KanchiLUG மாதாந்திர சந்திப்பு – மே14, 2023 – Emacs Orgmode – Bash Shell Scripting

 

KanchiLUG இன் மாதாந்திர சந்திப்பு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, மே 14, 2023 16:00 – 17:00 IST ஆன்லைன் சந்திப்பாக திட்டமிடப்பட்டுள்ளது

சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugMonthlyMeet

எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம்.
அனைத்து விவாதங்களும் தமிழில்.

பேச்சு விவரங்கள்
பேச்சு 0:
தலைப்பு: ஈமேக்ஸ் – ஆர்க் மோட் – ஒரு அறிமுகம் – பாகம் – 1 ( Emacs OrgMode )

விளக்கம் : ஈமேக்ஸ் என்பது சுமார் 40 ஆண்டுகளாக வெகுவாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு உரைத் திருத்தி. இது வெறும் உரைத்திருத்தி மட்டுமல்ல. இது ஒரு டைரி, நாட்காட்டியாகவும், பணிகள் பட்டியலிடவும், மின்னஞ்சல், RSS படிக்கவும், IRC, Jabber, வழியே நண்பர்களுடன் உரையாடவும், இன்னும் பல்வேறு பணிகளை செய்ய உதவும் மாபெரும் கருவியாகும். (Dailry/Journal/Document-Book-Scieitific Writing/Rss Reader/Email Reader/Cha via IRC-Jabberd and more)

இதில் உள்ள ஆர்க் மோட் எனும் வசதி மூலம், நாம் எளிதில் நம் வாழ்க்கை முழுதும் பயன்படக்கூடிய குறிப்புகள் எழுதலாம், தினசரி வேலைகள் பட்டியலிடலாம்.

இது பற்றிய அறிமுகத் தொடரின் முதல் பாகம் இது.

காலம்: 30 நிமிடங்கள்
பேச்சாளர் பெயர்: தங்க அய்யனார்
பேச்சாளர் பற்றி: கட்டற்ற மென்பொருள் பயனாளர், பரப்புரையாளர்

பேச்சு 1:
தலைப்பு : Bash shell scripting – ஒரு அறிமுகம்

விளக்கம்: லினக்சில் shell scripting மூலம் நாம் பல்வேறு பணிகளை விரைந்து செயல்படுத்தலாம். அதன் அறிமுகம் இங்கு காண்போம்.

காலம்: 30 நிமிடங்கள்
பேச்சாளர்: ஷகில் அகமது
பேச்சாளர் பற்றி: நுட்பங்கள் பேசும் கணினி பயனர்.

பேச்சுக்குப் பிறகு: கேள்வி பதில், பொது விவாதம்

KanchiLUG பற்றி : காஞ்சி லினக்ஸ் பயனர்கள் குழு [ KanchiLUG ] நவம்பர் 2006 முதல் காஞ்சிபுரத்தில் இலவச/திறந்த மூல மென்பொருள் (F/OSS) பற்றிய விழிப்புணர்வை பரப்பி வருகிறது.

யார் வேண்டுமென்றாலும் இணையலாம்! (நுழைவு இலவசம்).
அனைவரும் வருக.
இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

%d bloggers like this: