குரோமியம் & க்ரோம்
க்ரோம் நமது ubuntu repositeries -ல் கிடைக்காது. ஏனெனில் இது open souce கிடையாது. எனினும் இதை third party repositoriy -யில் கிடைக்க google வழி செய்கிறது.
குரோமியம் browser ubuntu developer -களால் maintain செய்யப்பட்டு stable release update – process களையும் செய்யப்படுகிறது. ஆனால் இது stable chrome browser -ஐ மாதிரியா வைத்து கொண்டு chrominum -ஐ மேம்படுத்தி release செய்கின்றனர்.
குரேமியத்தின் souce code -ஐ எடுத்துக் கொண்டு மேலும் சில் feature களை சேர்த்து google -ஆல் re-branding செய்யப்பட்டதே ‘க்ரோம்’ ஆகும்.
google செய்த மாற்றங்கள்:
- flash player -ஐ integrated செய்தது.
- Sand boxed pdf viewer built-in செய்தது.
- Google name or logo
- auto – update முறையை சேர்த்தது.
- Usage statistics or trash reporting -ஐ google தெரிவிக்கும் வண்ணம் புதிய option -ஐ சேர்த்தது.
க்ரோமில் உள்ளது போல் features ubuntu குரோமியமில் வேண்டும் எனில் கீழ்கண்ட codecs ஐ install செய்ய வேண்டும்.
- chromium_codecs_ffmpeg
- chromium_codecs_ffmpeg_extra
- flashplugin_installer
இது உங்களது தேவைகளை பொறுத்தது. உங்களது கணிணியை google, break செய்யாது என்று நீங்கள் நம்பினால் க்ரோம் -ஐ use செய்யுங்கள் அல்லது ubuntu developer -களில் test செய்து வெளியிடப்படும் opensource chromium வேண்டும் எனில் chromium -ஐ உபயோகப்படுத்துங்கள். மேலும் இதில் third party source தேவை இருக்காது.
க்ரோமில் default-aga adobe flash player install செய்யப்பட்டு வரும். குரோமியத்தில் அப்படி install செய்து வெளியிட முடியாது. ஏனெனில் flash player open source கிடையாது. ஆனால் நாம் குரோமியத்தை install செய்துவிட்டு பின்னர் adobe flash player -ஐ சுலபமாக install செய்து கொள்ள முடியும். க்ரோமில் auto – update செய்து கொள்ளும் வசதி உள்ளது. ஆனால் ubuntu -ல் உள்ள auto – update வசதி மூலம் குரோமியமை update செய்து கொள்ள முடியும்.
கடைசியாக, க்ரோம் என்பது google -லின் ஒரு brand. குரோமியம் அப்படி இல்லை. Usage-traking மற்றும் சில Licence களுக்கு நீங்கள் அடிபணிந்தால் நீங்கள் க்ரோமை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். 🙂
க்ரோமில் புதிதான ஏதேனும் சேர்க்க விரும்பினால் google அதை குரோமியத்தில சேர்த்து test செய்துவிட்டு பின் க்ரோம் stable release -ல் அதை சேர்த்து வெளியிடும்.
குரோமியம் என்பது 100% open source ஆகும். இதை யார் வேண்டுமானாலும் download செய்து கொள்ளலாம். (code, test, ideas, bugs போன்றவைக்கு யார் வேண்டுமானாலும் contribute செய்யலாம்)
த.சுரேஷ், open source ஐ விரும்பும் ஒரு மென்பொருள் வல்லுநர். SlashProg எனும் நிறுவனத்தில் பணி புரிகிறார்.
மின்னஞ்சல் : jemenisuresh@gmail.com
வலை : root2linux.com