எழுதுவதை எளிதாக்குகின்ற திறமூல தொழில்நுட்பங்கள்

தொழில்நுட்பத்தை பற்றிஎழுத துவங்கினால், அத்தொழில்நுட்ப கருத்துகளை எளிதாக எழுதிடுவதற்கான திறமூலதொழில்நுட்பங்கள் நமக்கு உதவ தயாராக இருப்பதை காணலாம்.
பல்கலைக்கழகத்தில் படித்திடும்போது எண்ணிம தொழில்நுட்பத்துடன் Digital Technologyஉதவியுடன் எழுதுவதும் ஒரு முக்கியமான பணியாகும், அதனால் பல்கலைகழகத்தில் படிக்கும்போதே தொழில்நுட்ப எழுத்தாளர்களான மாணவர்கள் தொழில்நுட்பதுறையில் பயன்படுத்தும் பல்வேறு தொழில் நுட்பங்களையும் கருவிகளையும் பற்றி நன்கு அறிந்து கொள்கின்றனர். அவைகளில் HTML, CSS, XML, DITA, Markdown, GitHub போன்ற எழுதுவதற்கு உதவிடுகின்ற தொழில்நுட்ப கருவிகளும் உள்ளடங்கியவைகளாகும்.அவைகள்பின்வருமாறு
HTML
நாம் பயன்படுத்திடும் ஒவ்வொரு வலைத்தளமும் HTML, எனசுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற HyperText Markup Languageஎனும் கணினி மொழியின் மூலமாக கட்டமைக்கப் பட்டுள்ளது. தொழில்முறை தொழில்நுட்ப எழுத்தாளர்கள் வலைப்பக்கங்களை உருவாக்க Drupal அல்லது TYPO3 போன்ற இணைய அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்தினாலும், HTML கற்றுக்கொள்வதன் மூலம் இணையதளமும் அத்திரையின் பின்புலத்தில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது எப்போதும் மிக நல்ல செயலாகும். இது அடிக்கடி நிகழாது என்றாலும், சில நேரங்களில் இணைய அடிப்படையிலான கருவி தவறான HTML ஐ உருவாக்ககூடும். HTML ஐ கொண்டு மேலும் முழுவதையும் எழுதாமல் அதனை திருத்துவதன் மூலம் வலைப்பக்கங்களை எவ்வாறு சரிசெய்வது என்பதை தொழில்நுட்ப எழுத்தாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.
HTML குறிமுறைவரிகள் முற்றிலும் உரை அடிப்படையிலானது, இதில் < >எனும் அடைப்புக்குறிகளுக்குள் குறிச்சொற்கள் உள்ளன. தொகுப்பு பத்தியை வரையறுப்பதற்கு <p> அல்லது ஒரு சொல் அல்லது சொற்றொடருக்கு முக்கியத்துவம் (பொதுவாக சாய்வு) வைக்க <em> போன்ற உறுப்புகள் தொகுப்பு அல்லது உள்வரி ஆகும்.
தொழில்நுட்ப எழுத்தாளர்கள் HTML இல் உள்ளடக்கத்தை எழுதுவதிலும், திரையில் உள்ளடக்கம் எவ்வாறு தோன்றும் என்பதை வரையறுக்க தனி CSS கோப்பு அல்லது நடைதாளில் பாணிகளை வரையறுப்பதிலும் கவனம் செலுத்தலாம். உள்ளடக்க தோற்றத்தைப் பிரிப்பது எழுத்தில் கவனம் செலுத்த ஒரு சிறந்த வழியாகும்.
Markdown
ஆவணங்களை எழுதுவதற்கான மற்றொரு கருவி Markdown ஆகும். இது Markdown தொழில்நுட்ப எழுத்தை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, முடிந்தவரை markup தொடரியல் நீக்கி, சாதாரண உரைக் கோப்பில் எழுதும்போது பயன்படுத்தக்கூடிய நிலையான மரபுகளுடன் அதை மாற்றியமைக்கிறது.
எடுத்துக்காட்டாக, Markdown இல் ஒரு புதிய பத்தியைத் தொடங்க, உரை கோப்பில் ஒரு வெற்று வரியைச் சேர்த்திடவேண்டும். அடுத்த பத்தி அடுத்த உரைத் தொகுதியுடன் தொடங்குகிறது. அதன் கீழ் ஒரு கோடு வரைவதன் மூலம் தலைப்புகளைச் சேர்த்திடலாம், இது போன்ற மேல் நிலை தலைப்பை உருவாக்கிடமுடியும்:
பொதுவாக ஒருஆவணத்தின் தலைப்பு பின்வருமாறு
=====================
இது:ஒரு ஆவணத்தில் துணைத் தலைப்பை உருவாக்க
மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது
————————-
GitHub அல்லது GitLab இல் Readme கோப்புகள் அல்லது பிற செயல்திட்ட ஆவணங்களை எழுதும் போது Markdown அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இது திறமூல மேம்படுத்துநர்களுக்கும தொழில்நுட்ப எழுத்தாளர்களுக்கும் Markdown ஆனது ஒரு பிரபலமான தேர்வாக ஆக்குகிறது.
DITA
DITAஎன சுருக்கமாக அழைக்கப்பெறும் Darwin Information Typing Architecture என்பது ஒரு குறிப்பிட்ட கோப்பு அமைப்புடன் கூடிய XML கோப்பாகும். DITA உடன் செயல்திட்ட ஆவணங்களை உருவாக்கும் போது, தொழில்நுட்ப எழுத்தாளர்கள் புதிய வகையான வெளியீட்டு கோப்புகளை உருவாக்க அதன்உள்ளடக்கத்தை எவ்வாறு மீண்டும் பயன்படுத்துவது அல்லது அதனோடு மீண்டும் கலந்திடுவது என்பதில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.
எடுத்துக்காட்டாக, மூன்று பொதுவான DITA கோப்பு வடிவங்கள் ஒரு செய்தியை அல்லது செயல்முறையை விவரிக்கும் DITA கருத்துமைவாகும், ஒரு செயல்முறையைச் செய்வதற்கான படிமுறைகளை பட்டியலிடும் DITA பணி எச்சரிக்கைகள் அல்லது முக்கியமான குறிப்புகள் போன்ற ஒரு தலைப்பைப் பற்றிய உண்மைகளை வழங்கும் DITA குறிப்பாகும்.
DITA என்பது தொழில்நுட்ப எழுத்தாளர்களுக்கான ஒரு ஆற்றல் மிக்ககருவியாகும், ஏனெனில் ஒரு தலைப்பைப் பற்றிய பல DITA கோப்புகளை தொகுக்கும் DITAMap எனப்படும் தனி XML கோப்பை உருவாக்குவதன் மூலம் ஒரு ஆவணத்தை தொகுக்கலாம். தனித்தனி ஆவணங்களுக்கு இடையில் நகலெடுத்து ஒட்டாமல், தொழில்நுட்ப எழுத்தாளர்கள் உள்ளடக்கத்தை மீண்டும் பயன்படுத்த இது அனுமதிக்கிறது. DITA ஆனது ஒரு திறமூலகருவியாகும் பிற DITA கருவிகள் DITA மூலத்தை PDF ஆவணங்கள், HTML இணையதளங்கள் EPUB புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளியீட்டு வகைகளாக மாற்றுகின்ற திறனைவழங்குகின்றன.
LibreOffice
ஆவணங்களை எழுத பாரம்பரிய சொல் செயலியைப் பயன்படுத்த விரும்பினால், LibreOffice Writer ஒரு சிறந்த திறமூல வாய்ப்பினை வழங்குகிறது. ஒரு ஆவணத்தில் அத்தியாயத் தலைப்புகள், பிரிவுத் தலைப்புகள், பத்திகள் , மாதிரிக் குறிமுறை வரிகளை வரையறுப்பதற்கு எழுத்தாளர்கள் LibreOffice இல் கிடைக்கின்ற வெவ்வேறு பாணிகளைப் பயன்படுத்தலாம். LibreOffice மூல குறிமுறைவரிகளை முக்கிய சொற்கள் பிற உரைவரியின் உரையை வலியுறுத்த அல்லது முன்னிலைப்படுத்த உதவும் எழுத்து வடிவங்களையும் ஆதரிக்கிறது.
LibreOffice இல் உள்ள பக்க நடைகள் அச்சிடப்பட்ட ஆவணங்களை உருவாக்குவதில் சிறந்த நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, பக்க நடைகளில் இடது வலது பக்கங்கள் அடங்கும், புதிய அத்தியாயங்கள் அல்லது முக்கிய பிரிவுகள் எப்போதும் அச்சிடப்பட்ட புத்தகத்தின் வலது பக்கத்தில் தொடங்குவதை உறுதிசெய்ய நீண்ட ஆவணங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தலைப்புகள், அடிக்குறிப்புகளை இடது வலது பக்கங்களில் சுதந்திரமாக வரையறுக்கலாம், இது தொழில்நுட்ப எழுத்தில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
LibreOffice என்பது மிகவும் பாரம்பரியமான மேசைக்கணினியின் சொல் செயலியாகும், இது எளிதாகக் கற்றுக் கொள்ளக்கூடிய இடைமுகம் கொண்டதாகும்.இதனுடைய பட்டியல்களின் கூடுதல் வசதிவாய்ப்புகளுடன் பெரும்பாலான செயலிகள் நேரடியாக கருவிப்பட்டியில் கிடைக்கின்றன. அல்லது நாம் பயன்படுத்த விரும்பும் பத்தி, எழுத்து அல்லது பக்க நடையை விரைவாகத் தேர்ந்தெடுக்க, மேல்மீட்புபட்டி நடைகளின் பலகத்தைப் பயன்படுத்திகொள்ளலாம்.

%d bloggers like this: