கணியம் அறக்கட்டளை ஜூலை 2020 – அக்டோபர் 2022 அறிக்கை
தொலை நோக்கு
தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்
பணி இலக்கு
அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.
நிகழ்ச்சிகள்
- கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 2020
- தமிழ் கணிமை வளர்ச்சிக்கு கட்டற்ற மென்பொருட்களின் அவசியம் – உரையாடல் நிகழ்வு
- மோசில்லா பொதுக்குரல் திருவிழா – ஏப்ரல் 14 2021 – நாள் முழுதும்
- மின்னூல் தயாரிப்பது எப்படி? – இணைய உரை
- லேங்க்ஸ்கேப் – பயிலகம் வழி நடத்தும் ஒரு மாத இலவச இணையவழி பைத்தான் பயிற்சி
- லேங்ஸ்கேப் நிறுவனம் – பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் ஜேங்கோ(DJango) இலவச இணையவழிப் பயிற்சிகள்
- கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் – இணைய உரை
- கற்கும் கருவிகள் – ஒரு அறிமுகம் – இணைய உரை
- லேங்க்ஸ்கேப், பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் வெப் டிசைனிங் இலவச இணையவழிப் பயிற்சிகள்
- கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் – இணைய உரை
- Tamil Linux Community
- தோழர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா
- இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு 2022
செயல்கள்
எண் | செயல்கள் | மொத்தம் | இம்மாதம் பங்களித்தோர் |
---|---|---|---|
1 | FreeTamikEbooks.com மின்னூல்கள் | 791 | பலர் |
2 | Kaniyam.com கட்டுரைகள் | 1466 | பலர் |
3 | Tamil Linux Community காணொளிகள் | 60 | பலர் |
4 | Tamil Linux Community உரையாடல்கள் | 240 | பலர் |
மின்னாக்கம்
PublicResource.org அமைப்பின் உதவியால், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள, 1000 க்கும் மேற்பட்ட பழம்பெரும் நூல்களை, மின்னூலாக்கம் செய்து, இணையத்தில் வெளியிட அன்வர் உதவினார். மின்னூல்கள் இங்கே – archive.org/details/RojaMuthiah
விழுப்புரம் குனு லினக்சு பயனர் குழுவுடன் இணைந்து, ஒரு Scanner ம், மாதம் 5000 ரூ – உம் தந்து, பழைய தமிழ் இதழ்களை மின்னாக்கம் செய்யத் தொடங்கியுள்ளோம். விரைவில் வெளியிடுவோம்.
விக்கி மூலம்
2021 ஆண்டு முழுதும், விக்கிமூலம் பங்களிப்பாளர் தகவல் உழவன் அவர்களுக்கு, மாதம் 5000 ரூ ஊக்கத் தொகை தந்தோம். அவரது பணிகளை இங்கே காணலாம். ta.wikisource.org/wiki/User:Info-farmer
Forums.TamilLinuxCommunity.org
TamilLinuxCommnity என்ற குழுவை யுடியூப் சேனலாகத் தொடங்கி, பின் டெலிகிராம் குழுவாகவும் உருவாக்கினோம். ஆனால் டெலிகிராமின் உரையாடல்கள் பொதுவில் இல்லை என்பதால், Forums.TamilLinuxCommunity.org என்ற உரையாடல் களத்தை தொடங்கினோம். தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்கவும், பதில் தரவும் ஏதுவான சிறந்த களமாக உள்ளது.
தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2020, 2022
முதல் தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாட்டை 2020 ல் இணைய வழியில் நடத்தினோம். இரண்டாவது மாநாட்டை 2022 ல் நேரடி நிகழ்வாக நடத்தினோம். விவரங்களுக்கு TossConf22.kaniyam.com
கணக்கு
மொத்த நன்கொடை இதுவரை – 8,00,441
மொத்த செலவுகள் இதுவரை – 7,62,845
இருப்பு – 37,596
இந்த இணைப்பில் அனைத்து வரவு, செலவு விவரங்கள் பகிரப்படுகின்றன. docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit#gid=0
வங்கிக் கணக்கு விவரங்கள்
Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC – UBIN0560618
- உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
- நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு அனுப்ப வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு எழுதுக – kaniyamfoundation@gmail.com
குறிப்பு
பல்வேறு காரணங்களால், ஒரு ஆண்டுக்கும் மேலாக, மாத அறிக்கை அனுப்பத் தவறி விட்டோம். அருள்கூர்ந்து மன்னிக்கவும். இனி ஒவ்வொரு மாதமும் அனுப்புவோம். தவறினால், தயங்காமல் சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். நன்றி.