கணியம் – இதழ் 16

வணக்கம்.

‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உபுண்டு லினக்ஸின் அண்மைய பதிப்பான 13.04(Raring Ringtail) 25-ஏப்ரல்-2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய: www.ubuntu.com/download/desktop

உபுண்டு 13.04 பதிப்பில் பலவிதமான மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளனர்.  உபுண்டு 12.10 பதிப்பைக் காட்டிலும் வேகமாக செயல்படும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Getting Started With Ubuntu :என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது  ubuntu-manual.org/

உலகெங்கும் உள்ள உபுண்டு லினக்ஸ் பயனர்கள் இதன் வெளியீட்டு விழா ஒன்றை நடத்துகின்றனர். இதன் மூலம் பல புதிய பயனர்கள் லினக்ஸ் பற்றி அறியும் வாய்ப்பு ஏற்படுகிறது. உங்கள் ஊரிலும் ஒரு உபுண்டு லினக்ஸ் வெளியீட்டு விழா நடத்தலாமே. உதவிக்கு எங்களை அழைக்கவும்.

தமிழுக்கான சொற்கோவை Corpus உருவாக்கும் பணி செவ்வனே தொடங்கி உள்ளது. Ruby  on Rails மொழியில் உருவாகும் இந்த ‘சொற்கண்டு’ மென்பொருளின் வளர்ச்சியை இங்கே காணலாம்  sorkandu.herokuapp.com/

இதற்கான மடலாடற்குழு: lists.sourceforge.net/lists/listinfo/sorkandu-discussions/
திட்ட மேலாண்மை : sourceforge.net/p/sorkandu/
மூல நிரல்: github.com/mindaslab/tamil_corpus

இந்த மென்பொருளை உருவாக்கி வரும் கார்த்திக் [mindaslab@gmail.com] அவர்களுக்கு நன்றிகள் விரைவில் தனி தளத்தில் சொற்கண்டு உங்கள் பங்களிப்புகளுக்கு தயாராகிவிடும்.

இந்த இதழை கிண்டில், ஐபேட் , டேப்லட் போன்ற மின் புத்தக கருவிகளிலும் படிக்கும் வகையில் 6″ pdf, epub , azw ஆகிய வடிவங்களிலும் அளிக்கிறோம்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

நன்றி.

ஸ்ரீனி ஆசிரியர், கணியம் editor@kaniyam.com

 

பொருளடக்கம்

எளிய தமிழில் WordPress

எளிய செய்முறையில் C – பாகம் 5

S.M.A.R.T (Self Monitoring, Analysis and Reporting Technology)

Vim File Editor – Vim உரை திருத்தி

உபுண்டு லினக்ஸ் ஏன் பாடுவதில்லை?

எச்.டி.எம்.எல் 5 பட விளக்கம்(5)

பைதான் – 9

ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்

கணியம் வெளியீட்டு விவரம்

கணியம் பற்றி…

%d bloggers like this: