உபுண்டுவில் ஆரக்கிள் ஜாவா டெவெலெப்மென்ட் கிட் 7-ஐ (jdk 7) நிறுவுவது எப்படி?

 

Oracle Java Development Kit 7 (jdk7): உபுண்டுவின் அதிகாரபூர்வமான களஞ்சியத்தில்(Official ubuntu Repositories) JDK7 இனியும் இடம் பெற போவதில்லை. ஏனெனில் புதிய ஜாவா வின் உரிமத்தில் அது அனுமதிக்கபடவில்லை.இதன் காரணமாக தான் அதிகாரபூர்வமான உபுண்டுவின் களஞ்சியத்தில் இருந்து JDK/JVM அகற்றபட்டுள்ளது.

நீங்கள் ஆரக்கிள் ஜாவா டெவெலெப்மென்ட் கிட் 7-ஐ (jdk 7) PPA வழியாக நிறுவினால். அதிகாரபூர்வமான இணையயத்தில் இருந்து தானாக பதிவிறங்கி, நிறுவிவிடும். பின்பு flashplugin-installer தொகுப்பை போலவே உங்கள் உபுண்டு கணினியில் இதை நிறுவிக் கொள்ளலாம்.

உபுண்டுவில் ஆரக்கிள் ஜாவா டெவெலெப்மென்ட் கிட் 7-(jdk 7) ppa வழியாகநிறுவுவது எப்படி?

இந்த தொகுப்பு ஆரக்கிள் ஜாவா டெவெலெப்மென்ட் கிட் 7-ஐ வழங்கும்.(இதில் JRE மற்றும் ஜாவா browser plugin அடக்கம்)PPA வழியாக நிறுவும் பொது மட்டுமே முழுமையான Oracle JDK7 தொகுப்பு கிடைக்கிறது.இதனால் வெறும் ஆரக்கிள் JRE- ஐ மட்டும் தனியே நிறுவ முடியாது.

கீழே உள்ள கட்டளைகளை முனையத்தில் இயக்கவும்

sudo add-apt-repository ppa:webupd8team/java

sudo apt-get update

 

sudo mkdir -p /usr/lib/mozilla/plugins #just in case, this will be added to the package in the next version

sudo apt-get install oracle-jdk7-installer

ஆரக்கிள் ஜாவா வை உங்கள் உபுண்டு கணினியில் இருந்து நீக்க

 

sudo apt-get remove oracle-jdk7-installer

 

 

 

வணக்கம் என் பெயர் சதிஷ் குமார். நான் Collabnet என்னும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். என் எழுத்துக்களை இங்கே பதிவு செய்த ஆசிரியருக்கு நன்றி.

 

“தமிழன் என்ற கர்வம் கொள்வோம்”

மின்னஞ்சல் : sa_sathish14@yahoo.in

வலைப்பதிவு: sathish5.blogspot.in/

%d bloggers like this: