QGIS எனும் கட்டற்ற பயன்பாட்டு கருவி ஒரு அறிமுகம்

முதலில் GIS இன் வரையறைபற்றி தெரிந்து கொள்வோம்   GIS என சுருக்கமாக அழைக்கப்படும் புவியியல்
 தகவல் அமைவுகள் (Geographic Information Systems)என்பது ஒரு கணினி அடிப்படையிலான கருவியாகும்,
 இதுபுவியியல் தொடர்பான தகவல்களை  தரவுகளை  பகுப்பாய்வு,செய்து  வரைபடமாக பார்வையாளர்
களுக்கு காண்பிப்பது  சேமித்து வைத்திடுவது ஆகிய பணிகளை  கையாளுகின்ற ஒரு அமைவாகும் . அதாவது
 புவியியல் தகவல்களை உருவாக்கி நிருவகித்து பகுப்பாய்வு செய்து  அதனை வரைபடமாக  திரையில் 
காண்பிக்கச்செய்து இறுதியாக சேமித்து வைத்திடபயன்படுகின்றது   பொதுவாக தற்போதைய சூழலில்
 பொருட்களுக்கான அல்லது சேவைகளுக்கான புதிய சந்தையை கண்டுபிடித்தல் .. காலநிலை மாற்றத்தை
 கணித்தல் ... மின்வழங்கல்களை வரைமுறைபடுத்துதல் ... குற்றம் சார்ந்த தொடர்புகளை ஆய்வு செய்தல் 
என்பனபோன்ற எண்ணற்ற புவியியல் சார்ந்த ஆய்விற்கு அத்தியாவசிய தேவையாக இருக்கின்றது .
இவ்வாறான புவியியல் தகவல் அமைவுகளை ஆய்வுசெய்து கையாளுவதற்காக நமக்கு கைகொடுக்க 
வருவதுதான் QGIS  ஆகும்  இது ஒரு பயனாளரின் உற்ற நண்பனை போன்று பயன்படக்கூடிய GNU எனும்
 பொதுஅனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதொரு கட்டற்ற பயன்பாட்டு கருவியாகும் இது 
விண்டோ  ,லினக்ஸ், ஆண்ட்ராய்டு ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளியும் செயல்படும் திறன்மிக்கது இது
 வெக்டார், ராஸ்ட்டார் தரவுதளஅமைப்புகள் செயலிகள் ஆகியவற்றை ஆதரிப்பது மட்டு மல்லாமல் புவியியல்
 தரவுகளின்ஆய்வின் முடிவுகளை வரைபடமாக இணையத்தின் வாயிலாக வெளியிடவும் தொகுப்பாக
 சேமித்திடவும் பயன்படுகின்றது இதனுடைய சமீபத்திய பதிப்பு  QGIS 3.6ஆகும்   

 இந்த பயன்பாட்டு கருவியானது   புவியியல் தகவல்களை உருவாக்கி பகுப்பாய்வுசெய்து வரைபடமாக 
வெளியிடுவதற்காக QGIS Desktop என்றும்  நம்முடைய புவியியல் தரவுகளையும் மீப்பெரும் தரவுகளையும்
  தேடிபிடித்து காட்சியாக காணவும் ஒரு தொகுப்பிலிருந்து மற்றொரு தொகுப்பிற்கு இழுத்து சென்று 
விடுவதற்காகவும்  QGIS Browser  ,  புவியியல் தகவல்களை தொகுத்து சேமித்து வைத்திடுவதற்காகவும்
 பல்வேறு பயனாளர்கள் நேரடியாக அவைகளை கையாளவும் உதவுவதற்காக QGIS Server  ,  இவ்வாறான
 பல்வேறு தொகுப்பான புவியியல் தகவல்களை பல்வேறு பயனாளிகளும் இணையத்தின் வாயிலாக 
கையாளுவதற்கு உதவுவதற்காக QGIS Web Client ,   அதிலும் பயனாளிகள் கணினிக்கு பதிலாக ம்முடைய
 கைபேசி அல்லது திறன்பேசி வாயிலாகவே புவியியல் தகவல்களை கையாளுவதற்கு உதவுவதற்காக 
QGIS on Android (beta!)  ஆகிய   நான்கு வகைகளுள்  நம்முடைய தேவைக்கேற்ற பொருத்தமானதை  
தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்வதற்காக  கட்டற்றபயன்பாட்டு கருவியாக இது கிடைக்கின்றது 
இதனை பயன்படுத்தி கொள்ள விழைந்தால் முதலில் https://qgis.org/en/site/forusers/index.html#download எனும்
 இணையபக்கத்திலிருந்து  நாம் விரும்பிய வகையின பதிவிறக்கம் செய்து கொள்க  
தொடர்ந்து https://qgis.org/en/site/forusers/index.html#trainingmaterial எனும் 
இணையபக்கத்திற்கு சென்று இந்த பயன்பாட்டு கருவியை எவ்வாறு நிறுவுகை செய்து பயன்படுத்தி 
கொள்வது என ஐயம்திரிபற அறிந்து கொள்க  அதனை தொடர்ந்து நம்முடைய வியாபார  நிறுவனத்தில்
 எவ்வாறு பயன்படுத்தி பயன்பெறுவது என்பதற்காக 
 https://qgis.org/en/site/forusers/commercial_support.html எனும் இணையபக்கத்திலுள்ள  
Boundless,dms,GBD போன்ற பட்டியலான  வியாபார  நிறுவன நண்பர்களை  தொடர்பு கொள்க  என
 பரிந்துரைக்கப்படுகின்றது  மேலும் கூடுதல் வசதி வாய்ப்புகள் இதில் சேர்த்து பயன்படுத்தி கொள்வதற்காக 
  http://plugins.qgis.org/plugins/ எனும் இணையமுகவரிக்கு செல்க 

%d bloggers like this: