குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள் தொழில்முறை நிரலாளர்களுக்கு உதவியாக உள்ளனவா?

தற்போதைய சூழலில்குறைந்த குறிமுறைவரிகள் (Low-Code) அல்லது குறிமுறைவரிகளில்லாதவை(No-Code)  குறித்து விவாதங்கள் துவங்கிவிட்டன கடந்த பல ஆண்டுகளில், மென்பொருள் தயாரிப்பு மேம்பாட்டின் ஒட்டுமொத்த செயல்முறையை புதுமைப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் நிறுவனங்கள் நிறைய நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்துள்ளன. அதனை தொடர்ந்து Agile பணிமுறைகள் மென்பொருள் உற்பத்தி வளர்ச்சியின் செயல்முறையை மிகவும் மென்மையாக்க உதவியது. இருப்பினும், மேம்படுத்துநர்கள் இன்னும் விரைவாகவும் எளிதாகவும் உயர்ந்து கொண்டே போகும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சவாலை எதிர்கொள்கின்றனர். மொத்தத்தில் மேம்படுத்துநர்களுக்குக் தற்போதைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய போதுமான, கருவிகளும் தளங்களும் தேவையாகும், அவை குறிமுறைவரிகளின் வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் தரத்தில் சமரசம் செய்யாமலும் மென்பொருளை விரைவாக வழங்கிடுமாறு அமையவேண்டும். இதற்காக கைகொடுக்கு வருவதுதான் குறிமுறைவரிகளில்லாத இயங்குதளங்களாகும் .குறிமுறைவரிகளில்லாத இயங்குதளங்கள் என்பது பூஜ்ஜிய குறிமுறைவரி களுடன் நிரலாளர்கள் அல்லது மேம்படுத்துநர்கள் உருவாக்கு விரும்பும் பயன்பாடு அல்லது மென்பொருளை உருவாக்க உதவிடும் கருவிகளின் தொகுப்பாகும். இவை ‘lego building blocks’ எனும் அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றன, இது நிரலாளர் தம்முடைய கைகளால் எழுதப்படும் ஆயிரகணக்கான குறிமுறைவரிகளின் தேவையை அறவே நீக்குகிறது , நிரலாளர்கள் வரைகலை மாதிரி அனுபவங்களின் அடிப்படையில் செயலிகளின் உள்ளமைவில் மட்டுமே கவனம் செலுத்திடுமாறு செய்கிறது. citizen developers எனப்படும் வணிக குறிமுறைவரிகளை எழுதிடும் நிரலாளர்களுக்கு இந்தக் கருவிகள் மிகவும் பொருத்தமானவை களாகும், அவர்கள் தங்களுடைய சொந்த பயன் பாடுகளை உருவாக்குவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட செயல்முறை அல்லது செயலியை மேம்படுத்த இவற்றைப் பயன்படுத்தலாம். குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளங்களுக்கு மாறாக, குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள் குறிமுறைவரிகளின் வழிமுறையின் தேவையை அகற்ற முயற்சிப்பதில்லை. மாறாக, ஒரு நிரல் அல்லது மென்பொருளின் ஒவ்வொரு வரியையும் நிலையான குறிமுறைவரிகளின் வழிமுறையின் பாரம்பரிய முறையை விட மென்பொருளின் வளர்ச்சியை எளிதாக்குவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த அணுகுமுறையானது முன்தொகுக்கப்பட்ட வார்ப்புருக்கள், வரைகலை வடிவமைப்பு நுட்பங்கள் , இழுத்துசென்று விடுதல் ஆகிய கருவிகளைக் கொண்ட நிலையான குறிமுறைவரிகளானவை ஒவ்வொருமுறையும் அவைகுறித்து குறிமுறைவரிகள் எழுதிடும் தேவையைக் குறைக்கிறது., இது தொழில்சார்ந்த மேம்படுத்துநர்களால் நிறுவன தர பயன்பாடுகளை அல்லது மென்பொருள் உற்பத்திகளை உருவாக்க பயன்படுகிறது. பல்வேறு வகையான குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள் வெவ்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளை பூர்த்தி செய்கின்றன. அவற்றின் பயன்பாட்டின் நோக்கம் அல்லது செயலியின்நோக்கத்தைப் பொறுத்து, இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
பொது நோக்குதளங்கள்(General-purpose:): இந்த தளங்களைகொண்டு நாம் விரும்பும் எந்த வகையான மென்பொருளையும் அல்லது பயன்பாட்டையும் உருவாக்க முடியும். ஒரு பொது-நோக்க தளத்துடன், பயனாளர்கள் பல்வேறு வகையான தேவைகளுக்கேற்ப சேவை செய்யும் மென்பொருளை உருவாக்க முடியும் தொடர்ந்த அதனை மேககணினியில் அல்லது நிறுவன கணினிகளில் பயன்படுத்திகொள்ள முடியும்.
செயல்முறை(Process): படிவங்கள், பணிப்பாய்வுகள் அல்லது பிற அமைப்பு களுடன் ஒருங்கிணைப்பு போன்ற வணிக செயல்முறைகளை இயக்கும் மென்பொருளில் இந்த தளங்கள் குறிப்பாக கவனம் செலுத்துகின்றன.
கோரிக்கைகளை கையாளுதல்(Request handling): இந்த வகையிலானவை குறைந்த-குறிமுறை வரிகளின் இயங்குதளங்களின் செயல்முறை அடிப்படை யிலானவை போன்றே இருக்கும், ஆனால் திறன் குறைவாக இருக்கும். நிலையான செயல்முறைகளுக்கான செயலாக்க கோரிக்கைகளை மட்டுமே இவைகளால் கையாள முடியும்.
தரவுத்தளங்கள்(Database):பயனாளர்களிடம் அதிக அளவு தரவுகள் இருந்தால், அவைகளை தங்களுடைய கணினிகளில் செயல்படுத்தி பயன்பெறுவதற்காக அதிக நேரத்தைச் செலவிடாமல் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கு இவை பயனுள்ளதாக இருக்கும்.
கைபேசி பயன்பாடுகளின்மேம்படுத்துதலிற்கான தளம்(MADP): திறன்பேசிகள் வரைவு எண்ணாக்கி களுக்கான கைபேசி பயன்பாடுன்களை குறிமுறை வரி களை எழுதவும், பரிசோதிக்கவும் துவங்கவும் இந்த இயங்குதளங்கள் மேம்படுத்துநர்களுக்கு பேருதவியாய் விலங்குகின்றன.
குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்களின் பொதுவான வசதிவாய்ப்புகள்பின்வருமாறு
பொது-நோக்கு நிறுவன குறைந்த-குறிமுறைவரிகளின் மேம்பாட்டு தளங்கள், மாதிரி-உந்துதல்,மீப்பெரும்தரவுகளின் அடிப்படையிலான நிரலாக்க மொழிகள் ஒரே சொடுக்குதலில் வரிசைப்படுத்துதல் போன்ற அறிவிப்பு, உயர்-நிலை நிரலாக்க சுருக்கமான விவரங்களைப் பயன்படுத்தி விரைவான மென்பொருள் மேம்பாடு, வரிசைப்படுத்தல், செயல்படுத்தல் , மேலாண்மை ஆகியவற்றை ஆதரிக்கின்றன.
குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்களால் ஆதரிக்கப்படும் பொது நோக்கத்திற்கான வசதிவாய்ப்புகள் பின்வருமாறு.
மாதிரிக்காட்சி: வணிக செயல்முறைகள், ஒருங்கிணைப்பு பணிப்பாய்வுகள், பயனாளர் இடைமுகங்கள்(UI), வணிக தர்க்கம், தரவு மாதிரிகள், இணையச் சேவைகள் , APIகள் உள்ளிட்ட விரிவான மாதிரிகாட்சி திறனை இந்த தளங்கள் கொண்டுள்ளன.
தரவுத்தளங்கள்: காட்சிகளை திருத்துபவருக்கான ஆதரவு, எக்செல் தாள் பதிவிறக்கம் அல்லது வேறு தரவுத்தளத்திலிருந்து இருக்கும் தரவு மாதிரிகளைப் பயன்படுத்திகொள்ளுதல்.
முன் கட்டமைக்கப்பட்ட மாதிரிபலகங்கள்: பல்வேறு முன் கட்டமைக்கப்பட்ட மாதிரிபலகங்களை ஆதரிக்கவும், அவை ஒரு பயன்பாட்டை விரைவாக இயக்கவும் ஒரு தொடக்க புள்ளியாக செயல்படுகின்றது. நன்கு வடிவமைக்கப்பட்ட, பரிசோதிக்கப்பட்ட மாதிரிபலகத்தினைப் பயன்படுத்துவது மென்பொருள் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மிகவும் நம்பகமான, பாதுகாப்பான பயன்பாட்டை உருவாக்க உதவுகிறது.
ஒருங்கிணைப்பு: வெளிப்புற நிறுவன அமைப்புகள், தரவுத்தளங்கள், தனிப்பயன் பயன்பாடுகளுடன் எளிதான ஒருங்கிணைப்பை வழங்குகின்றது.
பாதுகாப்பும் அளவிடுதலும்: சரியான குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளமானது, பாதுகாப்பான , அளவிடக்கூடிய நிறுவன தர மென்பொருளை உருவாக்குவதை எளிதாக்குகிறது.
அளவீடுகள்: அளவீடுகளைச் சேகரிப்பதற்கும் மென்பொருளைக் கண்காணிப்பதற்குமான ஆதரவினை வழங்குகின்றது.
வாழ்க்கை சுழற்சி மேலாண்மை: பதிப்பு எண்மேலாண்மை,நுழைவுசீட்டு மேலாண்மை, அத்துடன் Agile அல்லது scrum கருவிகளுக்கான ஆதரிக்கின்றது.
மறுபயன்பாடு:உருவாக்கப்பட்ட குறிமுறைவரிகள் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையிலும் பொது நோக்கத்திற்கான IDEகளுடன் எளிதாக ஒருங்கிணைக்க வும்முடியும்.
வரிசைப்படுத்தலின் வாய்ப்புகள்: கொள்கலனின் images.இற்கான ஆதரவுடன் பொதுமேககணினிகளில் அல்லது தனிப்பட்ட மேககணினிகளில் வரிசைப்படுத்தும் திறன். மேகக்கணியில் வெளியிடும் முன் முன்னோட்ட செயல்பாட்டை ஆதரிக்கின்றது.
உரிமம்: விற்பனையாளர் உள்நுழைவு இல்லாத நெகிழ்வான உரிம மாதிரிகள்.
மற்றவை: செயல்திட்ட மேலாண்மை, பகுப்பாய்வு போன்ற பிற சேவைகள் தளங்களில் அடங்கும்.
தொழில்முறை மேம்படுத்துநர்களுக்கான பொதுவான குறைந்த குறிமுறைவரிகளின் தளங்களின் முக்கிய நோக்கம்,
பாரம்பரிய கைமுறையாக எழுதிடும் குறிமுறைவரிகளுடன் ஒப்பிடுகையில், ஒரு மென்பொருள் உருவாக்குவதில் பணிபுரியும் மேம்படுத்துநர் காட்சி இடைமுகங்கள், இழுத்துசென்று விடுதல் தகவமைவுகள் போன்ற பலவற்றைப் பயன்படுத்தி, பயன்பாடுகளை உருவாக்குவதன் வாயிலாக அவைகளுக்கான ஆயிரகணக்கான குறிமுறைவரிகளை எழுதிடும் நேரத்தைக் குறைக்க உதவுவதாகும். இந்த குறைந்த-குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள் குறிமுறைவரிகளின் வழிமுறையில் கைகளால் குறிமுறைவரிகளை எழுதிடும் முயற்சியை பெருமளவில் குறைக்கின்றன, ஆனால் ஒரு மென்பொருள் தயாரிப்பை முழுமையாக உருவாக்க சில அத்தியாவசிய குறிமுறைவரிகளை எழுதுவது தேவையாகும்.
நினைவக கட்டமைப்புகள், பெரிய தரவு செயலாக்க வழிமுறைகள், உருவப்பட அங்கீகாரம் போன்ற குறைந்த அளவிலான மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்க பொதுவான குறைந்த-குறிமுறைவரிகளின் இயங்குதளங்களை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இருப்பினும், பல ஆண்டுகளாக அவை வணிக செயல்முறை மேலாண்மை (BPM), ஒருங்கிணைப்பு பணிப்பாய்வுகள், பயனாளர் இடைமுகங்கள்(UI), வணிக தர்க்கம், தரவு மாதிரிகள், இணைய சேவைகள் , APIகள் உட்பட தர மேம்பாடு , முழு வாழ்க்கை சுழற்சி மேலாண்மை. ஆகிய நிறுவனத்திற்கான பரந்த அளவிலான திறன்களை உள்ளடக்கும் வகையில் நிறைய வளர்ச்சியடைந்துள்ளன. அவை அதிக மென்பொறுள் உற்பத்தித்திறன் மேம்பாடு , அனைத்து வகையான மேம்படுத்துநர்களுக்கும் சந்தைப்படுத்து வதற்கான விரைவான நேரத்தையும் செயல்படுத்துகின்றன. மீச்சிறு சேவைகளின் மின்பாட்டையைப் பயன்படுத்தி, பொதுவான கட்டமைப்புகள் சிக்கலான பின்புலதளங்களுடன் கூடிய நிறுவன பயன்பாடுகள் உட்பட எந்தவொரு சிக்கலான பயன்பாடுகளையும் உருவாக்க அவை உதவுகின்றன.
குறுக்குதள-செயலியின் குழு ஒத்துழைப்பை இயக்குதல்: எந்தவொரு மென்பொருள் தயாரிப்பு மேம்பாட்டிற்கும் வணிக அல்லது செயலிகளின் வல்லுநர்களும் தொழில்முறை மேம்படுத்துநர்களின் கலவையானது தேவையாகும். குறைந்த-குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள் வணிகப் பயனாளருக்கும் தொழில்முறை மேம்படுத்துநருக்கும் பொருத்தமான வசதிகளை வழங்குகின்றன. குறுக்குத்தள செயலியின் குழுக்குகள் இந்த தளங்களைப் பயன்படுத்தி சிறந்த வணிக ஆலோசனைகளை எளிதில் பயன்படுத்தக்கூடிய மென்பொருள்தயாரிப்புகளாகவும். தற்போதுள்ள மென்பொருள்தயாரிப்பு தொகுப்புகளாகவும் மிக விரைவாக மாற்ற முடியும்
விரைவான எண்ணிம மாற்றம்: தளங்களின் வாடிக்கையாளர் சேவையாளர்-பக்கம் APIகளை மேம்படுத்துவதன் மூலம், மேம்படுத்துநர்கள் இயந்திரகற்றல், செயற்கைநுண்ணறிவு (AI )போன்ற வெளிப்புற சேவைகளுக்கான இணைப்பிகள் போன்ற புதிய செயலிகளை உருவாக்கலாம், தொகுக்கலாம், விநியோகிக்கலாம். குறைந்த-குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள், தளத்தின் சொந்த வசதிகளை சில குறிமுறைவரிகளுடன் விரிவுபடுத்துவதன் மூலம் சிறந்த தீர்வுகளை விரைவாக உருவாக்க, முக்கிய தளத்தின் எல்லைகளுக்கு அப்பால் செல்ல மேம்படுத்துவர்களுக்கு உதவுகிறது.
தேவையின் திடீர் அதிகரிப்புகளை சந்திக்க உதவிடுதல்: குறைந்த-குறிமுறைவரிகளின் இயங்குதளங்களின் ஒரேயொரு சொடுக்குதலின் வரிசைப்படுத்தல் வாய்ப்புடன் இணைந்து தானியங்கி குறிமுறைவரிகள் உருவாக்கம் விரைவான மென்பொருள்தயாரிப்பு தனிப்பயனாக்குதலுக்கு உதவுகிறது, அத்துடன் மென்பொருள் தயாரிப்பு மாறுபாடுகளை உருவாக்கவும் வசதிகளை விரைவாக செயற்படுத்திடவும் உதவுகிறது.
MVPகளை விரைவான விகிதத்தில் உருவாக்க உதவிடுதல்: குறைந்த-குறிமுறைவரிகளின் இயங்குதளங்களில் உள்ள இருமுடிவுகளுக்கு இடையிலான மேம்பாடு,ம் செயலிகளின் கருவிகள் ஒரு ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குகின்றன, இது ஒரு நிறுவனத்தை விரைவாக மென்பொருள் தயாரிப்புகளை உயிர்ப்பிக்கவும் முழு SDLC செயல்முறையையும் நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது. தொழில்நுட்பத்திற்கான வரைச்சட்டங்கள், கட்டமைப்புகள் அல்லது வசதிகளின் மதிப்பீட்டிற்காக. விரைவான MVP அல்லது PoCகளை உருவாக்க அவை பயன்படுத்தப்படுகின்றன,

மதிப்பீட்டு அளவு கோல்கள்

விளக்கம்

செயலியின் வசதிகள்

மென்பொருள் உற்பத்தித்திறன், UI நெகிழ்வுத் தன்மை, பயன்பாட்டின் எளிமை

மேககணினி கொள்கலனாக்குதல்

சேவையாளற்ற, AI/ML, blockchain போன்ற பிரபலமான மேககணினி வழங்குநர்களின் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான திறன்

CI/CD ஒருங்கிணைப்பு

தானியங்கி, CI/CD கருவிதொடருக்கான கணினிக்கு வெளியிலான ஆதரவு

ஒருங்கிணைப்பு திறன்கள்

REST ,மேககணினி பயன்பாட்டு ஆதரவு, வெவ்வேறு SQL , NoSQL தரவுத்தளங்களுடன் இணைக்கும் திறன்

செயல்திறன்

மீள அளவிடுதலுக்கான ஆதரவுடன் இணையான , தகவமைவு செயல்படுத்தல்

பாதுகாப்பு

வடிவமைப்பின் மூலம் பாதுகாப்பை இயக்கிடுதல்: பாதுகாப்பு கருவிகள், மேம்பாட்டு முறைகள், ஆளுகைக்கான கருவி

கணினிமொழி ஆதரவு

Java, .NET, Python போன்ற பிரபலமான கணினிமொழிகளுக்கான ஆதரவு

வளர்ச்சி முறைகள்

Scrum, XP, Kanban போன்ற நிலையான சுறுசுறுப்பான(Agile) மேம்பாட்டு முறைகளை ஆதரிக்கின்றது

விரிவாக்கம்

ஏற்கனவே உள்ள பயன்பாடுகளின் வசதிகளை நீட்டிக்கும் திறன்

மற்றவைகள்

இயங்குதள ஆதரவு, கற்றல் வளைவு, ஆவணப்படுத்தல் போன்றவை

 

அட்டவணை-1
மேககணினி அளவிலான கட்டமைப்பு, வடிவமைப்பு: குறைந்த-குறிமுறைவரிகளின் தளங்கள் நெகிழ்வான மீச்சிறுசேவைகளின் ஒருங்கிணைப்பு வாய்ப்புகளை (தனிப்பயன், தரவு, UI, infra) பல மேககணினி வரிசைப்படுத்தல் (deployment )வாய்ப்புகளுடன் அடுத்த தலைமுறை குறைந்த குறிமுறைவரிகளின் மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கின்றன. ஆயிரக்கணக்கான பயனர்கள் மில்லியன் கணக்கான தரவு தொகுப்புகளை அளவிடவும் கையாளவும் முடியும்.

குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்களின் நன்மை களும் தீமைகளும்
குறைந்த குறிமுறைவரிகளின் மென்பொருள் உருவாக்கத்தின் முதன்மை நன்மை வேகம் (மாதங்கள் முதல் வாரங்கள் வரை). மென்பொருள் மேம்பாட்டிற்கான பாரம்பரிய கைகளால் எழுதும் குறிமுறைவரிகளின் அணுகுமுறைகளைக் காட்டிலும் குறைந்த-குறிமுறைவரிகளின் தளத்தைப் பயன்படுத்தி சராசரியாக ஆறு முதல் பத்து மடங்கு மென்பொருள் உற்பத்தித்திறன் மேம்பாடுடையது. குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்களின் சில முக்கிய நன்மைகளை பின்வருமாறு
சிறந்த மென்பொருள், குறைந்த பராமரிப்பு:குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள் வளர்ச்சி அணுகுமுறையை தரப்படுத்துகின்றன , மூலக் குறிமுறைவரிகளின் சிக்கலான தன்மையையும் பிழை விகிதத்தையும் குறைக்கின்றன.
குறுக்குதள-குழு ஒத்துழைப்பு: பல்வேறு திறன்கள் ,தன்மைகளைக் கொண்ட குழு உறுப்பினர்கள் மென்பொருளின் தயாரிப்பின் இறுதி பகுதியை விரைவாக முடிவிற்கு கொணடுவர ஒத்துழைப்பு கொண்டுள்ளது.
Agile மென்பொருள் மேம்பாட்டை இயலுமைசெய்தல்: குழு உறுப்பினர்களுக்கு ஒரு நிலையான மென்பொருள்தயாரிப்பை வழங்குகின்றன, இது ஒரேயொரு திரையில் தொடங்குகிறது,தொடர்ந்து sprint to sprint ஆக வளர்ந்து. முழு மென்பொருளின் தயாரிப்பு வடிவம் பெறுகின்றது
விரைவான பயன்பாடுகளின் கொடை நவீனமயமாக்கல்: தற்போதுள்ள தரவு மாதிரியின் அடிப்படையில் விரைவான UI உருவாக்கம், மரபு தரவுத்தளங்களி லிருந்து தர்க்கத்தை மீண்டும் பயன்படுத்துதல், ஏற்கனவே உள்ள திரைகள்/ தொடர்நிலை அடுக்குகளின் திறனுடைய பரிமாற்றம் ஆகியவற்றை இயக்கிடுகின்றது.
குறைந்த ஆபத்து உயர் செயல்திறன்(RoI): குறுகிய வளர்ச்சி சுழற்சிகள் காரணமாக, ஒரு புதிய செயல்திட்டத்தை மேற்கொள்வதற்கான ஆபத்து குறைவாக உள்ளது, மேலும் அதிக வருமானம் பெறுவதற்கான நல்ல வாய்ப்பு கொண்டது.
பல்வேறு கூறுகளின் மூலம் அளவிடுதல்: பல்வேறு சேவைகளை உருவாக்க பொதுவான தளத்தைப் பயன்படுத்த அனுமதிக்கின்றது.
எளிதான பராமரிப்பு: மென்பொருளை எளிதாக புதுப்பிக்கலாம், சரிசெய்யலாம் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்திடலாம்.
கடந்த சில ஆண்டுகளில், குறைந்த-குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள் செயல்பாடு பொருந்தக்கூடிய தன்மையின் அடிப்படையில் நிறைய வளர்ச்சி யடைந்துள்ளன. இருப்பினும், எந்தவொரு பொதுவான மென்பொருள் தயாரிப்பு மேம்பாட்டிற்கும் முழுமையாகப் பயன்படுத்தும்போது அவை இன்னும் சில வரம்புகளைக் கொண்டுள்ளன, அவற்றில் சில பின்வருமாறு
குறைந்தகுறிமுறைவரிகளின்-நிலையிலான மென்பொருள்தயாரிப்பு மேம்பாடு: நினைவகத்தில் உள்ள grids, பெரிய தரவு செயலாக்க வழிமுறைகள், உருவப்பட அங்கீகாரம் போன்ற மென்பொறுள்தயாரிப்புகளை உருவாக்கப் பயன்படுத்த முடியாது.
தனிப்பயன் கட்டமைப்புகளும் சேவைகளும்: தனிப்பட்ட கட்டமைப்பு, மீச்சிறு சேவைகள், தனிப்பயன் பின்புல-முனைகள், தனித்துவமான நிறுவன சேவை மின்பாட்டை போன்றவற்றுடன் நிறுவன மென்பொருளில் வரையறுக்கப்பட்ட பயன்பாடு உள்ளது.
மூலக் குறிமுறைவரிகள் கட்டுப்பாடு: இந்த தளங்கள் குறிமுறைவரிகள் தளத்தின் மீதான கட்டுப்பாட்டை முற்றிலும் இழக்கின்றன; கருவி தானாகவே சரியானதைச் செய்யாத விளிம்பு நிலைகளை பிழைத்திருத்துவது கையாள்வது கடினம்.
வரையறுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு: மரபு அமைப்புகளுடன் தனிப்பயன் ஒருங்கிணைப்புக்கு சில குறிப்பிடத்தக்க குறிமுறைவரிகளின் வழிமுறை தேவையாகும்.
பாதுகாப்பும் நம்பகத்தன்மையும்: இந்த இயங்குதளங்கள் பாதுகாப்பு மீறல்களால் பாதிக்கப்படக்கூடியவை, ஏனெனில் குறைந்த குறிமுறைவரிகள் இயங்குதளம் தாக்குதல் செய்யப்பட்டால், அது உடனடியாக அதன் மீது கட்டப்பட்ட மென்பொருள்தயாரிப்பையும் பாதிப்படையச் செய்யலாம்.

தனிப்பயனாக்கம்: தனிப்பயன் CSS, தனிப்பயன் ஒருங்கிணைப்பு, மேம்பட்ட வாடிக்கையாளர் பக்க செயல்பாடு போன்றவை, நல்ல அளவிலான குறிமுறைவரிகளின் வழிமுறை தேவைப்படும். பிரபலமான பொதுவான குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள் சந்தையில் பல குறைந்த-குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள் இருந்தாலும், வணிகத்திற்கு பொருத்தமானதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அட்டவணை-1 இல் கொடுக்கப் பட்டுள்ள மதிப்பீட்டு அளவுகோல்களைப் பயன்படுத்த வேண்டும். அட்டவணை-2இல் மிகவும் பிரபலமான பொதுவான குறைந்த-குறிமுறைவரிகளின் தளங்களை, தனியுரிமைம , திறமூலமாக பட்டியலிடுகிறது. கார்ட்னர் என்பவர் 2024 ஆம் ஆண்டளவில், 65 சதவீத பயன்பாட்டு மேம்பாட்டுத் செயல்திட்டங்கள் குறைந்த குறிமுறைவரிகள் மேம்பாட்டை நம்பியிருக்கும் என்று கணித்துள்ளார்.

குறைந்த குறி முறை வரி இயங்குதளம்

விளக்கம்

வகை

Mendix

மேககணினி அல்லது வாளாக கணினி ஆலோசனை யிலிருந்து மேம்பாடு, வரிசைப்படுத்தல் பராமரிப்பு வரை முழு பயன்பாட்டு மேம்பாட்டு வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் நிறுவன பயன்பாட்டு விநியோ கத்தை துரிதப்படுத்த இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

தனியுரிமை

OutSystems

omniஅலைவரிசை நிறுவன பயன்பாடுகளை உருவாக்க, வரிசைப்படுத்த , நிர்வகிக்க இந்த தளம் கருவிகளை வழங்குகிறது. இது கைபேசி, இணையம் முக்கிய அமைப்புகளுக்கான நிறுவன பயன்பாட்டு வழக்குகளின் முழு அலைக்கற்றையையும் நிவர்த்தி செய்கிறது.

தனியுரிமை

Appian

AI, RPA, முடிவெடுக்கும் விதிகள், ஒரு குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளத்தில் பணிப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி பணியை விரைவாகச் செய்வதற்குத் தேவையான முக்கிய திறன்களை ஒருங்கிணைக்கின்ற ஒரு நிறுவன தரத்திலான தளமாகும்.

தனியுரிமை

Budibase

வணிக பயன்பாடுகளை உருவாக்க உதவுகிறது. பல வெளிப்புற தரவு மூலங்களை ஆதரிக்கிறது, மேலும் முன் கட்டமைக்கப்பட்ட தளவமைப்புகள், பயனர் அங்கீகாரம் ,தரவு வழங்குநர் கூறுகளுடன் வருகிறது. ஒருங்கிணைப்புகளுக்கு JavaScript ஐ ஆதரிக்கிறது.

திற மூலம்

WordPress

எளிய வலைப்பதிவுகள் முதல் நிறுவன இணைய தளங்கள் வரை இணையத்தில் 41 சதவீதத்திற்கும் அதிகமான . 54,000 க்கும் மேற்பட்ட செருகு நிரல் களுடன், குறிமுறைவரிகளை எழுதாமல் தனிப் பயனாக்கத்தின் நிலை நம்பமுடியாதது.

திற மூலம்

Node-RED

நிகழ்வு சார்ந்த IoT பயன்பாடுகளை உருவாக்க உதவுகிறது.வன்பொருள் சாதனங்கள், APIகள் , இணைய சேவைகளை ஒன்றாக இணைக்கும் நிரலாக்கக் கருவிகளை கொண்டது.

திற மூலம்

அட்டவணை-2

இவைபாரம்பரிய குறைவரிகளை முற்றிலுமாக மாற்றியமைக்குமா?
இது எதிர்காலத்தில் சாத்தியமில்லை, ஆனால் மேம்படுத்துநர்களின் மென்பொருள் உற்பத்தித்திறனை கணிசமாக மேம்படுத்தவும், தரமான மென்பொருள் தயாரிப்புகளை விரைவாக சந்தைக்குக் கொண்டுவரவும் இது நிச்சயமாக உதவும். தொழில்நுட்பம் அல்லாத நபர்களை உருவாக்குவதற்கான கருவிகளை வழங்குவதன் மூலம் இது இடைக்காலத் திறமை இடைவெளியைக் குறைக்க முடியும், அதே நேரத்தில் அதிகபட்ச தொழில்முறை மென்பொருள் குழுக்களுக்கான தயாரிப்பு பின்னடைவைக் குறைக்கக்கூடும் குறைந்த குறிமுறைவரிகளின் தளங்கள் புதிய நிறுவனத்திற்கான அதிக தேவை போன்ற முக்கியமான சிக்கல்களைத் தீர்வுசய்திட முடியும். மென்பொருள், பழைய மரபு அமைப்புகளை நவீனமயமாக்க வேண்டியது அவசியமாகும் முழு அடுக்கு நிலையிளான பொறியாளர்களின் பற்றாக்குறை. குறைந்த-குறிமுறைவரிகளின் இயங்குதளத்தை எப்போது, எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்ற தேர்வு, செயல்திறன் வரம்புகளுக்கான பொருந்தக்கூடிய தன்மை, வளர்ச்சி வேகம், மேலாண்மை , நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றின் வரம்பைப் பொறுத்தது. எவ்வாறாயினும், வணிகத் தேவைகளுக்கு குறிப்பிட்டதாக இருக்கும் அதே வேளையில், உயர் தரமான தனித்துவமான ஒருமென்பொருள் தயாரிப்பை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தால், தனிப்பயன் தயாரிப்பு மேம்பாடு சிறந்த தேர்வாக இருக்கலாம்.

 

%d bloggers like this: