துருவங்கள் – அத்தியாயம் 9 – மழலை காதல்

மழலை காதல்

அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, கயல் வழக்கம் போல தன் துணிகளை வாஷிங் மெஷினில் துவைத்து ஆற வைத்துக் கொண்டிருந்தாள், கார்த்திகா தன் லேப்டாப்பில் ஏதோ நோண்டி கொண்டிருந்தாள், தீப்தி படுத்துக்கொண்டு வாட்சாப்பில் சுரேஷுடன் சேட் செய்துகொண்டிருந்தாள். ‘தீப்தி, எப்பப்பாரு அந்த வாட்சப்ல இருக்கியே அப்படி என்னதான்டி பேசுவ’ காயல் கேட்க ‘நீங்க உங்க ஆள் கூட என்ன பேசுரீங்களோ, அதத்தான் நானும் பேசுரேன், என்ன நீங்க மேக்சிமம் ஒரு மணி நேரத்துக்குள்ள எல்லாத்தையும் பேசி முடிச்சிருவீங்க, ஏன்னா உங்க ஆளுக்கு டியுட்டிக்கு போகனும் அதனால அவர் தூங்கனும். என் ஆளுக்கு அப்படி எந்த ரிஷ்டிரிக்‌ஷனும் இல்ல, அதான் நிருத்தி நிதானமா மணிக்கணக்குல பேசுறோம்’ தீப்தி கூற ‘நாமலாச்சும் பரவாயில்லடி, இங்க ஒருத்தி லவ் பண்றோமா இல்லையான்னே தெரியாம சுத்திக்கிட்டிருக்கா, எப்ப இவ அடுத்த ஸ்டெப் போறது, எப்ப வாட்சப்ல மணிக்கணக்கா பேசுராது’ கயல் வருத்தப்பட ‘எனக்கும் காது கேட்குதுடீ, நானும் இங்கதான் இருக்கேன்’ கார்த்திகா தன் லேப்டாப்பை பார்த்தபடியே குரலை உயர்த்த ‘அவங்கதான் எப்பவோ அடுத்த ஸ்டெப்புக்கு போயிட்டாங்களே, அங்க பாருங்க, லேப்டாப்ல டெர்மினல் ஓப்பன் பண்ணி வச்சிருக்காங்க, எனக்கு தெரிஞ்சு மதன் அண்ணா தான் எப்பவும் டெர்மினல்ல இருப்பார்’ என்று தீப்தி சொல்ல ‘அந்த சாமியார் கூட சேர்ந்ததுல இருந்து இவ இப்படி மாறிட்டா, முன்னல்லாம் எப்ப பாத்தாலும் மேக்கப் போட்டுக்கிட்டு கண்ணாடி முன்னாடி இருப்பா, இப்ப என்னடான்னா அது பக்கமே போரதில்ல, முன்னாடி பத்து பேர் அவள பார்குறாமாதிரி மணிக்கனக்கா தேடி ட்ரஸ் எடுப்பா, இப்ப யாருமே கண்டுக்காம இருக்குறாமாதிரி ட்ரஸ் எடுக்குறா, போர போக்க பாத்தா கல்யாணம் பண்ணிக்கிட்டு புள்ள குட்டி பெத்துக்காம கன்னியாஸ்திரியா போயிடுவா போல இருக்கு’ கயல் கார்த்திகாவை கிண்டலடிக்க ‘இப்பவே கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோடி, இல்லாட்டி அப்புறம் க்யூல நிக்கனும்’ என்று கார்த்திகாவும் கின்டலடித்தாள். ‘தீப்தி, நீயும் சுரேஷும் எப்படி லாக் ஆனிங்க’ என்று கயல் கேட்க ‘அது ஒரு பெரிய கதை’ தீப்தி கூற ‘சொல்லு கேட்போம்’ என்று கயல் கூறினாள்.

‘சுரேஷ் எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும், சுரேஷ் அப்பா ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட், அவங்களுக்கு சொந்தமான ஒரு ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் ப்ரோடியூஸ் பண்ற கம்பெனி இருக்கு, அவங்க கம்பெனில தான் என் அப்பா வைஸ் ப்ரெசிடென்டா இருந்தார், ஏதாவது பங்ஷன் நடந்தா ரெண்டு பேமிலியும் மீட் பண்ணுவோம், அப்ப நானும் அவனும் சேர்ந்து விளையாடுவோம், அவன் வீட்ல அவன் ஒரே பையன், என் வீட்ல நான் ஒரே பொண்ணு, ஒரு கார் ஆக்‌ஸிடென்ல ரெண்டு பேரோட அப்பாவும் எங்கல விட்டு போயிட்டாங்க, சுரேஷோட அம்மா ஒரு அயர்ன் லேடி, தனி ஆளா இருந்து அந்த கம்பனிய வேர யார் கைக்கும் போகாத மாதிரி பார்த்துக்கிட்டாங்க. எங்க அப்மாவுக்கும் அவங்க கூடவே இருக்குற மாதிரி வேல போட்டு கொடுத்தாங்க, என்னையும் அவங்க பெத்த பொண்ணு மாதிரி படிக்க வச்சாங்க. எனக்கு பிராக்ரஸ் ரிப்போர்ட் வரும்போது முதல்ல அவன் அம்மா கிட்ட தான் காட்டுவேன் அப்புறமாத்தான் என் அம்மா கிட்ட காட்டுவேன். லீவ் வந்தா அவங்க வீட்ல தான் இருப்பேன் அவன் கூடத்தான் விளையாடுவேன், அவனுக்கு ப்ரண்ட்ஸ் சர்கல் ரொம்ப அதிகம், எப்ப பாத்தாலும் ப்ரண்ட்ஸ் கூடத்தான் சுத்திக்கிட்டு இருப்பான், ப்ரண்ட்சுங்களுக்காக எது வேணும்னாலும் செய்வான். அவன் ப்ரண்சுங்களோட ஆளுங்களோட அவன் ப்ரண்ட்ஸ்கல சேர்த்து வைக்க படாத பாடு பட்டிருக்கான், சில சமயம் அவனுங்களுக்காக அடியெல்லாம் வாங்கியிருக்கான், ஆனா அவன் ப்ரண்ட்சுங்க இவன எப்பவும் ஒரு ஜோக்கராத்தான் டிரீட் பண்ணுவாங்க, அவங்க ஆளுங்களும் இவன வந்துட்டான்டி ப்ரோக்கர்னு என் காது படவே கிண்டல் பண்ணியிருக்காளுங்க, எனக்கு பயங்கரமா கோவம் வரும், அவன போய் நாலு சாத்து சாத்தி அவங்க கூட சேராதடான்னு சொல்லுவேன், ஆனாலும் மருநாள் அந்த நன்றிகெட்ட நாயிங்க கூடத்தான் சுத்துவான், இப்படியேத்தான் ஸ்கூல்ல இருந்து வேலையில ஜாயின் பண்ண வரைக்கும் ப்ரண்ட்ஸ்சே கதின்னு இருந்தான், எனக்கும் அவன மத்தவங்க இப்படி ட்ரீட் பண்றாங்களேன்னு பாவமா இருக்கும் அதுவே நான் வளர வளர லவ்வா மாறிடுச்சு’ தீப்தீ தொடர்ந்தாள்.

‘ஒரு நாள் அவனும் அவன் அம்மாவும் வீட்ல இருக்கும்போது நேரா அவன் அம்மா கிட்ட போய் உங்க பையன் இப்படி பொறுப்பில்லாம சுத்திக்கிட்டு இருக்கான், நீங்க கண்டுக்காம இருக்கீங்க, உங்களுக்கு உங்க கம்பெனி ஒழுங்கா உங்ககிட்ட இருக்கனும்னா அவன மாத்தணும், அதுக்கு ஒழுங்கு மரியாதையா என்ன அவருக்கு கல்யாணம் பண்ணி வைங்க. அப்பத்தான் அவனுக்கு பொறுப்பு வரும்னு சொன்னேன்’ தீப்தி சொன்னதும் ‘வாட்?’ என்று கயலும் கார்த்திகாவும் வியப்பில் ஒரு சேர கேட்டனர். ‘ஆமா, நான் தான் பர்ஸ்ட் என் லவ்வ எக்ஸ்போஸ் பண்ணேன், அதுவும் அவன் அம்மாகிட்ட, அப்ப அவன் பி.ஈ பைனல் செம்,நான் பர்ஸ்ட் சொம், ரெண்டு பேரும் ஒரே காலேஜ்’ தீப்தி கூற ‘அப்புறம் என்னாச்சு’ என்று கயல் கேட்க ‘நான் முன்னாடியே சொன்னேன்ல, என் அத்தை ஒரு அயர்ன் லேடின்னு, அவங்களுக்கு போல்டா இருக்குறவங்கள ரோம்ப புடிக்கும், அதனால என்னையும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும், அவங்க என் பையன ஒரு பொறுப்பான பொண்ணுகிட்டத்தான் ஒப்படைக்கிறேன்னு சொல்லி அவன் கைய என் கையில கொடுத்தாங்க’ தீப்தி கூற ‘அப்புறம் என்னாச்சு’ என்று கயல் ஆவலுடன் கேட்க ‘எனக்கு பொருப்பில்லைன்னுதான சொல்றா, எனக்கும் ஒரு சாப்ட்வேர் கம்பெனி தொடங்கனும்னு லட்சியம் எல்லாம் இருக்கு, அதனால முதல்ல நான் ஒரு கம்பெனி நடத்துறதுக்கு உண்டான தகுதிய வலத்துக்குறேன், எப்ப இவ எனக்கு தகுதி இருக்குனு சொல்ராலோ அப்ப நான் நம்ம கம்பனி பொருப்ப எத்துக்குறேன் அப்படியே இவல கல்யாணமும் பண்ணிெக்குறேன் அப்படின்னு சொல்லி, படிப்ப முடிச்சி நம்ம கம்பனியில சாதாரண வேலக்காரனா வேலைக்கு சேர்ந்து இப்ப ஒரு ப்ராஜக்ட் மேனேஜரா இருக்கான்’ தீப்தி கூற ‘என்னது சுரேஷ் ப்ரஜக்ட் மேனேஜரா?’ கயலுக்கும் கார்த்திகாவிற்கும் இதை கேட்டதுமே வியப்படைந்தனர். ‘ஏன் யாரும் நம்பமாட்டேங்குரீங்க, நம்ம கம்பனியோட ஒரு முக்கியமான ப்ராஜக்ட்டுக்கு இவன்தாங்க ப்ராஜக்ட் மேனேஜர்’ தீப்தி அழுத்தமாக கூற ‘அப்ப சுரேஷ் மதன விட பெரிய ஆளா?’ என்று கார்த்திகா கேட்க ‘இல்லக்கா, ரெண்டு பேரும் ஒரே ஏஜ் தான். சுரேஷும் மதன் அண்ணாவும் ஒரே பே கிரேட் தான், ஆனா ரெண்டு பேரும் வேர வேர லைன், மதன் அண்ணா ஹார்ட்கோர் ப்ரோக்ராமர், சோ இப்ப அவர் சீனியர் டெவலப்பர். சுரேஷ் வெரி டேலன்டட் இன் மேனேஜ்மென்ட், நல்லா பேசுவான், அதான் அவன் இப்ப ஒரு ப்ராஜக்ட் மேனேஜர். மதன் அண்ணனுக்கு அடுத்து ஆர்கிடெக்ட் ஆகனும்னு எய்ம், சுரேஷுக்கு அடுத்து வைஸ் ப்ரெசிடென்ட் ஆகனுன்றது எய்ம். பட் எப்ப வேணும்னாலும் அவன் கம்பெனிக்கு சிஇஓ ஆயிடுவான்’ என்று தீப்தி கூற ‘பசங்க வெளிய பாக்குறதுக்கு கேர்லஸ்ஸா பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருக்குறாமாதிரித்தான்டி இருக்கு, பட் உள்ளுக்குள்ள ஒரு வெறியோட தான் இருக்காங்க’ கயல் சுரேஷின் கதையை கேட்டு ஆச்சரியப்பட்டாள்.

‘மதனுக்கும் சுரேஷுக்கும் எப்படி பழக்கம்’ கார்த்திகா கேட்க ‘சுரேஷ் வேலைக்கு ஜாயின் பண்ண புதுசுல நம்ம அப்பீஸ் சோழிங்கநல்லூர்ல இருந்ததால நார்த்ல இருந்து சவுத் மெட்ராஸ் வர ரொம்ப டைம் ஆகுது ரூம்ல தங்கலாம்னு டிசைட் பண்ணான். உதய் அண்ணா, சுரேஷ், நான் எல்லாரும் ஒரே ஏரியா, உதய் அண்ணா நம்ம கம்பனியில வொர்க் பண்ணிட்டு ஆல்ரெடி சோழிங்கநல்லூர்ல ரூம் எடுத்து தங்கி இருந்தார். சோ சுரேஷ் அவர் ரூம்ல போய் ஸ்டே பண்ணான். அப்பத்தான் உதய் அண்ணா ப்ராஜக்ட்ல மதன் அண்ணா ஜாயின் பண்ணார், அவருக்கும் ரும் தேவைப்பட்டதால உதய் அண்ணா ரூமுக்கு வந்துட்டார். மதன் அண்ணாவ பத்தித்தான் உங்களுக்கே தெரியுமே, வெரி இன்ட்ரோவர்ட், அதனால முதல்ல இவங்களுக்குள்ள செட்டே அகல, ஒரு வீக்கெண்ட் சுரேஷ் அவன் கூட இருந்த மத்த பொருக்கிங்க பேச்ச கேட்டு கார் எடுத்துட்டு கோவா போய் நல்லா குடிச்சிட்டு மட்டையாயிட்டான், சனிக்கிழமை நைட் 11.30க்கு எங்க வீட்டுக்கு அவங்க வீட்ல இருந்து வேலைகாரம்மா போன் பண்ணாங்க, பெரியம்மா நெஞ்ச புடிச்சிக்கிட்டு இருக்காங்கன்னு, அம்மாவையும் அத்தை ஆபீஸ் வேலையா டெல்லிக்கு அனுப்பி இருந்தாங்க, பதறி அடிச்சிட்டு நான் போய் அவங்கல ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணேன், மைல்டு கார்டியாக் அரஸ்ட், ப்லட் வெசில்ஸ்ல அக்யுமிலேஷன் இருக்கு அத க்லியர் செய்ய உடனே அப்ரேஷன் பண்ணனும் டூ லேக்‌ஸ் இமீடியட்டா கட்டுங்க ஆப்பரேஷன் அரேன்ஜ் பண்ணணும்னாங்க, என்கிட்ட அந்த நேரத்துல அவ்வலவு பனம் இல்ல, அத்தையோட அசிஸ்டென்ஸ் நம்பரும் என்கிட்ட இல்ல, இவனுக்கும் இவனோட ப்ரன்ஸ்சுன்னு இவன கெடுத்துக்கிட்டு திரிஞ்ச பொரம்போக்கு நாய்ங்களுக்கும் எத்தனையோ முறை ட்ரை பண்ணேன், எடுக்கல, உதய் அண்ணா நியாபகம் வந்தது அவருக்கு அடிச்சேன், அவருக்கு மருநாள் பொண்ணு பாக்கனும்னு அவரோட நேட்டிவ் வில்லேஜ்ல இருந்தார், என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன், அப்பத்தான் மதன் அண்ணா கால் பண்ணார், அவருக்கு உதய் அன்னா போன் பண்ணி சொல்லியிருக்கார். போன்ல பேசின மதன் அண்ணாகிட்ட எல்லா டீட்டேயிஸ்சும் சொன்னேன். இம்மீடியட்டா அவரோட அப்பா கிட்ட பேசி அவர் அப்பா அக்கவுண்டில் இருந்து என் அக்கவுன்டுக்கு டூ லேக்ஸ் ட்ரான்ஸ்பர் பண்ணார். நான் அத ஆஸ்பிட்டல்ல கட்டி ஆப்பரேஷனுக்கு அரேன்ஜ் பண்ணேன். காஞ்சிபுரத்தில் இருந்து வித்தின் பார்ட்டி பைவ் மினிட்ஸ்ல எங்க ஆஸ்பிட்டலுக்கு மதன் அண்ணாவும் அவர் அப்பாவும் வந்துட்டாங்க. மறுநாள் காலையில சுரேஷ்கிட்ட இருந்து போன் வந்தது, நடந்த விஷயத்தை சொன்னேன், அவனும் அடுத்த பிளைட் பிடிச்சு மெட்ராஸ் வந்தான். அவன் அப்பா டெத்துக்கு அப்புறம் அப்பத்தான் அவன் அழுது பார்த்தேன், மதன் அண்ணாவ கட்டி புடிச்சு அழுதான், என்னோட கைய புடிச்சு கிட்டு சாரி கேட்டான், அவன பாக்க ரொம்ப பாவமா இருந்தது, நானும் அழுதேன், அன்னில இருந்து இந்த குடிகார ப்ரண்ஷிப்புகல கொஞ்சம் கொஞ்சமா கட் பண்ணினான். மதன் அண்ணாவ புரிஞ்சிக்க ஆரம்பிச்சான். அவர மாதிரி சிம்பிளா இருக்க கத்துக்கிட்டான். அதுவரைக்கும் என்னோடது ஒன் சைட் லவ்வோன்னு எனக்குள்ள ஒரு டவுட் இருந்தது, அப்ப இருந்து தான் என்னோட லவ் ஒன் சைட் இல்ல டூ சைட்தான்னு கன்பார்ம் ஆச்சு, என் மேல ரொம்ப கேர் எடுத்துக்க ஆரம்பிச்சான்’ தீப்தி தன் கதையை சொல்ல கயலும் கார்த்திகாவும் தீப்தியை வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். தீப்தியின் கண்கள் ஈரமாயிருந்ததை இருவரும் உணர்ந்தனர்.

‘சுரேஷ ஃபர்ஸ்ட் டைம் பாக்கும்போது, ஹி மஸ்ட் பீ எ ரிச் ப்ளேபாய் கிட்னு தோனுச்சு, உன்ன முதன்முதலா பக்கும்போது ஷி மஸ்ட் பீ த விக்டம் ஆப் ஹிஸ் ப்ளேபாய்னஸ் அப்படின்னு தோனுச்சு, பட் ஐ ஆம் சோ ராங், ஐம் சாரி தீப்தி’ கயல் தீப்தி இடம் மன்னிப்பு கேட்க ‘அத விடுங்க, உங்க லவ் பத்தி சொல்லுங்க,’ என்று தீப்தி கேட்க ‘என் லவ் ஸ்டோரி உன் அளவுக்கு இன்ட்ரஸ்டிங் இல்லம்மா, எத்தனையோ படத்துல வந்த டிபிக்கல் லவ் ஸ்டோரிதான், என் சொந்த மாமா பையன், நான் கட்டிக்காம வேற எவளையாச்சும் கட்டிக்க விட்ருவேனா, என் அம்மாதான் அடம் புடிக்குறாங்க, மாமா வீட்ல எல்லோருக்கும் என்ன ரொம்ப பிடிக்கும், இன்பேக்ட் எங்கம்மா எத்தனையோ முறை பொண்ணு தர மாட்டேன்னு சொன்னாலும் பெரிய மாமா கயல் தான் என் மருமகன்னு எப்பவோ சொல்லிட்டார், என் வீட்லதான் இழுத்துக்கிட்டு இருக்கு, எப்படி முடிய போகுதுன்னு தெரியல, கூடிய சீக்கிரம் ரிசல்ட் கிடைக்கும்னு தோனுது’ கயல் தன் கதையை சொன்னாள். ‘கார்த்திகா அக்கா, உங்க ஸ்டோரி சொல்லுங்க’ என்று தீப்தி கேட்க ‘நான் யாரையும் லவ் பண்ணலம்மா, என் ஜாதகத்துல டியூஸ்டே ப்ராப்ளம் இருக்கு, என் அப்பா எப்படியாச்சும் டியூஸ்டே ப்ராப்ளம் இருக்கும் ஒரு பையன பாத்து கட்டிக்கோன்னு சொல்வாரு, அவன கட்டிக்க வேண்டியதுதான், சிம்பிள்’ கார்த்திகா சிரித்தவாரே கயலை பார்த்துக்கொண்டே கூற ‘அப்ப ஆப்பிஸ்ல நீயும் மதனும் பாட்டு பாடும் போது பண்ண ரொமாண்சுக்கு பேரு என்னடி?’ கயல் கேட்க ‘வி ஆர் ஜஸ்ட் குட் பிரண்ட்ஸ் டில் நவ், இத நான் சொல்லல, அவர் அந்த வீடியோக்கு வந்த கமெண்டுக்கு ரிப்லை போட்டிருக்கார், வேணும்னா போய் பாரு’ கார்த்திகா கூற ‘அவன் உன் மேல இருக்குற அக்கறையில அந்த ரிப்ளை போட்டிருக்கான், லவ் பண்ணா சொல்லித்தொலைங்கடி, பசங்க தான் முதல்ல சொல்லணும்னு அடம்புடிங்காதீங்க, எனக்கென்னவோ இதுங்க ரெண்டும் ஈகோ புடிச்சு அலையப்போகுதுங்கன்னு தோனுது, தீப்தி உனக்கென்னடி தோணுது?’ கயல் தீப்தியை பார்த்து கேட்க ‘அப்படி எல்லாம் இல்லக்கா, தே ஆர் நாட் எட் பீலிங் த பெயின், ஒருத்தர் இல்லைன்னா இன்னொருத்தர் இல்லைன்னு எப்ப தோனுதோ, அப்ப கண்டிப்பா சொல்லிடுவாங்க’ தீப்தி கூற ‘அதெல்லாம் இருக்கட்டும் தீப்தி, இங்க நாம பேசுறது நம்ம மூனு பேருக்குள்ளதான் இருக்கனும், வாட்சப்ல மொக்க போட்றதுக்கு எதுவும் டாபிக் கிடைக்கலைன்னு இங்க நடக்குறத சுரேஷுக்கு சொன்ன, மவல கொண்றுவேன், எங்கம்மா எம்எல்ஏ, நியாபகம் வெச்சுக்கோ’ கயல் தீப்தியை பார்த்து கூற ‘நான் அவ்வலவு சீப்பான பொண்ணு இல்லக்கா, நீங்க எங்கிட்ட தைரியமா ஷேர் பண்ணிக்கலாம்’ என்று தீப்தி உறுதிப்படுத்தினாள்.

கார்த்திகா மதனின் கியூப்பிக்கல்லில் அமர்ந்து தன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாள். ‘ரொம்ப நேரம் ஆச்சா?’ மதன் கார்த்திகாவை பார்த்து கேட்டான். ‘இல்ல இப்பத்தான்’ கார்த்திகா பதில் அளித்தாள். ‘என்ன ரொம்ப தீவிரமா ஏதோ பாத்துட்டு இருக்கீங்க போல’ மதன் கேட்க ‘டெர்மினல்ல பயன்படுத்தும் எடிட்டர்ஸ் பத்தி படிச்சேன், அதாங்க vi, emacs, nano’ கார்த்திகா கூறிக்கொண்டிருக்கையில் ‘ஓ, எது ஈசியா இருக்கு?’ மதன் கேட்க ‘nano தான்’ கார்த்திகா கூற மதன் சிரித்தபடி ‘எது கஷ்டமா இருக்கு?’ என்று கேட்க ‘vi’ என்றாள். ‘இந்த emacs டிரை பண்ணீங்களா?’ மதன் கேட்க ‘பண்ணேன், ரொம்ப வித்யாசமா இருக்கு’ கார்த்திகா கூற ‘ஆமாம் emacs வித்யாசமாத்தான் இருக்கும், ஏன்னா அது எடிட்டர் உருவத்துல இருக்குற ஒரு லேங்குவேஜ் இண்டர்ப்ரிட்டர், அதாவது பைத்தான் மாதிரி’ மதன் கூற ‘என்னது, லேங்குவேஜ் இண்டர்ப்ரிட்டரா?’ கார்த்திகா கேட்க ‘ஆமாம், emacs ஒரு லிஸ்ப் லேங்குவேஜ் இண்டர்ப்ரிட்டர், லினக்ஸ் இருக்குறவங்க emacs ஐ கிட்டத்தட்ட ஒரு ஆப்ரேட்டிங் சிஸ்டம்னே சொல்லுவாங்க ஏன்னா அதுல இல்லாதது எதுவுமே இல்ல, அதுல இருக்குற ப்ளகின்ஸ் வேர எந்த ஒரு எடிட்டருக்கும் கிடையாது’ மதன் கூற ‘எனக்கு எத கத்துக்கிட்டா லாங் ரண்ல யூஸ்புல்லா இருக்கும்?’ கார்த்திகா கேட்க ‘emacs தான், ஆனா நீங்க சொன்ன இந்த எடிட்டர்ஸ் கத்துக்குறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான எடிட்டர நீங்க கண்டிப்பா கத்துக்கனும், அந்த எடிட்டருக்கு பேரு ed’ மதன் கூற ‘அப்படி என்ன அது அவ்வலவு முக்கியம்?’ கார்த்திகா கேட்க ‘ஏன்னா ஒரிஜினல் யூனிக்ஸ்ல இருந்த முதல் எடிட்டர் இதுதான்’ மதன் கூற கார்த்திகா உடனே அதன் மேனுவலை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். கார்த்திகா மேனுவலை படிப்பதை பார்த்த மதன் கார்த்திகா எப்படி லினக்ஸ் கற்பது என்பதை உள்வாங்கிக்கொண்டுவிட்டாள் என்பதை உனர்ந்தான். ‘எந்த மேனுவல் பேஜ் பார்குரீங்க?’ மதன் கேட்க ‘man ed கமாண்ட் போட்டு வர மேனுவலைத்தான்’ கார்த்திகா கூற ‘அது வேனாம் man.freebsd.org/ போய் ed கொடுத்து சர்ச் பண்னுங்க, அதுல வர ed மேனுவல படிங்க’ மதன் கூற கார்த்திகாவும் அதன்படி செய்தாள்.

‘ed ஒரு லைன் ஓரியன்டட் எடிட்டரா?’ கார்த்திகா கேட்க ‘ஆம், அதுக்கு இரண்டு மோட் உண்டு, ஒன்னு கமாண்ட் மோட் இன்னொன்னு இண்சர்ட் மோட், நீங்க ed கமாண்ட் கொடுத்து என்டர் கொடுத்ததுமே அது டீபால்ட்டா கமாண்ட் மோட்லதான் இருக்கும், கமாண்ட் மோட்ல ஓவ்வொரு கீ ப்ரஸ்சுக்கும் ஒரு அர்த்தம் உண்டு, கமாண்ட் மோட்ல இருந்து இண்சர்ட் மோடுக்கு போக i அல்லது a கீ ப்ரஸ் பண்ணனும். இண்சர்ட் மோட்ல எல்லா கீ ப்ரஸ்சும் சாதாரான அர்த்தம்தான். இண்சர்ட் மோட்ல இருந்து கமாண்ட் மோடுக்கு வர ஒரு தனி லைன்ல . டாட் வைக்கனும், நாம செய்தத சேமிக்க w கீ கொடுத்து ஒரு ஸ்பேஸ் கொடுத்து பக்கத்துல பைல் நேம் கொடுக்கனும், ed ல இருந்து வெளிய வர q கொடுக்கனும்’ மதன் கூற அதன்படி கார்த்திகா செய்து பார்த்தாள்.

$ ed
a
hello world
.
w helloworld.txt
12
q
$

‘சூப்பர், செம்மைய இருக்கு, உங்களமாதிரி ஆளுங்களால மட்டும்தான் சிம்பிளா ஒரு நோட்பேட்ல செய்யுறத இப்படி பட்ட ஒரு எடிட்டர வெச்சிக்கிட்டு இவ்ளோ இண்ட்ரஸ்டிங்கா பண்ண முடியும்’ என்று சொல்லிக்கொண்டே அவள் ed எடிட்டரில் உருவாக்கிய கோப்பை cat பயன்படுத்தி என்ன இருக்கின்றது என்று பார்த்தாள்.

$ cat helloworld.txt
hello world
$

‘இருங்க இப்ப நான் அதே பைல எடிட் பண்ணி பார்க்குறேன்’ என்று சொல்லிவிட்டு அதே கோப்பை ed ல் மீண்டும் திறந்தாள்

$ ed
e helloworld.txt
12
a
hello madhan
.
w
25
q
$ cat helloworld.txt
hello world
hello madhan
$

கார்த்திகா cat பயன்படுத்தி அந்த கோப்பை பார்ப்பதை கண்ட மதன் ‘ஏன் cat யூஸ் பண்ணி பார்குரீங்க, ed லயே 1,$p அப்படின்னு கமாண்ட் மோட்ல இருக்கும்போது கொடுத்தா முழு பைலயும் காமிக்கும், அதாவது முதல் வரில இருந்து கடைசி வரி வரைக்கும் காண்பிக்க சொல்ரோம், இத இன்னும் சிம்பிலா ,p கொடுத்தும் பார்க்கலாம்’ மதன் கூற அதன்படி கார்த்திகா செய்தாள்

$ ed
e helloworld.txt
25
1,$p
hello world
hello madhan
,p
hello world
hello madhan
q
$

கார்த்திகா செய்வதை பார்த்துக்கொண்டிருந்த மதன் ‘இனிதான் ed யோட பவர பார்க்க போரீங்க, அந்த பைல்ல world இருக்குற லைன் பட்டும் காட்ட g/world/p அப்படின்னு கொடுங்க’ மதன் கூற கார்த்திகா அப்படியே செய்தாள்

$ ed
e helloworld.txt
25
g/world/p
hello world
q
$

‘ஆமா, world இருக்கும் லைன் மட்டும் காட்டுது’ கார்த்திகா கூற ‘இதுதான் நாம யூஸ் பண்ற grep கமாண்ட், அதாவது ed யோட g//p தான் grep கமாண்டா மாறுச்சு’ மதன் கூறிவிட்டு சிரிக்க கார்திகாவும் புன்னகைத்தாள். ‘இன்னொரு பவர் பார்க்கலாம், இப்போ world ல எடுத்துட்டு அதுக்கு பதிலா karthika அப்படின்னு வரவழைக்க 1,$s/world/karthika/g கொடுங்க, பிறகு ,p கொடுங்க’ என்று மதன் கூற கார்திகாவும் அப்படியே செய்தாள்

$ ed
e helloworld.txt
25
1,$s/world/karthika/g
,p
hello karthika
hello madhan
q
?

‘இது என்ன ? காட்டுது’ கார்திகா கேட்க ‘நீங்க world ஐ karthika ன்னு மாத்திட்டீங்கள்ள, அத சேவ் செய்யவில்லைன்னு காட்டுது, h கொடுங்க, இப்போ என்ன தவறு நடக்குதுன்னு காட்டும்’ என்று மதன் கூற கார்த்திகா அதை செய்தாள்

h
warning: buffer modified

‘இப்போ w கொடுத்து சேவ் பண்ணனும் கரைக்டா?’ கார்த்திகா கேட்க ஆம் என்பதுபோல் மதன் தலை ஆட்டினான்

w
28
,p
hello karthika
hello madhan
q
$

‘எனக்கு இந்த எடிட்டர் ரொம்ப பிடிச்சிருக்கு’ கார்த்திகா கூற ‘அப்போ உங்களுக்கு sed கமாண்டும் மிகவும் பிடிக்கும், ஏன்னா sed என்பது stream editor அதாவது stream ed அப்படிங்குறத குறிக்குது. ed ல செய்யுற அத்தன கமாண்சையும் sed லயும் செய்யலாம்’ மதன் கூற கார்த்திகா ‘அப்போ, ed கமாண்ட் தான் grep கமாண்டுக்கும் sed கமாண்டுக்கும் அடிப்படை கரைக்டா?’ என்று கேட்க ‘அதுமட்டும் இல்ல, regex அப்படிங்குற காண்சப்ட் முதன் முதலா இம்ளிமெண்ட் பண்ண அப்ளிகேஷனும் ed எடிட்டர் தான்’ என்று மதன் விவரித்தான். கார்த்திகா மேனுவலில் regex பற்றிய விவரங்களை படிக்க ஆரம்பித்தாள்.

கார்த்திகா மேனுவல் பேஜ்களை ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த மதன் ‘கார்த்திகா, இப்ப நீங்க ஒரு முக்கியமான கட்டத்துக்கு வந்துட்டீங்க, இப்ப இத உங்க கிட்ட சொன்னா கரைக்டா இருக்கும்னு தோனுது’ என்று கூற கார்த்திகா குழப்பத்துடன் ‘என்னது?’ என்று கேட்க ‘நீங்க என் கிட்ட ஷெல் ஸ்க்ரிப்ட் தான கத்துக்க வந்தீங்க?’ மதன் கேட்க ‘ஆமாம்’ கார்த்திகா கூற ‘நான் உங்களுக்கு முன்னாடி ஒருமுறை man sh படிக்க சொன்னேன் நியாபகம் இருக்கா?’ மதன் கேட்க ‘ஆமாம், கடுப்புல சொன்னீங்க’ கார்த்திகா கூற ‘அதையேத்தான் இப்ப சொல்றேன், man.freebsd.org ல sh கொடுத்து வரும் மேனுவல போய் படிங்க, அத இப்ப நீங்க படிச்சீங்கன்னா சூப்பரா ஷெல் ஸ்க்ரிப்டிங் கத்துப்பீங்க, அதுக்கு தேவையான எல்லாம் இப்ப உங்ககிட்ட இருக்கு’ என்று மதன் கூற ‘சரி, நான் அத படிக்க ஆரம்பிக்கிறேன். அப்போ, இதோட நம்ம இந்த டிரெய்னிங் முடிச்சிக்கலாமா?’ கார்த்திகா முகம் சிரிதானதை மதன் உணர்ந்தான். ‘ஆமாம், டிரெய்னிங் இதோட முடிச்சிக்கலாம், இனி ஷெல் ஸ்க்ரிட்டிங் கத்துக்க இங்க நீங்க வரனும்னு அவசியம் இல்ல’ மதன் கூற ‘அப்போ இன்மே என்ன பார்க்க வரவேனாம்னு சொல்ரீங்க?’ கார்த்திகா கேட்க ‘அப்படி இல்ல, ஆஸ் எ ப்ரண்டா நீங்க எப்ப வேனும்னாலும் வரலாம், ஷெல் ஸ்க்ரிப்டிங் கத்துக்க இங்க வரனும்னு அவசியம் இல்லைன்னு சொல்ல வந்தேன்’ மதன் கூற ‘ஓக்கே, என்ன டிரேயின் பண்ணதுக்கு குருதட்சனையா என்ன செய்யனும்?’ கார்த்திகா கேட்க ‘நீங்க எப்பவும் லினக்ஸ் பயன்படுத்தனும்’ மதன் சிரித்துக்கொண்டே கூற கார்த்திகாவும் சிரித்துக்கொண்டே ‘மாறவே மாறாதீங்க, இப்படியே இருங்க’ என்று கூறினாள். இருவரும் புன்னகையுடன் அமர்ந்திருந்தனர். ‘காப்பி?’ கார்திகா கேட்க இருவரும் எழுந்து தேநீர் அருந்த பேன்ட்ரிக்கு சென்றனர்.

தொடரும்..

நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]

%d bloggers like this: