கணியம் – இதழ் 1

வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு பிறக்கும் இவ்வேளையில் கணிணித் தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வழங்குகிறோம். கட்டற்ற மென்பொருட்களான Free Open source software பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெறும்.

 

கணிணி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில் நுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களைத் தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

 

ஊர் கூடி தேர் இழுக்கும் இச்சேவையில் உங்களையும் பங்கேற்க அழைக்கிறோம். உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.


முதல் இதழை அளிப்பதில்  பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.


இந்த இதழின் கட்டுரைகள் :

  • கட்டற்ற மென்பொருள்
  • லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம்
  • உபுண்டு நிறுவுதல்
  • உபுண்டு மென்பொருள் மையம்
  • கோப்புகளின் வடிவமைப்பு
  • Panel-ன் அமைப்புகள்
  • Scribus – ஒரு DTP மென்பொருள்
  • Gedit – உரை பதிப்பான்
  • தமிழும் விக்கியும்
  • தமிழ் விக்கிப்பீடியா  ஊடகப் போட்டி
  • விக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்
  • விக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – பங்களிப்பாளர் முனைவர். செங்கைப் பொதுவன்
  • கார் ஓட்டலாம் வாங்க Torcs
  • MP4TOOLS- மல்டி மீடியா மாற்றி
  • அறிவிப்புகள் – தமிழ் கணினி ஆய்வு பயிலரங்கம்


பதிவிறக்கம் செய்ய :

[wpfilebase tag=file id=1 /]