போய் வாருங்கள் கோவை ஞானி ஐயா

எழுத்தாளர் கோவை ஞானி நேற்று காலை இயற்கை எய்தினார்.

நண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை பற்றி உரையாடினார்.

எழுத்தாளர் கோவை ஞானி [ kovaignani.org ] அவர்கள் பெரு மகிழ்வுடன் தமது படைப்புகள் அத்தனையும் CC-BY-SA என்ற உரிமையில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரது படைப்புகளை எவரும் பகிரலாம்.அச்சிட்டு வெளியிடலாம். இந்த அறிவிப்பு மானிடர் அனைவரின் மீதான பேரன்பை வெளிப்படுத்துகிறது.

அவரது மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பேரிழப்பு ஆகும்.

அவர் எழுதிய நூல்களின் பட்டியல், கிரியேட்டிவ் காமன்சு உரிமை அறிவிப்பு இங்கே.
www.kaniyam.com/releasing-all-kovai-gnani-in-creative-commons-license/

இது வரை 5 நூல்களை மின்னூல்கள் வடிவில் வெளியிட்டுள்ளோம். மீதி நூல்களை அடுத்த ஆண்டுக்களுக் வெளியிடுவோம்.

அவரது மறைவு பற்றிய சில கட்டுரைகள் இங்கே.

twitter.com/search?q=கோவை-ஞானி

போய் வாருங்கள் ஐயா. கணியம் அறக்கட்டளை அன்பர்கள் அனைவரின் சார்பாக உங்கள் அரும்பணிகளுக்கு பல்லாயிரம் நன்றிகள்.

%d bloggers like this: