4. Variable Types (மாறி வகைகள்) :
எண்கள் மற்றும் எழுத்துகளை சேமித்து வைக்கப்பட்ட நினைவக இடத்தையே மாறிகள் (variable) என்கிறோம். அதாவது, நீங்கள் ஒரு மாறி உருவாக்கினால், நினைவகத்தில் சிறிதளவு இடத்தை நீங்கள் வைத்திருப்பீர்கள்.
ஒரு மாறி தரவு வகை அடிப்படையில்நீங்கள் இந்த மாறிகளில் integer, decimals அல்லது எழுத்துகளை string ஆக சேமிக்க முடியும்.நினைவக இடத்தை ஒதுக்குவதற்கு பைத்தான் மாறிகள் வெளிப்படையான அறிவிப்பு தேவையில்லை. நீங்கள் ஒரு மாறி ஒரு மதிப்பு கொடுக்கும் போது அறிவிப்பு தானாகவே நடக்கிறது.equal symbol (சமமான அடையாளம்) = மாறிகள் மதிப்புகளுக்கு ஒதுக்க பயன்படுகிறது. மாறி ஆனது equal (=) ஆபரேட்டர் இடது நோக்கியும்,operator-க்கு வலது பக்கத்தில்operand ஆனது variable-ல் சேமிக்கப்படும்.
உதாரணமாக:
a என்ற variable-ல் 10 என்கிற value – ஐ store செய்துள்ளது.அடுத்து hello world என்ற word ஆனது string ஆக store செய்துள்ளது என்பதை காண்பிக்கிறது.
4.1 Numbers(எண்கள்) :
Number என்பது தரவுகளை(data) கையாண்டு numberic value-ஆக store செய்வதே numbers எங்கிறோம்.
4.1.1 Integer(முழு எண்) :
Integer என்பது முழு எண்கள் என்கிறோம். மிதவை புள்ளி எண்களை(float) முழு எண்களாக மாற்றுவதற்கு integer ஆனது பயன்படுத்தபடுகிறது.அதேபோன்று input வாங்குவதில் கூட முழு எண் மதிப்பு வாங்குமாறு set செய்யலாம்.கீழே உள்ள படத்தினை பார்த்தால் புரியும்.
உதாரணமாக:
இங்கு a=50.9 என்பதில் float value ஆனது store செய்யபட்டுள்ளது.அதை முழு எண்ணாக int(a)-ல் value 50 என்று கிடைக்கும்.
அதேபோன்று b என்ற variable-ல் integer மட்டுமே input ஆக வாங்கப்படுகிறது.இதில் ganesan என்று string-னை கொடுக்கும் error message கிடைக்கின்றது.மறுபடியும் b-ல் முழு எண்ணை input ஆக கொடுக்கும் போது தான் அவை b-ல் store ஆகும்.
4.1.2 float (மிதவைப்புள்ளி எண்) :
float என்பது மிதவைபுள்ளி எண்கள் என்கிறோம்.முழு எண்களை(integer) மிதவை புள்ளி எண்களாக மாற்றுவதற்கு float ஆனது பயன்படுத்தபடுகிறது.அதேபோன்று input வாங்குவதில் கூட float-னை வாங்குமாறு set செய்யலாம்.கீழே உள்ள படத்தினை பார்த்தால் புரியும்.
உதாரணமாக:
இங்கு a=50 என்பதில் int value ஆனது store செய்யபட்டுள்ளது.அதை மிதவை புள்ளி எண்ணாக float(a)-ல் value 50.0 என்று கிடைக்கும்.
அதேபோன்று b என்ற variable-ல் float மட்டுமே input ஆக வாங்கப்படுகிறது.இதில் python என்று string-னை கொடுக்கும் error message கிடைக்கின்றது.மறுபடியும் b-ல் முழு எண்ணை input ஆக கொடுக்கும் போது தான் அவை b-ல் மிதவை புள்ளி எண்ணாக float store ஆகும்.
4.1.3 Complex (சிக்கலான எண்கள்):
ஒரு சிக்கலான எண், a + bi, a மற்றும் b உண்மையான(real) எண்கள் மற்றும் i என்பது imaginary(கற்பனை) எண்ணாகும். i2 = -1 என்பது imaginary part ஆகும். உதாரணமாக, -3.5 + 2i ஒரு சிக்கலான எண். இதனை python மொழியில் சாதரணமாக செய்யலாம்.
உதாரணமாக:
இங்கு u என்பது real and imaginary சேர்ந்துள்ளது.v-ல் real value மட்டும் உள்ளது.இதனை கூட்டும் போது real value ஆனது add ஆகி imaginary part அப்படியே கிடைக்கிறது.
complex(a,b) இவற்றுள் a என்பது real,b என்பது imaginary.இதனை conjugate செய்யும் போது imaginary value மட்டும் conjugate செய்யப்படும்.
4.2 Multiple assignment :
பைத்தான் ஒரு ஒற்றை மதிப்பினை(value) ஒரே நேரத்தில் பல மாறிகள்(variable)-ல் store செய்ய அனுமதிக்கிறது. அதேபோன்று மாறிகளில் value மற்றும் word-னை store செய்யலாம்.
உதாரணமாக :
இங்கே, ஒரு முழு எண் மதிப்பு 500 கொண்டு a,b,c என்கிற variable-ல் சேமிக்கப்படுகிறது.மேலும் மூன்று மாறிகள் ஒரே நினைவக இடத்திற்கு ஒதுக்கப்படுகின்றன. நீங்கள் பல மாறிகள் பல பொருட்களை ஒதுக்கவும் முடியும்.
அதேபோல் Multiple assignment-ல் variable and string-யும் store செய்யமுடியும்.
4.3 string(சரம்) :
சரம் என்பதே மாறாத தன்மை கொண்ட நிலையான அமைப்பினையே string என்கிறோம்.stringனை அடையாளம் காண்பது இரண்டு single quotation-க்கும் இடையிலும் அல்லது double quotation-க்கு இடையில் word மற்றும் value-யே string ஆகும்.
உதாரணமாக :
Double quotation-ஐ மூன்று முறை continue-ஆக ஆரம்பித்து மூன்று முறை continue-ஆக முடிப்பது string ஆகும்.இதில் paragraph அனைத்துமே string ஆக store செய்யலாம்.
அதேபோன்று a=90 என்பது சரமாகும்.b=10 என்பது integer.ஆகவே integer-யும் string-யும் சேர்க்க முடியாது.ஆகவே integer-ஐ string ஆக மாற்ற str(10) என்று பயன்படுத்தினால் அவை string-ஆக மாறிவிட்டது.
இவற்றை சேர்க்கும் போது 9010 என்று காண்பிக்கப்படுகிறது.இவ்வாறே balaganesan-ம் காண்பிக்கப்படுகிறது.
Escape Sequence | Description |
\newline | Backslash and newline ignored |
\\ | Backslash |
\’ | Single quote |
\” | Double quote |
\a | ASCII Bell |
\b | ASCII Backspace |
\f | ASCII Formfeed |
\n | ASCII Linefeed |
\r | ASCII Carriage Return |
\t | ASCII Horizontal Tab |
\v | ASCII Vertical Tab |
\ooo | Character with octal value ooo |
\xHH | Character with hexadecimal value HH |
அதேபோல் string-ல் எழுத்துக்களை பெரியதாக,சிறியதாக மற்றும் முதல் எழுத்தை மட்டும் பெரிதாக்க கீழ்க்கண்டவாறு பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக :
a என்ற variable-ல் string என்பது store செய்யப்படுகிறது.இவை அனைத்தும் small case ஆக உள்ளது.இதனை பெரியதாக மாற்றுவதற்கு a.upper() என்றும் சிறியதாக மாற்றுவதற்கு a.lower() என்றும்,முதல் எழுத்தை மட்டும் பெரியதாக மாற்றுவதற்கு capitalize() என்கிற function-ம் பயன்படுத்தப்படுகிறது.
String format :
% என்பது string-ல் Format-ஐ குறிப்பதாகும்.
%s என்பது string ஆகவும்,
%d என்பது decimal ஆகவும் python assign செய்துக்கொள்ளும்.
% என்பது கொடுக்கப்பட்டதில் format-ஐ குறிப்பதற்கு உதவுகிறது.
String-ல் பயன்படும் function :
உதாரணம் 1:
a என்பதில் “ganesan” என்று வாங்கப்படுகிறது.a எங்கிற variable-ல் எத்தனை character-கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை குறிப்பிடுவதற்கு len() ஆனது பயன்படுத்தப் படுகின்றன.len(a) என்று குறிப்பிடும்போது 7 என்று கிடைக்கின்றது.
- a.isalnum() என்பது a-ல் alnumeric value உள்ளதா என்பதை குறிக்கின்றன.இதில் ஒரு charcter அதாவது ஒரு letter இருந்தால் கூட True என்று கிடைக்கும்.
- a.isalpha() என்பது a-ல் alphabetic உள்ளதா என்பதைகுறிக்கின்றன.இதில் ஒரு charcter அதாவது letter இருந்தால் கூட True என்று கிடைக்கும்.
- a.isdigit() என்பது a-ல் digit(எண்கள்) உள்ளதா என்பதை குறிக்கின்றன. இதில் ஒரு எண்கள் கூட இல்லாததால் False என்று கிடைக்கின்றது.
- a.islower() என்பது a-ல் உள்ள letter சிறியதா என்று check செய்கின்றது.a-ல் அனைத்தும் சிறியதாக இருப்பதால் True என்று கிடைக்கின்றது.
- a.isupper() என்பது a-ல் உள்ள letter பெரியதா என்று check செய்கின்றது.a-ல் அனைத்தும் சிறியதாக இருப்பதால் False என்று கிடைக்கின்றது.
- a.isspace() என்பது a-ல் space(காலியிடம்) உள்ளதா என்று check செய்கின்றது.a-ல் காலியிடம் இல்லாததால் False என்று கிடைக்கின்றது.
- a.istitle() என்பது a ஆனது title(தலைப்பா) என்று பார்க்கிறது.a ஆனது தலைப்பு இல்லை என்பதால் இங்கு False என்று கிடைக்கிறது.
உதாரணம்2:
இதில் a-ல் “ python “ என்று store செய்யப்பட்டுள்ளது.இங்கு a-ல் உள்ள python-ன் left side space-ஐ நீக்க lstrip() பயன்படும். இதை a-ல் a.lstrip() என்று பயன்படுத்தும் போது இடது பக்க space ஆனது நீக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.
a-ல் உள்ள python-ன் right side space-ஐ remove செய்வதற்கு rstrip() பயன்படும்.இதை a-ல் a.rstrip() என்று பயன்படுத்தும் போது வலது பக்க space ஆனது நீக்கப்படும்.
a மற்றும் b-யினை சேர்ப்பதற்கு concatenate(+) ஆனது பயன்படும்.இங்கு a மற்றும் b ஆனது சேர்க்கப்பட்டு “pythonprogramming” என்று வெளிப்படுவதைக் காணலாம்.
உதாரணம்3:
முயன்று பாருங்கள்:
str1 என்ற variable-ல் “this is string example …wow!!!”என்றும் str2 என்ற variable-ல் “exam”என்றும் store செய்யப்படுகின்றன.
இதில் str2-வை str1-ல் இருக்கின்றதா என்பதை பார்ப்பதற்கு find என்பது பயன்படுத்தப்படுகிறது.
str1.find(str2) என்பது str1-ல் str2-ஐ find செய்கின்றது.
-தொடரும்.
எழுதியவர்:
செ.பாலகணேசன்