கணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை
தொலை நோக்கு – Vision
தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்
பணி இலக்கு – Mission
அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.
நிகழ்ச்சிகள்
- SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரியுடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் – MoU
- SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி – இயந்திரக் கற்றல் – Machine Learning Training for faculties of SRM vallimmai Engineering College
செயல்கள்
எண் | செயல்கள் | இந்த மாதம் | மொத்தம் | பங்களித்தோர் |
---|---|---|---|---|
1 | FreeTamikEbooks.com வெளியீடுகள் | 14 | 487 | ச. இராஜேஸ்வரி – லெனின் குருசாமி – எம்.ரிஷான் ஷெரீப் |
2 | கணியம் கட்டுரைகள் | 20 | 754 | நித்யா – கலாராணி – ச.குப்பன் |
3 | கணியம் மின்னூல்கள் | 1 | 14 | இரா. அசோகன் |
4 | கணியம் காணொளிகள் | 1 | 15 | பாலாஜி |
5 | ஒலியோடை | 1 | 3 | ஆறுமுகம் |
விக்கிமூலம்
விக்கிமூலத்தில் கணியம் திட்டத்துக்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் திட்டத்தின் குறிக்கோள்கள், பங்களிப்போருக்கான வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டன. இது வரை 7 பேர் இணைந்துள்ளனர். ஒரு மின்னூல் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2 மின்னூல்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி பார்க்கப்படும். மின்னூல்களின் பட்டியல் இங்கே எழுதப்படுகிறது.
காண்க ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:கணியம்_திட்டம்
பங்களித்தோர்
- திவ்யா
- ரூபா
- பவித்ரா
- சோபியா
- அருண்
திட்டதின் வழிகாட்டல்களுக்கு விக்கிமூலம் தன்னார்வலர் பாலாஜி அவர்களுக்கு நன்றிகள்.
மென்பொருட்கள்
- விக்கிசனரியில் உள்ள வார்த்தைகளை ஒலியாகப் பதிவு செய்ய ஆன்டிராய்டு செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.
- இணைய வழி உரை ஒலி மாற்றி ( TTS on Web ) மென்பொருள் தயாராகி வருகிறது. தற்போது, அதற்குத் தோதான சர்வர் பற்றி ஆய்ந்து வருகிறோம்.
- எழுத்துணரியின் விண்டோசு வடிவம் உருவாகி வருகிறது. அவ்வப்போது கிடைக்கும் விண்டோசு கணினிகளில் சோதித்து வருகிறோம். அதில் பல்வேறு வழுக்கள் சரிசெய்யப் பட்டுள்ளன.
- தமிழ் எழுத்துப்பிழைத்திருத்தி உருவாக்குவதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. மொழியியல் அறிஞர் திரு. பழனி அவர்களும் மென்பொருள் வல்லுனர் எத்திராஜ் அவர்களும் தொடக்க நிலை ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர். திட்டமிடும் பணிகளை செய்து, பின்னர் மென்பொருட்களாக உருவாக்குவர்.
- சங்க இலக்கியம் – செயலி, வலைத்தளம் – சங்க இலக்கியங்களுக்கான ஒரு செயலியும் வலைத்தளமும் உருவாக்க நந்தனம் அரசு ஆடவர் கல்லூரிப் பேராசிரியர் திரு. சங்கர் கேட்டுள்ளார். செயலியின் மேம்பட்ட பதிப்பும் இணைய தளமும் உருவாகி வருகின்றன.
புதிய திட்டங்கள்
பல்வேறு புதிய திட்டங்களுக்கான உரையாடல்களை இங்கே பதிந்து வருகிறோம்.
- DIY Scaner
- ஊத்தங்கரை மின் நூலகம்
- PDF கோப்புகளுக்கென ஒரு ஆவணகம்
- தமிழ் மண் பதிப்பக நூல்களை வாங்குதல்
- புதுக்கோட்டை ஞானாலயா நூல்களை scan செய்தல்
- தமிழ் நிரலாக்கத்துக்கான முழு நேரப் பணியாளர்
போதுமான நன்கொடைகள், சரியான திட்டமிடல்கள், தகுந்த பங்களிப்பாளர்களைப் பெற்ற பின் இத்திட்டங்கள் செயல் வடிவம் பெறும்.
இம்மாத நன்கொடையாளர்கள்
- CR செல்வகுமார், கனடா – ரூ 50,000
- லோகேஷ் ஜெயகிருஷ்ணன், அமெரிக்கா – ரூ 6,500
- நூலகம் அறக்கட்டளை – சர்வர் (ரூ 350/மாதம்)
சென்ற மாத இருப்பு – ரூ 39, 500
மொத்தம் கையிருப்பு – ரூ 96,000
வரவு, செலவு விவரங்கள் இந்த ஆவணத்தில் பதியப்படுகின்றன.
செலவுகள்
இன்னும் விக்கிமூலம் பங்களிப்பாளருக்கான ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. ஜனவரி மாதம் முதல் தொடங்குவோம். விக்கிமூலத்தில் பங்களித்தோர் ஒவ்வொருவருக்குமான பங்களிப்புப் பட்டியல் உருவாக்கும் நிரல்கள் எழுதப்பட்டு வருகின்றன.
வங்கிக் கணக்கு விவரங்கள்
Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC - UBIN0560618
- உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
- நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு அனுப்ப வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு எழுதுக – kaniyamfoundation@gmail.com
Report in English is here – github.com/KaniyamFoundation/Organization/wiki/Kaniyam-Foundation-December-2018-Report-in-English