கொரோனா தொற்றுக் காலத்தில் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நேரத்தில் சவுதி, மலேசியா முதலிய நாடுகளில் குறைந்த கூலிக்கு வேலைக்குப் போன பட்டப்படிப்பு முடிக்காத பல தமிழர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள் என்னும் செய்தி தொடர்ந்து செய்தித்தாள்களில் வந்த வண்ணம் இருக்கின்றன. தாயகம் திரும்பும் அவர்களுக்கு, இங்கும் உடனடியாக எந்த வேலைக்கான சூழலும் இல்லை என்பதும் கசப்பான உண்மையாக இருக்கிறது. இந்தச் சூழலில் தாயகம் திரும்பும் அயலகத் தமிழர்கள், ஏதாவது சிறு தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். தொழில்நுட்பம் பெருகிவிட்ட இச்சூழலில் அவர்களுடைய தொழிலை எப்படிச் சந்தைப்படுத்துவது என்பதில் அவர்களுக்குச் சின்னச் சின்ன தயக்கங்களும் இணையத்தைப் பயன்படுத்துவதில் போதிய பட்டறிவு இன்மையும் அவர்களை மேலும் தொய்வுக்கு உட்படுத்துகின்றன.
இந்தத் தயக்கங்களை உடைத்து அவர்களுக்கு உதவும் வகையில், ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் ஒரு மணி நேர – இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி வகுப்பை நடத்தவிருக்கிறது. வரும் விடுதலை நாளில் (ஆகஸ்ட் 15) காலை 11 மணி இந்திய நேரத்திற்கு இந்த வகுப்பு இணைய வழி நடத்தப்படவிருக்கிறது.
நாள்: ஆகஸ்ட் 15, 2020 காலை 11 மணி இந்திய நேரம்
பயிற்றுநர்: திரு. லோகேஷ் பாஸ்கர், பயிலகம்
தலைப்பு: அலைபேசி மூலம் காசு செலவில்லாமல் இணையத்தில் விளம்பரப்படுத்துவது எப்படி?
முன்பதிய: forms.gle/dBBCxW2hAGrmszNY8
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம்
உரிய தேவையிருப்பவர்களுக்குத் தெரியப்படுத்தி உதவுங்கள் நண்பர்களே!