FreeBSD – ஒரு அறிமுகம்

FreeBSD – ஒரு அறிமுகம்

திறந்த மூலநிரல் இயக்கு தளமான FreeBSD சமீபத்தில் தனது இருபதாவது வயதை கடந்தது.

FreeBSD தனது அதிவேக வளர்ச்சியினால் கணினி துறையில் பட்டொளி வீசி தன்னிகரில்லாத இடத்தினை பிடித்தது. மேலும் அது தனது சேவையை பல்வேறு லினக்ஸ் கருவாகவும், லினக்ஸ் வழங்கள்களாகவும் விரிவடைந்தது. ஜுன் 19 ஆம் தேதி தனது 20வது வயதை கடந்த போதிலும் முக்கிய பிணைய உள்கட்டமைப்பு சேவைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

FreeBSDயின் பல பதிய பரிமாணங்களையும், யுக்திகளையும் பல்வேறு லினக்ஸ் கருக்கள் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக “FreeBSDயின் Ports collection” எனப்படும் FreeBSDயின் தொகுப்பு மேலாண்மை அமைப்பு இருமைகளை(binary) பயன்படுத்துவதை காட்டிலும் மூல குறியீடுகளிலிருந்து (source code) மென்பொருளை உருவாக்குகிறது. இதனை “Gentooவின் portage system” (Gentooவின் தொகுப்பு மேலாண்மை அமைப்பு) அப்படியே பயன்படுத்தி வருகிறது.

FreeBSD தனது வலுவான இணைய வலைப்பின்னல் அடுக்குகளுக்கும் பெயர் போனவை. இதனை ஆராய்ச்சியாளர்களும், உற்பத்தி அமைப்புகளும் தங்களது உருவகப்படுத்தல் மற்றும் பயன்பாட்டிற்கு அடிப்படை கட்டமைப்பாக பயன்படுத்துகின்றனர். Monowall மற்றும் Pfsense ஆகியவை FreeBSDயைச் சார்ந்த முக்கியமான லினக்ஸ் வழங்கல்களாகும். இவை தீயரண்,(Firewall) மெய்நிகர் தனியார் வலையமைப்பு (Virtual Private Network) போன்ற இணைய மென்பொருள்களையும், ADSL பிணைப்பு போன்ற பிணைய உபகரணங்களை சுலபமாக பயன்படுத்தவும் உதவுகின்றன.

BSD Unix மூன்று முக்கிய மாறுபாடுகளை இலவசமாக விநியோகித்து வருகிறது. அவற்றுள் OpenBSD மிகவும் பாதுகாப்பான இயக்க அமைப்பாகவும், NetBSD நுண் செயலியின் பயன்பாட்டால் எதையும் இயக்கும் வல்லமை கொண்டதாகவும், FreeBSD பொது பயன்பாட்டிற்கான இயக்க அமைப்பாகவும் உள்ளன.

FreeBSD வலைப்பின்னல் மற்றும் கணினி நிரல்களுக்கான இயக்க அமைப்பாக மட்டும் இல்லாமல், தற்கால பயன்பாட்டிற்குத் தேவையான மேசை கணினிகலை இயக்க BSD Unix வழங்கல்களாகவும் உருபெற்றுள்ளது. இவ்வகை வழங்கல்களில் PC-BSD, மிகவும் பிரபலமானது.

FreeBSDயின் செயல் திறன் மற்றும் அதன் உரிமக்கோட்பாடுகளினால் வணிக நிறுவனங்களான Citrix, Netapp மற்றும் Juniper, இதனைப் பயன்படுத்தி வருகின்றன.

சமீபத்திய ஆண்டுகளில் கூட லினக்ஸ் சமூகம் FreeBSDயின் பல்வேறு பகுதிகளை மாற்றவும், புதுப்பிக்கவும் தொடங்கியுள்ளன. Debian தனது பல்வேறு வழங்கல்களில் ஒன்று FreeBSDயின் கருவை பயன்படுத்தி வருகின்றது. தற்போது நிலவி வரும் பல்வேறு கட்டற்ற மென்பொருட்களில் ஒன்றான BSDயின் தொழில் நுட்பம், அது தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்துவந்த கட்டமைப்பு காரணமாக, அது இன்னும் பல ஆண்டுகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் என்பதில் சிறு துளியும் ஐயமில்லை.

– செந்தில் குமார்
(msk_thenmathi@yahoo.com)

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: