Tag Archives: linux

உங்கள் லினக்ஸ் கணினியில் Virtual Environment நிறுவுவது எப்படி? | லினக்ஸ் புராணம்

நம்மில் பலரும் பைத்தான் மொழியில் விரல்களை எழுதி வருகிறோம். என்னைப் போல பைத்தான் மொழியில் புதியதான விஷயங்களை கற்றுக் கொள்பவர்களுக்கு சில சிக்கல்களும் உடன் சேர்ந்தே வரத்தான் செய்யும். புதியதாக ஏதாவது ஒரு நூலகத்தை (library) நிறுவ முனையும் போது, உங்கள் லிநெக்ஸ் கணினியின் முனையத்திலிருந்து , “பைத்தான் தொடர்புடைய கோப்புகளை உங்களால் நேரடியாக கணினியில் நிறுவ முடியாது” என்பது போன்ற ஒரு செய்தி காண்பிக்கப்படும். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் லினக்ஸ் கணினிகளின் முக்கியமான கோப்புகள்… Read More: உங்கள் லினக்ஸ் கணினியில் Virtual Environment நிறுவுவது எப்படி? | லினக்ஸ் புராணம் »

யூனிக்ஸ்(unix)பிறந்த கதை

இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் சேவையகங்கள்(servers), மேககணிமை(cloud computing) போன்ற தொழில்நுட்பங்களில் linux இன் பங்கை மறுக்க முடியாது. மறக்க முடியாது. சூப்பர் கம்ப்யூட்டர்களிலும் இவற்றின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. தற்காலத்தில், மொபைல் உள்ளிட்ட பெரும்பாலான கருவிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களுக்கும், முன் குறிப்பிட்ட லினக்ஸ் போன்ற கட்டற்ற சேவைகளுக்கும், முன்னோடியாக விளங்கும் யூனிக்ஸ் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம் சிறு இடைவேளைக்குப் பிறகு வாசகர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அட்டை கணினிகள் முன்பெல்லாம் சிறு குழந்தைகள் அட்டைப்பெட்டிகளில் படங்களை… Read More: யூனிக்ஸ்(unix)பிறந்த கதை »

டீ போட கற்றுக்கொள்ளலாம்|லினக்ஸ் இல் தெரிந்திருக்க வேண்டிய 10 கட்டளைகள்|basics of package management commands in tamil | லினக்ஸ் புராணம் 2

லினக்ஸ் மின்ட் இயங்குதளத்தை பயன்படுத்த தொடங்கி இருந்தாலும் கூட, அதன் கட்டளை நிறைவேற்றியை(command line)பெரும்பாலும் நான் தொட்டு பார்த்ததில்லை. மெல்ல மெல்ல கற்றுக்கள்ளலாம் என்று சில மாதங்களை தள்ளி போட்டு விட்டேன். இனிமேலும் தள்ளிப் போட்டால் சரியாய் வராது என்று அப்படி இப்படி என பத்து கமெண்ட்களை(கட்டளை) கற்றுக் கொண்டு விட்டேன். இவற்றின் மூலம்,மிகவும் அடிப்படையான விஷயங்களை செய்ய முடியும். பெரிய அளவிலான காரியங்களை செய்யக்கூடிய கமெண்ட்களை வரும் நாட்களில் உங்களிடத்தில் கூறுகிறேன். சரி உள்ள அடிப்படை… Read More: டீ போட கற்றுக்கொள்ளலாம்|லினக்ஸ் இல் தெரிந்திருக்க வேண்டிய 10 கட்டளைகள்|basics of package… »

லினக்ஸ் கடலுக்குள் நுழைந்து இருக்கிறேன்

கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக, கணியம் இணையதளத்தில் கட்டற்ற தரவுகள் தொடர்பாக கட்டுரைகள் எழுதி வருகிறேன். லினக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் கணியம் இணையதளத்திற்குள் நுழைந்தவன் தான் நான். கொஞ்சம்,கொஞ்சமாக லினக்ஸ் தொடர்பாக கற்றுக் கொள்ள தொடங்கினேன். இன்றும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், ஆரம்பத்திலேயே மொழிபெயர்ப்பு கட்டுரைகளை கணியத்தில் வெளியிட தொடங்கி விட்டேன். லினக்ஸ் பயன்படுத்தி பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் எனக்குள் இருந்தது. ஆனால், அதே நேரம் என்னிடத்தில் கணினி இருந்திருக்கவில்லை. அதன்… Read More: லினக்ஸ் கடலுக்குள் நுழைந்து இருக்கிறேன் »

உங்கள் லினக்ஸ் கணினியில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க 3 வழிகள்

உங்கள் லினக்ஸ் கணினியில் உள்ள தகவல்களை, கசியாமல் பார்த்துக் கொள்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்ற முடியும். பொதுவாகவே, பிற இயங்குதளங்களை காட்டிலும்! லினக்ஸ் ஆனது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருந்த போதிலும், நம்முடைய தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தக் கட்டுரையில், உங்கள் தகவல்களை பாதுகாக்க,நம் அனைவருக்கும் பரிச்சயமான மற்றும் பயன்படக்கூடிய மூன்று வழிகளை பார்க்கலாம். இந்தக் கட்டுரைக்கு அடிப்படையாக itsfoss community கட்டுரையை பயன்படுத்துகிறேன். 1. தரவை குறியாக்கம் செய்தல் (encrypting the disk)… Read More: உங்கள் லினக்ஸ் கணினியில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க 3 வழிகள் »

ஏன், நீங்கள் லினக்ஸ் கற்றுக் கொள்ள வேண்டும்?

கட்டற்ற பயனர்களின் ஆகச்சிறந்த இயங்குதளமாக, லினக்ஸ் விளங்குகிறது. தன்னுடைய 30 ஆண்டுகளுக்கு மேலான பயணத்தில், கிட்டத்தட்ட லினக்ஸ் கால் பதிக்காத துறையே இல்லை என்று குறிப்பிடலாம் அப்படிப்பட்ட சிறப்புகள் மிக்க லினக்ஸ் ஐ, ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்? என்பதற்கான சில தகவல்களை மட்டும் இந்த கட்டுரையில் காணலாம். மேற்படி இந்த கட்டுரையானது, itsfoss தளத்தில் திரு.சாய் சுயம் தாஸ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. 1. எங்கும் பயன்படுத்தலாம் லினக்ஸ் என்பது ஏதோ… Read More: ஏன், நீங்கள் லினக்ஸ் கற்றுக் கொள்ள வேண்டும்? »

பலருக்கும் தெரியாத only office suite!

நம்மில் பலரும் அலுவலகப் பணிகளுக்கு, மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம் உங்களுடைய அலுவலகப் பணிகளை செய்வதற்கு, மிகவும் சிறப்பான தேர்வாக பலரும் குறிப்பிடுவது மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் செயலியை தான். ஆனால், மேற்படி மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலியானது திறந்த நிலை பயன்பாடு கிடையாது. மேலும், சில சிறப்பம்சங்களை நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயமும், மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற செய்திகளில் காணப்படுகிறது. அதற்கு மாற்றாக, பல திறந்த நிலை பயன்பாடுகள் வழங்கப்பட்டு வந்தாலும் கூட… Read More: பலருக்கும் தெரியாத only office suite! »

உங்கள் லினக்ஸ் அறிவை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு

லினக்ஸ் மீது ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அது தொடர்பாக உங்களது அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அதற்கான சிறந்த வாய்ப்பை humble bundle ஏற்படுத்தியிருக்கிறது. லினக்ஸ் தொடர்பான, ஐந்து இணைய புத்தகங்களை(e-books) வெறும் ஒரு அமெரிக்க டாலர் (1$) விலையில் உங்களால் வாங்க முடியும். டிஜிட்டல் காப்புரிமையற்ற, லினக்ஸ் மற்றும் devops குறித்து விரிவாக விளக்கும் இந்த புத்தகங்களை humble bundle by O’Reilly வெளியீடு செய்கிறது. எந்தெந்த புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கவிருக்கின்றன?  வாருங்கள் பட்டியலை பார்க்கலாம்.… Read More: உங்கள் லினக்ஸ் அறிவை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு »

உங்களுக்கு மாற்ற முடியாத லினக்ஸ் (Immutable distro) விநியோகங்கள் குறித்து தெரியுமா?

ஆங்கிலத்தில் IMMUTABLE எனும் வார்த்தைக்கு மாற்ற முடியாதது என்று பொருளாகும். எந்த ஒரு பொருள் மாற்றம் இன்றி இருக்கிறதோ அதுவே IMMUTABLE என்று பொதுவாக அறியப்படுகிறது. இதே அர்த்தத்தை தாங்கி வரக்கூடியது தான்! மாற்ற முடியாத லினெக்ஸ்( immutable distros) விநியோகங்கள். லினக்ஸ் இயங்குதளத்தின் பொதுவான விநியோகங்களை(Standard release) நம்மால் மாற்றி அமைக்க(Modification) முடியும். ஆனால் மாற்ற முடியாத  விநியோகங்களால்(Immutable distros) என்ன பலன் இருக்கிறது? அதில் விளைந்திருக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி தான், இந்த… Read More: உங்களுக்கு மாற்ற முடியாத லினக்ஸ் (Immutable distro) விநியோகங்கள் குறித்து தெரியுமா? »

ஒரு எளிமையான லினக்ஸ் கட்டளையின் மூலம், உங்கள் புகைப்படத்தின் பின்னணியை நீக்கலாம் !

சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக, நாம் எடுக்கும் புகைப்படங்களில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை! அதன் பின்னணியாக(background) தான் இருக்கும். புகைப்படங்களின் நேர்த்தியை, மோசமான பின்னணிகள் குறைத்து விடும். புகைப்படங்களின் பின்னணியை நீக்க, ஆண்ட்ராய்டு செயலிகள் குப்பை போல கொட்டி கிடக்கின்றன. ஆனால், அவற்றின் பெரும்பாலானவை விளம்பரங்களாய் நிரம்பி வழிகின்றன. சிலவற்றிற்கு, அதிகப்படியான தொகையை செலவிட வேண்டி உள்ளது. மேலும், அவை யாவும் திறந்த நிலை(open source) பயன்பாடுகள் அல்ல. ஆனால், இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைந்திருப்பது தான்!… Read More: ஒரு எளிமையான லினக்ஸ் கட்டளையின் மூலம், உங்கள் புகைப்படத்தின் பின்னணியை நீக்கலாம் ! »