எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 3 – நிரலில் comment செய்தல்

Comment என்பது நிரலாளரின் (programmer) பயன்பாட்டிற்காக நிரலில் எழுதப்படும் வரிகளாகும். நிரலிலுள்ள comment-களை interpreter இயக்க முயற்சிக்காது, நிராகரித்துவிடும். Comment ஒருவரியிலோ, பலவரிகளிலோ இருக்கலாம். மற்ற நிரலாளர்களால் பயன்படுத்தப்படும் library-கள் எழுதும் பொழுது, ஆவணத்திற்காக (documentation) comment-கள் பயன்படுத்தப்படும். ரூபி ஆவணத்திற்குப்பயன்படுத்தபடும் rdoc, இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

நிரல் வரிகளை, comment செய்வதின் மூலம், interpreter-ஆல் இயக்கமுடியாமல் தடுக்கலாம். இது தற்காலிகமாக இருக்க வேண்டும். எழுதப்பட்ட நிரல், எதிர்பார்த்தபடி இயங்குகிறதா என்பதை சோதித்தபின், இது போன்ற தேவையற்ற, comment செய்யப்பட்ட நிரல் வரிகள் நீக்கப்படவேண்டும். இது ஒரு சிறந்த பழக்கமேயன்றி (best practice) கட்டாயமானதல்ல.

ஒரு வரியில் ரூபி comments:

ரூபியில் ஒரு வரி comment-யை ‘#’ குறியீட்டை கொண்டு வரையறுக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு எளிய நிரலில் ஒரு வரி comment-டை சேர்க்கலாம்.

[code lang=”ruby”]
# This is a comment line – it explains that the next line of code displays a welcome message print "Welcome to Ruby!"
[/code]

பல வரிகளுக்கு பின்வருமாறு comments கொடுக்கலாம்.

[code lang=”ruby”]
# This is a comment line
# it explains that the next line of code displays
# a welcome message
[/code]

நிரலைத்தொடர்ந்து comments-யை கொடுத்தல்:

ஒரேவரியில் நிரலைத்தொடர்ந்து, comments கொடுப்பது ஒரு பொதுவான பயிற்சியாகும். எடுத்தக்காட்டாக print statement –உள்ள வரியிலேயே,‘#’ குறியீட்டைத்தொடர்ந்து comments-யை கொடுக்க வேண்டும்.

[code lang=”ruby”]
print "Welcome to Ruby!" # prints the welcome message
[/code]

வரியில் ‘#’ தொடர்ந்து வரும் எல்லாமே ruby interpreter-ல் நிராகரிக்கப்படும். ‘#’ குறியீட்டை தொடர்ந்து வேறு நிரல் எழுதி அது இயங்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்க கூடாது. கூடுதலான நிரலை அடுத்த வரியில் தான் எழுத வேண்டும்.

பல வரிகளில் ரூபி comments:

ரூபியில் பலவரி comment-களை, =begin மற்றும் =end என்கிற குறியீடுகளை கொண்டு வரையறுக்கலாம். இவை ‘comment block markers’ என அறியப்படும். எடுத்துக்காட்டாக,

[code lang=”ruby”]
=begin
This is a comment line it explains that the next line of code displays a welcome message
=end
[/code]

— தொடரும்

பிரியா – priya.budsp@gmail.com – ஐக்கிய அரபு அமீரகம்

%d bloggers like this: