PWA எனும் இணைய பயன்பாடு

ஒரு முற்போக்கான இணைய பயன்பாடு (PWA) என்பது எந்தவொரு கைபேசி பயன்பாட்டிற்கும் சமமான பயனர் அனுபவத்தை வழங்க நவீன இணைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திகொள்கின்ற ஒரு இணைய பயன்பாடு ஆகும். கூகுள் , மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்பத் தலைவர்களுடன் இணைந்து செயல்படும் திறமூல சமூகம், “பயன்பாட்டு இடைவெளியைக் குறைக்கும் (bridge the app gap)” எனும் முயற்சியில் PWA இன்நிகழ்ச்சி நிரலை முன்னோக்கித் தள்ளுகிறது. அடிப்படையில், ஒரு PWA ஆனது நம்முடைய பயன்பாட்டை இணைய உலாவியில் இயக்குகிறது. Play stores,d App stores ஆகிய இரண்டு தரப்பு அமைப்பு இருப்பதால், பின்வருகின்ற இரண்டு உலாவிகளில் மட்டும் கவனம் உள்ளது: கூகுள் குரோம் , ஆப்பிள் சஃபாரி (இவை திறமூல Chromium , WebKit ஆகியவற்றின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது).
மேசைக்கணினி பயன்பாடுகளை உருவாக்குவதை எதையும்மறைக்கவில்லை. அந்த தலைப்பில் மேலும் தகவலுக்கு, www.electronjs.org/எனும் இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்க. PWAகள் எந்த இணையதளம் அல்லது இணைய பயன்பாட்டைப் போலவே கட்டமைக்கப்பட்டுள்ளன. அவைகள் சமீபத்திய கைபேசி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திகொள்கின்றன,மேலும் UX சிறந்த நடைமுறைகளைச் செயல்படுத்துகின்றன. அனுபவத்தை மேம்படுத்த PWAக்கள் இணையஉலாவியை சொந்த குறிமுறைவரிகளுடன் இணைக்கலாம். நமக்குப் பிடித்த தேடுபொறியில் “PWA என்றால் என்ன” என்று தட்டச்சு செய்தால், “PWAக்கள் இணையஇணைப்பில்லாமல் செயல்படும் சாதனத்தில் நிறுவப்படும் திறன் கொண்ட விரைவான, நம்பகமான முழுஈடுபாட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. .”முகப்புத் திரை.” இது ஓரளவு உண்மையாக இருந்தாலும், இந்தக் கட்டுரையை எழுதும்போது கூட, PWA என்னவாக இருக்க முடியும் அது என்னவாக உருவாகிறது எனும் தகவல் ஒருமிகப்பெரிய பனிப்பாறையின் நுனி மட்டுமே ஆகும்.
PWA என்னவாக இருக்காது பின்வருபவை குறுக்குத்தள பயன்பாட்டு வரைச்சடடங்கள் ஆகும், இது நம்மை ஒரு குறிமுறைவரிகளின் அடிப்படையிலிருந்து உருவாக்க அனுமதிக்கிறது. அவைள் இணையஉலாவியை தங்கள் தளமாகப் பயன்படுத்துவதில்லை.
Flutter
React Native
Flutter ஆனது Dart எனப்படும் கணினிமொழியைப் பயன்படுத்துகிறது, இது iOS, Android , இணையத் தொகுப்புகள் ஆகியவற்றிற்கு ஏற்பகுத் தொகுக்கிறது.
React Nativeஉம் அதையேதான் செய்கிறது ஆனால் பின்தளத்தில் ஜாவாஉரைநிரல் தொகுக்கிறது.
வரையறையின்படி PWA என்றால் என்ன?
ஒரு PWA என்பது, அதன் அசல் வரையறையின்படி, பின்வருமாறான மூன்று தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
• சேவை பணியாளர்: இணையஇணைப்பில்லா செயலியை வழங்குகிறது.
• வெளிப்படையானஇணையம்: முகப்புத் திரை , பயன்பாட்டு உருவப்பொத்தான்களை உள்ளமைக்கJSON மார்க்அப்.
• பாதுகாப்பு: HTTPS செயல்படுத்தப்படுகிறது, ஏனெனில் ஒரு சேவைப்பணியாளர் இதன்பின்னணியில் இயங்குகிறார்
. இந்த கூறுகள் Google இன் கலங்கரைவிளக்கு PWA தணிக்கையில் தேர்ச்சி பெறவும், ள மதிப்பெண்ணில் பச்சை நிற சரிபார்ப்பு அடையாளத்தைப் பெறவும் நம்மை அனுமதிக்கின்றன. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்தவுடன், Chrome இன் “add to home screen” எனும்அறிவுறுத்தலும் தானாகவே இயக்கப்படும்.
PWA Builder (மைக்ரோசாப்ட் வழங்கும் கட்டணமற்ற சேவை)ஆனது PWA ஐ உருவாக்குவதற்கும் அடிப்படைத் தேவைகளைக் காட்சிப்படுத்துவதற்கும் சிறந்த பயனாளர் இடைமுகத்தினைUI ஐக் கொண்டுள்ளது. PWA இன் அடிப்படைத் தேவைகள் சேவைப் பணியாளர் மூலம் இணையஇணைப்பில்லாத நடத்தையை அனுமதிக்கின்றன, மேலும் manifest.json எனும் கோப்பாநது ஆண்ட்ராய்டில் “add to home screen” எனும் பண்பினை behavior அனுமதிக்கிறது, அங்கு நம்முடைய இணையதளம் ஆனது முகப்புத் திரையில் உருவப்பொத்தானாகச் சேர்க்கப்பட்டு, இணையஉலாவி இல்லாத Chrome இல் திறக்கப்படும். (முழுத்திரையில்) app splash எனும்பக்கத்துடன். இவை PWAக்கான குறைந்தபட்சத் தேவைகளாகும் இணையஇணப்பில்லாத தற்காலிகநினைவகததின் காரணமாக செயல்திறன் அதிகரிப்பை வழங்குவதைத் தவிர, முக்கியமாக இணையதளம் ஒரு பயன்பாடு என்ற மாயையை அளிக்கிறது. இது ஒரு உளவியல் இடைவெளியாகும், அங்கு இறுதிப் பயனர் உலாவியை வெறும் “இணையதளங்கள்” என்று நினைப்பதை நிறுத்திவிடுவார், அதற்குப் பதிலாக அது உண்மையில் என்ன… ஒரு பயன்பாட்டுத் தளமாக இருக்கிறது. உண்மையில் மேம்படுத்தப்பட்ட “பயன்பாடு போன்ற அனுபவத்தைapp-like experience ” வழங்கும் முடிவில்லாத எண்ணிக்கையிலான வசதிகள், செயலிகள் UX/UI மேம்பாடுகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கு Google இதை முதன்மைப்படுத்துவதாகத் தோன்றுகின்றது. PWA என்பது உண்மையில் இணையஉலாவி தொழில்நுட்பங்கள் இணையமேம்பாட்டுஅபிவிருத்தி நுட்பங்களின் தொழில்நுட்பங்களின் தொகுப்பாகும், இது ஒரு இணையதளத்தை மேலும் “பயன்பாடு போன்றதுapp-like ” ஆக்கும். இவற்றைப் பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்.
மேம்படுத்தப்பட்ட பயன்பாடு போன்ற அனுபவம்
• கைபேசி சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட UX/UI அனுபவம் ◦ HTML/CSS/Javascript
• சொந்த சாதன அணுகல் மேம்படுத்தப்பட்ட இணைய திறன்கள்
• வேகமும் செயல்திறனும்
வரையறைக்கு அப்பால் இன்று PWA என்னவாக இருக்க முடியும் மேலே உள்ள மூன்று அனுபவ விளக்கங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் இங்கே உள்ளன.
UX/UI மேம்பாடுகள்
UX/UI , காட்சிச் சிக்கல்களைத் தீர்ப்பது ஆகியவை இணையதளத்தை ஒரு செயலியாக உணர வைக்கும். அசைவூட்டங்கள், உள்ளீடு/எழுத்துரு அளவுகள், உருளுதலின் சிக்கல்கள் அல்லது பிற CSS பிழைகள் போன்ற விவரங்களுக்கு இது அடிக்கடி கவனம் செலுத்துகிறது. அவைகள் இந்த UX ஐ உருவாக்குவதற்கு வலுவான முன்தள மேம்பாட்டுக் குழு இருப்பது முக்கியம். வடிவமைப்பும் UX என்ற வகைக்குள், ஒரு இணைய ஆவணத்தின் (HTML/JSS/JS) கட்டமை்ப்புத் தொகுதிகளுடன் நாம் செயல்படுத்தக்கூடிய மேம்பாடுகள் ஆகும். இதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள்:
• Hotwire Turbo: AJAX அல்லது WebSockets ஐப் பயன்படுத்தி மாறும் இணைய பக்கத்தின் பகுதிகளை மட்டும் மீள்பதிவேற்றம் செய்ய கம்பி வழியாக HTML ஐப் பயன்படுத்தும் திறமூல கட்டமைப்பு. வரையறுக்கப்பட்ட ஜாவாஉரைநிரலைப் பயன்படுத்துவதற்கு SPAகள் முயற்சிக்கும் செயல்திறன் மேம்பாடுகளை இது வழங்குகிறது. இந்த அணுகுமுறை தனிக்கன்மஅடுக்குக் பயன்பாடு அல்லது மாதிரிப்பலக வரைதல் அமைப்புக்கு ஏற்றது; நம்முடைய முன் , பின் ஆகிய முனைகளை துண்டிப்பதற்கான கூடுதல் சிக்கலில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.
• கைபேசி சார்ந்த SPA கட்டமைப்புகள்: நம்மடைய இணையதளத்திற்கு பயன்பாடுகள் போன்ற பயனர் அனுபவத்தை வழங்கக்கூடிய பல துண்டிக்கப்பட்ட கட்டமைப்புகள் உள்ளன. Onsen UI , Framework 7 ஆகியவை நம்முடைய இணையதளத்திற்கான விரைவான, பதிலளிக்கக்கூடிய பயனர் இடைமுகத்தை உருவாக்க உதவும் இரண்டு சிறந்த வாய்ப்புகள். இருப்பினும், இந்த கட்டமைப்பை நம்ப வேண்டியதில்லை. மேலே விவாதிக்கப்பட்டபடி, சமீபத்தியபயன்பாடுகள் போன்ற கைபேசி வடிவமைப்பு நுட்பங்களைச் செயல்படுத்துவதன் மூலம் நாம் முயற்சிக்கும் பயனர் இடைமுகத்தினைUI ஒரு நல்ல முன்பக்கத்திற்கான குழு உருவாக்க முடியும்.
இணைய திறன்கள் Chromium குழு தொடர்ந்து உலாவி அனுபவத்தை மேம்படுத்துகிறது. இந்த முன்னேற்றத்தை நாம் Fugu,எனும் செயல்திட்டத்தில் கண்காணிக்கலாம் WebKit அதன் உலாவி அனுபவத்தையும் திறன்களையும் மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறது. சொந்த அனுபவத்தை மேம்படுத்த Swift APIஇன் WKWebView உடன் தொடர்பு கொள்ளலாம். Google Bubblewrap எனப்படும் சேவையைக் கொண்டுள்ளது, இது நம்பகமான இணையச் செயலியுடன் (TWA) செயல்படுகிறது. இவை அனைத்தும்நம்முடைய PWA-இயக்கப்பட்ட இணைய தளத்தை ஒரு சொந்த APK தொகுப்பில் கட்டமைக்க வேண்டும், எனவே அதை app store இல் சமர்ப்பிக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள PWA கட்டமைப்பாளர் இணைப்பு ஆண்ட்ராய்டுக்கு இப்படித்தான் செயல்படுகிறது.
வேகமும் செயல்திறனும் நம்முடைய பயன்பாட்டின் செயல்திறனை மேம்படுத்த எண்ணற்ற வழிகள் உள்ளன. PWA ஐப் பயன்படுத்துவதன் நன்மைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
• அதிகரித்த கலங்கரை விளக்கம் SEO.
• ஒரு ஒற்றைக் குறிமுறைவரி
. • உராய்வு இல்லாத சோதனை.
• வளர்ச்சி சுழற்சிகளுக்கான உடனடி கருத்து வளையம்
. • நிர்வகிக்கப்பட்ட PaaS இணைய வரிசைப்படுத்தல் பணிப்பாய்வுகளைப் பயன்படுத்துதல்.
• இணையத் தொழில்நுட்பங்கள் என்பது பலதரப்பட்ட மேம்படுத்துநர்ர்களுக்கான திறன் தொகுப்பாகும்.
• முழு அளவிலான இணைய அனுபவத்தை வழங்கும் ஒரே குறுக்கு-தள மேம்பாட்டு தீர்வு
. • குறுக்கு-தள கட்டமைப்பின் வரையறுக்கப்பட்ட பயனர்இடைமுகUI கூறுகளை நம்பாமல் வடிவமைப்பைத் தனிப்பயனாக்க வரம்பற்ற வாய்ப்புகள்.
• வரையறுக்கப்பட்ட (அல்லது இல்லாத) இணைய இணைப்பு உள்ள பயனர்களை அடைதல்.
PWA ஐப் பயன்படுத்துவதில் சில குறைபாடுகள்/ எச்சரிக்கைகள் உள்ளன, அவற்றுள்:
• வரையறுக்கப்பட்ட செயலி: சொந்த சாதன அணுகலுடன் ஒப்பிடும்போது PWAக்களுடன் “பயன்பாட்டு இடைவெளிapp gap ” இன்னும் உள்ளது. இருப்பினும், உலாவிகள் இதை மூடுவதில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. தாமஸ் ஸ்டெய்னரிடமிருந்து பயன்பாட்டு இடைவெளியைக் குறைப்பதில் Fugu,எனும் செயல்திட்டத்தினை எடுத்துக்கொள்வதைப் பற்றி மேலும் அறிக, மேலும் உலாவியின் திறன்களைக் காண இணையம் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்வையிடுக. தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, திறன்/செயல்பாடு தொடர்பான கட்டுப்பாடுகளை அனுபவிக்காத பெரும்பாலான பயன்பாடுகளில் PWA செயல்திட்டப்பணி இருக்கும்.
• தரப்படுத்தல் இல்லாமை: மேலே உள்ள தாமஸ் ஸ்டெய்னரின் நேர்காணலில் தற்போது இல்லாத “PWA செந்தரநிலை” பற்றி விவாதிக்கிறது., தலைப்பைச் சுற்றியுள்ள குழப்பம் மேம்படுத்துநர்கள் அந்த முதல் “ஆஹா எனும்தருணத்தை” கடக்க சிரமப்படுவதற்கு இதுவே காரணம். இந்த குழப்பம் தொழில்நுட்பத்தில் இருக்க வேண்டியதை விட மெதுவான வேகத்திற்கு வழிவகுத்தது. மேலும், இந்த தெளிவு இல்லாததால், சந்தைப்படுத்தல் அல்லது நிர்வாகத்திற்கு PWA ஐக் கேட்கத் தெரியாது, ஏனெனில் அது என்னவென்று அவர்களுக்குப் புரியவில்லை.
• iOS App store: App storesஆனவை தற்போது PWA களை பட்டியலிடவில்லை, எனவே சொ்த பயன்பாடுகளைவிட அவற்றைக் கண்டுபிடிப்பது கடினம். இதற்கு வழிகள் உள்ளன. இருப்பினும், நம்முடைய இணைய பயன்பாட்டை சிறந்ததாக அல்லது சொந்த அனுபவத்தை விட சிறந்த அனுபவமாக மாற்றுவதே முக்கியமானது. அதைச் சரியாகச் செய்திடுக, ஆப்பிள் கடவுள்கள் நம்மைப் பார்த்து புன்னகைப்பார்கள், ஏனென்றால் மதிப்புரைகளில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால், நாம்ஒரு நல்ல கைபேசி அனுபவத்தை வழங்குகின்றம். PWA என்ற சொல்லுக்கு முன்பே சொந்த iOS பயன்பாடுகளில் WKWebView ஐப் பயன்படுத்தும் ஒரு கட்டமைப்பான Ionic, அவர்களின் மன்றங்களில் சில சுவாரஸ்யமான நுண்ணறிவைக் கொண்டுள்ளது. நாம் என்ன செய்கின்றோம் என்று நமக்குத் தெரிந்தால், இது ஒரு பிரச்சனையாக இருக்காது.
• சில சந்தர்ப்பங்களில் சாத்தியமான பாதுகாப்புச் சிக்கல்கள்: உலாவி குக்கீகளை அங்கீகாரமாகப் பயன்படுத்துகிறது. தொடக்கத்திலிருந்தே நிலையைப் பராமரிக்க முயற்சித்த உண்மையான உலாவி முறை, இது நம்முடைய செயல் திட்டத்தின் தேவைகளுக்குப் பொருந்தாது. உலாவி சிறந்த கடவுச்சொல் நிர்வாகத்தைக் கொண்டுள்ளது Webauthn போன்ற பிற அங்கீகார முறைகளை தொடர்ந்து உருவாக்கி செயல்படுத்துகிறது. தொடர்புடைய களப்பெயர்களின் பயன்பாடு பாதுகாப்பின் மற்றொரு அடுக்கை வழங்குகிறது.
மாற்றுகளுடன் ஒப்பிடுகையில், “இணையம் வெற்றி பெறுகிறது” , எதிர்கால முன்னேற்றம் இந்த குறைபாடுகளைக் குறைக்கும் என்று நம்பப்்படுகின்றது, ஏனெனில் இணையம் புதிய திறன்களை வழங்குகிறது. சொந்த மேம்படுத்துதல் மறைந்துவிடும் என எண்ணவேண்டாம், ஆனால் WebView , native code இடையே அதிக தடையற்ற ஒருங்கிணைப்புகள் இருக்கும். மடக்கு PWAக்கள் இன்னும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் அதே வேளையில், நாம் இணையத்தைப் பயன்படுத்தும் விதத்தில் அவை புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

%d bloggers like this: