ஜாவாஸ்கிரிப்ட் GitHubஇல் உள்ள செயல்திட்டங்களுக்கு பங்களிப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மிகவும் பிரபலமான நிரலாக்க மொழியாக இருந்து வருகிறது. இது தொடர்ந்து மிகவும் பிரபலமான சிறந்த கணினி மொழிகளில் ஒன்றாக திகழ்வதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவை பின்வருமாறு
1. ஜாவாஸ்கிரிப்ட் ஆனது துவக்கநிலை, இடைநிலை மேம்பட்ட நிலை ஆக எந்தவொரு நிலையிலுள்ள மேம்படுத்துநர்களுக்கும் தேவையான வசதிவாய்ப்புகளை வழங்குகிறது .இதனை கொண்டு நாம் துவங்கவிரும்பும் எந்தவொரு புதிய பயன்பாட்டிற்கான செயல்திட்டத்திற்காகவென IDE எனும் நிரலாக்கத்திற்கான தனிப்பட்ட எந்தவொரு சூழல் அமைப்பும் தேவையில்லை; அதாவது நம்மில் பெரும்பாலனோர் பயன்படுத்திவருகின்ற Chrome போன்ற இணைய உலாவியைகூட செயல்படச்செய்து, இதனுடைய மேம்படுத்துநர் கருவிகளுக்குள் செல்லமுடியும், தொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளை எழுத துவங்கிடமுடியும். எந்தவொரு கணினிமொழியிலும் முதன்முதலான “Hello World” எனும் செயல்திட்டத்தை பின்வருமாறு மிகவும் எளிதாக இதில் எழுதிடலாம்:
console.log(“Hello World”);
ஜாவாஸ்கிரிப்ட்டின் நெகிழ்வுத்தன்மையானது இடைநிலை மேம்படுத்துநர்களுக்கு மிகவும் பொருத்தமானது. மேம்படுத்துநரின் சிக்கலைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒரு செயல்களைச் செய்ய இந்த கணினிமொழி உதவுகிறது. மேம்படுத்துநர்கள் செருகுநிரல்களின் அதன் கலவையையும் அவற்றின் சொந்த குறிமுறைவரிகளின் துணுக்குகளையும் பயன்படுத்திகொள்ளமுடியும். இதனை செயல்படுத்த துவங்குவதற்கு ஒப்பீட்டளவில் எளிதானது என்றாலும், இதில் முதன்மையாளராக உயர்வடையச் செய்வது நேரடியானதன்று. நாம் இந்த கணினி மொழியில் ஒரு மேம்பட்ட நிலைக்குச் செல்ல விரும்பினால், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒருசில கருத்துக்கள் பின்வருமாறு:
பல்வேறு-முன்னுதாரண இயல்புகொண்டது: இது செயல்பாட்டு நிரலாக்கம், பொருள் சார்ந்த நிரலாக்கம் (OOP) ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது.
ஜாவாஸ்கிரிப்டின் வடிவமைப்பின் வடிவங்களைப்( patterns) பயன்படுத்துதல்: model-view-* (MV*) எனும் வடிவமைப்பு வடிவங்கள் மிகவும் பிரபலமானவைகளாகும் மேலும் இவை பல்வேறு நவீன வரைச்சட்ட கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.
முன்மாதிரி சங்கிலியுடன் மரபுரிமை: ஜாவாஸ்கிரிப்ட் அதன் மாறும் தன்மை காரணமாக பாரம்பரிய ஜாவா இன அடிப்படையிலான மாதிரியில் OOP ஐ செயல்படுத்த முடியாது. ஜாவாஸ்கிரிப்டில் OOPஇன் முன்மாதிரிகளின் பரம்பரைகளானவை அதனுடைய மாதிரி மூலம் அடையப்-படுகின்றன.
மூடல்கள்: ஒரு உள் செயல்பாட்டிலிருந்து வெளிப்புற செயல்பாட்டின் நோக்கத்தை ஒரு மூடலைஅணுகுகின்றது.
Currying: இது ஒரு செயல்பாட்டை f(a, b, c) என அழைக்கக்கூடியவைகளை f(a)(b)(c) என தனித்தனியாக அழைக்கக்கூடியதாக மாற்றும் செயலிகளை கொண்டுள்ளது
வாக்குறுதிகளும் கவணித்தல்களும்: ஒத்திசைவற்ற செயலிகளுடன் செயல்பட இவைநமக்கு உதவுகின்றன.
TypeScript: இது ஜாவாஸ்கிரிப்ட்டில் நிலையான தட்டச்சினை சேர்க்கிறது.
2. பெரிய-தளம்(Omni-platform) இதனை கைபேசி, கைக்கணினி, மடிக்கணினிகள் போன்ற சாதனங்கள் அனைத்திலும் இயக்க முடியும்: வாடிக்கையாளர் பக்கம் சேவையக பக்கம் ஆகிய எல்லா இடங்களிலும் இயங்கும் திறனுடன் இந்த ஜாவாஸ்கிரிப்டானது ஒரு உலகளாவிய கணினி மொழியாக திகழ்கின்றறது.
3. திறந்த தரங்களும் சமூககுழுக்களும் ECMAScript என்பது ஜாவாஸ்கிரிப்டின் தரப்படுத்தப்பட்ட தும் கட்டற்றதுமான நிலையான கணினி மொழிபதிப்பாகும். ஜாவாஸ்கிரிப்ட் செயல்படுத்துதலை உருவாக்க ECMAScript ஐப் பயன்படுத்திகொள்ளலாம். விக்கிபீடியாவின் கூற்றுப்படி, ” ECMAScript இயந்திரம் என்பது ECMAScript மொழி தரநிலையின் பதிப்பில் எழுதப்பட்ட மூலக் குறிமுறைவரிகளை இயக்குகின்ற ஒரு நிரலாகும், எடுத்துக்காட்டாக, ஜாவாஸ்கிரிப்ட் ஆனது மிகவும் பிரபலமான இயந்திரங்களான, V8 , Spider Monkey ஆகியவை கட்டற்ற செயல்திட்டங்களாகும். ஜாவாஸ்கிரிப்ட் சுமார் 25 ஆண்டுகளாக உள்ளது மேலும் அதன் பின்புலத்தில் ஒரு பரந்த சமூககுழுக்கள் பலஉள்ளன. ஒரு மேம்படுத்துநர் தன்னுடைய கணினி கணினிமொழியின் திறனை இதில் மேம்படுத்தி கொள்வதற்காக .இதனுடைய சமூககுழுக்கள் பல்வேறு செருகுநிரல்களையும் கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளன,
4. நவீன கட்டமைப்புகள் React, Angular, Vue.js போன்ற நவீன வரைச்சட்ட கட்டமைப்புகள் இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன மேலும் இவை சிறந்த செயல்திறனுக்காக உகந்ததாக உள்ளன. பெரும்பாலான வரைச்சட்ட கட்டமைப்புகள் நல்ல சமூக ஆதரவுடன் மிகவும் மேம்பட்ட நட்புடன் உள்ளன.
இதனுடைய எதிர்காலம் . முழு-அடுக்கு மேம்பாடு , நவீன முன்பக்கவரைச்சட்ட கட்டமைப்பானது ஜாவாஸ்கிரிப்ட் மிகவும் பிரபலமான நிரலாக்க மொழிகளில் ஒன்றாக அதன் நிலையை உறுதிப்படுத்த உதவுஇருக்கின்றது.