லினக்ஸ் மின்டில் செலினியம் வெப் டிரைவர்,பயர்பாக்ஸ் டிரைவர் – பைத்தானுக்கு நிறுவுவது எப்படி?

செலினியம் திட்டப்பணி செய்வதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள், செலினியம் வெப் டிரைவர், பயர்பாக்ஸ் டிரைவர் ஆகியவற்றை லினக்ஸ் மின்டில் நிறுவுவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

லினக்சில் மென்பொருள் நிறுவல் என்பது மிக மிக எளிமையான ஒன்று. டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள்.
1. நீங்கள் ஏற்கெனவே pip3 நிறுவியிருந்தால் நேரடியாக இரண்டாம் படிக்குப் போய் விடுங்கள். இல்லாவிட்டால்
sudo apt-get install pip3
என்று கொடுங்கள். pip3 நிறுவப்பட்டு விடும்.

2. இப்போது செலினியம் வெப் டிரைவரை நிறுவ வேண்டும்.
pip3 install selenium
அவ்வளவு தான்! இப்போது செலினியம் நிறுவப்பட்டு விடும்.

3. இப்போது பயர்பாக்ஸ் டிரைவரை நிறுவ வேண்டும். அதற்கு github.com/mozilla/geckodriver/releases/ தளத்தைத் திறந்து, அதில் கொஞ்சம் கீழே வந்து பாருங்கள். Assets என்னும் பகுதியில் geckodriver என்று இருக்கும். உங்கள் லினக்ஸ் இயங்குதளம், 32 நுண்மி(பிட்)யா, 64 நுண்மியா எனப் பார்த்து அதைச் சொடுக்கித் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

4. நீங்கள் தரவிறக்கியிருக்கும் geckodriver கோப்பு, Downloads பகுதியில் இருக்கும். அதை அங்கிருந்து உங்களுக்கு விருப்பமான அடைவு(folder)க்கு மாற்றி விடுங்கள்.

5. எந்த அடைவில் geckodriver கோப்பை வைத்திருக்கிறீர்களோ, டெர்மினலில் அந்த அடைவுக்கு நகர்ந்து விடுங்கள்.

6. இப்போது அந்தக் கோப்பைத் திறந்து அதில் உள்ள நுண்மிக் கோப்பை(binary file) வெளியே எடுக்க, கீழ் உள்ளது
tar -xzf geckodriver-v0.27.0-linux32.tar.gz
என்று கொடுங்கள்.

இப்போது நாம், வெற்றிகரமாக, செலினியம் வெப் டிரைவர், பயர்பாக்ஸ் டிரைவர் நிறுவி விட்டோம்.

எப்படி உறுதிப்படுத்துவது?
————————————
செலினியம் என்பதே சோதித்துப் பார்ப்பதற்கான மென்பொருள் தானே! அதன் நிறுவலையும் சோதித்துப் பார்க்க வேண்டும் அல்லவா? கீழ் உள்ள நிரலை, ex1.py என்று சேமித்துக் கொள்ளுங்கள். கீழ் உள்ள நிரலில், executable_path=”” என்னும் இடத்தில், நீங்கள் geckodriverஐ உங்கள் கணினியில் எங்கு நிறுவியிருக்கிறீர்களோ அந்த இடத்தைக் கொடுங்கள். முடிந்தது! கொடுத்து விட்டு, python3 ex1.py என்று கொடுத்துப் பாருங்கள். பயர்பாக்ஸ் உலாவி தன்னியல்பாகத் திறந்து, கணியம் தளத்தைக் காட்டும்.

from selenium import webdriver
from selenium.webdriver.common.keys import Keys
browser = webdriver.Firefox(executable_path=”/home/muthu/Documents/Python_learning/selenium_drivers/geckodriver”)
browser.get(‘http://www.kaniyam.com’)
print(‘Title: %s’ % browser.title)
browser.quit()

 

துணை நின்ற தளம்:

Using Selenium with Firefox Driver

%d bloggers like this: