நிகழ்வுக் குறிப்புகள் – தொல்லியல் பயிற்சியில் கட்டற்ற மென்பொருள் அறிமுகம்

 

கடந்த 08.01.2020 அன்று சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்ற ‘தொல்லியல் -ஓர் அறிமுகம்‘ பயிலரங்கில், உதயசங்கர், சீனிவாசன் இருவரும் கட்டற்ற மென்பொருட்கள் மூலம் தொல்லியலை பொது மக்களுக்கு எடுத்துச் செல்வது பற்றி உரையாற்றினர்.

தமிழி(பிராமி) எழுத்துரு உருவாக்கம், அவற்றின் பயன்பாடுகள், ஜீனவாணி எனும் மென்பொருள் மூலம் தமிழி(பிராமி) எழுத்துக்களை உருவாக்கிப் பகிர்தல், அதன் கைபேசி செயலி ஆகியன பற்றி உதயன் விவரித்தார்.

 

தொல்லியல், தமி்ழ் போன்ற பல்வேறு துறைகளில் பல்வேறு அரசு, கல்வி நிறுவனங்கள் பெரும் பொருள் செலவழித்து ஆய்வுகள் மேற்கொண்டாலும், ஆய்வுக்கு பயன்படும் தரவுகள், புகைப்படங்கள், மென்பொருட்கள், அவற்றின் மூலநிரல் ஆகிய எதுவுமே பொது மக்களுக்கு கிடைப்பதில்லை என்பதால், புதிதாக வரும் எவரும் சக்கரத்தை மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்க போராட வேண்டியுள்ளதை சீனிவாசன் எடுத்துரைத்தார். அங்குள்ளோர் அனைவருக்கும் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய அறிமுகத்தையும், கிரியேட்டிவ் காமன்சு உரிமை பற்றியும் விளக்கினார். அனைவரையும் மென்பொருட்களை கட்டற்ற மென்பொருட்களாக, மூல நிரலுடனும், புகைப்படங்கள், பிற படைப்புகளை கிரியேட்டிவ் காமன்சு உரிமையிலும் வெளியிடக் கோரினார்.

கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் படங்கள் கிடைகாததால், பலரும் காப்புரிமையை மீற வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. உதாரணமாக ‘உதயசந்திரன் இ.ஆ.ப’ அவரின் படம் கூட இணையத்தில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் கிடைப்பதில்லை என்பதை images.google.com தளத்தில் தேடிக் காட்டினார்.

www.google.com/search?q=udayachandran+ias&tbm=isch&source=lnt&tbs=sur:fc

பயன்படுத்தப்பட்ட படவில்லைகள்.

 

 

 

உதயன் அவர்களின் வழங்கல்.

மென்பொருட்கள், எழுத்துருக்கள்.

 

மேற்கண்டவை மூல நிரலுடன் வழங்கப்படும் கட்டற்ற மென்பொருட்கள் ஆகும்.

 

இனிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த, தொல்லியல் துறைக்கும், கலந்து கொண்டோருக்கும் நன்றிகள்.

 

 

%d bloggers like this: