Sambaஎனும் திறமூல கருவி மூலம் கோப்பு பகிர்வு

Samba என்றால் பகிர்ந்துகொள்ளுதல் என பொருளாகும்.Samba எனும் கருவியானது கோப்புகளை பகிர்ந்துகொள்வதை எளிதாக்குகிறது. பயனாளர்களின் குழுக் களுக்கான பொதுவான கோப்புறைகள், உள்வரும் கோப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் உள்வருகை பெட்டிகள் நமக்குத் தேவையானவை உட்பட பகிரப்பட்ட இருப்பிடங்களை உருவாக்க, Samba இல் உள்ள பல செயல்திட்டங்களைப் பயன் படுத்திகொள்ளலாம். இந்த திறமூலமான கருவியானது, நெகிழ்வானது, மேலும் இது நம்முடைய நிறுவனத்தில் இயங்கக்கூடிய அனைத்து வெவ்வேறு தளங்களையும் ஒருங்கிணைக்கிறது.
இந்த கருவியானது ஜிபிஎல் உரிமத்துடன்வெளியிட பெற்றுள்ளது, இது பெரும்பாலான லினக்ஸ் விநியோகங்களில் பரவலாகக் கிடைக்கிறது. இது(Samba) சிறந்த ஆவணங்களைக் கொண்டுள்ளது,
லினக்ஸில் சம்பாவை நிறுவுகைசெய்தல்
நம்முடைய பல்வேறு லினக்ஸ் விநியோகங்களின் தொகுப்பு மேலாளரைப் பயன்படுத்தி மிகஎளிதாக இதனை(Samba)நிறுவுகைசெய்திடலாம்.
Fedora, CentOS, RHEL, Mageia போன்றவைகளின் கட்டளைவரிபின்வருமாறு:
$ sudo dnf install samba
Debian, Linux Mint போன்றவைகளின் கட்டளைவரிபின்வருமாறு:
$ sudo apt install samba
Samba உடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட கோப்புறையை உருவாக்கிடுக
ஒரு எளிய பகிர்ந்துகொள்ளப்பட்ட கோப்புறையை பின்வரும் ஐந்து படிமுறைகளை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கிடுக.
படிமுறை1.நம்முடைய லினக்ஸ் சேவையாளரில் ஒரு கோப்பகத்தை உருவாக்கிடுக, அங்கு பயனாளர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளப்பட்ட கோப்புகளைச் சேமிக்க முடியும். இந்த கோப்பகம் சேவையாளரில் எங்கும் இருக்கலாம்: /home இல் அல்லது /opt இல் அல்லது எந்தஇடம் நமக்குச் சிறப்பாகச் செயல்படும் என எண்ணுகின்றோமோ அந்த இடத்தில் இந்த கோப்பகம் இருக்கலாம். home எனும் கோப்புறையில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கோப்புறையை sambashare என்றபெயரில் வைத்திடுக அதற்கான கட்டளைவரி பின்வருமாறு.
$ mkdir /home/don/sambashare
குறிப்பு Fedora, SELinux ஆகியவற்றில் இயங்கும் பிற விநியோகங்களில், இந்த பகிர்ந்துகொள்ளப்பட்ட கோப்பகத்திற்கு பாதுகாப்பு அனுமதி வழங்க வேண்டும் அதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு:
$ sudo semanage fcontext –add –type “samba_share_t” ~/sambashare
$ sudo restorecon -R ~/sambashare

படிமுறை2. Nano அல்லது நமக்கு விருப்பமான உரைபதிப்பாளரைக்( text editor) கொண்டு சம்பா உள்ளமைவு கோப்பைத் திருத்தம் செய்திடுக அதற்கான கட்டளைவரி பின்வருமாறு.
$ sudo nano /etc/samba/smb.conf
இதை smb.conf எனும் கோப்பின் கீழ்ப்பகுதியில் சேர்த்திடுக, இந்த எடுத்துகாட்டுப் பாதையான /home/don/sambashare என்பதை நம்முடைய சொந்த பகிர்ந்து கொள்ளப்பட்ட கோப்பகத்தின் இருப்பிடத்துடன் மாற்றியமைத்திடுக அதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு:
[sambashare]
comment = Samba on Linux
path = /home/don/sambashare
read only = no
browsable = yes
நானோவைப் பயன்படுத்துகின்றோம் எனில், Ctrl-O ஆகிய விசைகளை சேர்த்து அழுத்திசேமித்த, பின்னர் திரும்பிடுக தொடர்ந்து Ctrl-X ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி வெளியேறிடுக.
படிமுறை3. நம்முடைய லினக்ஸ் விநியோகத்தைப் பொறுத்து, இந்த சம்பா எனும் கருவியை சேவையைத் தொடங்கிடுக அல்லது மறுதொடக்கம் செய்திடுக.
Fedora போன்றவற்றில், நம்முடைய வெளிப்படையான அனுமதியின்றி சேவைகள் தொடங்கப்படாது, எனவே இப்போதுSamba வின் செயலை தொடங்குவதற்காக, பின்வரும் கட்டளைவரியுடன் மறுதுவக்கம் செய்திடுக:
$ sudo systemctl enable –now smb.conf
Debian போன்றவற்றில், Samba இயல்பாக நிறுவுகைசெய்தபின் தொடங்குகிறது, எனவே அதை இப்போது பின்வரும் கட்டளைவரியுடன் மறுதொடக்கம் செய்திடுக:
$ sudo service smbd restart

படிமுறை4. தற்போது Samba பகிர்வினை அணுகுவதற்கு அனுமதிப்பதற்காக நம்முடடைய ஃபயர்வால் விதிகளைப் புதுப்பித்திடுக. இதை எப்படி செய்வது என்பது நம்முடைய கணினி பயன்படுத்தும் ஃபயர்வாலைப் பொறுத்தது.நாம் firewalld இயக்குகின்றோம் எனில் பின்வருமாறான கட்டளைவரிகளை உள்ளிடுக:
$ sudo firewall-cmd –permanent –add-service=samba
$ sudo firewall-cmd –reload
நாம் UFW ஐ இயக்குகின்றோம் எனில்பின்வருமாறான கட்டளைவரியைஉள்ளிடுக :
$ sudo ufw allow samba

படிமுறை5. இப்போது நம்மமுடைய Sambaவின் பகிர்வை அணுக கடவுச்சொல்லை அமைக்க வேண்டும். பயனாளர்பெயர் (sk எடுத்துக்காட்டில்) கணினியில் உள்ள கணக்கிற்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்.
$ sudo smbpasswd -a sk
ஒவ்வொரு Samba பகிர்விலும் ஒரு எளிய README கோப்பை வைத்திடுக, அதனால் கோப்பகம் சேவையாளரில் உள்ளது என்பதையும், வீட்டிலிருந்து அதை அணுக VPN இல் இருக்க வேண்டும் என்பதையும் பயனாளர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
விண்டோ, இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினியிலிருந்து சம்பாவை அணுகுதல்
விண்டோ செயல்படும் கணினியில், கோப்பு மேலாளரைத் (Windows Explorer) திறந்து, \ip-address-of-the-Linux-computer\sambashareஎன்றவாறு கோப்பினை அனுகுவதற்கான பாதையைத் திருத்திடுக. Sambaவின் பகிர்வு கடவுச்சொல்லைக் வழங்கும்படி நம்மிடம் கோரும், பின்னர் sambasharedirectory இல் உள்ள கோப்புகள் மேசைக்கணினியில் வளாக கணினியில் இருப்பது போன்று நம்முடைய கோப்பு மேலாளரின் சாளரத்தில் தோன்றும். இதன்பின்னர் நம்முடைய வலைபின்னலில் உள்ள இந்தப் புதிய பகிர்ந்துகொள்ளப்பட்ட கோப்பகத்தில் நம்முடைய கோப்புகளைச் சேமிக்கத் தொடங்கலாம்.

%d bloggers like this: