குறைந்த குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத மேம்பாட்டு தளங்களுக்கான வழிகாட்டி

கணினியில் புதியதான குறைந்த குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகள் இல்லாததன் வளர்ச்சி என்பது தொழில்நுட்பத்தின் தர்க்கரீதியான அடுத்த பரிணாமம் (புரட்சி அன்று) என புரிந்துகொள்வது அவசியமாகும். கணினியில் துவக்ககாலத்தில் இயந்திர குறிமுறைவரிகளாக இருந்த. பின்னர் சில்லு மொழிமாற்றியாகவும், சி/சி++, ஜாவா ,என்பன போன்ற கணினிமொழிகளாகவும் வளர்ந்து. தற்போது குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகளேஇல்லாதது என்ற அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு தயாராகிவிட்டது வரலாற்று ரீதியாக, நிரலாளர்கள் எப்போதும் கணினியின் வளர்ச்சி செயல்முறைகளை விரைவு படுத்த அதிக அளவில் சுருக்கமான வழியெதுவென்பதையே தேடிகொண்டிருக் கின்றனர். கன்னால் காணும் காட்சியை நிரலாக்கமாக மாற்றிடுகின்ற கருத்தமைவுகூட புதியதன்று. எடுத்துக்காட்டாக, சில மென்பொருட்களில் வரைகலையின் திருத்திகள்கூட உள்ளன.
குறைந்த குறிமுறவரிகளின் கருவிகள். முதலில், குறைந்த குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகளேஇல்லாதது பற்றிய கருத்துக்களைப் புரிந்துகொள்வது அவசியமாகும். குறைந்த குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகளேஇல்லாதது என்பதுபுதியதாக ஒரு பயன்பாட்டினை உருவாக்க அல்லது குறிமுறை வரிகளில்லாமல் பணிப்பாய்வுகளை தானியங்கி படுத்த நம்மை அனுமதிக்கின்ற கருவிகளாக கருதப்படுகின்றது. இதற்காக குறைந்த-குறிமுறைவரிகளின் அணுகுமுறைக்கான ஆவணங்களுடன் பரிச்சயமும் குறிமுறைவரிகளின் இலக்கணம் பற்றிய சிறிய புரிதலும் நமக்குத் தேவையாகும். குறிமுறைவரிகளே இல்லாதது (“zero-code”) என்பது ஒரு பயனர் இடைமுகமும் (UI) உள்ளுணர்வுடன்கூடிய வடிவமைப்பையும் உள்ளடக்கிய ஒரு காட்சி அணுகுமுறையாகும், எனவே நாம் இதற்கான இலக்கணத்தினைப் புரிந்து கொள்ள வேண்டியஅவசியமில்லை
குறைந்த-குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகளேஇல்லாததன் எழுச்சியானது
எண்ணிம மாற்றத்திற்கான பாதையில் ஒரு முக்கிய தடைகல்லாக இருப்பது கணினிபொறியாளர்களின் பற்றாக்குறையாகும் அதாவது இந்த பணியை முழுமையாக நடைமுறைபடுத்திடுவதற்காக போதுமானகணினிபொறியாளர்கள் கிடைக்கவில்லை என்பதுதான் . இவ்வாறான சூழலில் குறிமுறைவரிகளே இல்லாதது எனும் அணுகுமுறையானது முழு காட்சியையும் மாற்றியமைத்து இந்த சிக்கலிற்கான தீர்வினை வழங்குகிறது. கார்ட்னர் என்பவர் நாம் செயல்படுத்திடுகின்ற கணினிபயன்படுகளில் 80% நிரலாக்க பணிகள் 2024 ஆண்டிற்குள் குறிமுறைவரிகளே இல்லாமல் வழங்கப்படுகின்ற சூழலிற்கு மாறிவிடும் என உறுதிகூறுகின்றார்.
குறைந்த-குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகளே இல்லாத தளங்களின் வியக்கத்தக்க வளர்ச்சிக்கு என்ன காரணம்?
கடந்த கொரான எனும் தொற்றுநோய் பரவலின் தாக்கத்தினால் மாற்றமடைந்த நம்முடைய பணிபுரியும் சூழல் அதற்கேற்ற புதியவகை மென்பொருள் உற்பத்திகளுக்கான தேவை ஆகியவையே இதற்குக் காரணமாகும் என கருதப்படுகின்றது. அதாவது வணிகநிறுவனங்களின் மனநிலை வணிகம் செய்யும் முறை ஆகிய இரண்டையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டக, Forresterpredicts,எனும் “தொற்றுநோயின் போது, பல நிறுவனங்கள் புதிய பயன்பாடுகளை விரைவாக உருவாக்கிடவும் வேறுஇடத்திறகு மாறுஅமைவு செய்திடவும் குறைந்த குறிமுறைவரிகளின் தளங்களை ஏற்றுக் கொண்டன. இந்த அனுபவங்கள் பெரும்பாலான மேம்படுத்துநர்களின் பணிகளை குறைந்த குறிமுறைவரிகளின் கருவிகள், பலவற்றைப் பயன்படுத்தத் தூண்டக்கூடும். வணிகப் பயனர்கள் ,தொழில்முறை மேம்படுத்துநர்கள், மேககணினிக்கு சொந்தமான தளங்களில் கட்டமைக்கப்பட்ட குறைந்த-குறிமுறைவரிகளின் கருவிகளுடன் இணைந்து தங்களுடைய செயலிகளை உருவாக்குவதன் மூலம், புதிய கலப்பின அணிகள் தோன்றுவதை விரைவில்எதிர்பார்க்கலாம். தற்போது பயன்பாட்டில் கிடைக்கக்கூடிய கருவிகளைப் பற்றி அறிந்துகொள்வது நம்முடைய வணிகத்திற்கு எது சிறப்பாகச் செயல்படும் என்பதைத் தீர்மானிக்க உதவும். குறிமுறைவரிகள் இல்லாத சில மென்பொருட்களும் தளங்களும் அதிமுக்கிய வசதியாக உள்ளன:
புதிய பயன்பாட்டின் உருவாக்கங்கள்
இணையதளம் உருவாக்குபவர்கள்: இவர்கள் பொருட்களை சேவைகளை சந்தைபடுத்துதலிற்கும் அல்லது மின்வணிக இணையதளங்களை உருவாக்கிடு வதற்கும் நமக்கு உதவ முடியும். அவற்றில் மிகவும் பிரபலமான எடுத்துக் காட்டுகள் Webflow , Wix ஆகும். ஓரளவிற்கு, இந்த வகையில் Shopify ஐ கூட சேர்த்திடலாம். வணிகநிறுவனம் ஒன்று அத்தகைய கருவிகளில் ஒன்றினைப் பயன்படுத்தி, மென்பொருள் வடிவமைப்பாளர்களின் பொறியாளர்களின் குழு எதையும் இவ்வாறான பணி்க்கு அமர்த்தாமலேயே இணையம் வாயிலான அல்லது மின்வணிகம் வாயிலான வணிகநடவடிக்கைகளை சில மணி நேரங்களிலேயே துவங்கி நடத்திடமுடியும்.
திறன்பேசி பயன்பாட்டினை உருவாக்குபவர்கள்: Glide, Draftbit அல்லது AppSheet போன்ற கைபேசிபயன்பாடுகள் உருவாக்குபவர்கள், காட்சி திருத்தியைப்( visual editor) பயன்படுத்தி கைபேசிக்களுக்கான பயன்பாடுகளை உருவாக்கவும், வெவ்வேறு தரவு மூலங்களுடன் பயனர் இடைமுகங்களை (UI) இணைக்கவும் அனுமதிக்கின்றன. மிககுறைந்த செலவிலும் பயன்பாடு மிகவும் எளிமை யானதாகவும் இருப்பதற்கான சாத்தியமான வாய்ப்பாக இவை அமையக்கூடும். இந்தக் கருவிகளில் பெரும்பாலானவை இன்னும் துவக்க நிலையிலயே உள்ளன, எனவே இதற்கென சில வரம்புகள் உள்ளன, மேலும் இதுபோன்ற பயன்பாடுகளை பயன்பாட்டு தொகுப்பில்( app store )சமர்ப்பிக்க திறன்பேசி மேம்படுத்துநரை நியமிக்க வேண்டியிருக்கும்.
மேம்பட்ட விரிதாள்கள்: Airtable Coda ஆகிய கருவிகள் விரிதாள்களைப் போன்றே செயல்படுகின்றன, ஆனால் அவை விரிதாள்களைவிட மிகமேம்பட்ட செயல்பாடுகளை வழங்குகின்றன மேலும் இவை சில வழிகளில், தரவுத்தளங்கள் போன்றும் செயல்படுகின்றன. அதோடு, செருகுநிரல்கள் மேம்பட்ட கூறுகளைப் பயன்படுத்தி அடிப்படை வணிக செயல்முறைகளை உருவாக்க நம்மை அனுமதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, பல விரிதாள்களில் நம்முடைய தரவின் நிலைத்தன்மையுடன் நாம் சிரமப்படுவதாக கொள்க அல்லது கூடுதல் கலண் வகைகள் , வடிவமைப்பு வாய்ப்புகளைத் தவற விடுவதாக கொள்க அவ்வாறானசூழலில், இந்தக் கருவிகள் நமக்கு நல்ல தீர்வாக அமைகின்றன.
பின்புலதளம்:இந்த கருவிகள் குறிமுறைவரிகள் இல்லாமல் தரவு கட்டமைப்புகளையும் , APIகளையும் உருவாக்குகின்றன. நாம் ஒரு எளிய பின்புலதளத்தில் இருக்க விரும்பினால் இந்த உருவாக்கங்களைப் பயன்படுத்தி கொள்வதைக் கவனத்தில்கொள்க முழுமையான மேம்படுத்துநர்களின் குழுவை பணியமர்த்துவதற்கு பதிலாக குறைந்த செலவில் பின்புலதள பணியை இவைகளின் வாயிலாக செயல்படுத்தி பயன்பெறமுடியும். நம்முடைய முக்கிய வணிகம் திறன்பேசிவிளையாட்டுகள் அல்லது பயன்பாடுகள் மேககணினியில் சில பயனர் அமைப்புகளைச் சேமித்து நிர்வகிக்க விரும்பினால், இவை நமக்கு பேருதவியாய் திகழக்கூடும். Backendless ,Xano ஆகியவை இதிலடங்கும்.
E2E குறிமுறைவரிகள் இல்லாத தளங்கள்:Mendix, OutSystems , Betty Blocks ஆகியவை இணையபயன்பாடுகளையும் எப்போதாவது திறன்பேசி பயன்பாடுகளையும் உருவாக்க நம்மை அனுமதிக்கின்றன, இதில் பயனர்இடைமுகமும்(UI) , பின்புலதளத்தில் வணிக தர்க்கமும் அடங்கும். வாடிக்கையாளரின் உறவுகள் அல்லது உள்ளக செயலிகளை ஆதரிக்க நம்முடைய வணிகத்திற்கு மற்றொரு இணையம் அல்லது திறன்பேசி பயன் பாடு தேவைப்படும்போது பணியாளர் மேம்பாட்டுக் குழுக்களின் தேவையை நீக்க விரும்பினால், இவை நமக்கு மிகவும் பொருத்தமாக இருக்கின்றன.
ஒருங்கிணைப்பு சேவைகள்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரவு மூலங்களை இணைக்கவும் ஒருங்கிணைக்கவும் Zapier, Integromat போன்றவை நமக்கு உதவுகின்றன. ஒவ்வொரு நாளும் நாம் ஏதேனும் ஒரு நிகழ்வின் போது ஒரு கணினியிலிருந்து ஒரு பதிவை மற்றொரு கணினி்க்கு கொண்டுசெல்லும் சூழலில் இந்த சேவைகள் நமக்கு பேருதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, நம்முடைய CRMஇல் ஒப்பந்தத்தை முடிக்கும்போது விரிதாளில் கூடுதலாக ஒருவரியை சேர்ப்பதை தானியக்கமாக்க தனியாக ஒரு மேம்படுத்துநரை நியமிக்க வேண்டும் என்பது சரியான செயலா? இதனுடைய ஒருங்கிணைப்புச் சேவைகள் மூலம், நாம் காட்சிப் பணிப்பாய்வு உருவாக்கு பவர்கள் மூலம் ஆதாரங்களை இணைக்கலாம் உள்ளுணர்வு இடைமுகத்தைப் பயன்படுத்தி பல்வேறு வகையான தரவை வரைபடமாக்கலாம்.
உள்ளக கருவி உருவாக்குபவர்கள்: பல்வேறு தரவு மூலங்களிலிருந்து தரவைப் பெறுவதன் மூலம் வணிக செயல்முறைகளை தானியங்கி படுத்துவதற்கு இந்தக் கருவிகள் நம்மை அனுமதிக்கின்றன, அவற்றை ஒரு வலைப்பக்கத்தில் காண்பிக்கவும் பிற தரவு மூலங்களுக்கு அவற்றைச் சமர்ப்பிக்கவும் இவை உதவுகின்றன. இன்றைய சூழலில் ஒரு சிறிய வணிகநிறுவனம் கூட தன்னுடைய செயல்பாடுகளை நிர்வகிக்க பல்வேறு தளங்களைப் பயன்படுத்தி கொள்கிறது. பொதுவாக, ஒரு உள்ளக செயல் முறை என்பது ஒரு அமைப்பில் சென்று தகவல்களைச் சேகரித்து, பின்னர் மற்றொரு அமைப்பில் உள்ள தகவலைச் சரிபார்த்து, அதைத் தொடர்ந்து மற்ற இரண்டு அமைப்புகளில் எழுதுவதை உள்ளடக்குகிறது. உள்ளக கருவி உருவாக்குபவர்கள் இந்த தொடரோட்டத்தை ஒரு இணையதளபக்கமாகவும் பொத்தானின் செயல்முறையாக மாற்றுகிறார்கள். உள்ளககட்டமைப்பாளர்களின் எடுத்துக் காட்டுகளில் Retool , Internal ஆகியவை அடங்கும்.
முடிவுரை: எதிர்காலத்தில், குறிமுறைவரிகள் இல்லாத/குறைந்த குறிமுறைவரிகளின் கருவிகள் கணினி மேம்பாட்டுத் துறையில் பரவலாகி, முழு தொழில்நுட்ப சந்தையையும் மாற்றியமைக்கக்கூடும். வாடிக்கையாளர் சார்ந்த , நடுத்தர, -அலுவலகபின்புல செயல்முறைகளுக்கு பொதுமக்கள் குறைந்த குறிமுறைவரகளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள் . இந்த மாற்றமானது கணினியின் நிரலாக்க தொழில்நுட்பம் தெரியாத பணியாளர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை உயிர்ப்பிக்கும் திறனைப் பெறுவார்கள்.

%d bloggers like this: