எளிய செய்முறையில் C – பாகம் 7 FUNCTIONS

துணை நிரல்(Functions):

துணை நிரல்(Functions) என்பது program-ல் சில பகுதிகளை மட்டும் பிரித்து அதற்கு என்று ஒரு பெயரை வைத்து அதனை திரும்ப call பண்ணுவதற்கு உபயோகபடுத்த படுகின்றது.

துணை நிரலின் பகுதிகள்

 

Prototype :

<Return Type> FunctionName (Argument List).

·         இங்கு <Return Type> என்பது இந்த துணை நிரலில் இருந்து எந்த வகையான தரவானது திரும்ப அனுப்பபடுகிறது என்பதை குறிக்கிறது.

·         FunctionName என்பது இந்த துணை நிரலின் பெயர் ஆகும்.

·         Argument List என்பது இந்த துணை நிரலுக்கு நாம் அனுப்பும் மாறிகளை குறிக்கிறது.

 

இந்த ReturnType மற்றும் ArgumentList ஐ பொறுத்து துணை நிரல்களை கீழ்க்கண்டவாறு வகையருக்கலாம்.

௧. ReturnType மற்றும் ArgumentList இல்லாத துணை நிரல்கள்

௨. ஏதேனும் ஒன்று மட்டும் உள்ள துணை நிரல்கள்

௩. இரண்டும் உள்ள துணை நிரல்கள்

 

சென்ற மாதம்  நாம் பார்த்த sample program ஆனது இரண்டாம் வகையை சார்ந்தது. இந்த sample program மற்றும் அதை பற்றிய விரிவான விளக்கங்கள் ……

 

/*sampleFunctions.c*/

<stdio.h>

void printAge(int age)

{

printf(“\nYour Age : %d\n”, age);

}

 

int main()

{

int myage;

printf(“Enter Your Age : “);

scanf(“%d”, &myage);

 

printAge(myage);

}

 

$gcc sampleFunctions.c

$ ./a.out

 

Enter Your Age : 25

Your Age : 25

$

 

இங்கு துணைநிரல் என்பது

void printAge(int age)

இங்கு printAge எனபது துனைனிரலின் பெயர் ஆகும். Age எனபது ஒரு argument ஆகும். இங்கு நாம் ஒரே ஒரு argument மாத்திரமே பயன்படுத்துகிறோம். Void என்று நாம் குறிப்பிட்டு இந்த துணை நிரல் எதையும் திரும்ப அனுப்புவதில்லை என்று தெரிவிக்கிறோம். இந்த முழு கூற்றையும் நாம் function declaration என்று அறிகிறோம்.

இதற்கு அடுத்து வந்துள்ள block {} function definition / body என கூறலாம். இங்கு இந்த துணை நிரல்லானது தன்னிடம் உள்ள argument ஐ எடுத்து அதனை வெளியீடாக திரையில் காட்டுகிறது.

Main நிரலில் உள்ள “ printAge(myage);” என்பதை function call என கூறலாம். இந்த கூற்றானது நமது துணை நிரலை கூப்பிடுகிறது. இதன் மூலம் இதன் உள்ளே உள்ள myage என்ற மாறியில் உள்ள மதிப்பை function definition இல் உள்ள age என்ற மாரிக்கு மாற்றி, அந்த definition இல் உள்ள body யை கூப்பிடுகிறது. அதனால் நமக்கு age ஆனது திரையில் காட்டபடுகிறது.

இங்கு myage எனபது actual argument என்று அழைக்கப்படும். ஏனென்றால் இந்த மாறியே அசலான மாறி ஆகும். “int age” என்று இருக்கும் “argument list” ஒரு formal argument என்று அழைக்கபடும். இவ்வகையான அழைப்புகளில் இந்த formal argument என்ற மாறியில் actual argument இல் உள்ள மதிப்பானது தனியாக நகலெடுக்க படுகிறது. இதன் மூலம் இவ்விரண்டு arguments ம் வெவேறு மாறி யாக மாறுகிறது.

இந்த formal argument ஐ மாற்றும் போது actual argument இல் உள்ள மதிப்பானது மாறாது. நாம் pointers என்பதை பார்க்கும் போது எப்பப் formal argument இல் உள்ள மதிப்பை மாற்றும் பொது actual argument மதிப்பையும் மாற்றுவது என்பதை பாப்போம்.

மற்ற வகைகள் அடுத்த இதழில்…

 – நான் செ.ஜான் கிறிஸ்டோபர், ஒரு Software Company யில் Team Leader ஆக வேலை செய்கிறேன்.
tamilanjohn.blogspot.in/ ilugdharmapuri.blogspot.in/

<sjchristopher@gmail.com>

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: