துருவங்கள் – அத்தியாயம் 13 – அந்த ஒரு நம்பர்

அந்த ஒரு நம்பர்

காலை நான்கு மணி, ‘எந்திரா டைமாச்சு’ மதன் வழக்கம்போல் சுரேஷை எழுப்பினான். இருவரும் குளித்து முடித்துவிட்டு ஹாலுக்கு வந்து அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தனர். தீப்தியும் தன் பைகளை எடுத்துக்கொண்டு மாடியில் இருந்து இறங்கி வந்து சுரேஷுக்கு பக்கத்தில் அமர்ந்தாள். கார்த்திகாவின் தந்தையும் வெளியில் போய் செவ்வாழை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, என்று பல கனிகளை மூன்று பைகளில் போட்டு கொண்டுவந்து மதனிடமும் சுரேஷ் மற்றும் தீப்தி இடமும் கொடுத்தார். ‘எதுக்கு சார் இதெல்லாம்’, மதன் கேட்க ‘இருக்கட்டும்பா, வீட்ல கொடு’ என்று கொடுத்தார். கார்த்திகாவின் அம்மா மூவருக்கும் காபி கொண்டுவந்து கொடுத்தார். ‘கார்த்திகா தூங்குறாங்களா?’ மதன் தீப்தியிடம் காதோரமாக கேட்டான். ‘நீங்க பத்திரமா ஊருக்கு போகனுமாம், அதுக்காக காலையிலேயே குளிச்சிட்டு கிராமத்துல இருக்குற கோயிலுக்கு போயிருக்காங்க’ தீப்தி பதிலளிக்க ‘கிண்டல் பண்ணாத தீப்தி’ மதன் நம்ப மறுக்க கார்த்திகா அந்த இருட்டிலும் வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். ‘நீங்களே பாருங்க’ தீப்தி கார்த்திகா வருவதை மதனுக்கு கூறினாள். ‘இவள எப்படி ஐடி கம்பெனியில சேர்த்துக்கிட்டாங்க?’ மதன் சுரேஷிடம் கூற ‘உன்னையே சேர்த்துக்கிட்டாங்க’ சுரேஷ் கூறி விட்டு சிரிக்க மதன் சுரேஷை கோபமாக பார்த்தான்.

கார்த்திகா உள்ளே வந்ததும் அங்கிருந்தவர்களுக்கு திருநீறு கொடுத்தாள். ‘எதுக்காக கார்த்திகா இந்த டைம்ல எல்லாம் காட்டுக்குள்ள போறீங்க’ சுரேஷ் கார்த்திகாவை பார்த்து கேட்க ‘யாராவது ஊருக்கு போனா அவங்க பத்திரமா போக கோயிலுக்கு போய் கும்பிட்டு வரது வழக்கம்தான் தம்பி, நீங்க காலையிலேயே போறதால அவலும் காலையிலேயே சுதாவ கூட்டிக்கிட்டு அங்க போயிட்டா’ கார்த்திகாவின் அப்பா பதிலளித்தார். மூவரும் புறப்பட தயாராயினர். ‘அப்ப நாங்க வரோம் சார். உங்க வீட்ட எங்களால மறக்கவே முடியாது’ சுரேஷ் கார்த்திகா அப்பாவின் கைகளை குலுக்கி விட்டு தன் பைகளை எடுத்துக்கொண்டு காருக்கு சென்றான். ‘போயிட்டு வரேன் ஆண்டி, அக்கா சீக்கிரம் சென்னைக்கு வாங்க’ தீப்தியும் கார்த்திகாவின் அம்மாவிடமும் கார்த்திகாவிடமும் கூறிவிட்டு காரிடம் சென்றாள்.

மதன் கார்த்திகாவின் அப்பாவிடம் வந்து நின்றான். ‘சார், இப்ப நான் செல்றத எப்படி எடுத்துப்பீங்கன்னு எனக்கு தெரியல, நான் இங்க வந்ததுல இருந்து ஏதோ தப்பு பண்ணிட்டு இருக்குற மாதிரி இறுக்கு, அதே மைண்டோட இங்கிருந்து போக எனக்கு மனசு இல்ல, நீங்க என்ன கார்த்திகாவோட பிரண்டுன்னு நெனச்சி தான் உங்க வீட்டுக்கு கூப்பிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஆனா நான் கார்த்திகாவை பிரண்டா மட்டும் பார்க்கல, அவங்கல கல்யாணம் பண்ணிக்க ஆசப்படறேன். இது கார்த்திகாவுக்கும் தெரியும்னு நம்புறேன். உங்க பொண்ண ராணி மாதிரி வச்சி காப்பாத்த வசதி இருக்கான்னு எனக்கு தெரியாது, ஆனா நீங்க உங்க பெண்ண எப்படி பாத்துக்கிட்டீங்களோ அதே மாதிரி நானும் பாத்துப்பேன். உங்களுக்கும் ஆண்டிக்கும் சம்மதம்னா எனக்கு ஒரு போன் பண்ணுங்க, எங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு வரேன்’ மதன் தன் மனதில் இருப்பதை கார்திகாவின் அப்பாவிடம் கூறிவிட அங்கிருந்த எல்லோரும் உறைந்து நின்றனர். யாரும் பேசாததால் மதன் காருக்கு போக தயாரானான். ‘நில்லுங்க தம்பி’ கார்த்திகாவின் தந்தை பேசினார், ‘மனசுல பட்டத வெளிப்படையா சொன்னதுக்கு பாராட்டுறேன். அதுக்காக என் பொண்ண உடனே உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கனும்னு கட்டாயம் இல்லையே?’ கார்த்திகாவின் அப்பா மதனை பார்த்து கேட்க ‘எனக்கும் உங்க சம்மதம் கிடைச்சா தான் கார்த்திகாவ கட்டிக்க முடியும்னு கட்டாயம் இருந்திருக்காது சார், உங்க பொண்ணு கொஞ்சம் தைரியமா அவங்க மனசுல பட்டத சொல்லியிருந்தா’ மதன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கார்த்திகா குறுக்கிட்டு ‘மதன் மேற்கொண்டு எதுவும் பேசாதீங்க, எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்’ என்று கூற மதன் கார்த்திகாவை பார்த்து ‘இப்பவாச்சும் உங்க மனசுல என்ன இருக்குன்னு சொல்லுங்க. நீங்க மொதல்லயே தெளிவா ஏதாவது சொல்லி இருந்தா இந்தாள்கிட்டல்லாம் வந்து தொங்கிக்கிட்டு இருக்கணும்னு அவசியம் இருந்திருக்காதில்ல’ மதனின் கோபம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ‘டேய், என்னடா?’ சுரேஷ் கார்த்திகாவின் அப்பாவை மதன் மரியாதை குறைவாக பேசுவதை தட்டிக்கேட்டான். ‘இந்த ஆளுக்கெல்லாம் என்னடா மறியாத, அந்த காலண்டர் பாத்தியா, அந்த கட்சிக்காரங்க காலண்டர்’ மதன் கூறியதும் சுரேஷ் கார்த்திகாவின் வீட்டு காலண்டர் பார்த்தான். அதில் முக்கனியில் ஒரு கனி கொண்ட ஒரு கட்சிக்கொடி போட்டோ போடப்பட்டிருந்தது. ‘இவங்கல்லாம் இப்படித்தான்டா, வெளியே தான் கம்யூனிஸ்ட், ஸ்டாலின் போட்டோவ நடு வீட்ல வெச்சிக்கிட்டு சீன் போடுறது, உள்ளுக்குள்ள அதே பழைய ஆண்ட பரம்பரை புத்தி தான்டா’ சுரேஷிடம் சொல்லிவிட்டு ‘யோவ், தயவு செஞ்சு அந்த ஸ்டாலின் போட்டோவ நடு வீட்ல மாட்டாதயா, உன் வீட்ல அந்த ஆள் போட்டோ இருக்குறது கேவலமா இருக்கு’ மதன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பலார் என்று அவன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. ‘இதுக்கு மேல ஒரு வார்த்த பேசுநீங்க, பிரண்டுன்னு கூட பாக்க மாட்டேன் செருப்பு எடுத்து அடிச்சிடுவேன், உங்களுக்கு என்ன தெரியும் என் அப்பாவை பத்தி?’ கார்த்திகா மிகவும் கோபமாக மதனை அறைந்துவிட்டு கேட்டாள். அவள் கண்களில் நீர் பெருக்கெடுத்திருந்தது. சில வினாடிகள் யாரும் அங்கு பேசவில்லை. கார்த்திகாவின் கண்களில் இருந்து கண்ணீர் பொங்கியது.

மதன் ஒருவழியாக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு ‘அட்டாக் பண்ணிட்ட இல்ல. நல்லாயிரு’ என்று கார்த்திகாவிடம் சொல்லிவிட்டு ‘என்ன மன்னிச்சிடுங்க’ என்று கார்த்திகாவின் அம்மாவிடம் சொல்லிவிட்டு காரை நோக்கி நடந்தான். சுரேஷ் மதனுக்கு எதிரே வீட்டினுள் செல்ல ஆயத்தமானான். ‘ஏன்டா அங்க போற?’ மதன் கேட்க ‘உன் பேக் எடுகத்தான்டா, மொதல்லயே கார்ல வச்சிட்டு வந்து சண்டை போட வேண்டியதுதானே’ சுரேஷ் கூறினான். மதனால் எதையும் பேச முடியவில்லை, நேரே காரின் அருகாமையில் போய் நின்றான். சுரேஷ் வீட்டினுள் போய் மதனின் பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்து கார்த்திகாவின் அப்பாவிடம் நின்றான். ‘தயவு செஞ்சி அவன் பேசுனத தப்பா எடுத்துக்காதீங்க சார்’ சுரேஷ் கார்த்திகாவின் அப்பாவிடம் கூற ‘எனக்கு எந்த வருத்தமும் இல்லப்பா, நீங்க பத்திரமா போயிட்டு வாங்க’ என்று கார்த்திகாவின் அப்பா கூறினார். சுரேஷ் இப்போது கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருக்கும் கார்த்திகாவிடம் வந்தான். ‘ஹி இஸ் ஏ ஸ்டுப்பிட் ஆசோல், டோன் டேக் திஸ் சீரியஸ்லி’ சுரேஷ் கூற கார்த்திகா அமைதியாக இருந்தாள். சுரேஷ் இப்போது கார்த்திகாவின் அம்மாவிடம் வந்து நின்றான். ‘நீ என்ன சொல்லப் போறேன்னு எனக்கு தெரியும் பா. எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல, நீங்க பத்திரமா போயிட்டு வாங்க’ கார்த்திகா அம்மா சுரேஷிடம் கூறினார். மூவரிடமும் விடைபெற்று சுரேஷ் காருக்கு வந்தான். சுரேஷ் போனவுடன் கார்த்திகாவின் அப்பா கார்த்திகாவின் அம்மாவிடம் ‘உன்கிட்ட எத்தன முற தம்பி கொடுத்த அந்த காலண்டர மாட்டாதன்னு சொன்னேன், இப்ப பாத்தியா? மொதல்ல அந்த காலண்டர் கழட்டிட்டு வேர மாட்டு’ என்று கூறிவிட்டு ‘நீ ஏண்டா கார்த்தி வருத்தப்படற, அப்பா இருக்கேன்’ என்று கார்த்திகாவிடம் கூறி அவளை சமாதானப்படுத்தினார்.

‘நான் ஓட்டுறேன்’ மதன் சுரேஷிடம் சாவியை கேட்டான். சுரேஷும் சாவியை கொடுக்க மதன் காரை திருப்பினான். சுரேஷும் தீப்தியும் கார்த்திகாவை பார்த்து கையசைத்து விட்டு காரின் பின் இருக்கைகளில் அமர்ந்தனர். கார் கார்த்திகாவின் வீட்டிற்கு முன் இருந்த தோட்டத்தை கடந்து ரோட்டிற்கு வந்தது. காரில் தீப்தியும் சுரேஷும் கார்த்திகாவின் வீட்டை கடந்து சென்றுகொண்டே சுதாவின் கிராமத்தை பார்த்தவாறு இருந்தனர். ‘உனக்கு சுதாவோட ஊர பாக்க கொடுத்து வைக்கல’ சுரேஷ் கூற ‘டேய் செம கடுப்புல இருக்கேன், பேசாம வா’ மதன் கடுப்பாக கூறினான். ‘செய்றதெல்லாம் செஞ்சுட்டு ஏண்டா கத்துற’ சுரேஷ் கேட்க ‘அவர் சொன்னது மட்டும் சரியா? கட்டிக்கொடுக்க மாட்டேன்னிட்டார்ல? ஜாதி பாத்து தானே அப்படி சொன்னார்?’ மதன் கேட்க ‘அவர் உடனே கட்டிக்கொடுக்னும்னு அவசியம் இல்லைன்னு தானே சொன்னார், கல்யாணமே செஞ்சு வைக்க மாட்டேன்னு சொல்லலையே. நீ பண்ண ஹீரோயிசத்தை பாத்தவுடனே இவ்வளவு நாளா பாசமா வளத்த பொண்ண கூட்டிக்கிட்டு போப்பான்னு சொல்லுவாங்களா? இது என்ன சினிமாவா? பிராக்டிகலா யோசி டா?’ சுரேஷ் கூற ‘நான் ஒன்னும் அப்பவே கூட்டிகிட்டு போறேன்னு சொல்லலையே, முறைப்படி அப்பா அம்மாவை கூட்டிக்கிட்டு வரேன்னு தானே சொன்னேன்’ மதன் பதில் அளிக்க ‘என்ன இருந்தாலும் அவர மரியாதை இல்லாம பேசியிருக்க கூடாதுடா’ சுரேஷ் கூற ‘ஜாதி பார்குறவங்களுக்கெல்லாம் என்னால மரியாத கொடுக்க முடியாது’ மதன் கூற ‘ஒரு காலண்டர் வெச்சு முடிவு பண்ணாதடா, பொண்ண பெத்தவங்க கவல அவர்களுக்குத்தான் தெரியும், எனக்கென்னமோ கார்த்திகாவின் அப்பா நீ நெனைக்குற மாதிரி ஜாதி பார்குரவரா தெரியல’ சுரேஷ் கூற மதன் மவுனமாக காரை ஓட்டினான். மதன் காரை ஓட்டும்போது ரியர் வியூ மிரரையும் பக்கத்து சீட்டையும் பார்க்க நேரிட்டது. அப்பொழுதெல்லாம் கார்த்திகா அவனுடன் இருப்பதைப்போல் மதன் உணர்ந்தான். ‘எப்படித்தான் மறக்க போரேனோ’ மதன் சுரேஷை பார்த்து கூற ‘நீதான ஆரம்பிச்ச, படு’ சுரேஷ் பதில் அளித்தான். மதன் சிறிது நேரம் மௌனமாக காரை ஓட்டினான். ‘டேய், இந்த கேள்விய கேட்கிறேன்னு என்ன தப்பா நெனச்சாலும் பரவாயில்லை, என்னைக்காச்சும் தீப்திய விட்டு பிரிஞ்சிடுவேன்னு நெனச்சி பார்த்திருக்கியா?’ மதன் சுரேஷை பார்த்து கேட்க சுரேஷ் மௌனமாக இருந்தான். தீப்தி சுரேஷ் என்ன சொல்ல போகிறான் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தாள். சில வினாடிகள் கழித்து ‘நிறைய முறை யோசிச்சிருக்கேன். எப்ப அதப்பத்தி யோசிச்சாலும் எனக்குள்ள அவ எப்படி என்ன விட்டுட்டு இருக்கப்போரான்னுதான் தோனுமே தவிர நான் எப்படி அவல விட்டு இருக்க போறேன்னு தோனுனதில்ல, என் அம்மாவைவிட என் மேல சின்ன வயசுல இருந்து பாசமா இருக்காடா. என்னால இந்த ஜென்மத்துல அவல விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது, அவளா பிரிஞ்சு போனாத்தான் உண்டு’ சுரேஷ் உருக்கத்துடன் கூறினான். தீப்தி சுரேஷ் அப்படி கூறியதும் அவள் கண்களில் கண்ணீர் ஊறியது. புன்னகையுடன் சுரேஷின் கை விரல்களை பிடித்து கொண்டாள். ரியர் வியூ மிரரில் மதன் தீப்தியையும் சுரேஷையும் பார்க்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். ‘தயவு செஞ்சு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க, தேவையில்லாம தள்ளிப்போடாதீங்க. எனக்குத்தான் குடுப்பன இல்ல’ மதன் விரக்தியில் பேசினான்.’ஏன்டா இப்பவே பொலம்ப ஆரம்பிச்சிட்ட, பாசிட்டிவா இருடா, இவன வெச்சிக்கிட்டு ரூம்ல என்ன பாடு பட போரேனோ’ சுரேஷ் கூற ‘அண்ணா, நடந்தது நல்லதுக்கேன்னு நினைச்சுக்கோங்க. அக்காகிட்ட நிதானமா ஒருமுறை பேசிப் பாருங்க, உங்ககிட்ட அக்கா போன் நம்பர் இருக்குல்ல?’ தீப்தி கேட்க மதன் மௌனமாக இருந்தான். ‘ஏன்டா அமைதியா இருக்க, பேசுவியா மாட்டியா? தப்பு உன் மேல தான் டா, நீதான் பேசனும்’ சுரேஷ் கூற மதன் அப்பொழுதும் அமைதியாய் இருந்தான். ‘டேய் ஏதாவது சொல்றா’ சுரேஷ் மீண்டும் கேட்க ‘டேய் என்கிட்ட அவங்க நம்பர் இல்லடா’ மதன் பதிலளிக்க ‘வெளங்கின மாதிரித்தான்’ சுரேஷ் கூறினான். ‘சரி என்கிட்ட இருக்குன்னா, நான் உங்களுக்கு அனுப்புறேன் பேசுங்க’ என்று தீப்தி கூற ‘வேண்டாம்மா, நீதான் நம்பர் அனுப்புனன்னு தெரிஞ்சா அவங்க உன்ன தப்பா நினைப்பாங்க. என்னால உங்களுக்குள்ள வீணா பிரச்சனை வேணாம். அதுவும் இல்லாம, நான் அவங்கல விட்டு விலகி இருக்குறதுதான் சரின்னு தோணுது. போன் நம்பர் இருந்தா பேச தோணும்’ மதன் கூறினான். மேற்கொண்டு சுரேஷும் தீப்தியும் மதனை வற்புறுத்தவில்லை. மதனும் அமைதியாக காரை ஓட்டினான். ஒருவழியாக கார் மதன் மற்றும் சுரேஷ் தங்கியிருக்கும் ரூமிற்கு வந்தடைந்தது. ‘சரிடா, தீப்திய அவ ரூம்ல விட்டுட்டு நான் வீட்டுக்கு போய் வண்டிய விட்டுட்டு பைக் எடுத்துட்டு வரேன், நீ கண்டத யோசிக்காம கொஞ்சம் ரெஸ்ட் எடு, மதியம் ஆப்பீஸ்ல மீட் பண்ணுவோம்’ சுரேஷ் மதனை ரூமில் இறக்கி விட்டு சென்றான். மதன் தன் ரூமை திறந்தபடி கடந்த இரண்டு நாட்களில் நடந்ததை யோசித்துப் பார்த்தான். அவன் கார்த்திகாவுடன் இருந்த தருணங்கள் அவன் கண் முன்னே நடப்பது போன்று இருந்தது.

பல நாட்கள் ஓடியது. கார்த்திகா மீண்டும் சென்னை வரவில்லை என்பதையும் அவள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கிறாள் என்பதையும் தீப்தியின் மூலம் சுரேஷின் வழியாக மதனின் காதுகளுக்கு எட்டியது. அன்று காலையிலேயே மதன் ஆபீஸ் ஜிம்மிற்கு போய் விட்டு தன் வெர்க்ஸ்டேஷனில் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு ஒரு கால் வந்தது ‘அலோ மதன் இருக்காரா?’ மறுமுனையில் தெரிந்த குரல், மதன் இது கயல் என்று உடனே கனித்தான். ‘கயல்தான?’ மதன் கேட்க ‘ஆமாம்’ என்று பதிலளித்தாள். ‘எப்படி இருக்கீங்க, மில்ட்ரி எப்படி இருக்காரு? எங்க இருக்கீங்க?’ மதன் கேட்க ‘நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம், ஜம்முலத்தான் இருக்கேன். அவர் நல்லா இருக்காரு’ கயல் பதில் கூறினாள். ‘என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது’ மதன் கேட்க ‘தீப்தி கொடுத்தா’ கயல் கூறினாள். ‘கன்சீவ் ஆகி இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன் கங்கிராட்ஸ்’ மதன் கூற ‘தேங்ஸ்’ என்று கயல் கூறினாள். இருவரும் சில வினாடிகள் மவுனமாக இருந்தனர். ‘நடந்தது உங்க காதுக்கு வந்திருக்கும்னு நினைக்கிறேன்’ மதன் தயக்கத்துடன் ஆரம்பித்தான். ‘ம்ம். வந்தது’ கயல் மீண்டும் மௌனமானாள். ‘எல்லாரும் என்னை திட்டி தீர்த்துடாங்க, நீங்களும் உங்க பங்குக்கு திட்டுங்க’ மதன் கூற. ‘திட்ரதால எதுவும் நடக்கப் போரதில்ல, நான் உங்களுக்கு போன் பண்ணாதே உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லத்தான்’ கயல் கூற ‘எதுக்கு?’ மதன் கேட்க ‘இதுக்கு கார்த்திகாவை பத்தி கொஞ்சம் சொல்ல வேண்டி இருக்கு, உங்களுக்கு ஓகேன்னா மோற்கொண்டு இதப்பத்தி பேசலாம், இல்ல இந்த தேங்ஸ் சோட நிறுத்திக்குவோம்’ கயல் கூற ‘தோங் சோட நிறுத்திக்குவோம்’ மதன் திட்டவட்டமாக கூறினான். ‘தப்பா நினைச்சுக்காதீங்க, உங்களை யாரெல்லாம் திட்னாங்க?’ கயல் கேட்க ‘வேற யாரு, தீப்தியும் சுரேஷும்தான்’ மதன் கூறினான். ‘எதுக்கு திட்னாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?’ கயல் கேட்க ‘நான் கார்த்திகா அப்பாவ மரியாத இல்லாமல் பேசிட்டேன்னு திட்டினாங்க’ மதன் கூற ‘அவ அப்பாவ பத்தி உங்களுக்கு முழுசா தெரியுமா? அவங்க ஏன் அந்த காட்டுக்குள்ள இருக்கிற வீட்ல இருக்காங்கன்னு கார்த்திகா உங்ககிட்ட சொன்னாளா?’ கயல் கேட்க ‘என்ன சொல்றீங்க?’ மதன் கேட்க ‘கார்த்திகாவோட தாத்தா ஆசனூர்லயே பெரிய புள்ளி, கார்த்திகா அப்பாவோட சேர்த்து அஞ்சு பேர், பசங்க நாலு, ஒரு பொண்ணு. கார்த்திகாவோட அப்பாவுக்கு மூத்தவங்க ரெண்டு பேர், கார்த்திகா அப்பாவுக்கு சின்னவர் ஒருத்தர். அவ அப்பாவோட வீட்ல அவ அப்பாத்தான் காலேஜ் வரைக்கும் போயி படிச்சவரு. அவ அப்பாவோட தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயம் ஆன மறுநாளே கார்த்திகாவோட தாத்தா டிக்கெட் வாங்கிட்டாரு. ஒரு வழியா கார்த்திகா அப்பாவோட தங்கச்சி கல்யாணம் முடிஞ்ச கையோட கார்த்திகா அப்பாவுக்கும் வாத்தியார் வேலை கிடைச்சு சொந்த ஊர்லயே போஸ்டிங் வந்தது. ஸ்கூல் வாத்தியாரா இருந்தாலும் பயங்கரமான கம்யூனிஸ்ட். எந்த ஒரு பிரச்சனைக்கும் இவர்தான் போய் மொதல்ல நிப்பாரு. கார்த்திகா அப்பா தன்னார்வலராக வாரா வாரம் பக்கத்து பழங்குடி கிராமங்களுக்கு போய் முதியோர் கல்வி திட்டதுல பாடம் நடத்துவார், அப்போ அவருக்கு துணையாக ஒவ்வொரு கிராமத்துலயும் ஒருத்தர் இருந்தாங்க. நீங்க பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன், கார்த்திகாவோட வீட்டுக்கு கொஞ்சம் கீழ போனா ஒரு கிராமம் வரும், அந்த கிராமத்துல கார்த்திகா அப்பாவுக்கு முதியோர் கல்வி திட்டத்துல தூனையா இருந்தவங்க தான் கார்த்திகாவோட அம்மா. அப்ப கார்த்திகாவோட அம்மா படிச்சிக்கிட்டு இருந்தாங்க. அந்த கிராமம்தான் கார்த்திகா அம்மாவோட சொந்த ஊர். கார்த்திகாவோட அம்மா ஒரு பழங்குடி இனத்தவங்க’ கயல் சொன்னவுடன் மதனுக்கு வாரிப்போட்டது. ‘கார்த்திகாவோட பேரண்ஸ் லவ் மேரேஜா?’ மதனால் நம்ப முடியவில்லை. ‘சாதாரண லவ் இல்லைங்க, அவங்க ரெண்டு பேரோட உயிரையே காவு வாங்க இருந்த லவ்’ கயல் கூறியது மதனை மிரலவைத்தது. ‘கார்த்திகா தாத்தாவோட பல தோட்டங்கள்ள ஒரு சின்ன தோட்டம் தான் இப்ப கார்த்திகா பேரண்ஸ் இருக்குற அந்த வீடும் தோட்டமும். கார்த்திகா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நட்பு ஏற்பட்டதால கார்த்திகா அப்பா அடிக்கடி அந்த தோட்டத்துக்கும் கார்த்திகா அம்மாவோட கிராமத்துக்கும் வருவார். கார்த்திகாவோட அம்மா டீச்சர் ஆகுறதுக்கு அவ அப்பா உறுதுணையாக இருந்தார். அவ அம்மாவும் அதே ஊர்ல டீச்சர் ஆனாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருந்த நட்பு காதலா மருச்சு. கார்த்திகா அப்பா இந்த விஷயத்தை அவர் வீட்ல சொல்ல, பூகம்பமே வெடிச்சது. அண்ணன் தம்பிகளுக்குள் பெரிய சண்டை, கார்த்திகா அம்மாவ கட்டுனா சொத்துல ஒரு பைசா கூட கொடுக்க மாட்டோம்னு கார்த்திகா அப்பாவோட அண்ணனுங்க சொல்லிட்டாங்க. ஆனாலும் கார்த்திகா அப்பா கார்த்திகா அம்மாவ கார்த்திகா அம்மாவோட ஊர்ல இருக்குற அந்த கோயில்ல வெச்சி யாருக்கும் தெரியாம தாலியை கட்டிட்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கார்த்திகா அப்பாவோட அண்ணனுங்க இவங்க ரெண்டு பேரையும் ஊருக்கு போறதுக்கு முன்னாடியே வெட்டிப் போட ஆள் ஏற்பாடு செஞ்சு அவங்கல நடுக்காட்டுல வெட்டவும் வந்துட்டாங்க, நல்ல வேலையா கார்த்திகா அப்பாவோட கம்யூனிஸ்ட் தோழர்களும் அம்மாவோட ஊர்ல இருந்தவர்களும் குருக்க புகுந்து வெட்ட வந்தவர்களை விரட்டிட்டாங்க. அப்ப சின்னப்பையனாக இருந்த கார்த்திகா அப்பாவோட தம்பி தான் அந்த அண்ணனுங்க கைல கால்ல விழுந்து கார்த்திகா அப்பாவையும் அம்மாவையும் விட்றுங்கன்னு கெஞ்சி சமாதானப்படுத்தினார். கார்த்திகா அப்பாவோட அண்ணனுங்க கார்த்திகா அப்பா சொத்துல பங்கு கேட்காம போயிட்டா கார்த்திகா அம்மாவ உயிரோடு விட்டுட்றோம்னு வாக்கு கொடுத்தாங்க. அதோட கார்த்திகா அப்பாவோட தம்பிக்கும் சொத்துல பங்கு கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. கார்த்திகா அப்பாவோட தங்கச்சி தான் கெஞ்சி கேட்டு கார்த்திகா அப்பாவுக்கு இப்ப கார்த்திகா வீடு இருக்குற தோட்டத்தையும் கார்த்திகா அப்பாவோட தம்பிக்கு கோபியில இருந்த ஒரு ரைஸ்மில்லையும் கொடுக்க சம்மதிக்க வச்சாங்க. கார்த்திகா அப்பா அவர் பொண்டாட்டி மேல கார்த்திகா அப்பாவோட அண்ணனுக்க இன்னொரு முறை கைய வெச்சிருந்தா அவங்களை வெட்டிட்டு ஜெயிலுக்கு போகவும் தயாரா இருந்தாரு. தனக்காக போராடுன தன் தம்பிய பாத்து தான் அவர் அவரோட அண்ணனுங்க கிட்ட சமாதானமாக போக ஒத்துக்கிட்டார்’ கயல் கூறினாள். கார்த்திகா அப்பாவின் கதையை கேட்ட மதனுக்கு தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு மேலோங்கியது. அவன் கண்கள் கார்த்திகாவின் தந்தையை என்னியவுடன் கலங்கியது. அன்று அவன் கார்த்திகாவின் அப்பாவிடம் ஏன் காட்டுக்குள் வீடு கட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று கேட்ட போது கார்த்திகாவின் அப்பா ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் நிறுத்தியதை நினைவு கூர்ந்தான்.

‘கார்த்திகா சித்தப்பா தான் இன்னைக்கு கோபியில நீங்க சொன்ன அந்த ஜாதி கட்சியில செயலாளரா இருக்காரு. அவரும் கார்த்திகா அப்பாவ போல தான், எந்த ஒரு பிரச்சனைன்னாலும் முன்னாடி போய் நிப்பாரு. எந்த கட்சிக்காரனும் கார்த்திகா சித்தப்பான்னா ஒரு தனி மரியாதை கொடுப்பாங்க. எங்க அம்மாவே அவங்களுக்கு அந்த கட்சியால ஏதாவது உதவி ஆகனும்னா கார்த்திகாவோட சித்தப்பாவதான் தேடுவாங்க. கார்த்திகா சித்தப்பாவாலத்தான் அந்த கட்சி காலண்டர் கார்த்திகா வீட்டுக்கு போயிருக்கனும். இப்ப சொல்லுங்க கார்த்திகா வீட்ல யார் சாதி வெறி புடிச்சவங்கன்னு?’ கயல் கேட்க மதன் மவுனமாய் இருந்தான். ‘நீங்க தப்பு பண்ணிட்டீங்கன்னு நான் செல்ல வரல, இன்பேக்ட் என்ன கேட்டா நான் கார்த்திகா தான் தப்பு பண்ணிட்டான்னு சொல்லுவேன். அவளுக்கு உங்கல புடிக்கும்றத தெளிவா முன்னாடியே உங்களுக்கு புரிய வச்சிருந்தான்னா நீங்க அவசரப்பட்டு அவ அப்பாகிட்ட போய் பொண்ணு கேட்டு இருக்க மாட்டீங்க. நீங்க பொண்ணு கேட்டு அங்க நடந்த விஷயத்தை கார்த்திகா சொல்லும்போது கூட நான் அவள தான் திட்டினேன். நான் உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்றேன்னு சொன்னேன். ஆனா அப்பகூட அவ அப்பாவோட கதைய உங்ககிட்ட சொல்லாதன்னு கேட்டுக்கிட்டா, தெரிஞ்சா நீங்க வருத்தப்படுவீங்கன்னு கவலப்பட்டா’ கயல் கூறிவிட்டு சில நொடிகள் பேசுவதை நிறுத்தினாள். மதனுக்கு அழும் நிலை ஏற்பட்டது. ‘இப்பக்கூட கார்த்திகா அப்பாவை பத்தி உங்ககிட்ட நான் சொல்லியிருக்க மாட்டேன், ஆனா நீங்க இன்னமும் கார்த்திகா அப்பாவ தப்பா நினைக்குறீங்கன்னு தெரிஞ்சதும் என்னால சொல்லாம இருக்க முடியல. உங்களுக்கு உண்மை தெரிஞ்சே ஆகணும் அதான் சொன்னேன்’ கயல் தன்னை திடப்படுத்திக்கொண்டு கூறினாள். மதன் தன் அழுகையை மிகவும் போராடி கட்டுப்படுத்தினான்.

‘நீங்க சண்ட போட்டுட்டு போனதுல இருந்து டெய்லி போன் பண்ணி உங்க நியாபகம் வந்துக்கிட்டே இருக்குன்னு சொல்லுவா. நானும் அது கொஞ்ச கொஞ்சமாகத்தான் சரியாகும், டைம் கொடுடின்னு சொல்லி அவல தேத்திக்கிட்டு வந்தேன். கொஞ்ச நாளா போன் பண்றத நிறுத்தி இருந்தா. ஒரு வாரத்துக்கு முன்னாடி மறுபடியும் போன் பண்ணா, இந்தமுற வழக்கமா நடந்தத பத்தி புலம்ப போராண்ணு பார்த்தா, வேற ஒரு விஷயத்த பத்தி சொல்லி சந்தோஷப்பட்டா, அந்த சந்தோஷத்துக்கு காரணம் நீங்கதான். அதனாலத்தான் டைம் கிடைக்கும்போது உங்களுக்கு போன் பண்ணி தேங்க்ஸ் சொல்லனும்னு இருந்தேன். உங்களுக்கு போன் பண்ணேன்’ கயல் மீண்டும் புதிர் போட்டாள். ‘அப்படி என்ன நடந்துச்சு’ மதன் கேட்க ‘உங்களுக்கே தெரியுமே, அவளோட ப்ராஜக்ட்ல முதல்ல அவளுக்கு லினக்ஸ் தெரியலைன்னு அவல மட்டம் தட்னாங்கன்னு, ஆனா ரீசண்டா ஒரு இன்சிடன்ட் நடந்துச்சு. புரொடக்ஷனுக்கு ஒரு கிரிட்டிக்கல் அப்ளிகேஷனோட அப்டேட் ஒன்னு போச்சு. அத கார்த்திகா தான் புஷ் பண்ணா. ப்ரொடக்ஷனுக்கு புஷ் பண்றதுல எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா அந்த அப்டேட்ல ஒரு மெமரி லீக் இருந்திருக்கு, அந்த க்ரிட்டிக்கல் அப்ளிகேஷன் இஷ்டத்துக்கும் மொம்மரிய யூஸ் பண்ணி ரொப்பிடுச்சு, யாராலயும் அந்த சர்வர கனெக்ட் பண்ணி ரிக்கவர் பண்ண முடியல. நல்ல வேலையா கார்த்திகா ஏற்கனவே ஒப்பன் பண்ணி வெச்சிருந்த செக்யூர் ஷெல் மட்டும் ஆக்டிவா இருந்துச்சு. என்ன பண்ணலாம்னு ஒரு ஹை லெவல் மீட்டிங் போட்டு இருக்காங்க. அதுல கார்த்திகாவும் இருந்திருக்கா. டெவலப்பருங்க பக் பிக்ஸ் பண்ணி புது பில்ட்ட வேனும்னா ப்ரொடக்ஷனுக்கு அனுப்புறோம் ஆனா கரண்ட் மெமரில இருக்குற டேட்டாவ சர்வர ரிக்கவர் பண்ணாம எங்களால ஒன்னும் பண்ண முடியாதுன்னு கைய விரிச்சிட்டாங்க. இதுக்கு பிஸ்னஸ் சைடுல இருந்து பயங்கர அப்போஸ், மெமரியில் இருக்கும் டேட்டாவை ரிக்கவர் பண்ணலைன்னா நிறைய லாஸ் வரும் மேல பதில் சொல்ல முடியாதுன்னு அவங்க கத்துறாங்க. கார்த்திகாவின் ப்ராஜக்ட் மேனேஜரும் எங்க வேலைய நாங்க முடிச்சிட்டோம் எங்க கிட்ட எதுவும் இல்லைன்னு கைய விரிச்சிட்டான். ஆனாலும் அந்த டெவலப்பருங்க கார்த்திகா டீம்தான் இத ஹென்டல் பண்ணனும்னு கோத்து விட்டானுங்க. அப்ப கார்த்திகாவுக்கு நீங்க கத்துக்கொடுத்த SIGSTOP/SIGCONT பத்தி நியாபகம் வந்திருக்கு. அத வ்ச்சி அந்த அப்ளிக்கேஷன ப்ரீஸ்/அன்ப்ரீஸ் பண்ண முடியும்னு தோணியிருக்கு, அப்படி அப்ளிகேஷன ப்ரீஸ் பண்ணாலும் சர்வர் ரிக்கவர் ஆகாது, அதுக்கு ஏதாவது செஞ்சாகணும்னு யோசிச்சிருக்கா, அப்ப அவளுக்கு நீங்க இந்த சிச்சுவேஷன்ல இருந்தா என்ன பண்ணி இருப்பீங்கன்னு யோசிச்சிருக்கா, கூகிள்ல மெமரிய எப்படி ரியல்டைமா இன்க்ரீஸ் பண்ணலாம்னு தேடியிருக்கா, கெடச்ச ரிசல்ட்ஸ் வெச்சு அவலுக்கு ஐடியா தோணியிருக்கு, ஹார்டிஸ்க்ல dd கமாண்ட் மூலம் ஒரு எம்டி இமேஜ் கிரியேட் பண்ணி அந்த பைல mkswap கமாண்ட் மூலம் ஸ்வாப் பார்மட் பண்ணி அத swapon பண்ணா உடனே ஸ்வாப் மெமரி இன்க்ரீஸ் ஆகும், சிஸ்டமும் மெமரி கிடைச்சதால ரிக்கவர் ஆகும். அப்புறம் அந்த அப்ளிகேஷன அன்ப்ரீஸ் பண்ணி உடனே அந்த அப்ளிகேஷன் மெமரியில் இருக்கும் டேட்டாவை டம்ப் பண்ற ஏபிஐ கால் பண்ணா மெமரியில இருக்கும் டேட்டாவை ரிக்கவர் பண்ணலாம்னு கார்த்திகா யோசிச்சிருக்கா, அவளோட ஐடியாவ அந்த மீட்டிங்ல சொல்லியிருக்கா, அந்த மீட்டிங்ல இருந்தவங்க இவளோட பிரப்போசல அக்சப்ட் பண்ணி புரொசிட் பண்ண சொல்லிட்டாங்க. உடனே அவ நினைச்ச மாதிரி முதல்ல சர்வர ரிக்கவர் பண்ணிட்டா, டெவலப்பர் டீம்ல இருந்தவங்க மேர்கொண்டு அந்த அப்ளிகேஷன ஆக்‌ஸஸ் பண்ணி மெமரில இருந்த டேட்டாவ ரிக்கவர் செஞ்சுட்டாங்க. கார்த்திகா ரிமோட்ல வேலை பாத்துக்கிட்டு இருந்தாலும் அவ டீம்மெட்சும் அவ ப்ராஜக்ட் மேனேஜரும் அவள தலையில தூக்கி வச்சி கொண்டாடி இருக்காங்க, அப்ப கார்த்திகா உங்கள நினைச்சு உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லியிருக்கா’ கயல் சொல்லும்போது மதனுக்கு பெருமிதமாக இருந்தது. ‘இதுல முக்கியமானது என்னன்னா அவ ப்ராஜெக்ட்டுக்கு வரும்போது ஒரு நாள் ரொம்ப வெக்சாகி நான் வேலையை விட்டு போறேன்னு சொன்னா, அதுக்கு காரணம் அவ ப்ராஜக்ட்ல இருந்த ஒரு முக்கியமான சீனியர் ரிசோர்ஸ் இவ பார்த்த வேலை தப்புன்னு எல்லோர் முன்னாடியும் சொல்லி கேவலப்படுத்திட்டாராம். ஆனா அதே சீனியர் ரிசோர்ஸ் தான் கார்த்திகாவின் ப்ரப்போசலுக்கு முதல் ஆளா அக்சப்ட் பண்ணி சப்போர்ட் பண்ணாராம். அது அவலுக்கு பெரிய விஷயமா இருந்திருக்கு. அவ ப்ராஜக்ட் மோனேஜர் அவ தனியா கஷ்டப்பட கூடாதுன்னு புதுசா ஹையர் பண்ணி அவலுக்கு கீழ இப்ப ஐஞ்சு ஜூனியர்ஸ் வெச்சி கார்த்திகாவ டீம் லீடராக மாத்திட்டாராம்’ கயல் கூறினாள். ‘அவங்க என்கிட்ட எதுக்கு லினக்ஸ் கத்துக்க வந்தாங்களோ அத அச்சீவ் பண்ணிட்டாங்க, என்ன கேட்டா அவங்க எனக்கு தேங்க்ஸ் சொன்னதுக்கு பதிலா லினக்சுக்கு தேங்ஸ் சொல்லியிருக்கனும். ஏன்னா அதுதான் அவங்கல அப்படி யோசிக்க வச்சது, நான் இல்ல’ மதன் பெருமிதத்துடன் கூறினான். ‘உண்மைதான், என் ப்ரண்ட டிப்ரஷன்ல இருந்து மீட்டதுக்கு நான் உங்களுக்கு தேங்ஸ் சொல்றதுக்கு பதிலா அந்த லினக்சுக்குத்தான் தேங்ஸ் சொல்லியிருக்கனும். எனிவே உங்களுக்கும் தேங்க்ஸ், ஏன்னா அவளுக்கு லினக்ஸ் கத்துக்கொடுத்ததுக்கு. முடிஞ்சா அப்புறம் பேசலாம். பாய்’ கயல் சொல்லிவிட்டு போனை கட் செய்தாள்.

மதன் தன் இருக்கையில் அமர்ந்த வாரே கயல் சொன்னவைகளை யோசித்தான். அவனால் தன் வேலையில் ஈடுபட முடியவில்லை. மெதுவாக எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றான். கார்த்திகாவின் பெற்றோர்கள் கலப்புத் திருமணம் செய்தவர்கள் என்பதையும் காதலுக்காக கார்த்திகாவின் பொற்றோர்கள் மரணத்தை சந்தித்து இருக்கின்றனர் என்பதையும் யோசிக்கும்போது மதனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. கார்த்திகாவின் அப்பாவை அவன் மரியாதை இல்லாமல் பேசியதை யோசித்து தலை குனிந்து கொண்டு தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுதான். கார்த்திகாவின் பொற்றோரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதன் துடித்தான். மதன் அழுத பின் அவன் மனதில் இருந்த குற்ற உணர்வு ஒரலவு நீங்கியது. ஒருவழியாக தன்னை திடப்படுத்திக் கொண்டு வந்து முகத்தை கழுவிக் கொண்டு மீண்டும் வந்து தன் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தான். மதன் மிகவும் வருத்தத்தில் இருந்தாலும் கார்த்திகா இப்போது ஒரு டீம் லீடர் அதுவும் லினக்ஸ் கற்றுக்கொண்டு அவள் எண்ணியதை அடைந்துவிட்டாள் என்பதை எண்ணும் போது சற்று ஆறுதலாக இருந்தது. அன்று மதியம் தீப்தியும் சுரேஷும் மதனுடன் சாப்பிட வந்திருந்தனர். அப்போது காலையில் கயல் பேசியதை மதன் கூறினான். ‘அப்பவே நெனச்சேன், சுதாவ வீட்ல தங்க வக்குறாங்கன்னா அந்த கிராமத்துக்கும் இவங்களுக்கும் வேர ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கணும்னு, இப்பத்தான் புரியுது மாமியார் வீட்டு தொடர்புன்னு’ சுரேஷ் கூறினான். ‘டேய் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன யோசிக்குற?’ மதன் கேட்க ‘அவசரப்பட்டு வாய் விட்டல்ல, இப்ப அனுபவி ராஜா, கயல் உன்ன ஒரு வார்த்த கூடவா திட்டல?, நானா இருந்தா தும்ப பூவுல தூக்குல தொங்குற மாதிரி நல்லா கேட்டிருப்பேன்’ சுரேஷ் மதனை கலாய்த்துக் கொண்டிருந்தான். ‘சும்மா இர்ரா’ தீப்தி சுரேஷை திட்டினாள். ‘அதில்ல தீப்தி, அவன் சொல்றதும் கரைத்தான். கயல் நாலு வார்த்த திட்டியிருந்தாலும் நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன்’ மதன் கூற ‘அண்ணா, நீங்க தெரிஞ்சு எந்த தப்பும் பண்ணல, யார்கிட்டயும் நீங்க மன்னிப்பு கேட்கனும்ற அவசியம் இல்ல, யாரும் உங்களை திட்ட உரிமையும் இல்ல, நீங்க தேவையில்லாம குழப்பிக்காதீங்க. அவன் பேச்ச கேட்காதீங்க, உங்கல அழவெச்சுப்பாப்பான்’ தீப்தி சுரேஷை பார்த்து திட்டியபடியே மதனிடம் பேசினாள். தீப்தியின் வார்த்தைகள் மதனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. மூவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு தங்கள் டெஸ்கிர்கு சென்றனர்.

பல மாதங்கள் ஒடின. ஒருநாள் கம்பெனியில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் ஒரு மெயில் வந்தது. அதில் அந்த வாரம் வெள்ளிக்கிழமை கம்பெனியின் சிஇஒ எல்லோரிடமும் லைவ் ப்ராட்காஸ்ட் மூலம் பேச வேண்டும் என்றும் மறக்காமல் அதை எல்லோரும் அட்டென்ட் செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அந்த வெள்ளி கிழமையும் வந்தது. மதன் வேலை செய்யும் ஆபீஸில் ஒரு மிகப் பெரிய ஆடிட்டோரியம் இருந்தது. அங்கு எல்லோரும் சிஇஒ வின் பேச்சிற்காக வந்து உட்கார்ந்து கொண்டிருந்தனர். மதன் தன் டெஸ்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ‘வாடா போகலாம்’ உதய் மதனை அழைத்தார். ‘நீங்க போங்கண்ணா, சும்மா ஏதாவது இந்த வருஷம் கம்பெனி இவ்ளோ ப்ராபிட் பாத்துச்சு லாஸ் பாத்துச்சுன்னு கத அலந்துக்கிட்டு இருக்கப்போறான், அத போய் கேட்கணுமா. நமக்கு சல்லி பைசா இன்கிரிமென்ட் போட மாட்டாங்க’ மதன் புலம்பினான். ‘நீ திருந்த மாட்டா, சரி நான் வரேன்’ உதய் கூறிவிட்டு ஆடிட்டோரியம் நோக்கி நடந்தார். அப்போது மதனின் க்யூப்பிக்கலுக்கு தீப்தி அவசரமாக ஓடி வந்தாள். ‘அண்ணா வாண்ணா போகலாம்’ மதனின் கைகளை பிடித்து இழுத்தாள். ‘எங்கம்மா, ஆடிட்டோரியத்துக்கா, ப்ளோடு போடுவாங்கம்மா, நான் வரல’ மதன் சொல்லும்போதே தீப்தி அவனை இழுத்துக்கொண்டு ‘அதெல்லாம் இருக்கட்டும் நீ வாண்ணா’ என்று சொல்லி மதனை அழைத்துக்கொண்டு ஆடிட்டோரியம் வந்தாள். ‘டேய், எவ்வளவு நேரம்டா வரதுக்கு, சீக்கிரம் வந்து உட்காரு’ என்று சுரேஷ் மதனை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்தான். ‘சரிடா, நான் போய் கூட்டிட்டு வரேன்’ தீப்தி சுரேஷிடம் கூறிவிட்டு மறுபடியும் எங்கேயோ ஓடினாள். ‘எங்கடா போரா’ மதன் ஒன்றும் புரியாமல் சுரேஷை கேட்டான். ‘வரும்போது தெரியும், மூடிட்டு படத்தை பாரு’ சுரேஷ் கூற ‘சினிமா காட்றாங்கன்னே முடிவு பண்ணிட்டியேடா, அவன் சும்மா ஸ்டேட்டிக்ஸ்டிக்ஸ் வெச்சிக்கிட்டு பீலா உடப்போரான்டா’ மதன் கூற ‘ஏதோ ஒன்னு சும்மா டைம் பாஸ் பண்ணுடா’ சுரேஷ் ஆர்வத்துடன் ஆடிட்டோரியத்தில் இருந்த ஸ்க்ரீனை பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது தீப்தியுடன் யாரோ வருவதை மதன் கவனித்தான். தீப்தியும் அந்த இன்னொருத்தரும் நடந்து வர மதனின் இதயத்துடிப்பு அதிகமானது. அது அவளாக இருக்குமோ என்று மதனின் மூலை ஏகத்துக்கும் ப்ராப்பப்ளிட்டி கணக்கு போட ஆரம்பித்தது. மதனும் சுரேஷும் உட்கார்ந்திருந்த சீட் வரிசையை தீப்தியும் அந்த மற்றொருவரும் வந்தவுடன் திரும்பியதும் அந்த மற்றொருவர் மதனை பார்க்க மதனும் அந்த மற்றொருவரை பார்த்தான். அவன் மூலை கணக்கு போட்டபடியே அந்த மற்றொருவர் கார்த்திகா. இருவரும் சில நொடிகள் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். ‘உட்காருங்க அக்கா, ஏன் நிற்கரீங்க’ என்று தீப்தி கார்த்திகாவை சீட் வரிசைக்ளுள் இழுத்து உட்கார வைத்தாள். அவர்கள் உட்கார்ந்த வரிசை திரைக்கு இடது புறம் இருந்தது. மதன் நடைபாதையில் இருந்து உள்ளே நான்காவது சீட்டில் அமர்ந்தான். அடுத்ததாக சுரேஷ் உட்கார, அவனுக்கு பக்கத்தில் தீப்தி உட்கார கடைசியாக நடைபாதையின் தொடக்கத்தில் கார்த்திகா உட்கார்ந்தாள்.

NOTE: வாசகர் குறிப்பு

இப்பொழுது மதன் பணிபுரியும் கம்பெனியின் சிஇஒ பேசவிருக்கிறார். அவர் பேசுவது இங்கு தமிழில் இருந்தாலும் அவர் ஆங்கிலத்தில் பேசி இருப்பார் என்று எடுத்துக் கொள்ளவும். மதன் வேலை செய்வது ஒரு பண்ணாட்டு மென்பொருள் நிறுவனம். அவர்களுக்கு மதன் வேலை செய்யும் ஆபீஸ் போல் உலகம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட ஆபீஸ்கள் உள்ளன

‘ஹலோ எவ்ரிபடி, உங்க பிசியான ஷெட்யூலில் என்னோட டைம் ஸ்பென்ட் பண்ண வந்ததுக்கு மொதல்ல நன்றி தெரிவிக்கின்றேன். என்னடா பினான்சியல் இயர் எண்ட் கூட இல்லையே இப்ப ஏதுக்கு இவன் கம்பனியில இருக்குறவங்க கிட்ட பேசுறான்னு உங்கல்ல பலபேர் யோசிச்சிருப்பீங்க. வழக்கம்போல கையில பேப்பர் ஸ்கிரீன்ல சார்டுமா வந்து மொக்க போடப்போரான்னும் பலபேர் யோசிச்சிருப்பீங்க. அப்படி நினைச்சிருந்தா உங்க கனிப்பு தப்பு. நான் உங்க கூட பேசுறது வேற ஒரு விஷயத்துக்காக. ரீசண்டா எனக்கு ஒரு ப்ரண்ட் அறிமுகமானான். அவனோட பேரு மிஸ்டர் எக்ஸ். இந்த பேர சொன்னவுடனே எல்லோருக்கும் தோன்றுவது ஒருவேல மிஸ்டர் எக்ஸ் ஹேக்கரா இருப்பானோன்னு. உங்கல தப்பு சொல்ல மாட்டேன். ஆனா ஆவன் “ஹேக்கர்ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க, நான் பார்த்த ப்ராப்ளத்த உங்ககிட்ட சொன்னா அத ரெக்டிபை பண்ணிப்பீங்கண்னு உங்ககிட்ட சொல்றேன் அவ்வளவுதான்” அப்படின்னு ரொம்ப சாதாரணமா சொன்னான். இப்ப உங்களுக்கு ஒரளவுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ஆமாங்க, கொஞ்ச நாள் முன்னாடி, நம்ம கம்பெனியோட இன்டர்னல் சோசியல் நெட்வொர்க்ல ஒரு ஹேக் நடந்தது. அத நடத்தியது மிஸ்டர் எக்ஸ். வேடிக்கை என்னன்னா, மிஸ்டர் எக்ஸ், நம்ம கம்பனியில வொர்க் பண்ற ஒருத்தர். இப்பவும் வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கார். உங்க பக்கத்துல கூட உட்கார்ந்து இருக்கலாம்’ சிஇஒ சொன்னதும் சுரேஷுக்கு மதனை திரும்பி பார்க்க தோன்றியது. மதன் இமையை கூட சிமிட்டாமல் ஸ்க்ரீனை பார்த்துக்கொண்டிருந்தான். ‘மிஸ்டர் எக்ஸ் என்ன மொதல்ல ஒரு ட்விட்டர் போஸ்ட்ல ஒரு கருப்பான போட்டோவுக்கு நடுவுல “identify -format ‘%[EXIF:toCEO]’ ” அப்படிங்குற லினக்ஸ் கமாண்ட் இருந்த ஒரு போட்டோவ போட்டு என்ன டேக் பண்ணி இருந்தாரு. எனக்கு மொதல்ல யாரோ சும்மா விலையாடறாங்கன்னு தோனுச்சு, பட் அந்த போஸ்ட்ல இருந்த போட்டோல ஏதோ இருக்குன்னு மட்டும் எனக்கு தோனுச்சு. நான் நம்ம கம்பெனியோட சிஐஎஸ்ஒ கிட்ட இத பத்தி சொன்னேன். உடனே அவர் தன் லேப்டாப்ல அந்த போட்டோவ டவுன்லோட் பண்ணி அந்த போட்டோவுல இருக்குற கமாண்ட ரன் பண்ணாரு. உடனே ஒரு பெரிய மெசேஜ் வந்தது. அது எனக்கு மிஸ்டர் எக்ஸ் எழுதிய லெட்டர். டிவிட்டர் கேரட்டர் லிமிடேஷன் பைபாஸ் பண்ண அப்படி பண்ணியிருக்காரு. அவர் அனுப்பிய லெட்டர் இதுதான் “டியர் சிஇஒ, நான் உங்க கம்பெனில ஒர்க் பண்ற ஒரு சாதாரண எஞ்சினியர். ரீசண்டா நம்ம இன்ப்ராஸ்ட்ரக்சர்ல இருந்த ஒரு ப்ராப்ளம் எனக்கு தெரிஞ்சது அத உங்களுக்கு சொல்லனும்னு தோனுச்சு. நம்ம கம்பெனியோட இன்டர்னல் சோசியல் நெட்வொர்க் டெடிகேட்டட் சப்நெட்ல முடிஞ்சா பிசிக்கல் மெஷின்ல பப்கி ஆக்ஸஸ் மட்டும் இருக்கிற மாதிரி ஒரு இடத்துல வெச்சு ரன் பண்ணுங்க. கரண்டா, நம்ம சோசியல் நெட்வொர்க் வெப்சைட் சர்வரும், எம்ப்ளாயிஸ் விர்சுவல் மெஷின்களும் ஒரே இடத்துல இருக்கு. என்னத்தான் ஒரு தனி வீலேன் நம்ம சோசியல் நெட்வொர்க்குக்கு நீங்க ஒதுக்கி இருந்தாலும் என்னால அந்த சைட் ரன் ஆகும் ஒரு சர்வர்ல லாகின் பண்ண முடிஞ்சது. அந்த சர்வர் மூலம், நம்ம கம்பெனி எம்ப்ளாயிஸ் எல்லோரோட டீடெய்ல்சும் இருக்குற டேட்டாபேஸ் சர்வர ஈசியா தொட முடிந்தது, ஆந்த டேட்டாபேஸ்ல இருந்து ஒரே ஒரு போன் நம்பர் மட்டும் நான் எடுத்துக்கிட்டேன். மத்தபடி எதையும் நான் தொடல. என்ன நீங்க நம்பலாம், நம்பாம போகலாம், அது உங்க இஷ்டம். ஆனா நான் சொல்வது உண்மை. அதுக்கு ஒரு சின்ன ப்ரூப்பா நான் உள்ள நுழைஞ்ச சர்வர்ல ஒரு அட்மின் அக்கவுண்டுக்கு பேரு pbadm7698, இந்த அக்கவுன்டுக்கு sudo பர்மிஷன் இருக்கு. அதனால இந்த அக்கவுன்டோட ஆக்ஸஸ் கெடச்சா அந்த சர்வரில் என்ன வேணும்னாலும் பண்ணலாம். இந்தாங்க அந்த அக்கவுண்ட ஆக்‌ஸஸ் பண்றதுக்கு தேவைப்படும் பாஸ்வேர்ட் JaiSriRam1JaiRadhe4JaiHanuman3’ சிஇஒ தன் ஸ்கிரீனில் அந்த வரிகளை காட்டியதும் சுரேஷ் ‘F**k, நம்ம ஊர் கூமுட்டை தான் எவனோ பலியாகி இருக்கான், எப்படி மச்சி அந்த எக்ஸ் இவ்வளவு பெரிய பாஸ்வேர்டு பிரேக் பண்ணி இருப்பான், ஃப்ரூட் போர்ஸ் பண்ண ரொம்ப செலவாகியிருக்கும், ரெயின்போவா?’ மதனிடம் கேட்க ‘கண்டிப்பா ரெயின்போ இல்லை’ என்று மதன் சொல்லிவிட்டு மீண்டும் ஸ்கிரீனை பார்த்தான். சிஇஒ தொடர்ந்தார் ‘அந்த பாஸ்வேட்டை பாத்ததும் சிஐஎஸ்ஒ உடனே நம்ம சோசியல் நெட்வர்க் ரன் ஆகுற எல்லா சர்வர் இன்ஸ்டென்ஸ்லயும் மிஸ்டர் எக்ஸ் கொடுத்த யூசர் நேம் பாஸ்வேர்டு யூஸ் பண்ணி லாகின் செய்ய முயற்சி செய்தார். மிஸ்டர் எக்ஸ் சொன்ன மாதிரியே ஒரு இன்ஸ்டன்ஸ்ல அவரால லாகின் பண்ண முடிஞ்சது. உடனே நம்ம சிஐஎஸ்ஒ அவரோட டீம்கு ரெட் அலர்ட் மெயில் அனுப்பிச்சிட்டாரு, கூடவே பாரன்சிக் அனலைசிஸ் தொடங்கிட்டாரு. மிஸ்டர் எக்ஸ் லெட்டர்ல மேலும் “நான் எப்படி உள்ள போனேன்னு தெரிஞ்சுக்கனும்னா ஏதாவது ஒரு IRC க்ளைன்ட் மூலம் இந்த ஆனியன் யூஆர்எல் இருக்குற இடத்துக்கு வாங்க. எப்படி இந்த யூஆர்எல் வெர்க் ஆகுதுன்னு யாராவது சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் கிட்ட கேளுங்க உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க” இப்படித்தான் மிஸ்டர் எக்ஸ் தன்னோட லெட்டர முடித்திருந்தார்’ சிஇஒ சிரித்துக்கொண்டே கூறினார்.

‘நிலைமையின் சீரியஸ்னஸ் புரிஞ்சு எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் நம்ம கம்பெனி சர்வர்ஸ அலசி ஆராய ஆரம்பித்து இருந்தாங்க. ஆனா எனக்கு ஏன் அந்த மிஸ்டர் எக்ஸ் ஒரே ஒரு போன் நம்பர் மட்டும் எடுக்கனும் அப்படிங்கிறத தெரிஞ்சுக்க ஆவலா இருந்தது. நான் மறுபடியும் மிஸ்டர் எக்ஸ IRC க்ளைன்ட் மூலம் Tor அப்படிங்கிற ஒரு டார்க்நெட்டோட ஒரு ஆனியன் அட்ரஸ்ல இருந்த ஒரு IRC சர்வர ஆக்ஸஸ் செய்தேன். நான் கனெட் ஆன உடனே நேராக #WelcomeCEO அப்படிங்குற IRC சேனலுக்கு என் க்ளைன்ட் ஆட்டோமேட்டிக்கா ரீடைரக்ட் ஆச்சு. அங்கு மிஸ்டர் எக்ஸ் அப்படிங்கிற நிக் இருந்தது, நான் “அலோ மிஸ்டர் எக்ஸ், நான் சீஇஓ வந்திருக்கேன்” அப்படின்னு அந்த சேனல்ல மெசேஜ் அனுப்பினேன். உடனே “வெல்கம் டியர் சீஇஓ” அப்படின்னு ரிப்ளை வந்தது. நான் மிஸ்டர் எக்ஸ் கிட்ட இரண்டு கேள்விகள் கேட்டேன் “எப்படி அந்த போன் நம்பர் எடுத்தீங்க” அப்புறம் “ஏன் அந்த போன் நம்பர் எடுத்தீங்க” இந்த கேள்விகளை கேட்டேன். “முதல்ல எப்படி எடுத்தேன்னு சொல்றேன், அத மூனு ஸ்டேஜா பிரிச்சிக்கலாம், இப்ப முதல் ஸ்டேஜ், எனக்கு கம்பனியில ப்ராஜக்ட் வொர்குக்காக ஒரு விர்சுவல் மெஷின் ஒதுக்குனாங்க. வழக்கம்போல அதுல லினக்ஸ் இன்ஸ்டால் பண்ணேன். ஒரு டிப்பக்கிங் பர்பஸ்காக tcpdump யூஸ் பண்ண வேண்டியிருந்தது. tcpdump யூஸ் பண்ணும் போது தேவையில்லாமல் ஏகப்பட்ட ப்ராட்காஸ்ட் பாக்கெட்ஸ் என்னோட இன்டர்பேஸ்ல ஹிட்டாகிட்டு இருந்தது. அதுல ஒரு பாக்கெட்டை எடுத்து பார்க்கும்போது அதில் வீலேன் டேக் இருந்தது, அப்ப எனக்கு ஒன்னு தோணுச்சு, எல்லா விர்சுவல் மெஷினும் ஒரே ஒரு பெரிய பிசிகல் மெஷின்ல ரன்னாகிக்கிட்டு இருக்கனும், ஆனா ஒவ்வொரு விர்சுவல் மெஷினும் வீலேன் மூலம் டிவைட் செய்து இருக்கனும்னு தோனுச்சு. எனக்கு என்னோட விர்சுவல் மெஷின்ல ரூட் ஆக்ஸஸ் இருக்கு. என்னோட விர்சுவல் மொஷின்ல லினக்ஸ் இருக்குறதால நான் ஈஸியா ஒரு வீலேன் இன்டர்பேஸ் கியேட் பண்ணி அதுக்கு சரியான வீலேன் டேக் செட் செஞ்சு ஈஸியா எந்த ஒரு வீலேனையும் ஆக்‌ஸஸ் பண்ண முடிஞ்சது. இதுவரைக்கும் ஸ்டேஜ் ஒன்” மிஸ்டர் எக்ஸ் தன்னோட முதல் ஸ்டேஜ் முடிச்சார்’ சிஇஒ முடிக்கும்போது ஆடிட்டோரியத்தில் எல்லோருக்கும் அடுத்த ஸ்டேஜ் என்ன நடந்திருக்கும் என்ற ஆவலுடன் ஸ்கிரீனை பார்த்துக்கொண்டிருந்தனர்.

‘மிஸ்டர் எக்ஸ் தன்னோட அடுத்த ஸ்டேஜ் பற்றி விவறிக்க ஆரம்பித்தார் “ஏற்கனவே நான் பார்த்த அந்த பாக்கெட்ல இருந்த வீலேன் டேக் நம்பர் வெச்சி, நான் என்னோட லினக்ஸில் டெம்ரவரியா ஒரு வீலேன் இன்டர்பேஸ் கிரியேட் செஞ்சு அதுக்கு அந்த டேக் நம்பர் செட் பண்ணி அந்த வீலேன்ல ஜாயின் செய்தேன். அந்த வீலேன் சப்நெட்ல இருக்குற எல்லா ஐபி அட்ரஸ்களையும் ஸ்கேன் பண்ணி ஒவ்வொரு ஐபிலயும் எந்தெந்த போர்ட் எல்லாம் ஓப்பன்ல இருக்குன்னு பார்த்தேன் அதுல ஒரு குறிப்பிட்ட ஐபியில https மற்றும் ssh போர்ட்டுங்க ஓப்பன்ல இருந்துச்சு. அந்த ஐபியோட https போர்ட்ல கனெக்ட் செஞ்சா அது நம்ம கம்பெனி இன்டர்ணல் சோசியல் நெட்வொர்க் ரன் ஆகிட்டு இருக்குற ஒரு சர்வர். என்னால இப்ப நம்ம சோசியல் நெட்வர்க் ரன் ஆகிட்டு இருக்குற எல்லா சர்வர்களையும் அதுங்களுக்குன்னு ஓதுக்கி இருக்குற வீலென் சப்நெட்ல இருந்தே ஆக்ஸஸ் பண்ண முடிஞ்சது. நம்ம கம்பனியில யார் வேண்டுமானாலும் நம்ம சோசியல் நெட்வர்க் ரன்னாகுற சர்வர்ச ஆக்ஸஸ் பண்ண முடியும் ஏன்னா அப்பத்தான் அந்த வெப்சைட்ட யூஸ் பண்ண முடியும். ஆனா எல்லோரும் https புரோட்டோக்கால் வழியாகத்தான் நம் சோசியல் நெட்வர்க ஆக்சஸ் பண்ண முடியும். சோசியல் நெட்வொர்க் சர்வர்ஸ் ரன்னாகுற அந்த பர்ட்டிக்குளர் வீலேன் சப்நெட் வழியாத்தான் சர்வர்கல ssh புரோட்டோக்கால் மூலமா ஆக்ஸஸ் பண்ண முடியும். நான் இப்ப அந்த வீலேன்ல இருக்கேன் அதனால என்னால ssh ப்ரோட்டோக்கால் மூலம் ஆக்ஸஸ் பண்ண முடியும்” எக்ஸ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிஐஎஸ்ஒ எக்ஸ் கிட்ட “அந்த யூசர் நேம் பாஸ்வேர்ட் எப்படி பிரேக் பண்ணீங்க? நீங்க சொல்றபடி பார்த்தா இப்பவும் சர்வருக்கு வெளியே தான் இருக்கீங்க இன்னும் நீங்க சர்வருக்கு உள்ள போகல” என்று கேட்டார். அதுக்கு எக்ஸ் “கரைக்ட், நீங்க சொல்றது உண்மைதான், நான் சர்வருக்கு உள்ள இன்னும் போகல, ஆனா அந்த சர்வர்ஸ் இருக்குர சப்நெட்ல இருக்கேன். இது பழைய ஆதிகாலத்து டெக்னிக்தான். Arp cache poisoning, உங்களோட சர்வருக்கு பதிலா என்னோட விர்சுவல் மெஷின் தான் உன்மையான சர்வரோட ip address க்கு சொந்தக்காரன்னு Arp பாக்கெட்ஸ சப்நெட்ல ப்ராட்காஸ்ட் பண்ணேன். அதனால் அந்த சப்நெட்ல இருக்குற எல்லா டிவைசும் இப்ப என்னோட விர்சுவல் மெஷின் தான் உண்மையான சோசியல் நெட்வர்க் ரன் ஆகும் சர்வர்னு நம்ப ஆரம்பிச்சிடுச்சுங்க. இப்ப என்னோட லினக்ஸ் மெஷின்ல நான் மாடிஃபை பண்ணி வெச்சிருந்த ssh சர்வர ரன் பண்ணி யாராவது லாகின் பண்ணுவாங்களான்னு ட்ராப் வெச்சு காத்துக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துலயே ஒரு எலி வந்து சிக்குச்சு, அந்த எலிதான் pbadm7698, அந்த எலி கொடுத்த பாஸ்வேட் தான் Jaisriram1jairadhe4jaihanuman3” எக்ஸ் சொன்னவுடன் சிஐஎஸ்ஒ சிரித்தார். நான் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் “இன்டர்னல் சப்நெட்டாச்சேன்னு Arp poisoning attack மிட்டிகேட் பண்ணாம விட்டுட்டு இருக்காங்க, ஹி ப்ரோக் இன் யூசிங் தட்” அப்படின்னு சொன்னார். மிஸ்டர் எக்ஸ் தொடர்ந்தார் “ஓன்ஸ் எனக்கு தேவையான யூசர் நேம் பாஸ்வேர்ட் கெடச்சதும் மீண்டும் Arp ப்ராட்காஸ்ட் பண்ணி மறுபடியும் அந்த சப்நெட்ல இருந்த டிவைஸ்கல ஒரிஜினல் சர்வர் தான் ஒரிஜினல் சர்வரோட ip address க்கு சொந்தக்காரன்னு நம்ப வெச்சிட்டேன். இப்ப எனக்கு கெடைச்ச யூசர் நேம் பாஸ்வேர்ட் வெச்சு அந்த ஒரிஜினல் சர்வர்ல லாகின் பண்ணேன். பாத்தா அந்த சர்வர்ல இருந்து நம்ம கம்பனி டேட்டாபேஸ் சர்வருக்கு டைரக்ட் பாஸ்வேட்லஸ் ஆக்ஸஸ் இருந்தது. அதுவும் நான் ப்ரேக் பண்ண அக்கவுண்ட் ஒரு அட்மின் அக்கவுன்டுன்றதால எந்த ஒரு ரிஸ்ட்ரிக்‌ஷனும் இல்ல. இதுவரைக்கும் ஸ்டேஜ் டூ” எக்ஸ் அவரோட ஸ்டேஜ் டூ எப்படி நடந்ததுன்னு சொன்னார்’ சிஇஒ சொல்லி முடித்தார். அப்போது சுரேஷ் ‘மச்சி ஏதாவது புரிச்சதாடா’ மதனை பார்த்து கேட்க ‘அப்புறம் உனக்கு எக்ஸ்ப்லெயின் பண்றேன்’ மதன் ஆவலுடன் ஸ்க்ரீனை பார்த்துக்கொண்டிருந்தான்.

சிஇஒ தொடர்ந்தார் ‘எக்ஸ் அவரது ஸ்டேஜ் த்ரீ எப்படி நடந்ததுன்னு சொன்னார் “இப்ப ஸ்டேஜ் த்ரீ, ஒன்ஸ் நான் டேட்டாபேஸ் சர்வர்ல லாகின் பண்ணவுடன், அந்த டேட்டாபேஸ் சர்வர் லாக்ஸ் அனலைஸ் பண்ணேன். எப்படியும் இந்த டேட்டாபேஸில் யாரும் டைரக்டா sql query போட மாட்டாங்க, அப்படி போட்டா அலர்ட் போகிற மாதிரி வச்சிருப்பாங்கன்னு என்னால ஒரளவுக்கு யோசிக்க முடிந்தது, ஏன்னா எந்த ஒரு நல்ல கம்பனியும் இத செய்வாங்க. அந்த லாக்ஸ்ல நான் யோசித்த மாதிரி டைரக்ட் sql query போட்ட உடனே அலர்ட் போயிருந்தது. இப்ப நான் எனக்கு தேவையான போன் நம்பர் எடுக்க டைரக்ட் sql query போட்டா அது தெல்ல தெளிவாக லாக்ஸ்ல வரும், அலர்ட்டும் போகும் அதனால, ஒரே ஒரு எம்ப்லாயி ஐடி வச்சு கொரி போடுரதுக்கு பதில் ரேண்டம்மா ஒரு பத்தாயிரம் எம்ப்லாயி ஐடிய ஜெனரேட் பண்ணேன். அந்த ஐடிக்களுக்கு நடுவே எனக்கு தேவையான எம்ப்லாயி ஐடியையும் சொருகுனேன். அந்த எல்லா எம்ப்லாயி ஐடிக்கும் சம்பந்தப்பட்ட போன் நம்பர எடுக்க ஒரே ஒரு கொரிய அந்த டேட்டாபேஸ்ல எக்‌ஸிக்யூட் பண்ணேன். வந்த ரிசல்ட்ட டெம்ரவரியா ஒரு லொக்கேஷன்ல சேவ் பண்ணி எனக்கு தேவையான எம்லாயியோட போன் நம்பர மட்டும் எடுத்துக்கிட்டு டெம்ப்ரவரியா சேவ் பண்ண ரிசல்ட ரிமூவ் பண்ணிட்டேன். நான் டைப் பண்ண எல்லா கமாண்ஸ்சையும் ஷெல் ஹிஸ்ட்ரீல இருந்து கிளீன் பண்ணிட்டேன். நான் எதிர்பார்த்த மாதிரியே ஒரு அலர்ட் போய் இருந்தது. அத வச்சி செக்யூரிட்டி டீம் என்ன பண்ணாங்கன்னு உங்களுக்குத்தான் தெரியும். என்னோட விர்சுவல் மெஷின்ல நான் டெம்ரவரியா கிரியேட் பண்ண வீலேன் இன்டர்பேஸையும் டெலிட் பண்ணி பேக்லாக்‌ஸ் ரிமூவ் பண்ணிட்டேன்” எக்ஸ் சொன்னவுடனே நம்ம சிஐஎஸ்ஒ அவரோட டீம்கு போன் போட்டு இப்படி ஒரு அலர்ட் வந்திருக்கே என்ன பண்ணீங்கன்னு கேட்டார். அவருக்கு வந்த ரெஸ்பான்ஸ் நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டார், அவரோட டீம் அத ஒரு பால்ஸ் அலர்ட்னு விட்டுட்டாங்களாம். ஏன்னா பல சமயம் சோசியல் நெட்வெர்க் சைட்ட டெவலப் பண்ற டெவலப்பர்ஸ், டைரக்டா ப்ரொடக்ஷன் சர்வர்ல கொரி பண்ணுவாங்களாம். அந்த அலர்ட் வந்ததும் செக்யூரிட்டி டீம் அப்படி யாராவது ஒரு டெவலப்பர் தான் கொரி பண்ணி இருப்பாருன்னு அந்த அலர்ட்ட க்ளோஸ் பண்ணிடுவாங்களாம். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, டேட்டா செக்யூரிட்டிக்கு வருஷத்துக்கு எவ்வளவு செலவு செஞ்சாலும் இதுமாதிரி ஆப்பரேஷ்னல் இக்னோரன்ஸ்னால செலவு செஞ்சது வீணா போகுது. என்னால் செக்யூரிட்டி டீம கோச்சிக்க முடியல, அந்த சோசியல் நெட்வொர்க் வெப்சைட் டெவலப்பர்களையும் கோச்சிக்க முடியல, இது டேட்டா செக்யூரிட்டிய எக்ஸிக்யூட் செய்றதுல வர டே-டு-டே ப்ராப்ளம். ஆனா நம்ம சிஐஎஸ்ஒ ரொம்ப கடுப்பானார். போட்டு அவரோட டீம வாங்கு வாங்குன்னு வாங்குனார். எப்படி இந்த லேக் வரலாம், நீங்க சைபர் செக்யூரிட்டி டீமா இல்ல வேற யாராவதா அப்படின்னு அவரது டீம கடுமையா திட்டினார். அவருக்கு மிஸ்டர் எக்‌ஸ் உள்ள நுழைஞ்சது பெருசா தெரியல, அப்படி ஒரு அலர்ட் வந்தும் அவரது செக்யூரிட்டி டீமோட ரெஸ்பான்ஸ் சரியா இல்லையேன்னு மிகவும் கோபப்பட்டார்’ சிஇஒ நடந்ததை விவரித்தார். அப்போது சுரேஷ் ‘இப்ப அந்த எக்ஸ்ஸ கண்டுபிடிக்கனும்னா அவர் எடுத்த அந்த ஒரு நம்பர் கண்டுபிடிக்கணும், அப்ப அந்த பத்தாயிரம் எம்ப்லாய்களையும் விசாரிக்கனும். அதுதானே ஒரே வழி’ என்று கூற ‘அந்த ஒரு நம்பருக்கும் மிஸ்டர் எக்‌ஸுக்கும் ஏதோ ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கு’ தீப்தி கூறினாள். ‘வேர எந்த ரூட்லயும் மிஸ்டர் எக்ஸ நெருக்க முடியாது இல்ல?’ சுரேஷ் கேட்க ‘முடியும், மிஸ்டர் எக்ஸ் ஒரு விர்சுவல் மெஷின்ல இருந்து தான் இத பண்ணி இருக்காரு, அதுவும் ஒரு லினக்ஸ் விர்சுவல் மெஷின்ல இருந்து பண்ணியிருக்காரு, நம்ம கம்பெனியில் எத்தனை பேர் லினக்ஸ் விர்சுவல் மெஷின் யூஸ் பண்றாங்க?’ மதன் ஸ்கிரீன் பார்த்தவாரே கூறியவுடன் சுரேஷ், தீப்தி மற்றும் கார்த்திகா மூவரும் ஒரே நேரத்தில் மதனை பார்த்தனர். ‘தீப்தி, எனக்கு ஒன்னு தோணுது’ சுரேஷ் மதனை பார்த்தவாரே தீப்தியிடம் கூற ‘எனக்கும் அது தான் தோணுது’ என்று தீப்தியும் மதனை பார்த்தவாரே கூறினாள்.

சிஇஒ மீண்டும் தொடர்ந்தார் ‘எப்படி நம்பர் எடுத்தேன்னு மிஸ்டர் எக்ஸ் விரவமாக சொல்லிட்டார். ஆனா ஏன் அந்த நம்பர் எடுத்தார்னு கொஞ்ச நேரம் சொல்லாம இருந்தார். நானும் எதுக்காக அவர் சொல்லனும் நமக்கு தேவையான விவரங்களை சொல்லிட்டாரேன்னுதான் கேட்காம இருந்தேன். ஆனா என் கூட இருந்த சிஐஎஸ்ஒ ஏன் அந்த போன் நம்பர் எடுத்தீங்கன்னு எக்ஸ் கிட்ட கேட்டார். நான் எதுக்கு கேக்கறீங்க நமக்கு தேவையானது கொடச்சிடுச்சேன்னு சிஐஎஸ்ஒ கிட்ட சொன்னேன். ஆனா அதுக்கு அவர், எந்த ஒரு ஹாக்கரும் காரணம் இல்லாமல் இவ்வலவு தூரம் வர மாட்டாங்க. அந்த நம்பரில் ஏதோ இருக்கு அப்படின்னு சொன்னார். நானும் அந்த நம்பர்ல என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆர்வமாக இருந்தேன். கொஞ்ச நேரத்துக்கு அந்த IRC channel ல எந்த ஒரு மெசேஜும் மிஸ்டர் எக்ஸ் கிட்ட இருந்து வரல, அவருக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னு நாங்க நெனச்சப்ப “அந்த நம்பர் எனக்கு பிடிச்ச ஒரு பொண்ணோட நம்பர்” அப்படின்னு மெசேஜ் வந்தது’ சிஇஒ மிஸ்டர் எக்ஸ் அனுப்பிய மெசேஜை திரையில் காண்பித்ததும் ஆடிட்டோரியத்தில் இருந்த அனைவரும் சற்று நிமிர்ந்து ஆர்வத்துடன் சிஇஒ சொல்வதை கவனிக்க ஆரம்பித்தனர். சாய்ந்து உட்கார்ந்திருந்த சுரேஷும் தீப்பியும் ஒருசேர ‘வாட்?’ என்று சொல்லியபடி நிமிர்ந்து உட்கார்ந்தனர். இருவரும் மதனை மீண்டும் பார்த்தனர். அவன் திரையை விட்டு வேறு எங்கும் பார்பதாக இல்லை, இருவரும் கார்த்திகாவை பார்த்தனர், அவளும் திரையை தவிர வேறு எங்கும் பார்க்கவில்லை. சிஇஒ தொடர்ந்தார் ‘அந்த மெசேஜ் வந்ததும் என்னால் என் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நம்ம சிஐஎஸ்ஒ மிஸ்டர் எக்ஸ் கிட்ட அந்த பெண் உங்க லவ்வரா என்று கேட்டார் அதற்கு மிஸ்டர் எக்ஸ் நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனா அந்த பெண் அப்படி நினைக்கிறாளா இல்லையான்னு என்னால கண்டுபிடிக்க முடியலன்னு சொன்னார். நம்ம சிஐஎஸ்ஒ அப்ப அந்த பெண் உங்க எக்ஸ் லவ்வரா உங்கள விட்டுட்டு போய்டாங்களா என்று கேட்டார். அதற்கு மிஸ்டர் எக்ஸ் தனக்கும் அந்த பெண்ணிற்கும் சில நாட்களுக்கு முன் ஒரு பிரச்சனை நடந்தது என்றும் அதனால அந்த பெண்ணை பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் கூறினார். அந்த பெண் உங்க கூட பழகிக்கிட்டு இருக்கும் போது அவளோட போன் நம்பரை ஏன் நீங்க வாங்கல என்று நம்ம சிஐஎஸ்ஒ கேட்டார். அதற்கு மிஸ்டர் எக்ஸ், இதே கேள்வியைத்தான் அவரது ப்ரண்சுகளும் கேட்டாங்க அவருக்கு அந்த பொண்ணோட போன் நம்பர் கூட வாங்க தெரியலையான்னு அவர திட்டினாங்கன்னு சொன்னார். அவரோட பிரண்ஸ் கிட்ட அந்த பொண்ணோட போன் நம்பர் இருந்ததாம் அதை அவர்கள் மிஸ்டர் எக்ஸ் கிட்ட கொடுத்து அந்த பெண்ணிடம் பேச சொல்லியிருக்கின்றார்கள். ஆனா நம்ம எக்ஸ் அத வாங்க மருத்திருக்காரு, அவரது ப்ரண்ட்ஸ் மூலம் அந்த பெண் நம்பர் வாங்கி அந்த பெண்ணிடம் பேசினால் அந்த பெண் தன்னோட ப்ரேண்ஸ் மேல வச்சிருக்குற நம்பிக்கைக்கு களங்கம் வரும்னு நம்பர் வாங்க மருத்து இருக்காரு. அதுவும் இல்லாம அந்த பெண்ணின் வாழ்க்கையில இவரால மறுபடியும் பிரச்சனை வரக் கூடாதுன்னு முடிவு பண்ணி விலகி இருக்குறதாகவும் சொன்னார். நம்ம சிஐஎஸ்ஒ அப்புறம் ஏன் அந்த பொண்ணோட நம்பர் இவ்வளவு ரிஸ்க் எடுத்து கண்டுபிடிச்சீங்க என்று கேட்டார், ஆல்ரெடி பாரின்சிக் அனலைசிஸ் ஆரம்பிச்சிட்டதாகவும், மிஸ்டர் எக்ஸ், அவரோட டிஜிட்டல் ப்பூட்பின்ஸ்ஸ க்ளீன் பண்ணி இருப்பாருன்னு நன்புறதாகவும், அப்படி பண்ணாம விட்டிருந்தா மிஸ்டர் எக்ஸ் மாட்டிப்பாருன்னும், அவர் பண்றது ஒரு கிரிமினல் அபன்ஸ் அப்படின்னு நம்ம சிஐஎஸ்ஒ மிஸ்டர் எக்ஸ் கிட்ட சொன்னார். அதர்க்கு மிஸ்டர் எக்ஸ், அவர் பண்ணது கிரிமினல் அபன்ஸ், அவரோட டிஜிட்டல் ப்பூட்பின்ஸ்ஸ க்லீன் பண்ணதுல ஏதாவது லீக் இருந்தா அவர் மாட்டிக்க வாய்ப்பு இருக்குன்னு அவருக்கும் தெரியும்னு சொன்னார். ஆனாலும் மிஸ்டர் எக்ஸ் எதுக்காக ரிஸ்க் எடுத்தார்னா எப்பவாச்சும் அந்த பெண் இவருக்கு கால் பண்ணா நீங்க யார் பேசுறதுன்னு கேட்டுட கூடாதுன்னு சொல்லி விட கூடாதுன்றதுக்காகவும், அவர் கூட அன்பா பழகின அந்த பொண்ணோட போன் நம்பர் கூட கேட்க தைரியம் இல்லாத கோழையா இருந்துட்டோமேன்னு அவருக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மையை உடைக்கவும் அவர் அந்த ரிஸ்க்கை எடுத்துட்டதாகவும் கூறினார். அதுமட்டும் இல்லாம, ரொம்ப மெனக்கெட வேண்டாம், சிஇஒ என்னோட உண்மையான அடையாளத்தை தெரிஞ்சுக்கனும்னு ஒரே ஒரு மெசேஜ் இந்த IRC channel ல போட்டா போதும் அப்பவே அவர டாக்ஸ் பண்ணிக்கிறேன்னு மிஸ்டர் எக்ஸ் சொல்லிட்டார். ஏன்னா நியாயப்படி அவர் பண்து ஒரு டிஜிட்டல் திருட்டு, அதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை ஏத்துக்க எப்பவும் தயாரா இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ் அந்த IRC சேட்ல எங்க கிட்ட சொன்னாரு’ சிஇஒ சொல்லி முடித்துவிட்டு சற்று அமைதியாக இருந்தார்.

ஆடிட்டோரியத்தில் இருந்த பலபேர் மிஸ்டர் எக்ஸின் நேர்மையை கைதட்டி பாராட்டினர். எல்லோரும் அந்த எக்ஸ் யாராக இருக்கும் என்று அவர்களுள் லினக்ஸ் தெரிந்த வல்லுனர்கள் யார் யார் என்று விவாதித்துக் கொண்டிருந்தானர். ஆனால் கார்த்திகா, தீப்தி, சுரேஷ் மற்றும் மதன் நால்வரும் எதுவும் பேசாமல் வாயடைத்துப்போய் ஸ்க்ரீனையே பார்த்துக்கொண்டு இருந்தனர். ‘என்னோட சிஇஒ லைஃப்ல எத்தனையோ க்ரைசிஸ் ஹேண்டில் பண்ணி இருக்கேன், ஆனா இப்படி ஒரு இன்ட்ரஸ்டிங்கான க்ரைசிஸ் முதல் முறையா நான் ஹேன்டில் பண்ற வாய்ப்பு மிஸ்டர் எக்ஸ் மூலமா எனக்கு கிடைத்தது. அதுவும் நான் ஒரு வார்த்த சொன்னா போதும் தன்ன டாக்ஸ் பண்ணிக்க ரெடியா ஒருத்தர் இருக்கார்ன்னு யோசிக்கும்போது அவர் மேல் மரியாதை தான் வந்தது. இருந்தாலும் இது சைபர் செக்யூரிட்டி சம்பந்தப்பட்டதால நம்ம கம்பெனி சிஐஎஸ்ஒ கிட்ட பைனல் டிசிஷன் எடுக்க கேட்டுக்கிட்டேன், அவர் இன்னைக்கு தன் முடிவை இந்த ப்ராட்காஸ்ட்ல சொல்ல தயாரா இருக்காரு, அவர் என்ன சொல்கிறார்னு கேளுங்க’ சீஇஓ முடித்ததும் சிஐஎஸ்ஒ திரையில் தோன்றினார்.

ஆடிட்டோரியத்தில் இருந்த எல்லோரும் சிஐஎஸ்ஒ என்ன சொல்ல போகின்னார் என்று மிக ஆர்வமுடன் அவர்கள் சீட்டின் நுனியில் அமர்ந்தவாறு ஸ்கிரீனை பார்த்துக்கொண்டிருந்தனர். தீப்தியும் சுரேஷும் மிகவும் ஆர்வத்துடன் என்ன சொல்ல போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தனர். இதுவரை சிஇஒ சொன்னதை வைத்து பார்க்கும்போது கார்த்திகாவுக்கு அந்த மிஸ்டர் எக்ஸ் மதனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பலமாக நம்பினாள், அந்த பெண் தானாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது. சிஐஎஸ்ஒ சரண் அடைய சொன்னால் மதன் கண்டிப்பாக தன் உண்மையான அடையாளத்தை வெளிபடுத்தி விடுவான் என்று உறுதியாக நம்பினாள். மதனின் இந்த நிலைமைக்கு தான்தான் காரணம் என்று என்னும் போது கார்த்திகாவின் கண்கள் கலங்கியது. மதன் என்ன செய்கிறான் என்று கார்த்திகா மதனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

NOTE: வாசகர் குறிப்பு

இப்பொழுது பேசவிருக்கும் சிஐஎஸ்ஒ பேசுவது இங்கு தமிழில் இருந்தாலும் அவர் ஆங்கிலத்தில் பேசியிருப்பார் என்று எடுத்துக்கொள்ளவும்

‘அலோ மிஸ்டர் எக்ஸ். நீங்க இந்த ப்ராட்காஸ்ட் பார்த்துக்கிட்டு இருப்பீங்கன்னு நம்புறேன். ஃபர்ஸ்ட் டாப் ஆல் உங்களுக்கு ஒரு பிக் தேங்க்ஸ், நான் சில மாதங்களாக என்னோட செக்யூரிட்டி டீம ரீ ஆர்கனைஸ் பண்ணி ரெட் அண்ட் ப்ளூ டீம்ஸ் பார்ம் பண்ண அப்ரூவல் வாங்க போராடிக்கிட்டு இருந்தேன். நம்ம சிஇஒ அப்ரூவல் தள்ளி போட்டுக்கிட்டே இருந்தார். நீங்க உள்ளே புகுந்தது தெரிய வந்ததும் ப்யூச்சர்ல இப்படி நடக்காம இருக்க என்ன பண்ணலாம்னு என்கிட்ட கேட்டார். அதுக்கு நான் ஏற்கனவே சொன்ன ரெட் அண்டு ப்ளூ டீம்ஸ் இருந்திருந்தா இத தடுத்திருக்கலாம், மிஸ்டர் எக்ஸ் என்ன பண்ணாறோ அதைத்தான் இந்த ரெட் டீம் ஒரு குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளியில் யாருக்கும் தெரியாம பண்ணுவாங்க, அந்த ரெட் டீம் உள்ள நுழைய விடாமல் இந்த ப்ளூ டீம் தடுப்பாங்க அப்படின்னு டீட்டெய்ல்டா எக்ஸ்ப்லெயின் பண்ணேன். உடனே என்னோட பிரப்போசல் அப்ரூவ் பண்ணி இம்மீடியட்டா என்னோட சைபர் செக்யூரிட்டி டீம்ஸ் ரீ ஆர்கனைஸ் பண்ண சொல்லிட்டாரு. உங்களால இப்ப நம்ம கம்பனியில ரெட் அண்ட் ப்ளூ டீம்ஸ் பார்ம் ஆகிடுச்சு, என்னோட டீம்ல இருக்குற செக்யூரிட்டி ரிசர்சர்சும் பூது உத்வேகத்தோட இருக்காங்க. சோ, ரெட் டீமோட இம்பார்ட்டன்ஸ் நம்ம சிஇஒக்கு புரிய வச்சதுக்கு பிக் தாங்ஸ். சிஇஒ விருப்பப்பட்டா உங்கள டாக்ஸ் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருந்தீர்கள், அந்த முடிவ சிஇஒ என்ன எடுக்க சொல்லிட்டார். எங்களுக்கு உங்க உண்மையான முகத்தை பார்க்கணும்னு ஆவலா இருக்கு. ஆனா, உங்க விருப்பம் இல்லாமல் உங்களை நாங்க பார்க்க விரும்பல. நீங்க விரும்பினா, நீங்க உள்ள புகுந்த அந்த சர்வர் வீலேன் சப்நெட்ல அந்த சர்வருக்கு ஒதுக்கப்பட்ட ஐபி அட்ரஸ்ஸ ஆதாரமா வச்சு நான் தான் அந்த மிஸ்டர் எக்ஸ் அப்படின்னு எனக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். எங்க ரெட் டீம்ல உங்களுக்கு ஒரு போஸ்டிங் ரிசர்வ் பண்ணி வச்சிருக்கோம், உங்களுக்காக அந்த இடம் எப்போதும் காத்துக்கிட்டு இருக்கும். வி ஆர் வெயிட்டிங் பார் யூ மிஸ்டர் எக்ஸ்’ சிஐஎஸ்ஒ பேசி முடித்தவுடன் ஆடிட்டோரியத்தில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்டி பாராட்டினர். மிஸ்டர் எக்ஸையும் அவரை மன்னித்து அவருக்காக உயரிய ஒரு வேலை காத்துக் கொண்டிருக்கிறது என்று சொன்ன தங்கள் கம்பனின் மேனேஜ்மன்டையும் எல்லோரும் வெகுவாக பாராட்டினார்கள். மீண்டும் சிஇஒ திரையில் வந்து ‘தேங்ஸ் பார் திஸ் நைஸ் எக்ஸ்பீரியன்ஸ் மிஸ்டர் எக்ஸ், குட்லக் எவ்ரிபடி, உங்கள வேற ஒரு மீட்ல சந்திக்கிறேன். பாய்’ என்று சொல்லிவிட்டு ப்ராட்காஸ்ட் நிறுத்தினார்.

‘ஒரு ஹேக்கர் பிளாக் போஸ்ட் படிச்சது மாதிரி இருந்தது, அந்த எக்ஸ் ஸ்டேஜ் பை ஸ்டேஜா சூப்பரா எக்ஸ்ப்ளைன் பண்ணான்’ நால்வரும் அமர்ந்திருந்த வரிசைக்கு முன் வரிசையில் இருந்த ஒருவர் சொல்லியவாறே எழுந்து ஆடிட்டோரியத்திற்கு வெளியில் செல்ல தயாரானார். ‘கடைசி வரைக்கும் அந்த எக்ஸ் யாருன்னு சொல்லாம போயிட்டாங்க. அதுதான் வருத்தமா இருக்கு’ இன்னொருவர் கூறினார். ‘அந்த எக்ஸ் கொடுத்து வச்சவன். ரெட் டீம் எல்லாம் ஜாயின் பண்ணா செம்ம காசு தெரியுமா’ இன்னொருவர் கூற ‘யோவ், அவனே நொந்துபோய் எக்ஸ் லவ்வரோட நம்பர் வாங்கி வைக்காத விரக்தியில் ஏதோ கஷ்டப்பட்டு நம்பர் எடுத்திருக்கான், இப்பவாவது அவன் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருக்கட்டும்னு வேண்டிக்கோங்கயா’ ஒரு சீனியர் எம்ப்ளாயி மிஸ்டர் எக்ஸின் நிலையை எண்ணி வருத்தப்பட்டு பேசிக்கொண்டே வெளியில் சென்றார். எல்லோரும் ஆடிட்டோரியத்தில் இருந்து வெளியில் சென்றுவிட்டனர். ஆனால் கார்த்திகா, தீப்தி, சுரேஷ் மற்றும் மதன் மட்டும் சீட்டிலிருந்து எழவில்லை. தீப்தியும் சுரேஷும் மதனுக்கு முன் இருக்கும் வரிசையில் மதனுக்கு நேராக இருக்கும் அடுத்தடுத்த இரண்டு சீட்டுகளில் போய் பின்புறமாக திரும்பி மதனை பார்த்தவாறு ‘எப்படா இதெல்லாம் பண்ண? மாட்டியிருந்த என்ன நடந்திருக்கும் தெரியுமில்ல?’ சுரேஷ் மதனை கேட்க மதன் மௌனமாக இருந்தான். ‘கார்ல வர்றப்ப போன் பண்ணி அக்கா கிட்ட பேச சொன்னப்ப போன் நம்பர் இல்லைன்னு சொன்னீங்களே அதனாலதான் இப்படி பண்ணீங்களா?’ தீப்தியும் தன் பங்கிற்கு மதனை மடக்கினாள். அப்பொழுதும் மதன் எதுவும் பேசவில்லை. ‘ஏதாவது பேசுடா, நீதான மிஸ்டர் எக்ஸ்’ சுரேஷ் கேட்க மதன் நிதானமாக தன் செல்போனை எடுத்து அதில் ஒரு வீடியோவை காட்டினான். அது மிஷன் இம்பாசிபில் 5 ரோக் நேஷன் படத்தின் க்ளைமேக்‌ஸில் ஐஎம்எப் லீடராக நடித்திருக்கும் ஜெர்மி ரென்னர் பேசும் டயலாக், அந்த டயலாக்கில் ரென்னர் ஐ கேன் நீதர் கன்ஃபார்ம் நார் டெனி எனி அலெகேஷன்ஸ் என்று சொல்வார். ‘சீரியசான சிச்சுவேஷன்ல கூட நக்கல் பண்றத மறக்காதடா. F**k ஜெர்மி ரென்னர், F**k ஈத்தன் ஹான்ட், F**k ஐஎம்எப், F**k மிஷன் இம்பாசிபில், F**k என்எஸ்ரே, F**k ஜிசிஎச்க்யூ, F**k ரிசர்ச் அன்ட் அனலைசிஸ் விங், F**k யூ’ என்று சுரேஷ் மதனை பார்த்து திட்டிவிட்டு ‘அவன் கிட்ட யாரு கேட்டாலும் எப்படி கேட்டாலும் அந்த வீடியோவ தான் காட்ட போறான், எனக்கு பசிக்குது நீ வரியா இல்லையா?’ என்று சுரேஷ் தீப்தியிடம் கேட்டான். தீப்தி கார்த்திகாவிடம் ‘வாங்கக்கா போகலாம்’ என்று கூறினாள். அதற்க்கு கார்த்திகா ‘நீங்க போய்டிருங்க பிண்ணாடியே வரேன்’ என்று சொன்னாள். தீப்தியும் சுரேஷும் ஆடிட்டோரியம் விட்டு வெளியே சென்றனர். கார்த்திகாவும் மதனும் நடுவில் இரண்டு சீட் இடைவெளியில் அமர்ந்திருந்தனர். கார்த்திகா மதனை பார்த்தாள். மதனும் கார்த்திகாவை பார்த்தான். இருவரும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தனர். கார்த்திகாவின் கண்கள் கலங்கியதை பார்த்த மதனின் கண்களும் கலங்கியது. கார்த்திகா ஏன் என்பதுபோல் தன் கண்கலாளேயே கேட்க மதன் என்ன சொல்வதென்று தெரியாமல் தலை குனிந்தான். கார்த்திகா எழுந்து வந்து மதன் அருகாமையில் உட்கார்ந்தாள். கார்த்திகா மதனின் முகத்தை நிமிர்த்தி மீண்டும் ஏன் இப்படி செய்தாய் என்பதுபோல் முகபாவனையில் கேட்டாள். மதனால் அவளை பார்க்க முடியவில்லை. உடனே கார்த்திகா மதனின் கைகளில் இருந்த செல்போனை எடுத்து தன் செல்போனில் இருந்து மதனின் நம்பருக்கு கால் செய்தாள். சில வினாடிகளில் மதனில் செல்போன் அடித்தது. கார்த்திகா கணித்தபடியே மதனின் செல்போனில் அவளின் நம்பர் கார்த்திகா என்று சேமித்து வைக்கப்பட்டிருந்தது. கார்த்திகா கால் கட் செய்தவுடன் மதன் செல்போனின் லாக் ஸ்கிரீனில் weechat-android என்ற ஒரு IRC client அப்ளிகேஷனில் #WelcomeCEO என்ற IRC channel ல் சிஇஒ மிஸ்டர் எக்ஸ்சுக்கு இன்று நடந்த சிஇஒ ப்ராட்காஸ்ட் அட்டென்ட் செய்தீர்களா என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். அதை பார்த்ததும் அவள் நம்பியது போல் மதன் தான் மிஸ்டர் எக்ஸ் என்பதை உருதிப்படுத்திக்கொண்டாள். அந்த மெசேஜை மதனுக்கு காட்டினாள். மதனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கார்த்திகாவும் மதனும் அருகருகே உட்கார்ந்து இருந்தனர். எதுவும் பேசவில்லை. அப்போது சுரேஷ் ஆடிட்டோரியத்தின் நுழைவாயிலில் இருந்து ‘டேய், வாங்கடா சாப்பிடலாம், பசி உயிரே போகுது’ என்று மதனை பார்த்து கத்தினான். மதன் எழ கார்த்திகாவும் எழுந்து ஆடிட்டோரியம் விட்டு வெளியே வந்தனர்.

நால்வரும் கேண்டீனில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ‘நீங்க எப்ப சென்னை வந்தீங்க கார்த்திகா? டீம் லீட் ஆகிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். கங்கிராட்ஸ்’ என்று சுரேஷ் கார்த்திகாவை பார்த்து கூற. ‘தேங்ஸ், சிஇஒ கிட்ட இருந்து மெயில் வந்ததால என் ப்ராஜக்ட் மேனேஜர் ஆபிசுக்கு ஒரு நாள் வந்து போக சொன்னார். அதான் இன்னைக்கு வந்தேன்’ என்று கார்த்திகா கூறினாள். ‘கார்ல ரிட்டர்ன் ஆகும் போதே அந்த லூசுப்பய எக்ஸ் கிட்ட உங்க நம்பர் கொடுத்து பேச சொன்னோம், பெரிய புடுங்கி மாதிரி வேணாம் அது தப்பு அப்படி இப்படின்னு கதவிட்டான். கடைசியில பார்த்தா எனக்கே தெரியாம இவ்வளவு வேலை பாத்துருக்கான்’ சுரேஷ் மதனை பார்த்து எக்ஸை திட்டுவது போல் மதனை திட்டினான். கார்த்திகா எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள். ‘என்ன இருந்தாலும் நம்ம கம்பெனி சிஐஎஸ்ஒ அவரோட ரெட் டீம்ல மிஸ்டர் எக்சுக்கு ஒரு தனி இடம் கொடுத்து வெயிட் பண்றது பெரிய விஷயம்’ என்று தீப்தி மதனை பார்த்து பாராட்டினாள். மதன் எதையும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ‘டேய் பாத்துடா, நீ சொன்ன மாதிரி பாரன்சிக் எக்ஸ்பர்ட்ஸ் விர்சுவல் மெஷின்ல லினக்ஸ் யார் யார் யூஸ் பண்றாங்கன்னு கணக்கெடுத்து மிஸ்டர் எக்ஸ் புடிச்சுட போறாங்க’ என்று சுரேஷ் மதனை உசுப்பேத்த ‘டேய், ஒரு sql query ரன் பண்ணவே அவ்வலவு யோசித்தவன் இத கூடவா யோசிக்க மாட்டான். அவன் வேல முடிஞ்சதும் அவன் டிஜிட்டல் புட்பிரின்ட்ஸ்ஸ மறைக்க அவனோட விர்சுவல் மெஷின எப்பவோ விண்டோஸ்சுக்கு மாத்திட்டான்’ மதன் சொன்னவுடன் சுரேஷ், தீப்தி மற்றும் கார்த்திகா புன்னகைத்தனர். ‘ஐ மீன், மிஸ்டர் எக்ஸ் மாத்திட்டு இருப்பான்னு சொல்ல வந்தேன்’ என்று மதன் சமாளித்தான். எல்லோரும் சாப்பிட்டு விட்டு அவரவர் கேபினுக்கு சென்றனர்.

அன்று இரவு பதினோரு மணி ஐம்பது நிமிஷம், சுரேஷிற்கு அவன் வீட்டில் இருந்து ஒரு கால் வந்தது. ‘எப்போ, இப்ப எங்க இருக்காங்க, பேசுராங்களா. நான் கிளம்பி வரேன்’ சுரேஷ் பதற்றத்துடன் பேசிவிட்டு தன் சட்டையை தேடினான். பக்கத்தில் பார்த்துக்கொண்டிருந்த மதன் ‘என்னடா?’ என்று கேட்டான். சுரேஷ் கண்களில் கண்ணீருடன் ‘அம்மாவுக்கு மறுபடியும் கார்டியாக் அரெஸ்ட், ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போறாங்க’ என்றான். உடனே மதன் தன் சட்டையை போட்டுக் கொண்டு அவனும் புறப்பட தயாரானான். ‘டேய் நீ இருடா’ சுரேஷ் கலங்கியவாறு மதனை பார்த்து கூற ‘டேய் மூடிக்கிட்டு வந்து பைக்ல உட்கார்ரா, இந்த நிலைமையில வண்டி ஓட்டிக்கிட்டு போவ’ சுரேஷை உட்கார வைத்துக்கொண்டு மதன் அடுத்த இருபது நிமிடத்தில் இருவரும் ஆஸ்பிட்டலில் இருந்தனர். சுரேஷ் டாக்டரிடம் பேசிவிட்டு மதனிடம் வந்தான் ‘கார்டியாக் அரெஸ்ட் இல்ல, ஜஸ்ட் ஒரு சின்ன ஏர் ஜங்ஷன், ஆக்ஸிஜன் வச்சிருக்காங்க, பயப்பட ஒன்னும் இல்லன்னு சொன்னாங்க’ என்று கூறினான். மதன் சுரேஷ் கூறிய பிறகுதான் நிம்மதி அடைந்தான். சுரேஷின் அம்மாவிடம் தீப்தியின் அம்மா உட்கார்ந்திருந்தார். சுரேஷும் மதனும் ஹாஸ்பிடல் வெளியே இருந்தனர். அப்பொழுது தீப்தியை கார்த்திகா கயலின் ஆக்டிவாவில் கூட்டிக்கொண்டு வந்தாள். ‘எங்கடா? எப்படி இருக்காங்க?’ தீப்தி வந்தவுடன் சுரேஷிடம் கேட்டாள். ‘ஒன்னும் இல்லடி, பயப்படாத, உள்ள இருக்காங்க போய் பார்’ என்று கூறி உள்ளே அனுப்பி வைத்தான். அன்று இரவு முழுவதும் சுரேஷின் அம்மாவும் தீப்தியின் அம்மாவும் ரூமின் உள்ளே இருக்க தீப்தியும் கார்த்திகாவும் ரூமுக்கு வெளியில் இருந்தனர். சுரேஷும் தீப்தியும் அடிக்கடி ரூமிற்கு உள்ளே சென்று வந்து கொண்டிருந்தனர். மருநாள் காலையில் சுரேஷின் அம்மா நன்றாக பேசும் நிலைக்கு வந்தார். கார்த்திகாவும் மதனும் ரூமுக்கு வெளியில் இருப்பதை அறிந்த சுரேஷின் அம்மா, கார்த்திகாவை முதலில் அழைத்தார்.

‘என்னம்மா கார்த்தி, எப்படி இருக்க?’ சுரேஷின் அம்மா கேட்க ‘உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு ஆண்டி?’ என்று கார்த்திகா கேட்டாள். ‘இதோ நீயே பாக்குறியே’ என்று சுரேஷின் அம்மா கூறினார். ‘நீங்க கவலைப்படாதீங்க ஆண்டி, உங்கள நல்லா பாத்துக்க தீப்தி இருக்கா, சுரேஷ் இருக்காரு’ கார்த்திகா கூற ‘அதனால தாம்மா நானும் தீப்தியோட அம்மாவும் சேர்ந்து ஒரு முடிவெடுத்து இருக்கோம், கூடிய சீக்கிரம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டா என்னோட கடமை முடியும். நான் போனாலும் பிரச்சனை இல்லை’ என்று சுரேஷின் அம்மா கூற ‘அப்படியெல்லாம் சொல்லாதீங்க ஆண்டி, தீப்தி பதினாறு பசங்க பெத்து தரப்போரா, அவங்கல எல்லாம் எடுத்து கொஞ்சனும், இப்பவே போறேன்னு சொன்னா எப்படி’ கார்த்திகா கூற ‘சும்மா இருக்கா’ தீப்தி வெட்கத்துடன் கார்த்திகாவை கேட்டுக்கொண்டாள். ‘வீட்ல அப்பா அம்மா நல்லா இருக்காங்களா?’ சுரேஷின் அம்மா கேட்க ‘நல்லா இருக்காங்க ஆண்டி’ என்று கார்த்திகா பதில் கூறினாள். ‘மதன் எங்க போனான்’ சுரேஷின் அம்மா சுரேஷை பார்த்து கேட்க ‘வெளிய இருக்கான்’ என்று சொல்லி சுரேஷ் மதனை ரூமிற்கு உள்ளே அழைத்தான். ‘இப்ப எப்படி இருக்கும்மா’ மதன் உள்ளே வந்ததும் கேட்டான் ‘வாடா. நான் இருக்குறது இருக்கட்டும், நீ எப்படி இருக்க? டிப்ரஷன்ல இருக்கிறதா கேள்விப்பட்டேன். ரூம்ல ஒரே சோகப் பாட்டா போட்டு சாகடிக்கிறியாமே, ஏ ஆர் ரகுமான் ஏதோ கொஞ்சமாத்தான் சோகப் பாட்டு போட்டிருக்கார், கொஞ்சமாவது விட்டு வெய்டா’ சுரேஷின் அம்மா சொன்னதும் மதன் சுரேஷை முறைத்தபடி ‘அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா’ என்று சுரேஷின் அம்மாவிடம் கூறினான். ‘அப்புறம் எதுக்கு தாடி வச்சிருக்க?’ என்று சுரேஷின் அம்மா கேட்க கார்த்திகா ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் இருந்தாள். சுரேஷும் தீப்தியும் கார்த்திகாவை பார்த்து புன்னகைத்தனர். ‘ஷேவ் பண்ண டைம் இல்லம்மா அதான் வளந்துருச்சு’ மதன் சமாளித்தான். ‘சுரேஷ் சொன்னானா?’ கார்த்திகாவின் அம்மா மதனை பார்த்து கேட்டார், ‘என்னம்மா?’ மதன் புரியாமல் கேட்க ‘சுரேஷுக்கும் தீப்திக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணனும், என் கடமை முடிச்சிட்டா நிம்மதியா போய் சேர்ந்திடுவேன்ல?’ சுரேஷின் அம்மா கூற ‘நல்ல விஷயம் சொல்லும் போது எதுக்கும்மா இதெல்லாம். எங்கள விட்டுட்டு நீங்க எங்கேயும் போக மாட்டீங்க, அதுக்கெல்லாம் ரொம்ப நாள் இருக்கு’ என்று மதன் ஆறுதலாக கூறினான். ‘கல்யாணம் முடிஞ்ச கையோட சுரேஷை கம்பெனி பொருப்ப ஏத்துக்க சொல்லிட்டேன். அவனும் சரின்னிட்டான். என்னாலயும் இதுக்கு மேல முடியாதுடா மதன்’ சுரேஷின் அம்மா மதனிடம் கூற ‘நீங்க செய்வது சரிதாம்மா’ என்று கூறினான். அங்கு சில நிமிடங்கள் யாரும் எதையும் பேசவில்லை. ‘மறுபடியும் அப்பா அம்மாவ கூட்டிட்டு போய் கார்த்தி வீட்ல பொண்ணு கேட்டியா?’ சுரேஷின் அம்மா மதனை பார்த்து கேட்க மதன் சுரேஷின் அம்மாவிடம் இருந்து இந்த கேல்வியை எதிர்பார்க்கவில்லை. ‘என்ன நடந்ததுன்னு சுரேஷ் சொன்னான். அதான் மறுபடியும் போய் பொண்ணு கேட்டியான்னு கேட்டேன்’ சுரேஷின் அம்மா விவரமாக மதனிடம் கேட்டார். ‘எப்படிம்மா மறுபடியும் போய் கேட்க முடியும்?’ என்று மதன் கூற ‘லவ்ல அவமானம் அசிங்கம்லாம் சாதாரனம். லவ்வுக்காக எத்தன முற வேணும்ணாலும் அவமானப்படலாம், மொதல்ல உன் அப்பா அம்மாவ கூட்டிக்கிட்டு அவ அப்பா அம்மா போய் பாரு’ சுரேஷின் அம்மா கூற, ‘எப்படிம்மா என் அப்பா கிட்ட போய் நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன் வந்து கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்பேன், என் அப்பாவ பத்தி உங்களுக்கே தெரியும், அந்த பொண்ணு உன்ன லவ் பன்றாலான்னு தான் அவர்கிட்ட இருந்து வர மொத கேள்வியா இருக்கும். அந்த கேள்விக்கு இப்ப என்கிட்ட பதில் இல்ல’ மதன் சுரேஷின் அம்மாவிடம் கூற மீண்டும் அந்த இடம் அமைதியானது. சில நிமிடங்கள் யாரும் எதையும் பேசவில்லை. அப்போது சுரேஷ் ‘டேய், நமக்கு பிடிச்சவங்க நமக்கு கிடைக்கனும்னா, நாமதான் இறங்கி வரனும்’ சுரேஷ் மதனை பார்த்து கூற ‘நான் எவ்வளவு வேணும்னாலும் இறங்கி வர தயாரா இருக்கேன்டா, ஆனா என்னால என்னோட கைய கொடுக்கத்தான் முடியும், அவங்க கைய புடிச்சி இழுத்துக்கிட்டு வர முடியாது. என் கைய அவங்கதான் புடிக்கணும். கைய புடிக்க விருப்பம் இல்லாதவங்க கிட்ட என் கைய நீட்டி என்ன பிரயோஜனம்?’ மதன் சற்று உரக்கமாக சுரேஷை பார்த்து கேட்டான். ‘ஆமாண்டா, அவங்க அப்பாவ திட்டிட்டு நீ கைய நீட்டினா உடனே உன் கைய பிடிச்சிக்கிட்டு வருவாங்க, லூசு தனமா பேசாதடா?’ சுரேஷும் சற்று உரக்கமாக மதனை பார்த்து கேட்டான். ‘நீங்க ஏண்டா இப்ப சண்ட போட்ரீங்க’ சுரேஷின் அம்மா குறுக்கிட்டு ‘மதன், எப்படி நான் சுரேஷையும் தீப்தியும் பாக்குறேனோ அப்படித்தான் உன்னையும் கார்த்திகாவையும் பாக்குறேன். நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கணும், அதுதான் என் விருப்பம். நீ இன்னொரு முறை அவ அப்பா அம்மா கிட்ட போய் பொறுமையா நிதானமா பேசு. எல்லாம் நல்லபடியா நடக்கும்’ சுரேஷின் அம்மா மதனிடம் கூற ‘யாரு இவனாம்மா? பொறுமையா பேசுவானா? மறுபடியும் காலண்டர் பாத்துட்டு டென்ஷனாகி பிரச்சனை பண்ணிட்டு வருவான்’ சுரேஷ் மதனை பார்த்தவாறே தன் அம்மாவிடம் கூறினான். ‘சும்மார்ரா, மதன பத்தி எனக்கும் தெரியும்’ என்று சுரேஷின் அம்மா சுரேஷை சமாதானப்படுத்தினார். அப்போது டாக்டர்ஸ் மார்னிங் செக்கப் வந்ததால் தீப்தியின் அம்மாவை தவிர மற்றவர்கள் ரூமை விட்டு வெளியே வர நேர்ந்தது.

‘எப்படா டிசைட் பண்ணீங்க?’ மதன் சுரேஷிடம் கேட்டான். ‘அம்மா தீப்திய பார்த்தவுடன் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க, என்னாலயும் இதுக்கு மேல அம்மாவ கஷ்டப்படுத்த விருப்பமில்ல, எவ்வளவு நாள்தான் எங்க கம்பெனி பொருப்ப தாங்கிக்கிட்டு இருப்பாங்க, அதான் ஒக்கே சொல்லிட்டோம்’ சுரேஷ் தீப்தியை பார்த்துக் கொண்டே மதனிடம் கூறினான். ‘இப்ப இருக்குற வேலைய ரிசைன் பண்ணனும் இல்லையா’ மதன் கேட்க ‘ஆமாம்டா, ரெண்டு பேரும் ரிசைன் பண்றோம், தீப்தியும் எங்க கம்பனியில ஜாயின் பண்றா’ சுரேஷ் விலக்கினான். ‘கங்கிராட்ஸ் தீப்தி, பைனலி’ கார்த்திகா புன்னகையுடன் தீப்தியிடம் கூறினாள். ‘அப்படியே சொல்லிட்டு ஊருக்கு போய்டாதிங்க, சுதா உட்பட உங்க வீட்ல இருந்து எல்லோரும் வந்துடனும். இன்விடேஷன் வைக்க வீட்டுக்கு வரோம்’ தீப்தி கூறினாள். ‘நிச்சயதார்த்தம் பிளஸ் மேரேஜ் ரெண்டும் ஒரே டைம்லயா?’ மதன் கேட்க ‘ஆமாண்டா, அத வேர தனித்தனியாக எதுக்கு வெச்சிக்கிட்டு, ரெண்டும் ஒரே டைம்ல முடிச்சிடலாம்னு அம்மா சொன்னாங்க’ சுரேஷ் கூறினான். ‘சரிடா அப்ப நான் கிளம்பறேன், மதியமாச்சும் ஆபீஸுக்கு போகனும்’ மதன் சுரேஷிடம் சொல்லிட்டு ‘வரேன் தீப்தி’ என்று தீப்தியிடம் சொல்லிவிட்டு கார்த்திகாவை பார்த்தான். கார்த்திகாவும் மதனை பார்த்தாள். இருவரும் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த சுரேஷ், ‘போய்ட்டு வாரேன் கார்த்தின்னு வாய தொறந்து சொல்லித்தான் தொலையேண்டா’ என்று மதனை திட்டினான். மதன் மனதிற்குள் சிரித்தபடி தன் பைக்கை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பினான். ‘நானும் புறப்படுறேன் தீப்தி, இப்ப பஸ் புடிச்சாத்தான் ஈவினிங் கோபி போக முடியும் நைட்டுக்குள்ள வீட்டுக்கு போய்டலாம்’ கார்த்திகா கூற ‘எதுக்கு பஸ்ல, எங்க டிரைவர் இருக்காரு, டைரக்டா வீட்ல விட்ர சொல்றேன்’ சுரேஷ் கூற ‘நீங்க வேற, தேவையில்லாம எதுக்கு, சரி நான் வரேன் தீப்தி, வரேன் சுரேஷ், அம்மாவ பாத்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டு தான் கொண்டு வந்த கயலின் ஆக்டிவாவை எடுத்துக்கொண்டு கார்த்திகா ஹாஸ்பிடலில் இருந்து கிலம்பினாள்.

தொடரும்..

நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]

%d bloggers like this: