கணியம் – இதழ் 9

வணக்கம்.
‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உலகமெங்கும் ‘மென்பொருள் விடுதலை நாள்’ செப்டம்பர் 15 அன்று கொண்டாடப் படுகிறது. சென்னையில் செப்டம்பர் 15             மற்றும் 22 தேதிகளிலும், புதுவையில் செப்டம்பர் 16 அன்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

இது போன்ற நிகழ்ச்சிகள், தன்னார்வ தொண்டர்களால் நிகழ்கின்றன. நீங்கள் தரும் அன்பும் ஆதரவுமே இது போன்ற                     நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவர உற்சாகம் அளிப்பவை. உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்துடன் வந்து நிகழ்வுகளில் கலந்து             கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் ஊரிலும் லினக்ஸ் அறிமுக நிகழ்ச்சிகள் நடத்த எங்களை தொடர்பு கொள்ளவும்.

கணியம் இதழ் வெளியீடை தொடர்ந்து நடத்தி வரும் எழுத்தாளர்களுக்கும், உற்சாகப்படுத்தி வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள்
~o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.  ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும் பயன்படுத்தலாம்.
ஆனால்,  மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

‘கணியம்’ தொடர்ந்து வளர, கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம், துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும் editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பலாம்.

நன்றி.
ஸ்ரீனி
ஆசிரியர்,  கணியம்   tshrinivasan@gmail.com

பொருளடக்கம்

 • வேர்ட்பிரசு சுழியத்திலிருந்து – 02
 • MySQL – இன் வடிவமைப்பு
 •  ‘நான் உபுண்டு பயன்படுத்துகிறேன்’- Stephen Fry
 • பைதான் – அடிப்படை கருத்துகள் -03
 • கேடென்லைவுடன்(Kdenlive) காணொளி தொகுத்தல்(video editing)
 • உங்கள் லினக்ஸ் டெஸ்க்டாப்பில் புதிய ஃபயர்பாக்ஸ் OS முயற்சி செய்து பார்க்க தயாரா?
 • Flowblade – லினக்ஸ் இயங்குதளங்களுக்கான நேரிலா ஒளிதோற்றப் பதிப்பான்
 • விக்கிபீடியா கட்டுரைகளை இணைய இணைப்பின்றி காண உதவும்Kiwix மற்றும் Okawix
 • பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பத்திற்கான  இரண்டு நாள் PHP/ MySQL வகுப்பு
 • க்னு/லினக்ஸ் கற்போம் – 6
 • மொசில்லா – பாப்கார்ன்
 • நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்!
 • மென்பொருள் விடுதலை நாள்
 • டக்ஸ்மேதுடன்(TuxMath) கணிதம் படியுங்கள்
 • முனையத்தில் அளவுகள்
%d bloggers like this: