“அன்றாட பயன்பாட்டிற்கு கட்டற்ற மென்பொருட்கள் மற்றும் செயலிகள்” என்ற தலைப்பில் 36 மணி நேர நிரல்விழா – 18/19-09-2021 – புதுச்சேரி

நண்பர்களே,

கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் இயக்கம்(FSHM) இந்த வார இறுதியில்
“அன்றாட பயன்பாட்டிற்கு கட்டற்ற மென்பொருட்கள் மற்றும் செயலிகள்” என்ற
தலைப்பில் 36 மணி நேர நிரல்விழாவை (Hackathon) நடத்துகிறது – 18 மற்றும்
19 செப்டம்பர் 2021. உங்கள் பங்கேற்பை www.fshm.org என்ற
இணையதளத்தில் பதிவு செய்யவும். இது சர்வதேச மென்பொருள் சுதந்திர தின
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.

மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் இது கட்டற்ற மென்பொருள்
மற்றும் வன்பொருள் இயக்கத்திற்கு (FSHM) தொடர்சியான 11-வது ஆண்டு ஆகும்.
இந்த நிரல்விழாவில் மொத்தமாக நான்கு அகப்பொருட்டுறை உள்ளது அதன்
ஒவ்வொன்றிலும் சுமார் ஐந்து முட்டுப்பாடுகளின் குறிப்புரைகள் (problem
statement) இடம்பெற்றுள்ளது. அனைத்து மென்பொருள் மற்றும் வன்பொருள்
ஆர்வலர்கள் இந்த நிரல்விழாவில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். இது உலக
மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற உங்கள் நேரத்தையும் முயற்சியையும்
பங்களிக்க ஒரு அறிய தருணமாகும்.

நுழைவு கட்டணம் இல்லை. நுழைவுத் தகுதி இல்லை. கணினி அல்லது மடிக்கணினி
வைத்திருக்கும் எவரும் நிரல்விழாவில் உங்கள் வீட்டில் இருந்தும் அல்லது
விழா நடக்கும் இடத்திலும் பங்கேற்களாம். சிறப்பாக செயல்படும் அணிகள்
ரூ.5000 மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

காலை 9 மணி முதல் விழா இடத்திலேயே பதிவதற்கான வசதியும் உண்டு.

நாள்: 18/09/2021 – சனி மற்றும் 19/09/2021 – ஞாயிறு

நேரம்: காலை 9 மணி

இடம்: விளிம்புநிலை மக்கள் வாழ்வாதார மையம் (LRCM), சங்கரா வித்யாலயா
மேல்நிலைப் பள்ளி அருகில், கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி – 605008

தொடர்புக்கு: +917092397661, +916380529644, +918668045220

 

%d bloggers like this: