சுகோபனோ(SOKOBANO):ஒரு அருமையான முப்பரிமான புதிர் விளையாட்டு

 சுகோபனோ: 

சுகோபனோ என்ற புதிர் விளையாட்டு (Classic sokobian) யின் என்ற விளையாட்டின் உள்ளுந்துதலில் உருவானது.ஆனால் இது முப்பரிமான வரைகலையுடன் வருகிறது.இவ்விளையாட்டு எளிய முதல் கடினம் வரையிலான 300 நிலைகளை கொண்டது. மேலும் வெவ்வேறு சட்டங்களில் மீண்டும் அற்ற தொடங்கும்/இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெட்டிகளை குறித்த இடத்திற்கு தள்ளுவதே இவ்விளையாட்டின் இலக்கு. அதன் முலமாக ஒரு முழுமையான இணைப்பு உருவாகும்.எந்த ஒரு தவறான நகர்த்தலும் உங்களை ஆட்டத்தின் போக்கில் இருந்து முடக்கலாம். எனினும் பின் வாங்கும் அம்சம் இருப்பதால் தவறாக நகர்த்திய பெட்டிகளை மீண்டும் நகர்த்தி கொள்ளலாம்.

இந்த விளையாட்டை உங்கள் உபுண்டு 12.04/11.10 வில் நிருவ உங்கள் முனையத்தில் இருந்து பின் வரும் கட்டளைகளை பயன்படுத்தி கொள்க.

 

sudo add-apt-repository ppa:upubuntu-com/games

sudo apt-get update

sudo apt-get install sokobano

 

விளையாட்டை உங்கள் (Unity Dash) யில் இருந்து தொடங்கவும்.

விளையாடி மகிழ்க….!

 

சதிஷ் குமார்

%d bloggers like this: