பைத்தான் படிக்கலாம் வாங்க – 15 – while 2

முந்தைய பதிவில் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தோமே! செய்து விட்டீர்களா? முதல் வீட்டுப்பாடம், முந்தைய பதிவில் பார்த்த நிரலுக்குப் பாய்வுப்படம் வரைவது.

முதல் நிரல்:

count = 1 #1. முதலில் மனத்தில் இருக்கும் countஇன் மதிப்பு 1
while count<=5: #2. countஇன் மதிப்பு ஐந்துக்குக் கீழ் இருக்கும் வரை:
print(1) #3. 1 என அச்சிடுக.
count+=1 #4. countஉடன் ஒன்று கூட்டிக் கொள்க.

view raw

while_1.py

hosted with ❤ by GitHub

பாய்வுப்படம்:

பாடம் #2:

count = 1 #1. முதலில் மனத்தில் இருக்கும் countஇன் மதிப்பு 1
while count<=5: #2. countஇன் மதிப்பு ஐந்துக்குக் கீழ் இருக்கும் வரை:
print(count)
count+=1 #4. countஉடன் ஒன்று கூட்டிக் கொள்க.

view raw

while_2.py

hosted with ❤ by GitHub

பாடம் #3:

count = 1 #1. முதலில் மனத்தில் இருக்கும் countஇன் மதிப்பு 1
while count<=5: #2. countஇன் மதிப்பு ஐந்துக்குக் கீழ் இருக்கும் வரை:
print(count*2)
count+=1 #4. countஉடன் ஒன்று கூட்டிக் கொள்க.

view raw

while_3.py

hosted with ❤ by GitHub

பாடம் #4:

count = 1 #1. முதலில் மனத்தில் இருக்கும் countஇன் மதிப்பு 1
while count<=5: #2. countஇன் மதிப்பு ஐந்துக்குக் கீழ் இருக்கும் வரை:
print(count*count)
count+=1 #4. countஉடன் ஒன்று கூட்டிக் கொள்க.

view raw

while_4.py

hosted with ❤ by GitHub

பாடம் #5:

while_5.py

hosted with ❤ by GitHub

சரி, இந்தப் பாடங்களைப் பார்த்து விட்டோம். இப்போது முதல் நிரலை எடுத்துக் கொள்ளுங்கள்; அதன் பாய்வுப் படத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தப் பாய்வுப் படத்தைக் கொஞ்சம் மாற்றிக் கீழ் உள்ளவாறு வரைந்திருக்கிறேன். இதில் இருக்கும் மாற்றம் புரிகிறதா எனப் பாருங்கள்.

நிரல்:

total = 0 # 1. மொத்தம் முதலில் சுழி.
count = 1 # 2. countஇன் தொடக்க மதிப்பு 1
while count<=5: # 3. count, ஐந்தாகும் வரை
total = total + count # 4. ஒவ்வொரு முறையும் மொத்தத்துடன் countஐக் கூட்டுக
count = count + 1 # 5. countஐ ஒவ்வொரு முறையும் கூட்டுக
print(total) # 6. நிறைவில் மொத்தத்தை அச்சிடுக.

view raw

while_6.py

hosted with ❤ by GitHub

இந்த மாற்றம் புரிந்தால், உங்களுக்குப் புரிந்ததைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் புரிதலும் என் புரிதலும் இணைந்து பயணிக்கிறதா? பயணம் தொடரட்டும், பாதை மலரட்டும்.

– கி. முத்துராமலிங்கம், பயிலகம்.

%d bloggers like this: