பயிலகத்தில் நடந்த லிப்ரேஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான்

என்ன நடந்தது: லிப்ரேஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான்.
எப்போது நடந்தது: ஜனவரி 29, 2023 8.30 முதல் 1.30 மணி வரை
எங்கு நடந்தது: பயிலகம், வேளச்சேரி
யார் நடத்தினார்கள்: பயிலகத்தின் முன்னாள் மாணவர்கள் யாகப்பிரியன், அலெக்சாண்டர், பாஸ்கர்
யார் கலந்து கொண்டார்கள்: பயிலகம் மாணவர்கள் [இடமின்மை காரணமாகப் பொது நிகழ்வாக நடத்த இயலவில்லை]

பயிலகம் லிப்ரே ஆபிஸ் நிகழ்வு

வழுக்கள் பற்றி:
நிகழ்வுக்கு முன்னரே,
யாகப்பிரியன் – எந்தப் பதிப்பை நிறுவ வேண்டும், எப்படி நிறுவ வேண்டும் என வலைப்பூ [yagapriyan.wordpress.com/2023/01/28/libre-office-tool-testing-hackathon-2023/] எழுதி எல்லோருக்கும் அனுப்பியிருந்தார்.
அலெக்சாண்டர் – புதியவர்களுக்கு ஏற்ற வழுக்கள்(Bugs) பட்டியலை உருவாக்கி வைத்திருந்தார். [docs.google.com/spreadsheets/d/10CJk4svfJ5OVkH5hbUqO-qCYYhAKoHas92uhTGulnl8/edit?usp=sharing]

தொடக்கத்தில் லிப்ரே ஆபிஸ் புதிய பதிப்பை நிறுவ, கொஞ்சம் நேரம் ஆனாலும் போகப் போக அமர்வில் இருந்த எல்லோருமே பங்களிக்கத் தொடங்கினார்கள்.

முகம்மது சுஹைர் புதிய வழு ஒன்றையும் கண்டுபிடித்தார். [153305]

இனி வாரம் ஒரு முறை கட்டற்ற மென்பொருளுக்கு எல்லோரும் இணைந்து வேலை செய்வோம் என முடிவு செய்து கொண்டோம். நிகழ்வைப் பயிலகம் முத்து ஒருங்கிணைத்தார்.

%d bloggers like this: