கையடக்க சாதனங்களுக்கானபெர்ரி லினக்ஸ்எனும் இயக்கமுறைமை

பெர்ரி லினக்ஸ்என்பது ஒரு குறுவட்டிலிருந்தே,தானியங்கியாக வன்பொருட்களை கண்டறிதல் செய்து வழக்கமான கணினியை போன்று அதன் இயக்கத்தை துவக்கக்கூடிய ஒரு லினக்ஸ் இயக்கமுறைமையாகும்.
இந்த பெர்ரி லினக்ஸை லினக்ஸின்மாதிகாட்சியை கல்விபயிற்றுவிப்பதற்காண குறுவட்டாகவும், மீட்பு அமைப்பாகவும் பயன்படுத்திகொள்ளலாம். இந்த இயக்கமுறைமையை செயல்படுத்திடுவதற்காகவென தனியாக கணினியின் வன்தட்டில் எதையும் நிறுவுகைசெய்ய வேண்டிய அவசியமில்லை.
பெர்ரி லினக்ஸ் ஒருஇலகுரக, மின்னல்வேக இயங்குதளமாகும், இது நல்லதொரு வடிவமைப்பினையும் பயன்பாட்டினையும் கொண்டுள்ளது. இந்த இயக்க முறைமையை CD-ROM / விரலி(USB) / USB-HDD / HDD ஆகியவற்றிலிருந்தே துவக்கி பயன்படுத்திகொள்ள முடியும். விரைவாகத் தொடங்குதல், பல வன்பொருளைத் தானாக அடையாளம் காணுதல் , இணையத்துடன் இணைக்கப்படுதல் ஆகியவை இதனுடைய வலுவான இயல்புகளாகும்.
இந்த இயக்கமுறைமைஅமைவில் நச்சுநிரல் பாதிப்பு அதிகம் இல்லாததால் இதன்மூலம் இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம். குறுவட்டினை (காஃபின், சைன், எம்பிளேயர்) இயக்குவது உட்பட, இசை (அடடா), உருவப்படங்கள் , உருவப்பட திருத்தங்கள் (ஜிம்ப், இன்க்ஸ்கேப்) ஆகியவற்றை நம்முடைய வழக்கமான பணிகளுக்காக இந்தஇயக்கமுறைமையில்அவைகளை செயற்படுத்தி பயன்பெற முடியும். பெர்ரி லினக்ஸ்ஆனது பல்வேறு எழுத்துருக்களையும் நல்ல உள்ளீட்டு இயந்திரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இது அடுத்த தலைமுறை இயக்க முறைமையை நோக்கமாகக் கொண்டுள்ளது ,புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திகொள்கிறது. இது Fedora, Chrome OS ஆகியஇயக்கமுறைம்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.
பெர்ரி லினக்ஸ் என்பது ஆங்கிலம், ஜப்பான்ஆகிய இருமொழிகளின் ஆதரவைக் கொண்ட குறுவட்டிலிருந்து நேரடியாக இயக்கிபயன்படுத்தக்கூடிய தொரு லினக்ஸ் இயக்கமுறைமையாகும். பெர்ரி லினக்ஸ் ஆனது Fedora 37 தகவமைகளை அடிப்படையாகக் கொண்டது அதனோடு இணக்கமானது. இந்த வெளியீடானது முதன்மையாக நேரடிகுறுவட்டு லினக்ஸாகப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது, ஆனால் இது நேரடியாக விரலியிலும் USB நிறுவுகைசெய்து இயக்கிபயனடையலாம். பெர்ரி லினக்ஸ்ஆனது கல்விகற்பதற்கான நோக்கங்களுக்காக அல்லது ஒரு கணினியின்மீட்பு அமைப்பாக, வன்தட்டுகளில் மாற்றங்கள் எதையும் செய்யாமல், லினக்ஸை இயக்க முயற்சிக்கவும் காட்சிப்படுத்தவும் பயன்படுத்திகொள்ளலாம்.
முக்கியவசதிவாய்ப்புகள்
பெர்ரிலினக்ஸில் படிக்க/எழுத NTFS இன் ஆதரவு உள்ளது, மேலும் AIGLX , பெர்ரி 3D மேசைக்கணினி விளைவுகளுக்காக தொகுக்கப்பட்டுள்ளன. பெர்ரி துவக்க இயக்கத்தையும் பயன்படுத்துகிறது, இது ஒரு வரைகலையின் தொடக்கத்தை அளிக்கிறது.
இதன்முழு பதிப்பு (v1.12) லினக்ஸின் கர்னல் 3.0.4 ஐ உள்ளடக்கி இயங்குகிறது. இது ALSA ஒலி அமைப்பு, ACPI ஆதரவு , SELinux ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பல வரைகலை அட்டைகள், ஒலி அட்டைகள், SCSI, USB சாதனங்கள் போன்ற பல சாதனங்களுக்கான ஆதரவுடன் பெர்ரி லினக்ஸ் தானியங்கியாக வன்பொருள் கண்டறிதலைக் கொண்டுள்ளது. இதன்வலைபின்னல் சாதனங்கள் தானாகவே DHCP உடன் கட்டமைக்கப்படுகின்றது.
பெர்ரி லினக்ஸின் முழு பதிப்பு KDE (பதிப்பு 4.6.5) ஐப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் பெர்ரி லினக்ஸ்சிறியபதிப்பு சாளர மேலாளரைப் பயன்படுத்தி கொள்கிறது. முழு பதிப்பு 512.7MB, சிறிய பதிப்பு 273.4MB. பெர்ரி லினக்ஸை பரிசோதிக்க, வன்தட்டில் விநியோகத்தை நிறுவுகைசெய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இயக்க முறைமை முற்றிலும் CD-ROM இலிருந்து இயங்குகிறது. இருப்பினும், பெர்ரி லினக்ஸை ஒரு வன்தட்டில் நிறுவுகைசெய்வது சாத்தியமாகும், இதற்காக 1.7 ஜிகாபைட் அளவிலான காலிநினைவகம் தேவைப்படுகிறது. இது LibreOffice பதிப்பு 3.4.3, மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் இணக்கமான அலுவலக தொகுப்பு பெர்ரியின் அலுவலக மென்பொருளாக TextMaker/PlanMaker ஆகியவற்றுடன் இணைந்து வருகிறது. மேலும் GIMP,இன்பதிப்பு 2.6.10, வரைகலை மென்பொருளுக்காக தொகுக்கப்பட்டுள்ளது. பெர்ரியில் பல்லூடகசெயலிகள் ஆடாசியஸ், எம்பிளேயர், சைன் , கஃபைன் ஆகியவை உள்ளடங்கும். DVD , DivX ஆகியவை முன்னிருப்பாக நிறுவுகைசெய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளவும்https://berry-lab.net/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க,

%d bloggers like this: