எளிய தமிழில் Python -6

 5 Conditional Statements

5.1 if-else Condition:

if-else  condition-ல்  if என்பது statement-னை check செய்து சரி என்று இருந்தால் அதற்கு கீழ் உள்ள function  செயல்படும். அதேபோன்று else என்பது if ஆனது தவறாக இருக்கும் பட்சத்தில் else-க்கு கீழ் உள்ள function  செயல்படும்.

உதா:

a=10,if-else condition-ல் if ஆனது 0 விட பெரியதாக இருக்கும் போது “a is positive number” என்று print செய்யப்படும்.இல்லையேல் else-ல் உள்ள “a is negative number “ என்று print செய்யப்படும்.ஆகவே a ஆனது if-else condition-ஐ check செய்து “a is positive number ” என்ற விடையானது கிடைக்கும்.

a=-99,if-else condition-ல் if ஆனது 0 விட பெரியதாக இருக்கும் போது “a is positive number” என்று print செய்யப்படும்.இல்லையேல் else-ல் உள்ள “a is negative number “ என்று print செய்யப்படும்.ஆகவே a ஆனது if-else condition-ஐ check செய்து “a is negative number” என்ற விடையானது கிடைக்கும்.

5.2 if-elif-else Condition:

if-elif-else  condition-ல்  if என்பது statement-னை check செய்து சரி என்று இருந்தால் அதற்கு கீழ் உள்ள function  செயல்படும். அதேபோன்று elif என்பது statement-னை check செய்து சரி என்று இருந்தால் அதற்கு கீழ் உள்ள function  செயல்படும்.elif ஆனது எத்தனைமுறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.else என்பது if மற்றும் elif ஆனது தவறாக இருக்கும் பட்சத்தில் else-க்கு கீழ் உள்ள function  செயல்படும்.

உதாரணம்:

a=0,if-else condition-ல் if ஆனது 0 விட பெரியதாக இருக்கும் போது “a is positive number” என்று print செய்யப்படும்.if ஆனது 0 விட பெரியதாக இருக்கும் போது “a is negative number” என்று print செய்யப்படும் .இல்லையேல் else-ல் உள்ள “a is equal “ என்று print செய்யப்படும்.ஆகவே a ஆனது if-elif-else condition-ஐ check செய்து “a is equal” என்ற விடையானது கிடைக்கும்.

a=-99,if-elif-else condition-ல் if ஆனது தவறாக இருக்கும் போது elif statement-ஐ check செய்து “a is negative number” என்று print செய்யப்படுகிறது.

5.3 Nested if condition :

Nested if condition என்பது if condition-க்குள் if condition-ஐ பயன்படுத்துவதாகும்.இதனையே nested-if என்கிறோம்.

உதாரணம் :

number=int(input(“enter number : “))
if number > 0:
    if number >= 25:
        print(“my number %s is grater than 25″%(number))
    else :
        print(“my number %s is lesser than 25″%(number))
elif number < 0:
    if number <= -25:
        print(“my number %s is grater than -25″%(number))
    else :
        print(“my number %s is lesser than -25″%(number))
else :
    print(“my number is zero”)

 

இங்கு number என்ற variable-ல் முழுஎண் மட்டும் input-ஆக வாங்கபடுகிறது.இவற்றுள் if-elif-else condition ஆனது பயன்படுத்தபடுகிறது.

if codition-ல் number ஆனது 0 விட பெரியதாக அதாவது positive ஆக இருந்தால் if-க்கு கீழ் உள்ள if-else condition செயல்படுத்தபடும்.

elif  codition-ல் number ஆனது 0 விட சிறியதாக அதாவது negative ஆக இருந்தால் elif-க்கு கீழ் உள்ள if-else condition செயல்படுத்தபடும்.

else-ல் if மற்றும் elif செயல்படவில்லை என்றால் else condition செயல்படுத்தபடும்.

நிரலின் வெளியீடு:

இதில் nested if condition பயன்படுத்த பட்டுள்ள நிரலை இயக்கும்போது enter number என்று கேட்கிறது.78 கொடுக்கும்போது 25 விட பெரியது என்றும்,-98 கொடுக்கும்போது -25 விட பெரியது என்றும்,0 கொடுக்கும்போது zero என்று print செய்யப்பட்டிருப்பதை காணலாம்.

 

-தொடரும்.

எழுதியவர்: 

செ.பாலகணேசன் 

ganesanluna@yahoo.in

 

 

%d bloggers like this: