பைதான் நிரல் திருவிழா – விழுப்புரம் – ஜூன் 9 2019

தொழில்நுட்பம் கற்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்பது பழமொழிப்போல ஊறிக்கிடக்கும் வரி. ஆனால் தொழில்நுட்பமே மக்களுக்கானது என்ற அடிப்படை உன்மை உரக்க உரைத்துக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பு தான் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (VGLUG). இதன் அடிப்படை நோக்கம் தொழில்நுட்பம் சார்ந்து மட்டுமல்ல. அந்த தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்து அதன்மூலம் மக்களை பயனடைய செய்வது. அதன் அடிப்படையில் Python என்ற programming language ஐ மாணவர்களுக்கு சொல்லித்தந்து, பின் சொல்லித்தந்ததன் அடிப்படையில், சிறிய அளவில் programஐ கொடுத்து அதை திறம்பட முடிப்பவருக்கு ரூ. 1000 பரிசாக வழங்கப்படவுள்ளது. இது உங்கள் திறமையை சோதிப்பதல்ல. திறமையை வளர்த்து பின் உங்கள் வளர்ச்சியை சோதிப்பது. அனைவரும் கலந்துக்கொண்டு கற்று பரிசு பெற அழைக்கிறோம்!

நாள் – ஜூன் 9 2019 – 9 AM – 5 PM

இடம் –

CITU Office,
Ramson building,
இரயில் நிலையம் எதிரில்,
குமார் வெற்றி டுடோரியல் அருகில்,
விழுப்புரம்

 

பதிவு செய்க – docs.google.com/forms/d/e/1FAIpQLSeU7sxTi8azS1Y_vKnjjW2Xa2y5W2yVLUM8BrEELVF3J07zww/viewform

 

%d bloggers like this: