பைத்தான் படிக்கலாம் வாங்க! 5 – விண்டோசில் பைத்தான் நிறுவல்

) முதலில் www.python.org/downloads/ தளத்திற்குப் போய் அண்மைய பதிப்பைச் சொடுக்கித் தரவிறக்கிக் கொள்ளுங்கள். (இப்போதைக்கு 3.10.1)


2) தரவிறக்கிய கோப்பைச் சொடுக்கி, “Install Now” என்பதைக் கொடுப்பதற்கு முன், கடைசியில் இருக்கும் “Add Python 3.10 to Path” என்பதைத் தேர்ந்து கொள்ளுங்கள். (குறிப்பு: மேல் உள்ள படத்தில் Add Python 3.10 to Path” தேர்ந்திருக்க வேண்டும்.  விடுபட்டிருக்கிறது)

3) பிறகு, “Install Now” என்பதைச் சொடுக்கினால் போதும்.

4) இப்படியாகப் பைத்தான் நிறுவல் தொடங்கி விடும்.


5) கடைசியில் “Setup was successful” என்று வந்தால் போதும். நீங்கள் பைத்தானை நிறுவி விட்டீர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

பைத்தான் நிறுவலை எப்படி உறுதிப்படுத்துவது?
cmd என்று தட்டினால் Command Prompt வரும். அதில் python –version என்று அச்சிட்டுப் பாருங்கள். நீங்கள் நிறுவிய பைத்தானின் பதிப்பைப் பார்க்கலாம்.

Pip நிறுவல்:
பைத்தானுடன் சேர்ந்து Pip (Pip Installs Packages) உம் கணினியில் நிறுவப்பட்டிருக்கும். Pip என்பது பைத்தான் நிரல்தொகுப்புகளை(Packages) நிறுவ உதவும் மென்பொருளாகும். மேலே திறக்கப்பட்ட அதே Command Promptஇல் pip -V என்று தட்டச்சிட்டால் pip எங்கே நிறுவப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

– கி. முத்துராமலிங்கம், பயிலகம்

%d bloggers like this: