டையை பிடித்து நிறுத்தி அவன் கழுத்தில் வீச்சருவாளை வைத்து கொண்டு ‘பத்து என்றதுக்குள்ள அந்த பொண்ணு அவ ரூமுக்கு போகலன்னா, இங்க இருக்கிறவங்க முக்காவாசி பேருக்கு நாளைக்கு பாட கட்ட வேண்டியிருக்கும், நான் இருப்பேனா இல்லையான்றது பத்தி எனக்கு கவலை இல்ல, அந்த பொண்ணோட விருப்பம் இல்லாம அவள கூட்டிக்கிட்டு ஒருத்தன் இங்கிருந்து உயிரோட போக மாட்டீங்க. யாருக்கு சாவு மேல பயம் இல்லையோ அவன் மொதல்ல வந்து என்ன கிழி’ என்று மதன் கூறினான். எல்லோரும் அவரவர் இருந்த இடத்தில் அப்படியே சில நிமிடம் நின்றிருந்தனர், யாரும் அசையவில்லை. மதன் ஒரு சிறு அசைவை கண்டாலும் அவன் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் அடியாளின் கழுத்தை வெட்டிவிட்டு ருத்ர தாண்டவம் ஆடும் நிலையில் இருந்தான். அப்பொழுது, ‘தம்பி, அவசரப்படாத’ என்று கயலின் அம்மா கயலின் கைகளை விட்டவாரே மதனிடம் கூறினார். ‘போய் வண்டியில ஏருங்கடா, அந்த செத்த பொனத்தையும் தூக்கிட்டு போய் வண்டியில போடுங்க’ கயலின் அம்மா மதனிடம் அடிவாங்கியவனை வண்டியில் ஏற்றி விடச்சொல்லி அடியாட்களையும் அவர்கள் வந்த வண்டியில் அமறச்சொன்னாள். கயல், கயலின் அம்மா மற்றும் மதன் மூன்று பேரும் மாடியில் இருந்த ரூமிற்று சொல்ல தயாரானார்கள், அதுவரை நடந்துகொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்த கார்த்திகாவும் தீப்தியும் கயலை நோக்கி ஓடி வந்து அவளை மீண்டும் ரூமிற்கு கூட்டி சென்றனர்.

ரூமில் கயல், கார்த்திகா, தீப்தி, கயலின் அம்மா மற்றும் மதன் இருந்தனர். ‘சொந்த அண்ணன் மகன், அப்புறம் ஏன் வேணாங்குரீங்க?’ மதன் கேட்க ‘ஏன்னா அவன் ஆர்மில இருக்கான்’ மதன் அம்மா பதில் கூற ‘ஆர்மில இருக்குறவங்க வாழலையா, புள்ள குட்டி பொத்துக்களையா, சந்தோஷமா இல்லையா?’ மதன் கேட்க ‘இல்லையா, இல்ல, சந்தோஷமா இல்ல, நான் ஒரு மிலிட்டரிகாரனுக்கு வாக்கப்பட்டவதான், இவளுக்கு ஏழு வயசுதான் இருக்கும், கார்கில்ல போயிட்டாரு, என்னத்தான் சொத்து சொகம் பேரு பதவின்னு இருந்தாலும் தாலியறுத்தவ வாழ்க்கை நரகம் தான், அந்த கஷ்டமெல்லாம் சொன்னா உங்களுக்கு புரியாது, எனக்கும் என் அண்ணன் பையன ரொம்ப புடிக்கும், சின்ன வயசுல அவன் என் அண்ணன் வீட்ல இருந்ததை விட என் வீட்லதான் அதிகமா இருந்திருக்கான், நான் எவ்வளவு சொல்லியும் என் பேச்ச கேட்காம செத்தா என் புருஷன் மாதிரி நாட்டுக்காக சாகனும்னு மிலிட்ரில போய் சேர்ந்துட்டான், என் நெலம என் பொண்ணுக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறேன், இது தப்பா?’ கயல் அம்மா மதனிடம் கேட்க ‘சாகனும்னு இருந்தா மிலிட்ரில தான் போய் சாகனும்னு இல்லைங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கழுத்துல கத்தி இருந்துச்சு, உங்க ஆளு என்ன வெட்டியிருப்பான், அடுத்து அவன் கழுத்துல கத்தி இருந்துச்சு, நான் அவன வெட்டியிருப்பேன், யாரு எப்ப சாவாங்கன்னு யாருக்கும் தெரியாதுங்க, மிலிட்ரிக்கு போனா சாவு வரும், தன் சொந்த குடும்பதுதுலயே செத்திருக்காங்கன்னு தெரிஞ்சும் நாட்டுக்காக உயிர கொடுக்கனும்னு போயிருக்காரு பாருங்க, அவர்தாங்க நாம எல்லாருக்கும் குலசாமி, அவருக்கு கோயில் கட்டி கும்புடலனாலும் பரவாயில்ல, அட்லீஸ்ட் அவர் மனசுக்கு புடிச்சவங்கலயாவது கல்யாணம் பண்ணிக்க விடுங்க’ மதன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கயலின் மாமன் மகன் உள்ளே வந்தான். அவனை பார்த்ததும் கயல் போய் கட்டி பிடித்துக் கொண்டு அழுதாள். கயலின் அம்மா இருவரையும் பார்த்து சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். ‘டேய் குரு, ஏதோ ஒரு ஊர்ல ஏதோ ஒரு சாமிக்கு முன்னாடியெல்லாம் தாலி கட்ட வேண்டாம், நாளைக்கு ஊருக்கு வந்து சேருங்க, நம்ம ஐயனாருக்கு முன்னாடி அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம், அண்ணன் கிட்ட நான் பேசுறேன்’ கயலின் அம்மா அண்ணன் மகனை பார்த்து சொல்லிவிட்டு மதனை பார்க்க மதன் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தான். கயலின் அம்மா அங்கிருந்து சென்றார்.

கயல் கண்களில் கண்ணீர் நின்றபாடில்லை. மதனிடம் வந்து கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தாள். ‘ப்ளீஸ் ஸ்டாப்’ மதன் கயலை பார்த்து கூற கயல் தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டு ‘இவர் லெப்டினன்ட் குருமூர்த்தி’ அவள் மாமன் மகனை மதனுக்கு அறிமுகம் செய்தாள். ‘வருஷக்கணக்கா எங்க வீட்ல இருக்கிறவங்க சொல்லி கேட்காதவங்க, எப்படி நீங்க சொல்லி கேட்டாங்க’ குரு மதனை கேட்க ‘சத்தியமா தெரியல, ஏதோ நாலு வார்த்த உங்கள பத்தி நல்ல விதமா சொன்னேன், அதுல மாறி இருப்பாங்க போல’ மதன் கூற ‘அதெல்லாம் ஒன்னுமில்ல, என் அம்மாவ பத்தி எனக்கு தெரியாதா, இங்க வந்து பேசுரதுக்கு முன்னாடி ஒருத்தன அடிச்சி படுக்கவைச்சீங்களே அவன் யாரு தெரியுமா?’ கயல் புதிர் போட ‘உங்க அம்மாகிட்ட வேல பாக்குற அடியாள் தானே?’ மதன் கேட்க ‘எங்கம்மாகிட்ட வேல செய்ரவங்க யாரும் தேவையில்லாமல் பேச மாட்டாங்க, ஆல எடபோடாம கிட்ட கூட நெருங்க மாட்டாங்க, அவன் எங்க அம்மா எனக்கு பாத்த மாப்ள, ஊர்ல பெரிய மில் ஓனரோட பையன், ஏற்கனவே என்ன பொண்ணு கேட்டு வந்திருக்கான், அப்போ அம்மா யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்கு, நேத்து போய் இவர் என்ன தூக்கிடுவேன்னு சொன்னதும் அவசர அவசரமா அவுங்க வீட்ல எங்கம்மா பேசியிருக்கனும், அதான் எங்காம்மா கூடவே அவனும் ஒட்டிக்கிட்டு இங்க வந்துட்டான், வந்த இடத்துல வாய வெச்சுகிட்டு சும்மா இருந்திருக்கலாம்ல, இவன் நேத்து வந்ததுல இருந்து இவந்தான் இனிமே எல்லான்றாமாதிரி ஆடிட்டு இருந்தான், நான் எங்கம்மா கூட வரமாட்டேன்னு சொன்னப்ப என்னையே அடிக்க வந்தான், நீங்க வந்தீங்க, ரெண்டே அடில படுக்கவெச்சிட்டீங்க, அதுலத்தான் எங்கம்மா பயந்திருக்கும், அவசரப்பட்டு தப்பானவனுக்கு கட்டிகொடுக்க இருந்தோமேன்னு யோசிச்சிருக்கும்’ கயல் விலக்கமாக கூற ‘யாரு அந்த ஊளநாய் வந்திருந்தானா?’ குரு கயலிடம் கேட்க ‘நல்லா வாங்கிட்டு போனான், மதன் நல்லா வச்சு செஞ்சாரு’ கயல் கூற ‘தேங்க்ஸ் பிரதர் இந்த உதவிய எப்பவும் மறக்க மாட்டேன்’ குரு மதனிடம் சொல்லிக் கொண்டிருக்கையில் சுரேஷ் அவசர அவசரமாக ரூம் உள்ளே நுழைந்தான். எல்லோரும் சுரேஷையே பார்த்தனர். ‘தீப்தி என்னடி ஆச்சு, அம்மா, அடியாள் ஏதேதோ சொன்ன’ என்று சுரேஷ் கூற ‘அதெல்லாம் சால்வ் ஆயிடுச்சு, கயல் அம்மா கயலுக்கும் அவங்க அண்ணன் பையனுக்கும் கல்யாணம் பண்ண சம்மதிச்சுட்டாங்க’ தீப்தி கூற ‘அதான பாத்தேன், என் மச்சான் மதன் உலக நல்லிணக்கத்துக்காக சமாதானப்புறா பறக்க விட்டவனாச்சே, பேசியே கன்வன்ஸ் பண்ணியிருப்பான், அதனாலத்தான் அவன மொதல்ல அனுப்புனேன், நான் மட்டும் இங்க மொதல்ல வந்திருந்தேன் இங்க நாலு பொனமாவது விழுந்திருக்கும்’ சுரேஷ் சொல்ல எல்லோரும் சுரேஷையே முறைத்து பார்த்தனர். ‘இது யாரு, கயல் அம்மாவோட பாடிகார்ட்ல ஒருத்தரா?’ என்று சுரேஷ் குருவை பார்த்து கேட்க ‘இது கயலோட பாடிகார்ட், லெப்டினன்ட் குருமூர்த்தி’ மதன் கூற ‘ஓ, மில்ட்ரிகார், நீங்கதானா, கங்கிராட்ஸ்’ என்று சுரேஷ் வாழ்த்தினான். ‘அடுத்து என்ன பிளான்?’ சுரேஷ் கேட்க ‘நாளைக்கு காலையில நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு போறோம், அதுவரைக்கும் நான் எங்கயாச்சும் ஓட்டல்ல தங்கனும்’ என்று குரு சொல்ல ‘என்ன பிரதர் எங்க ரூம் இருக்கும் போது எதுக்கு ஓட்டல் எல்லாம், வாங்க போகலாம்’ என்று சுரேஷ் கூற ‘வெயிட், தெரிஞ்சோ தெரியாமலோ ஃபர்ஸ்ட் டைம் எங்க ரூமுக்கு வந்திருக்கீங்க, அதுவும் ஒரு பெரிய பிரச்சனையை சால்வ் பண்ணி இருக்கீங்க, ஒரு கப் காப்பி கூட கொடுக்கலைன்னா மரியாதை இருக்காது, ஃபைவ் மினிட்ஸ், ப்ளீஸ்’ என்று கார்த்திகா வற்புறுத்தி கேட்டுக்கொண்டாள். குரு, மதன் மற்றும் சுரேஷ் மூவரும் சோபாவில் அமர்ந்தனர். கயல், கார்த்திகா மற்றும் தீப்தி மூவரும் கிச்சனுக்கு சென்றனர்.

கார்த்திகா பாலை அடுப்பில் வைத்து சூடேற்றி கொண்டிருந்தாள். ‘ஏன்டி தீப்தி, உன் ஆளும் இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் இந்த ரூமுக்கு வரான், என் ஆளும் இன்னைக்குத்தான் ஃபர்ஸ்ட் டைம் இந்த ரூமுக்கு வரான், உனக்கும் எனக்கும் தோணுச்சா அவங்களுக்கு காப்பி கொடுக்கனும்னு, ஒருத்திக்கு மட்டும் அவளோட ஜஸ்ட் குட் ப்ரண்ட் டில் நவ் க்கு காப்பி கொடுக்கனும்னு தோனி இருக்கே, அதுக்கு பேரு என்னடி’ கயல் கார்த்திகாவை சீண்ட ‘மண்ணாங்கட்டி, மூடிட்டு அந்த சன்ரைஸ் பாட்டில் எடுக்குறியா’ கார்த்திகா வெட்கம் கலந்த கோபத்துடன் கயலிடம் கூறினாள். சில நிமிடங்கள் கழித்து எல்லோருக்கும் கப்பி பரிமாறப்பட்டது. மதன் காப்பி குடித்த வாரே தனியாக பால்கனிக்கு வந்தான். ‘நெவர் எவர் டு தட் ஸ்டுப்பிட் திங் அகெய்ன்’ கார்த்திகா காப்பி குடித்தவாறே மதன் அருகில் வந்து கூறினாள். ‘எத சொல்ரீங்க’ மதன் கேட்க ‘அவன் கழுத்துல நீங்க கத்தி வெச்சது, கழுத்த வெட்டிட்டீங்கன்னே நெனச்சேன், ஹவ் டிட் யூ டிட் தட்’ கார்த்திகா கேட்க ‘பயம்தான், கழுத்துக்கு கத்தி வரும்போது சும்மா இருக்க முடியுமா, ஒன்னு பயந்து ஓடனும் இல்ல கத்தி வெச்சவன போடனும், நல்ல வேல அந்த டைம்ல மூல கொஞ்சம் வேல செஞ்சுக்கிட்டிருந்தது’ மதன் கூற ‘ஐ வாஸ் சோ ஸ்கேர்ட், கயல் அம்மா எல்லாரையும் வண்டிக்கு போக சொன்னப்ப தான் உயிரே திரும்பி வந்துச்சு’ கார்த்திகா கூற ‘எனக்கும் அப்பத்தான் வெறி அடங்குச்சு’ மதன் கூற ‘எனிவே, தேங்க் யூ வெரி மச் காம்ரேட்’ கார்த்திகா மதனுக்கு நன்றி தெரிவித்தாள். ‘கமான்’ மதன் கார்த்திகாவிடம் பரவாயில்லை என்று சொன்னான்.

‘டேய், நீ கூட்டிட்டு வரியா, இல்ல நான் கூட்டிட்டு போகவா’ சுரேஷ் மதனை பார்த்து கேட்க ‘நீ ரூமுக்கு வரியா, வீட்டுக்கு போகல?’ மதன் சுரேஷை கேட்க ‘இன்னைக்கு நைட்டு ரூம், கெஸ்ட் வரார்ல’ சுரேஷ் சொல்ல ‘உன் பைக்ல ஏத்திக்கோ நான் பின்னாடியே வரேன்’ மதன் கூறினான். அப்போது கார்த்திகா ‘தீப்தி ரொம்ப கொடுத்து வச்சவ’ சுரேஷை பார்த்து சொல்ல ‘எதுக்குங்க’ என்று சுரேஷ் கேட்க ‘அவசரம்னா ஹெல்ப்புக்கு ஆள் அனுப்ப ஒரு கேரிங் பாய் ப்ரண்ட் நீங்க அவளுக்கு கிடைச்சு இருக்கீங்க’ கார்த்திகா கூற ‘நகைச்சுவை?’ சுரேஷ் சந்தேகத்துடன் கேட்க ‘நோ, சீரியஸ்லி, தேங்க்ஸ் பார் யுவர் டைம்லி ஹெல்ப்’ கார்த்திகா மனதார நன்றி தெரிவிக்க ‘நமக்குள்ள எதுக்கு தேங்ஸ் எல்லாம்’ என்று கார்த்திகாவிடம் சொல்லிவிட்டு ‘சீ யு நெக்ஸ்ட் டைம் கயல்’ என்று கயலிடம் சொல்லி விட்டு ‘ரூமுக்கு போயிட்டு கால் பண்றேன், தூங்காத’ என்று தீப்தியிடம் சொல்லிவிட்டு சுரேஷ் பைக்கை நோக்கி சென்றான். ‘காலைல வந்து கூட்டிட்டு போறேன், ரெடியா இரு’ குரு கயலிடம் சொல்லிவிட்டு ‘பாய்’ என்று கார்த்திகாவையும் தீப்தியையும் பார்த்து சொல்லிவிட்டு குரு சுரேஷுடன் சென்றார். ‘எங்க வீட்ல நல்லா காப்பி போட்டு கொடுக்குற பொண்ணா தேடிக்கிட்டு இருக்காங்க’ மதன் கார்த்திகாவிடம் கூற ‘அப்ப ஓரு நல்ல காப்பி மெஷின கட்டிக்கோங்க’ கார்த்திகா சிறு புன்னகையுடன் கூற ‘இந்த காப்பியும் மெஷினும்’ மதன் கூற ‘என்னது?’ கார்த்திகா மிரட்டலாக கேட்க ‘இல்ல, நீங்களும் நல்லாத்தான் காப்பி போடுரீங்க அப்படின்னு சொன்னேன்’ மதன் கார்த்திகாவை பார்த்து கூற, ‘இந்த காப்பி மெஷின் உங்களுக்கு புடிச்சா மட்டும் போதுமா, உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கும் பிடிக்கனுமே, உங்க வீட்டுக்கு இந்த மெஷின தூக்கிட்டு போங்க, இது போடுற காப்பி உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு புடிக்குதான்னு பார்ப்போம்’ கார்த்திகாவும் மதனை பார்த்தவாரே புன்னகையுடன் கூறினாள். ‘நான் கிளம்புறேன், பாய் சிஸ்டர்ஸ்’ என்று தீப்தியையும் கயலையும் பார்த்து கூறிவிட்டு விடைபெற்றான். மதனும் கார்த்திகாவும் பேசியதை பார்த்துக்கொண்டிருந்த கயல் கார்த்திகாவை பார்த்து முறைத்துக் கொண்டே ‘இதுக்கு பேரு என்னடி?’ என்று கேட்க, கார்த்திகா சற்று தாமதித்து ‘பிரண்ட்ஷிப்’ என்று வெட்கத்துடன் கூற ‘மவள’ என்று சொல்லிக்கொண்டே கயல் கார்த்திகாவை பிடித்து சோபாவில் தள்ளி விட்டு செல்லமாக அடிக்க ஆரம்பித்தாள். தீப்தி இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்..

நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]

%d bloggers like this: