கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம் – இணைய வழி தொடர் வகுப்பு

குறிப்பு – பல்வேறு மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வகுப்புகளின் தொடக்கத்தை ஜூலை 3ஆம் வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளோம்.

 

வணக்கம்,

கணியம் அறக்கட்டளை, முதல் மொழி படிப்பகம் (கனடா) சார்பாக, தமிழில், இணைய வழியில் கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம் தொடர் வகுப்பு நடத்த உள்ளோம்.

கால அளவு – 3 மாதங்கள் ( 3 வார நாட்கள் மட்டும். தேவையெனில் வார இறுதியிலும்.)

நேரம் – காலை 6.30 – 7.30 இந்திய நேரம் (IST) ( திங்கள், புதன், வெள்ளி )
இரவு 9.00 – 10.00 கிழக்கு நேர வலயம் (EST) ( ஞாயிறு, செவ்வாய், வியாழன் )

மொத்தம் 50-60 மணி நேரங்கள்

நன்கொடை – 30,000 இந்திய ரூபாய்

வகுப்புகளுக்கான நன்கொடைகள் கணியம் அறக்கட்டளையின் பணிகளுக்கு வழங்கப்படுகின்றன.

வகுப்பு தொடங்கும் நாள் – ஜூலை 2024 மூன்றாம் வாரம்

பயிற்றுநர்கள் –

1.
முனைவர் ப. தமிழ் அரசன் / Dr. B. Tamil Arasan

www.linkedin.com/in/tamil-arasan-ph-d-644a3763

scholar.google.com/citations?user=Szi3WqkAAAAJ&hl=en

medium.com/@ml_phy

2.
நித்யா துரைசாமி / Nithya Duraisamy

freetamilebooks.com/authors/nithyaduraisamy/

www.youtube.com/nithyaduraisamy

செய்யறிவின் (Artificial Intelligence) உறுப்பான கற்குங்கருவியியல் (Machine Learning) கடந்த பத்தாண்டுகளில் எதிர்பாராத அளவிற்கு நுட்பமான செயல்களைப் புரிந்து வருகிறது. படத்தைப் பார்த்து அதில் இருப்பவற்றைக் கண்டறிவது தொடங்கி மொழிபெயர்ப்பு வரை பலதரப்பட்ட சிக்கலான வேலைகளைச் செம்மையுறச் செய்து காட்டியுள்ளது. இது மாணவர் முதல் பல துறை மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைவரும் பயன்பெறும் வகையில் மேம்போக்காக தொட்டுச்செல்லாமல், தெளிவுற கற்க ஏதுவாக இந்த கற்குங்குருவியியல் பாடங்களை அமைத்துள்ளோம்.

இந்த கற்குங்கருவியியல் வகுப்பு படிப்பறிவுக்கும்(theoretical) பட்டறிவுக்கும்(practical) இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பி, மாணவர்களை கைதேர்ந்த வல்லுநர்களாக மாற்றும் முதற்படியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு தலைப்பும் வெறுமனே தேற்றங்களை(theoretical) மட்டும் மனப்பாடம் செய்யாமல், பயில்வு (practical) முறை கல்வி அனுபவத்திற்கான ஒரு நுழைவாயில் ஆகும். பயில்வுமுறை பயன்பாடுகளுக்குள் நுழைவதற்கு முன், நாங்கள் ஒரு திடமான தேற்ற அடித்தளத்தையும்(theoretical foundation) நிறுவுகிறோம்.

ஒவ்வொரு கற்குங்கருவியியல் கருத்துக்களும் (concepts) அல்கொரிதமும், நுட்பமும் எப்படி(how) வேலை செய்கிறது என்பதை மட்டுமில்லாமல் அவற்றை எங்கே ஏன் (why) பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறியச்செய்கிறோம்.

விரிவான பாடத்திட்டம் இங்கே.

1: Data Preparation and Analysis
2: Regression Techniques
3: Classification Methods
4: Grouping and Associations
5: Deep Learning Fundamentals

பின்வரும் இலவச மின்னூல்களில் இவற்றை விரிவாக விளக்கியுள்ளோம்.

freetamilebooks.com/ebooks/learn_machine_learning_in_tamil/

 

freetamilebooks.com/ebooks/learn_deep_learning_in_tamil/

 

வகுப்புக்கு சில நிபந்தனைகள் உள்ளன.

– நல்ல இணைய வசதி இருக்க வேண்டும்.
– கணினி
– ஏதேனும் ஒரு கணினி மொழியில் நிரலாக்கம் செய்யும் பயிற்சி இருத்தல் நல்லது. பைத்தான் மொழியின் அறிமுகம் தருவோம்.
– கற்றவற்றை தினமும் செய்து பார்த்து பழக வேண்டும். அவற்றை தினமும் ஒரு
வலைப்பதிவாக எழுதி வெளியிட வேண்டும். வகுப்புக்கு ஒரு மணி நேரம். அவற்றை செய்து பார்த்து, வலைப்பதிவு எழுத இரண்டு மணி நேரம் தினமும் தேவைப்படும்.

வகுப்பில் சேர விரும்பினால், ரூ. 30,000 நன்கொடையை கணியம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

வங்கி விவரங்கள் –

இந்தியா –

Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
UNION BANK OF INDIA
WEST TAMBARAM, CHENNAI

IFSC – UBIN0560618
ACCOUNT TYPE : CURRENT ACCOUNT

 

கனடா –

INTERAC – info@muthalmozhipadippakam.org

உங்கள் அறிமுகத்தையும், நன்கொடை விவரங்களை ( Transaction Details with screenshot ) KaniyamFoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வகுப்பில் இணைவதற்கான விவரங்களை மின்னஞ்சலில் அனுப்புவோம்.

பின்வரும் படிவத்தை நிரப்புக.

forms.gle/gyy9Vrui9NGU2wC1A

 

 

தொடர்புக்கு – KaniyamFoundation@gmail.com

 

t.me/kaniyam_ml_training இந்த டெலிகிராம் குழுவில் இணைந்து உரையாடலாம்.

 

 

ஏதேனும் ஐயங்களுக்கு –

சீனிவாசன் +919841795468 ( வாட்சப் அழைப்பு மட்டும் )

தனசேகர் +919952521980 ( நேரடி அழைப்புகளுக்கு )

முதல் மொழி படிப்பகம், கனடா +1 437 432 9804

 

வகுப்பில் சந்திப்போம்.

%d bloggers like this: