அடோபி டீரீம்வீவர் என்ற பெயரைக் கேட்டாலே அலர்ஜியா உங்களுக்கு,
அதன் விலையைக் கேட்டவுடன் மயக்கம் போட்டு விடுபவரா நீங்கள்? மைக்ரோசாப்ட் நிறுவனம் என்றாலே காத தூரம் ஓடுவீர்களா?
உங்களுக்காகவே காத்திருக்கிறது அப்டானா ஸ்டூடியோஸ் 3. இணைய தளங்கள், தயாரிக்க உதவும் ஒரு இலவச மென்பொருள் இது. இதை க் கொண்டு எச்.டி.எம்.எல்,(HTML) சி.எஸ்,எச்,(CSS), ஜாவாஸ்கிரிப்ட்(JavaScript), ரூபிரெய்ல்ஸ்(Ruby on Rails) , பி,எச்.பி,(PHP) , பைதான்(Python) இவற்றைப் பயன் படுத்தி நமக்குத் தேவையானதை உருவாக்கலாம்.இணைய தள செயலிகளை உருவாக்குவதற்கும்,அதை சீராக சோதனை செய்வதற்க்கும், இந்த இலவச மென்பொருள் மிகவும் உதவியாக உள்ளது.
எச்.டி.எம்.எல் 5,(HTML 5), சி.எஸ்.எஸ், (CSS) ஜாவாஸ்ரிப்ட் இவற்றின் குறியீடுகளை எழுதும் போது அடோபி ட்ரீம்வீவரைப் போல நமக்குத் தேவையானக் கட்டளைகளைக் காட்டி உதவி புரிகிறது. முக்கியமாக எச்.டி.எம்.எல் 5 பற்றிய விதிமுறைகளையும் நமக்குக் காட்டுகிறது. எந்தெந்த விதிமுறைகள் வழக்கத்தில் அதிகமாக உள்ளன. எவை இன்னும் பிரயோகத்திற்கு வரவில்லை என்று மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. எஃப்.டி.பி,(FTP) ,எஸ்.எஃப்.டி.பி (SFTP), போன்ற கோப்புப் பரிமாற்று வரைமுறைகளை(protocols)நன்றாக செயலாற்ற முடிகிறது. ரூபி ரெய்ல்ஸ்சில் உருவாக்கப்படும் இணைய ஒருங்குகளை(applications)எளிதாக வலையேற்றம் செய்ய முடிகிறது. இணைய தளங்களை உருவாக்குவதற்கும், இணைய ஒருங்குகளை ஒருங்குகளை உருவாக்குவதற்கும் பயன் படுவதோடு சோதனை செய்யவும் பிழைகளை கண்டுபிடித்து நீக்கவும் அப்டானா உதவி செய்கிறது. திட்டப் பணிகளை கிட் ஹஃபில்(GitHub) நேரடியாக ஏற்றி அணியினருடன் சேர்ந்து பணியாற்ற உதவி செய்கிறது. கணினி முறையியக்கிகளின் முனையத்தை(Built-in Terminal) பயன் படுத்திக் கணினி மொழிகளில்கணினிக் குறியீடுகளை எழுத முடிகிறது.
திறவூற்று மென்பொருட்களின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாக அப்டனா வளர்ந்து வருகிறது.மேலும் விவரங்களுக்கு wiki.appcelerator.org/display/tis/Home என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கவும். aptana.com/products/studio3 என்ற இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சுகந்தி வெங்கடேஷ் மின்னஞ்சல் : vknsvn@gmail.com
வலை : tamilunltd.com