வணக்கம்.
ஆண்டுதோறும் உலகெங்கும் மென்பொருள் விடுதலை விழா செப்டம்பர் 16 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை, புதுவை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
சென்ற ஆண்டு முதல், மென்பொருள் விடுதலை விழாவை, சென்னையில் பல்வேறு கட்டற்ற மென்பொருள் சார்ந்த அமைப்புகள் இணைந்து
‘தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு’ என நடத்தி வருகிறோம்.
இதில், பல்வேறு இணைய உரைகள், ஒரு நாள் நேரடி மாநாடு, பல்வேறு பயிற்சிப் பட்டறைகள் என செப்டம்பர் மாதம் முழுதுமே அறிவுத் திருவிழாவாக கொண்டாடி வருகிறோம்.
இந்த ஆண்டுக்கான நிகழ்வுகள் இன்று தொடங்குகின்றன.
நிகழ்ச்சி நிரல் இங்கே – tossconf23.kaniyam.com/
பங்குபெறும் அமைப்புகள்
கணியம் அறக்கட்டளை
இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை
காஞ்சி லினக்ஸ் பயனர் குழு
சென்னை ஒருங்கிணைந்த கட்டற்ற மென்பொருள் குழு
பயிலகம்
சென்னை பைதான் பயனர் குழு
நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து கொண்டு, மென்பொருள் விடுதலை விழாவினைக் கொண்டாட வேண்டுகிறோம்.