தமிழின் அனைத்து பெயர்ச்சொற்கள் தொகுப்பு திட்டம்

வணக்கம்,

சொற்பிழைத்திருத்தி, இலக்கணப் பிழைத்திருத்தி, வேர்ச்சொல் காணல் போன்ற பலவகை இயல்மொழி ஆய்வுகளுக்கு அடிப்படையான தேவையாக இருப்பது பெயர்ச்சொற்கள் தொகுப்பு.

தமிழில் அனைத்து பெயர்ச்சொற்களையும் ஓரிடத்தில் தொகுத்தல் மிகவும் பயன்தரும்.

இதுவரை தமிழின் பெயர்ச்சொற்கள் பொதுப் பயன்பாட்டு உரிமையில் எங்கும் பகிரப்படவில்லை. ஆங்காங்கே சில தனியுரிம தொகுப்புகள் மட்டுமே உண்டு.

எனவே பெயர்ச்சொற்களைத் தொகுப்பதை செய்ய வேண்டிய பெரும் தேவை உள்ளது.

github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/18

இங்கு ஏற்கெனவே கிடைக்கும் பெயர்ச்சொற்களின் இணைப்புகளை எழுதி வருகிறோம்.

அங்குள்ள பெயர்களை எடுத்து தொகுத்து, சீராக்கி, அனைவரும் பயன்படுத்தும் வகையில் விரைவில் வெளியிடுவோம்.

நீங்கள் அறிந்த இணைப்புகளையும்,உங்கள் கருத்துகளையும் அங்கே பகிர வேண்டுகிறேன்.

நன்றி

%d bloggers like this: