எளிய தமிழில் IoT 7. திறந்த மூல MQTT நுகர்விகளும் (Clients) வழங்கிகளும் (Servers)

திறந்த மூல மென்பொருட்களை நல்ல தரத்தில் தயார் செய்து, மேம்படுத்தி, தொடர்ந்து பராமரித்து வருவதில் லினக்ஸ், அபாச்சி, மோசில்லா (ஃபயர்ஃபாக்ஸ்), டாகுமெண்ட் (லிபர்ஆபீஸ்) போன்ற சில அறக்கட்டளைகள் முன்னணியில் உள்ளன. இவற்றில் எக்லிப்ஸ் அறக்கட்டளையும் (Eclipse Foundation) முக்கிய பங்கு வகிக்கின்றது.

உணரிகளிலும் இயக்கிகளிலும் நாம் MQTT நுகர்வி மென்பொருளை நிறுவவேண்டும். இந்த நுகர்வி மூலம் தான் நாம் அந்த சாதனத்துக்கு நாட்டமுள்ள தலைப்புகள் மற்றும் துணைத் தலைப்புகளில் சந்தா சேரலாம் மற்றும் தகவல் வெளியிடலாம். இதேபோல வழங்கி அல்லது தூதுவர் (broker) மென்பொருளை ஒரு கணினியில் நிறுவவேண்டும். இந்தக் கணினியில் கம்பியில்லாத் தொடர்பு (wireless communication) அமைத்து நாம் நுகர்விகள் வெளியிடும் தகவல்களை வாங்கி, ஏற்கெனவே சந்தா சேர்ந்துள்ள மற்ற நுகர்விகளுக்கு அனுப்ப முடியும்.

MQTT நுகர்விகளும் வழங்கியும்

MQTT நுகர்விகளும் வழங்கியும்

எக்லிப்ஸ் பாஹோ (Eclipse Paho) MQTT நுகர்வி

Java, C, C++, Python, JavaScript, .Net (C#) போன்ற பல நிரல் மொழிகளில் எக்லிப்ஸ் பாஹோ MQTT நுகர்வி கிடைக்கிறது. இதை நிறுவி, அமைத்து, பயன்படுத்துவதற்கான தொடக்கநிலைக் கையேடு இங்கே. இதில் நிறுவுதல், வழங்கியுடன் இணைத்தல், தகவலை வெளியிடல், தலைப்புகளில் சந்தா சேர்தல் மற்றும் ஏட்டிற்பதிதல் (Logging) மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் பற்றி விவரமாகக் கொடுத்துள்ளார்கள்.

தொடக்கத்தில் நுகர்வியை சரியாக நிறுவி இருக்கிறோமா என்று சோதனை செய்து பார்க்க நீங்கள் இணையத்தில் உள்ள கீழ்க்கண்ட வழங்கிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்:

அர்டுயினோவுக்கு MQTT நுகர்விகள்

அர்டுயினோவுக்கு எக்லிப்ஸ் பாஹோ (Eclipse Paho) நுகர்வி: C++ நிரல் மொழியில் உள்ள எக்லிப்ஸ் பாஹோவை அர்டுயினோவுக்குத் தோதாக மாற்றி எழுதியுள்ளார்கள்.

அர்டுயினோவுக்கு பப்ஸப் MQTT நுகர்வி (PubSubClient): அர்டுயினோவில் ஓடக்கூடியவாறு இந்தத் திறந்த மூல நிரல் எழுதப்பட்டுள்ளது. இதை எவ்வாறு அர்டுயினோவில் நிறுவிப் பயன்படுத்துவது என்பது பற்றிய தொடக்க நிலைக் கையேடு இங்கே காணலாம்.

எக்லிப்ஸ் மஸ்கிட்டோ (Mosquitto) MQTT வழங்கி

MQTT வழங்கியை (server) தூதுவர் (broker) என்றும் சொல்கிறார்கள். எக்லிப்ஸ் மஸ்கிட்டோ (Mosquitto) MQTT வழங்கியை நிறுவி, அமைத்து பயன்படுத்துவதற்கான தொடக்கநிலைக் கையேடு இங்கே உள்ளது.

இதை நீங்கள் ராஸ்பை (Raspberry Pi) போன்ற கையடக்கக் கணினிகளும் நிறுவிப் பயன்படுத்தலாம். இதற்கான வழிமுறைகள் இங்கே.

நன்றி

  1. Installation – Mosquitto Broker MQTT in Ubuntu

இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஸிக்பீ, ஸிவேவ் சாதனங்களை MQTT வழங்கியுடன் இணைத்தல்

ஸிக்பீ MQTT பாலம் (Zigbee2MQTT). ஸிவேவ் MQTT பாலம் (ZWave2MQTT).

ashokramach@gmail.com

%d bloggers like this: