MentDB எனும் கட்டற்றஇயங்குதளம்

MentDB என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற (Mentalese Database) எனும் இயங்குதளமானது AI, SOA, ETL, ESB, தரவுத்தளம், இணைய பயன்பாடு, தரவுத் தரம், முன்கணிப்பு பகுப்பாய்வு, chatbot ஆகியவற்றிற்கு, ஒரு புரட்சிகர தரவு மொழியில் (MQL) கருவிகளை வழங்குகிறது. இந்த சேவையகமானது புதிய தலைமுறை AI தருக்கபடிமுறை ,WWD ஐ அடைய ஒரு புதுமையான SOA எனும் அடுக்கினை அடிப்படையாகக் கொண்டது.
Mentalese என்பது மனித மூளையை கட்டமைக்கின்ற சிந்தனையின் மொழி யாகும். இந்த மொழி பல்வேறு பொதுவான மொழிகளுக்கு இடமளிக்கி்ன்ற-வாறும் ஒரு இயந்திரத்தில் சுதந்திரத்தினையும் அனுமதிக்கிறது.
WWD என்பதன் பொருள் ‘உலக அளவிலான தரவாகும்’. இது ஒரு உலகளாவிய உத்தி. உலகில் உள்ள நிறுவனங்கள் , மென்பொருட்களுக்கு இடையே தரவு அல்லது நுண்ணறிவு பரிமாற்றத்தின் பரவலான தரப்படுத்தலின் கருத்தமைவாகும்.
இந்த செயல்திட்டம் திறனுடைய உலக (தொழில்நுட்ப ரீதியாக: உலகளாவிய தரவு) அடைய (ஜிம்மிட்ரி பேயட்) என்பவரின் முயற்சியாகும். இது ஒரு பொதுவான தரவு இயக்கி ஆகும்! இது எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு நிரலாக்க மொழியாகும், நாம் வாழும் இவ்வுலகில் உள்ள எல்லா தரவையும் எளிதாக அணுகக்கூடியதாகவும், ஒரே மாதிரியாக பரிமாற்றம் செய்யக் கூடியதாகவும், அதிகபட்ச பாதுகாப்புடன் மாற்றக்கூடியதாகவும் ஆக்குகின்றது. இவ்வாறுதான் நாம் வாழும் இவ்வுலகில் எழும் பெரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.. இது கட்டற்ற (GPLv3) எனும் அனுமதியின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது!
MentDB Weak என்பது ஒரு உண்மையான மேம்பாட்டு தளமாகும்: இது ETL + ESB + SOA + WebAPP + AI(பலவீனமானது) = ஆகிய அனைத்தையும் ஒன்று சேர்க்க கூடியது. இதன்மூலம் நம்முடைய நிறுவனத்தின் அனைத்து தரவுகளையும் ஒரே தரவுத்தளமாக இருப்பது போன்ற கட்டுப்படுத்திடலாம், அதற்கான பயன்பாடு களை நாமே உருவாக்கிடலாம், மேலும் அதற்கான கணிப்பு இயந்திரங்களை நாமே பயிற்றுவித்திடலாம்… வெவ்வேறு வலைபின்னல்கள் அல்லது மென்பொருளுடன் கூட இது மிகச்சிறப்பாக செயல்படக்கூடியது!
பிரித்தெடுத்தல் மாற்றுதலும் பதிவேற்றுதலும்MentDB Weak ஆனது தரவுகளை “பிரித்தெடுத்தல் மாற்றுதலும் பதிவேற்றுதலும்” (ETL) என்றவாறு செயல் முறையைச் செய்ய அனுமதிக்கிறது. மென்பொருளுக்கு இடையே தரவு பரிமாற்றங்களை தானியக்கமாக்குகின்றது (உதாரணமாக: Excel, text, csv, xml, json அல்லது மின்னஞ்சல் தரவுத்தளங்களுக்கு). செயல்முறைகளால் உருவாக்கப் பட்ட வணிகப் பதிவுகளை திறம்பட நிர்வகிக்கவும். பிழைகளைக் கண்டறியவும் விரைவாக ஆய்வு செய்திட உதவுகின்றது.
நிறுவன சேவை Busகாலப்போக்கில் வணிக செயல்முறைகளை நிர்வகிக்கவும் MentDB Weak நம்மை அனுமதிக்கிறது. செயல்களை ஒத்திசைவற்ற முறையில் செயல்படுத்திடலாம். கணினியில் கோரிக்கையை அனுப்பினால், உடன் அது அவற்றைப் பெற்று அதற்கான, செயலாக்க சுட்டியை வழங்குகிறது, தொடர்ந்து சரியான நேரத்தில் கோரிக்கையைச் செயல்படுத்துகிறது. ஒரு நிபந்தனையால் (எந்தவொரு MentDBசேவையகத்திலிருந்தும் வரலாம்), அல்லது செயலி எப்போது கிடைக்கின்றது (கட்டமைக்க ஒரேநேரத்தில் செயல்படுத்துதல்களின் எண்ணிக்கைக்கேற்ப).
சேவை சார்ந்த கட்டமைப்புMentDB Weak என்பது ஒரு சுய-பாதுகாப்பான SOA சேவையகமாகும். MentDB உடன் உருவாக்கப்பட்ட எந்த செயல்முறையும் தானாகவே REST-Full ஆகும். நாம் இனி இணைய சேவைகளை உருவாக்கத் தேவையில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதற்கானஉரிமைகளை வழங்குவதுதான். நம்முடைய அனைத்து பயன்பாடுகளும் MentDB உடன் தொடர்பு கொள்ள முடியும். அனைத்து வலைபின்னல்களிலிருந்தும் நம்முடைய தரவை பாதுகாப்பாக அணுகமுடியம். நம்முடைய அனைத்து MentDB சேவைய கங்களையும் ஒரே புள்ளியில் இருந்து கட்டுப்படுத்திடலாம்.
இணைய பயன்பாட்டு கட்டமைப்புபுதிய SAJAX தொழில்நுட்பத்துடன் HTML / CSS இல் வலைப் பயன்பாடுகளை உருவாக்கிடுவதற்காக MentDB ஆனது நம்மை அனுமதிக்கிறது. இதனை உருவாக்க இணைய சேவை தேவையில்லை, இதில்https பாதுகாப்பு இல்லை (பயனர் அமர்வால் நிர்வகிக்கப்படுகிறது), சேவையாளர் பக்கத்தில் AJAX மேம்பாட்டுடன் நம்முடைய பயன்பாடுகள் விரைவாக உருவாக்கப்படுகின்றது…
பலவீனமான செயற்கை நுண்ணறிவுMentDB Weak ஆனது “பலவீனமான” வகை செயற்கை நுண்ணறிவைப் பயிற்சி செய்வதற்கு “பயன்படுத்தத் தயார்” எனும் வழி முறைகளைக் கொண்டுள்ளது. இதன்வாயிலாக தரவு தரத்தை சரி பார்த்தல், பகுப்பாய்வு செய்தல்,வலைபின்னல்களைப் பயிற்று வித்தல், இயந்திர கற்றல். AIML , MQL உடன் chatbot ஐ உருவாக்குதல் ஆகிய அனைத்து பணிகளையும் செய்திடலாம் .இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் கட்டற்றதாக GPLv3 எனும் அனுமதியின்கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும், www.mentdb.org/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

 

%d bloggers like this: