லினக்ஸ் பகிர்ந்தளிப்பு(Linux Distribution) என்றால் என்ன?

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன்பு, லினக்ஸ் என்றால் என்ன என்ற சாதாரண கேள்விக்கு பதில் சொல்ல பிரியப்படுகிறேன். இதற்க்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. என்னை போன்ற கற்றுக்குட்டிகளை கேட்டால், இது ஒரு மைய கரு மென்பொருள் (core kernel software). இது கணிபொறியின் வன்பொருள் (hardware) மற்றும் பயனாளர்களின் நிரல்களுக்கு (programs) இடையில் செயல்படும். இது லினஸ் டோர்வோல்ட்ஸ் (Linus Torvolds) என்ற ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு, பெயர் காரணமாக லினக்ஸ் (linux) என்று பெயர் பெற்றது என்று பதில் அளிப்போம்.

இந்த லினக்ஸ் என்பதில் ஒரு கரு (kernel) மற்றும் பல நிரல்கள் சேர்ந்து ஒரு கணினியை செயல்படுத்த வேண்டிய நிரல்கள் இருக்கும். லினக்ஸ் கும் மற்ற வியாபார ,இயக்க அமைப்புகளுக்கும் (operating system) இருக்கும் முக்கிய வேறுபாடு என்னவென்றால், இது ஒரு திறந்த மூல மென்பொருள்(Open source software) ஆகும். இதனுடைய மூல நிரல்கள் (source code) இலவசமாக கிடைக்கின்றன.

 

மூல நிரல்கள் என்றால் என்ன ?

மூல நிரல்கள் எனபது மென்பொருள்களை உருவாக்க பயன்படும் குறிமானம். இது மற்ற நிரலர்களால் (programmers) புரிந்துகொள்ளவும் மாற்றவும் முடியும். இந்த மூல நிரல்களை சுலபமாக அணுகுவதன் மூலம் அவற்றை எளிதாக மாற்றவும் மற்ற நிரலர்களால் முடியும். இந்த மூல நிரல்களை இயக்க இதனை கணிப்பொறிகள் புரிந்துகொள்ளகூடிய செயல்பாட்டு கோப்பாக தொகுப்பி (compiler) மூலமாக மாற்றவேண்டும். மைக்ரோசாப்ட் மற்றும் ஒரக்கிள் போன்ற நிறுவனங்கள் செயல்பாட்டு கோப்பு (executables) மட்டுமே கொடுத்து வந்தனர். இதனால் நிரலர்களால் அந்த கோப்புகளில் மாற்றம் செய்ய முடியாமல் இருந்தது.

 

திறந்த மூல மென்பொருள் (Open Source Software) என்றால் என்ன ?

இந்த வகை மென்பொருள்களுக்கு அதனுடைய மூல நிரல்கள் எளிதில் அனைவருக்கும் கிடைக்கும். “Open Source Initiative” என்ற நிறுவனம் இதற்கான பிரமாணங்களை சொல்லயுள்ளது. பொதுவாக இந்த வகை மென்பொருட்களின் உரிமத்தை பொறுத்து உபயோகிப்போர் அவர்களுக்கு தேவையான வகையில் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

திறந்த மூல மென்பொருள் உரிமங்கள் என்பது வலைபதிவில் தனியான தலைப்பில் எழுத கூடியது. சுருங்க சொல்வதென்றால் “Gnu Public License(GPL)” என்ற உரிமத்தை கொடுப்பதன் மூலம் யாரெல்லாம் இதனுடைய செயல்பாடு கோப்பை (executables) வெளியிடுகின்றனரோ அவர்கள் இதனுடைய மூலங்களையும் (source) வெளியிட வேண்டும் என்பதை உறுதி செய்ய முடியும். Berkley Software Distribution license (BSD) என்ற உரிமத்தை கொடுப்பதன் மூலம் அந்த செயல்பாடு கோப்பை கொடுக்கும் போது இதற்கான காப்புரிமையையும் இந்த வகையான நிரல்களை பயன்படுத்தும் போது இணைக்க வேண்டும். எந்த உரிமையும் பயனாளர்கள் இதன் மூலம் விற்பதையோ இலாபம் அடைவதையோ தடுப்பதில்லை.

 

இதை பார்க்கும் போது நிரலர்கள் இலவசமாக எந்த இலாபமும் இன்றி வேலை செய்வது போல இருக்கிறது. எதற்காக இதை செய்ய வேண்டும்?

பணம் மட்டும் அல்ல மற்ற காரனங்களுக்க்காகவும் இந்த வகையான மென்பொருட்களில் நிரலர்கள் வேலை செய்வதை காணமுடியும். எடுத்துக்காட்டாக ஒரு கேளிக்கைகாகவோ, தங்கள் நம்பகதன்மைக்க்காகவோ, மற்றவர்களுக்கு தங்கள் ஆற்றலை தெரிவிக்கவோ இவ்வகை வேலைகளை செய்கின்றனர். ஆனால் நிறைய திற மூல மென்பொருட்கள் ஊதியம் பெரும் நிரலர்கலாலேயே செய்யபடுகிறது. நிறுவனங்கள் அதனுடைய கூட்டு நன்மைக்காக இவ்வாறு செய்கின்றன.

பல பெரிய வலைப்பூக்களே இவ்வகையான விரிவாக்க பணிகளில் பயன் அடைகின்றன, அனால் தனியாக செயல்பட தேவையான மூல பொருட்களை வைத்திருப்பதில்லை. அதற்க்கு பதிலாக அவர்கள் சிலவகையான வேலைகளை திரமூலமாக்கி மற்ற நிரலர்கள், நிறுவனங்களின் மூலமாக செய்துகொள்கின்றன.டாங்கா(Danga) மற்றும் லைவ்ஜெர்னல்(LiveJournal) இந்த வகையான நடைமுறையிலேயே அவர்களின் வாணிபத்தை செய்து வருகின்றன. இங்கு மென்பொருளானது வாணிபமாக இல்லாமல் அதனுடைய சேவை வாணிகமாகிறது.

 

நிரலர்கள் நிரல்களை இலவசமாக இணைய தளத்தில் வெளியிடுருந்தால் எதற்காக ரெட்ஹட்(REDHAT) – ஐ வாங்க வேண்டும்? அந்த மென்பொருளை நானே பதிவிறக்கம் செய்துகொள்ளலாமே.

நீங்கள் ரெட்ஹட் என்று சொல்லும்போது மட்டற்ற லினக்ஸ் விற்பன்னர்களையும் குறிப்பிடுகிறீர்கள் என கொள்கிறேன்.இப்போர்த்து நான் முதல் கேள்வியான லினக்ஸ் டிஸ்டரிபியுசன் (Linux Distribution) என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் அளிக்கலாம். நான் முன்பு சொன்னது போல “கணிபொறியின் வன்பொருள் (hardware) மற்றும் நிரல்களுக்கு (programs) இடையில் செயல்படும் ஒரு மைய கரு மென்பொருள்” ஆகும். இந்த முழு மென்பொருளானது ஆயிரக்கணக்கான சிறு மென்பொருட்களை உள்ளடக்கியது. முன்காலங்களில் ஒவ்வொரு மென்பொருட்களின் மூலங்களையும் பதிவிறக்கம் செய்து அதனை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது மிக பெரிய வேலையாக இருந்தது.இந்த வேலை ஒரு வாரத்திற்கும் அதிகமாக நேரம் எடுப்பதாக இருந்தது. இதனாலேயே பகிர்ந்தளிப்பு(Distribution) என்ற ஒன்று தோன்றியது. அவர்கள் கீழ் கண்ட சேவைகளை வழங்குகின்றனர்.

௧. இணையத்தில் இருந்து தேவையான எல்லா நிரல்களையும் எடுப்பது.

௨. இந்த நிரல்களை கோப்பாக மாற்றுவது.

௩. எல்லா கோப்புகளையும் ஒரே தொகுப்பாக மாற்றுவது.

௪. இணைப்பியை கொடுத்தல்.(Installer)

௫. இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சரியாக வேலை செய்கிறதா என கண்காணிப்பது.

௬. தவறுகளை திருத்தி எல்லா மென்பொருட்களையும் மேம்படுதுவது.

இறுதியாக லினக்ஸ் பகிர்ந்தளிப்பு, ரெட்ஹட் போன்ற நிறுவனங்கள் தருவது ஒரு வருடத்திற்கான உரிமத்திற்கான கட்டணம் மட்டுமே. இது மட்டுமல்லாது அந்த விற்பன்னர்கள் அவர்களது மென்பொருளையும் (இணைப்பி, மேலாண்மை மென்பொருள் மற்றும் சில) சேர்த்து தருகின்றனர். அந்த மென்பொருட்களும் திற மூல நிரலாக வலைத்தளத்தில் கிடைகின்றன. இறுதியாக அவர்களது தனி பெயர்கள் மற்றும் லோகோவை கொண்டு தனியாக வர்த்தககுறி இடுகின்றனர்.நான் பிறகு இதற்கான முக்கியத்துவம் மற்றும் காரணத்தை சொல்கிறேன்.

 

சரி, ரெட்ஹட் இணையத்திலிருந்து மென்பொருட்களை எடுத்து சில இலவச மென்பொருட்களை சேர்த்து விற்கின்றதா?

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் “ஆமாம்”. ஆனால் அவர்களது உண்மையான வர்த்தகம் அவர்களது சேவையே. இந்த ஆயிரகணக்கான மென்பொருட்களில் ஏதேனும் ஒன்று சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் பயனாளர் இந்த வர்த்தக நிறுவனங்களை பழுது நீக்க கேட்கமுடியும்.

 

இது ஒரு நல்ல மாதிரியான வர்த்தகம் தான். ஆனால் இந்த மென்பொருட்கள் இலவசமாக கிடைபதால் மற்ற நிறுவனங்கள் இதனை பதிவிறக்கம் செய்து அவர்கள் தனியாக சேவை கொடுக்க முடியாதா?

இது ஒரு நல்ல கேள்வி. இங்குதான் வர்த்தக குறிகள் அதனுடைய வேலையை செய்கின்றன. நான் ரெட்ஹட்-ன் மென்பொருளை அப்படியே எடுத்து விற்பனை செய்ய முடியாது. அதனுடைய வர்த்தக குறிகள் நான் அப்படி செய்வதை தடுக்கின்றது.

 

ஆனால், உங்களால் அந்த குறிகளை நீக்கி அவற்றிக்கு பதிலாக உங்கள் வர்த்தக குறிகளை போட்டு விற்பனை செய்ய முடியாதா ?

அது ஒரு அச்சுறுத்தும் Third Reich வளையம் போன்றது, ஆனால் நீங்கள் உண்மையில் முக்கிய பிரச்சினையை கண்டுபிடித்து விட்டீர்கள். ஆம் நான் அதை செய்ய முடியும். உண்மையை சொல்வதானால் இதை தான் சென்ட்ஒஎஸ் (CentOS) செய்கிறது. அவர்கள் ரெட்ஹட் லினக்ஸ் –ல் இருந்து எல்லா விற்பனை வர்த்தக குறிகளையும் நீக்கிவிட்டு சென்ட்ஒஎஸ் என்ற ஒரு தளத்தை தருகின்றனர். எந்த மென்பொருள் ரெட்ஹட் ல் சரியாக வேலை செய்தாலும் அது இந்த சென்ட்ஒஎஸ் லும் நன்றாக வேலை செய்யும். எல்லா நடைமுறை நோக்கதிற்கும் இவை இரண்டும் ஒரே போல தன வேலை செய்யும்.

சில வருடங்கள் முன்பு வரை (90s) ரெட்ஹாட் அதன் மென்பொருட்களை விற்பனை செய்ய எந்த ஒரு தடையும் வைக்கவில்லை. நீங்கள் cheapbytes.com என்ற வலைத்தளத்தில் ரெட்ஹாட் லினக்ஸ் ஐ 2.99$ என்ற விலையிலேயே வாங்க முடியும். ஒரே வித்தியாசம் என்னவென்றால், ரெட்ஹாட்டின் சேவையை பெற முடியாது. உங்களுக்கு அந்த சேவை வேண்டும் என்றால் நீங்கள் தனியாக அதனை வாங்கவேண்டும். இது பிறகு ரெட்ஹாட் எண்டர்பிரைஸ் வந்த பிறகு மாற்றப்பட்டது. அதன் பிறகு வேறு யாரும் ரெட்ஹாட் என்ற பெயரை பயன்படுத்த முடியாதபடி மாற்றிபோட்டது. அதனாலேயே சென்ட்ஒஎஸ் உருவாக்கப்பட்டது.

ஆரக்க்லே கூட இந்த வகை மாதிரியையே அதன் லினக்ஸ் வகைகளுக்கு பின்பற்றியது. அவர்கள் ரெட்ஹாட் ஐ எடுத்து அதன் வர்த்தக குறிகளை நீக்கிவிட்டு அவர்களது சேவையின் கீழே வழங்குகிறது.

 

லாரி எல்லிசன்(Larry Ellison)(co-founder of Oracle) இப்படி திருட்டுத்தனமாக ரெட்ஹாட் ன் குறிமுறைகளை எடுப்பது ஒரு குற்றமில்லையா ?

லாரி சாதரணமாகவே ஒரு நல்ல மனிதராக காணப்படவில்லை, ஆனால் ரெட்ஹாட் இதன் மூலமாகவும் அதன் வியாபாரத்தை பெருக்கிகொள்கிறது. இதுவே பங்குதாரர்களை அவர்களின் நிறுவனதில் முதலீடு செய்ய வைக்கிறது. லாரி இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசொல்கிறார். அவருக்கு இந்த லினக்ஸ் ஐ முழுவதுமாக முதலில் இருந்து கொண்டுவர விருப்பம் இல்லை. முடிந்தால் இதை அவர் தவிர்த்து விட விரும்பினார். அவரது முதன்மை பணி சேவை அளிபதிலேயே இருந்தது. ஏனென்றால் அதற்கு மாத்திரமே பயனாளர்கள் பணத்தை செலுத்தினர். சேவை என்பதே பல திற மூல மாதிரிக்கு அடித்தளமாக இருக்கிறது. இதனால் மற்ற வர்த்தகர்கள் கையாளும் மாதிரியை பின்பற்றுவதால் லாரி மீது நாம் குற்றம் காண்பது எனபது கூடாது.

 

எந்த லினக்ஸ் டிஸ்டரிபியுசன் ஐ நான் உபயோகபடுத்தலாம் ?

இது ஒரு கடினமான கேள்வி ஆகும். நான் ரெட்ஹாட் மற்றும் அதனில் இருந்து வரும் மட்டற்ற டிஸ்டரிபியுசன் களை மாத்திரம் கவனம் செலுத்தி வருகிறேன், ஆனால் இன்னும் பல வகையான லினக்ஸ் உங்களுக்கு இருக்கிறது. உங்களால் தனியாக உங்களது தேவைகளை சந்திக்க முடியும் என்றால் நான் சென்ட்ஒஎஸ்(CENTOS) ஐ உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். உங்களுக்கு டெஷ்க்டாப் ஒஎஸ் (Desktop OS) வேண்டும் என்றால் உபுந்து(ubunthu) சரியாக இருக்கும். உங்களுக்கு வெளியிலிருந்து இதற்கான சேவை பெற விருப்பம் என்றால் ரெட்ஹாட் ஐ நான் இதற்க்கு சரியாக இருக்கும். நீங்கள் ஓரக்கல் பயனாளி என்றால் ஓரக்கல் இதற்கான பதிலை கையில் வைத்திருக்கிறது.

Source : baus.net/what-is-a-linux-distribution/

 – தமிழில் செ.ஜான் கிறிஸ்டோபர்

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: