மதுரையில் மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை – டிசம்பர் 01, 2019

இடம்:
குகன் பள்ளி ( goo.gl/maps/aaoYyw9eokQVggWU6 )

3 வது மாடி ஐ.சி.டி அறை
தெப்பக்குளம், ( தோரணை வாயில்நிறுத்தம் )
மீனாட்சி நகர், (அடைக்கலம் பிள்ளை காலனி)
மதுரை-625009.

தொடர்புக்கு – சிவா – 7010328830

நாள்: டிசம்பர் 01, 2019 ஞாயிறு காலை 10.00 முதல் 14.30(2.30 PM) வரை

 

அச்சு நூல்கள் மின்னூல் வடிவம் எடுத்து, எழுதி முடித்தவுடனேயே, மின்னூலாக அனைவரின் கரங்களிலும் தவழும் அருமையான காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

FreeTamilEbooks.com ல் 550 மின்னூல்கள் 71 இலட்சம் பதிவிறக்கங்கள் தாண்டியுள்ளது, மின்னூல்களின் வீச்சையும் வாசகர்களுக்கு மின்னூல்கள் தரும் வசதிகளின் விளைவுகளையும் காட்டுகிறது.

அமேசான் நிறுவனம், எழுத்தாளர்கள் அனைவரையும் சுய பதிப்பாளர்களாக்கி, விற்பனை செய்ய வைத்து, மகிழ வைத்து, மகிழ்கிறது.

 

இந்த நிகழ்வின் எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள், எழுத ஆர்வமுள்ளோர் அனைவருக்குமான மின்னூலாக்கப் பயிற்சிகள் தரப்பட உள்ளன. மின்னூல் வெளியிடுவது எப்படி? அமேசான் கிண்டில் போட்டியில் பங்கு கொள்வது எப்படி? ஆகியவை விளக்கப்பட உள்ளன.

தலைப்புகள்

1. மின்னூல் – வகைகள் – epub, mobi, PDF, HTML
2. மின்னூல் உருவாக்க உதவும் மென்பொருட்கள் – LibreOffice Writer, MS Office Word, Sigil, Calibre
3. Copyrights, Creative Commons License – அறிமுகம்
4. அட்டைப்படம் உருவாக்குதல்
5. FreeTamilEbooks.com ல் மின்னூல் வெளியிடுதல்
6. அமேசானில் கணக்கு உருவாக்குதல்
7. அமேசானில் மின்னூல் வெளியிடுதல்

நீங்கள் எழுதிய மின்னூலை வேர்டு ஆவணமாக கொண்டு வருக. நீங்கள் எழுதிய வலைப்பதிவுகள், சமூக ஊடகப் பதிவுகளாகவும் இருக்கலாம்.

கீழுள்ள காணொளிகளையும் காணுங்கள்

-https://www.youtube.com/watch?v=HSGF9QLaGqA

-https://www.youtube.com/user/arunsarathy2008/videos

-https://www.youtube.com/watch?v=WHHF8eP_UyY

 

 

கட்டணம் – இலவசம் . விரும்புவோர் நன்கொடை தரலாம். www.kaniyam.com/foundation/

பயிற்சி அளிப்போர் – லெனின்

நிகழ்ச்சி ஏற்பாடு – கணியம் அறக்கட்டளை (Kaniyam.com) & MADURAI OPEN TEaCH CLUB (MOTC)

இது நேரடிப் பயிற்சி. பங்கு பெறுவோர் அனைவரும் மடிக்கணினி கொண்டுவருதல் அவசியம்.
உங்கள் சொந்த இணையம் மற்றும் மடிக்கணினியை முழு மின்சக்தியுடன் கொண்டு வாருங்கள்.

பங்கு பெற விரும்புவோர், பின்வரும் படிவத்தை நிரப்புக.

 

forms.gle/Dnkj7JBmKt586h1EA

 

 

நிகழ்வில் சந்திப்போம்.

%d bloggers like this: